Friday 31 January 2020

5,8 ம் வகுப்பு பொது தேர்வு நடத்துவதில் சிக்கல்

5,8 ம் வகுப்பு பொது தேர்வு நடத்துவதில் சிக்கல்

மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் செய்த திருத்தத்தின்படி, தமிழகத்தில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் முன்னோடி திட்டமாக, இதை நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ., பள்ளிகளில், இதே வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு கிடையாது.இந்நிலையில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளதற்கு, கல்வியாளர்கள், குழந்தை பாதுகாப்பு அமைப்பினர் என, பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குழந்தை பருவத்திலேயே தேர்வு பயமும், மன அழுத்தமும் ஏற்பட்டு விடும் என, பெற்றோர்களும் அச்சத்தில் உள்ளனர்.ஐகோர்ட்டில் வழக்குஇந்நிலையில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி, மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் லுாயிஸ், உயர் நீதிமன்ற மதுரை கிளையில், நேற்று முன்தினம் மனு தாக்கல் செய்தார்.

மனுவில், அவர் கூறியிருப்பதாவது:இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, 6 முதல், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு,துவக்க கல்வி அளிப்பது அடிப்படை உரிமை.இந்த சட்டத்தின்படி, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, நடப்பு கல்வியாண்டு முதல், பொதுத்தேர்வு நடத்த, 2019 செப்., 13ல், தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களுக்கு, இரண்டு மாதங்களில், மறு தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவித்து உள்ளது. இந்த உத்தரவு, இலவச கட்டாய கல்வி சட்டத்திற்கு எதிரானது.பொதுத் தேர்வால், சிறு வயதுள்ள துவக்க நிலை மாணவர்களுக்கு, உடல் மற்றும் மன ரீதியாக பாதிப்பு ஏற்படும்.சிறு வயது மாணவர்களின் படிப்பில், இடைநிற்றல் அதிகரிக்கும். எனவே, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அரசாணையை, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.சரமாரி கேள்விஇந்த வழக்கு, நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் ஆஜரான, வழக்கறிஞர் லஜபதி ராய்,&'&'துவக்க கல்வி மாணவர்களுக்கு, பொதுத்தேர்வுகள் என்பதையும் அதில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதையும், கட்டாயமாக்கக் கூடாது என, கல்வி உரிமை சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. &'&'தமிழகம் மட்டுமே, இந்த பொதுத்தேர்வை அமல்படுத்தியுள்ளது; மற்ற மாநிலங்கள் அமல்படுத்தவில்லை,&'&' என்றார்.அப்போது, &'ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு தேர்வின் விடைத்தாள்கள், அந்த பள்ளியிலேயே திருத்தப்படுமா அல்லது மற்ற பள்ளிகளுக்கு அனுப்பப்படுமா; தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால், அந்த குழந்தைகளின் நிலை என்ன&' என, நீதிபதிகள் கேட்டனர். &'அவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும்&' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. &'மறுதேர்விலும் குழந்தைகள் தேர்ச்சி பெறாவிட்டால், அவர்களின் நிலை என்ன&' என்று, நீதிபதிகள் மீண்டும் கேட்டனர்.

&'அதுகுறித்து, அரசு ஆலோசித்து முடிவு செய்யும்&' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து, இந்த வழக்கில், அரசின் நிலைப்பாடு குறித்து, பதில் மனு தாக்கல் செய்யுமாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். மத்திய சட்டத் துறை செயலர், மனிதவள மேம்பாட்டு துறை சார்பு செயலர், தமிழக பள்ளி கல்வி செயலர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குனர் ஆகியோருக்கு, &'நோட்டீஸ்&' அனுப்பவும் உத்தரவிட்டனர். வழக்கின் விசாரணையை, பிப்., 19க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.பணிகள் திடீர் நிறுத்தம்நீதிமன்றத்தில், வழக்கு விசாரணை துவங்கியுள்ளதால், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக் கான பொது தேர்வு பணிகள், பெரும்பாலான பள்ளிகளில், திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. தேர்வு மையம் அமைத்தல், மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் விபரங்களை சரிபார்த்தல், தேர்வு பணிகளுக்கு ஆசிரியர்கள், ஊழியர்களை நியமித்தல், விடைத்தாள் திருத்தம் போன்ற திட்டமிடல்கள், திடீரென நிறுத்தப்பட்டு உள்ளன.வழக்கின் முடிவுக்கு பின், இப்பணிகளை பார்த்து கொள்ளலாம் என, தலைமை ஆசிரியர்களுக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள், வாய்மொழி உத்தரவிட்டுள்ளனர். வழக்கு நிலுவையில் இருக்கும் போது, தேர்வு பணிகளை தொடர்ந்தால், அரசுக்கு சட்ட சிக்கலை ஏற்படுத்தும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளதாக, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

5, 8,ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள் தகவல்




5, 8,ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள் தகவல்

 தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் அனைத்துவகை பள்ளிகளில் பயிலும் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த தீவிரமாக பணிகள் நடந்துவருகிறது பொதுத்தேர்வு நடத்துவதற்கான நெறிமுறைகளை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது மாநில பாடத் திட்டத்தை பின்பற்றி 5 மற்றும் 8ம் வகுப்புகள் நடத்தும் அனைத்து வகை பள்ளிகளும் தேர்வு மையமாக அமைத்தல் வேண்டும் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து குறுவள மையங்கள் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் ஆக அமைக்கப்படுதல் வேண்டும் மையத்திலிருந்து தேர்வு மையங்களுக்கு அனுப்புதல் வேண்டும் 5 மற்றும் எட்டாம் வகுப்பு களுக்கு உரிய வினாத்தாள்கள் அரசு தேர்வுகள் இயக்ககம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அனுப்பி வைக்கவேண்டும் தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் தேர்வு நடைபெறும் ஒவ்வொரு நாளும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திற்கு குறித்த நேரத்தில் சென்று வினாத்தாள்களை பெற்று தேர்வு நடத்துதல் வேண்டும் தேர்வு முடிந்த உடன் விடைத்தாள்களை வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் அன்றைய தினமே ஒப்படைத்தல் வேண்டும் ஊராட்சி ஒன்றிய நகராட்சி மாநகராட்சி அரசு அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் ஆனால் தனியார் சுயநிதி பள்ளிகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் ஐந்தாம் வகுப்பு ₹100 8வகுப்புக்கு ₹200 தேர்வு கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் ஒவ்வொரு நாளும் பெறப்படும் பள்ளி வாரியான விடைத்தாள்களை அன்றைய தினமே அந்த வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திற்கு உட்பட்ட பிற பள்ளிகளுக்கு மதிப்பீட்டு பணிகள் மாற்றிக் கொடுத்து சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரும் ஒப்புதல் பெறவேண்டும் நிறைவடைந்தவுடன் ஐந்தாம் வகுப்பிற்குரிய விடைத்தாள்களை ஏப்ரல் 28 ஆம் தேதியும் எட்டாம் வகுப்பிற்கு உரிய விடைத்தாள்களை ஏப்ரல் 25 ஆம் தேதியும் சார்ந்த வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் மதிப்பெண் பட்டியல் ஒப்படைக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வேண்டும் வழிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது உரிய வழிகாட்டுதல்களை வழங்கி ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு சிறப்பாக நடத்துவதற்கு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினர்

வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியம். வட்டாரக்கல்வி அலுவலர் திரு இரா. நெடுஞ்செழியன் அவர்கள் 30-1-2020 பணிநிறைவு பெற்றார் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களிடமிருந்து பணி விடுவிப்பு ஆணை பெற்றார். அவர் எல்லா வளமும் பெற்று நீடூடி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். கீ.வ. குப்பம் ஒன்றிய ஆசிரியப் பெருமக்கள் மற்றும் ஆசிரியர் TECH YouTube









வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியம்.

 வட்டாரக்கல்வி அலுவலர்
திரு இரா. நெடுஞ்செழியன் அவர்கள் 30-1-2020 பணிநிறைவு பெற்றார் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களிடமிருந்து பணி விடுவிப்பு ஆணை பெற்றார்.

 அவர் எல்லா வளமும் பெற்று நீடூடி வாழ எல்லாம் வல்ல இறைவனை  வேண்டுகிறோம்.
கீ.வ. குப்பம் ஒன்றிய ஆசிரியப் பெருமக்கள்.
மற்றும்
ஆசிரியர் TECH
    YouTube

5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வை கண்காணிக்க வேறு பள்ளி ஆசிரியர்கள்!!





5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வை கண்காணிக்க வேறு பள்ளி ஆசிரியர்கள்!!

Thursday 30 January 2020

குறைகள் நிவர்த்தி செய்பட்டுள்ளதாக அறிவிப்பு - ஜனவரி 2020 மாத சம்பளம் எப்போது கிடைக்கும்? - நீங்களே அறிந்துகொள்ளலாம் - Direct Link -





குறைகள் நிவர்த்தி செய்பட்டுள்ளதாக அறிவிப்பு - ஜனவரி 2020 மாத சம்பளம் எப்போது கிடைக்கும்? - நீங்களே அறிந்துகொள்ளலாம் - Direct Link -

http://treasury2.tn.gov.in/Public/gpf.aspx


அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு சம்பளம் பெற்றுத் தர பொறுப்பேற்ற நிறுவனம் போதிய பயிற்சி அளிக்காமல் போனதால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல் எழுந்தது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மாதாமாதம் பெற்று வரும் சம்பளத்தை அரசிடம் பெற்று அதை நேரடியாக ரிசர்வ் வங்கிக்கு அனுப்பும் பணியை தனியார் நிறுவனத்திடம் அரசு ஒப்படைத்துள்ளது. ஒப்பந்தம் செய்துகொண்ட நிறுவனம் சம்பளப் பட்டியல் தயாரிக்க புதிய முறையை அறிமுகம் செய்துள்ள நிலையில், அதற்கான பயிற்சியை கருவூல ஊழியர்களுக்கு அளிக்கவில்லை.

இதனால் சம்பளப் பட்டியல் தயாரிக்க முடியாமல் கருவூல ஊழியர்கள் திணறுகின்றனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மாதச் சம்பளம் பெற முடியாமல் தற்போது தவிக்கின்ற நிலை ஏற்பட்டது

தற்போது இக்குறைகள் நிவர்த்தி செய்பட்டு உரிய நேரத்தில் அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாத சம்பளம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது



5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் அந்தந்தப் பள்ளிகளிலேயே திருத்தப்படுமா? - அரசு வழக்கறிஞர் நீதிமன்றதில் அறிவிப்பு




5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் அந்தந்தப் பள்ளிகளிலேயே திருத்தப்படுமா? - அரசு வழக்கறிஞர் நீதிமன்றதில் அறிவிப்பு

தமிழகத்தில் நடப்புக் கல்வியாண்டில் 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறையை அமல்படுத்த தடை விதிக்கக் கோரிய வழக்கில் தமிழக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பிய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டது.

மதுரை ஒய்.நரசிங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.லூயிஸ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''தமிழகத்தில் இந்த ஆண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் 13.9.2019-ல் அரசாணை பிறப்பித்துள்ளார். பொதுத்தேர்வில் தோல்வி அடையும் 5, 8-ம் வகுப்பு மாணவிகள் அடுத்த 2 மாதத்தில் மறு தேர்வு எழுதி தோல்வியடைந்த பாடத்தில் வெற்றி பெற வேண்டும்.

இந்தச் சிறு வயதில் மாணவ, மாணவிகளை மறு தேர்வு எழுதக் கட்டாயப்படுத்துவது மாணவ, மாணவிகளை மன உளைச்சலுக்கு ஆளாக்கும். இதனால் பள்ளியில் இடை நிற்றல் அதிகரிக்கும். தரமான கல்வி முறை அமலில் இருக்கும் நாடுகளில் கூட 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு முறை அமலில் இல்லை. இருப்பினும் தமிழகத்தில் 5, 8-ல் பொதுத்தேர்வை அமல்படுத்துவதில் தொடக்கக் கல்வித்துறை தீவிரமாக உள்ளது.

எனவே தமிழகத்தில் நடப்பாண்டில் 5, 8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறையை அமல்படுத்தத் தடை விதிக்க வேண்டும். இது தொடர்பாகக் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தம், அரசிதழ் வெளியீடு மற்றும் அரசாணையைகச் செயல்படுத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்தரன் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வழக்கறிஞர் லஜபதிராய் கூறும்போது, ''5, 8-ம் வகுப்பு மாணவர்கள் தொடக்கக்கல்வி நிலையில் வருகின்றனர். தொடக்கக்கல்வி நிலையில் நடத்தப்படும் பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதை கட்டாயமாக்கக்கூடாது என கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்கு எதிராக பொதுத்தேர்வு அமல்படுத்தப்படுகிறது.

இது மாணவர்கள் மத்தியில் அழுத்தத்தை ஏற்படுத்தும். அதிக இடைநிற்றலுக்கு வழிவகுக்கும். இந்த பொதுத்தேர்வு முறையைத் தமிழகம் மட்டுமே அமல்படுத்தியுள்ளது. பிற மாநிலங்கள் அமல்படுத்தவில்லை. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இந்த முறை அமலில் இல்லை. எனவே அரசாணைக்குத் தடை விதிக்க வேண்டும்'' என்றார்.

அரசு வழக்கறிஞர் ஸ்ரீமதி வாதிடுகையில், ''மாணவர்களுக்கு அடிப்படைக் கல்வியைத் தரமானதாக வழங்க வேண்டும் என்பதற்காகவே பொதுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறவில்லை எனில் மறுதேர்வு நடத்தப்படும். இதனால் இடைநிற்றலுக்கு வாய்ப்பில்லை'' என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் மறுதேர்விலும் தேர்ச்சி பெறாதவர்களின் நிலை என்ன? எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு வழக்கறிஞர், ''மறுதேர்விலும் தேர்ச்சி பெறாத மாணவர்களின் நிலை குறித்து அரசு முடிவு செய்யும். 5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் அந்தந்தப் பள்ளிகளிலேயே திருத்தப்படுமா? அல்லது வேறு பள்ளிகளுக்கு அனுப்பித் திருத்தப்படுமா? என்பதும் அரசின் பரிசீலனையில் உள்ளது'' என்றார்.

இதையடுத்து இந்த மனு தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலர், தமிழக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர், தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 19-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

தமிழக அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை கொரோனா வைரஸ் காய்ச்சல்பற்றி வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவு






தமிழக அரசு
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை
கொரோனா வைரஸ் காய்ச்சல்பற்றி வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவு(nCov -2019)

கொரோனா வைரஸ் (nCov-2019)

கொரோனா வைரஸ் என்பது மனிதர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் மற்றும் மூச்சு
திணறல் ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடிய ஒருவகை வைரஸ் கிருமி யாகும்.
சீனாவின் வூகான் நகரத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. இது

விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
நோயின் அறிகுறிகள்:

- காய்ச்சல், இருமல் மற்றும் சளி
- உடல் சோர்வு

- ஒரு சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும்.
கொரோனா வைரஸ் நோய் பரவும் விதம்:

நோய் அறிகுறிகள் கண்ட நபர் இருமும் போதும், தும்மும் போதும், வெளிப்படும் நீர்த்
திவலைகள் மூலம் நேரடியாக பரவுகிறது.

மேலும் இருமல் மற்றும் தும்மல் மூலம் வெளிப்படும் கிருமிகளை உடைய நீர்த்
திவலைகள் படிந்துள்ள பொருட்களை தொடும் பொழுது கைகள் மூலமாகவும்
பரவுகிறது.

நோய் தடுப்பு நடவடிக்கைகள் :

தினமும் 10 முதல் 15 முறை சோப்பு போட்டு, நன்கு தேய்த்து கழுவ வேண்டும்.

இருமும் போதும் தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை கை குட்டை கொண்டு மூடி
கொள்ள வேண்டும்.

+ சிகிச்சை தரும் அனைத்து மருத்துவமனைகளிலும் கிருமி நாசினி கொண்டு சுத்தமாக
துடைத்து பராமரித்தல் வேண்டும்
சிகிச்சைகள்
+ சளி, இருமல் மற்றும் காய்ச்சல், போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில்
உள்ள மருத்துவரை அனுகவும்,

+ இளநீர், ஓ.ஆர்.எஸ், கஞ்சி போன்ற நீர்ச்சத்து மிகுந்த ஆகாரங்களை பருகுதல்
வேண்டும்.

கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டுள்ள சீனாவுக்கு பயணம் செல்லுவதை

தவிர்க்க லாம்.
2. இருமல் சளி, ஜலதோசம் உள்ளவர்கள் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு
செல்வதையும், விழாக்களில் பங்கு பெறுவதையும் தவிர்க்க வேண்டும்.
சமீபத்தில் சீனாவுக்கு பயணம் சென்றுவந்தவர்கள் இருமல் சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல்
ஏற்பட்டால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று ஆலோசனை
பெற வேண்டும்

கைகளை கழுவும் முறைகள்
நன்றாக கை கழுவ குறைந்தது 30 வினாடிகள் தேவைப்படும்.

கைகளைத் தண்ணீரில்
ஈரப்படுத்தவும்

தாராளமாகக் கை முழுவதும்
சோப் போடவும்

கையோடு கை சேர்த்துத்
தேய்த்துக் கழுவவும்

வலது விரல்களை இடது
விரலிடுக்குகளில் நுழைத்து
மாறி மாறித் தேய்க்கவும்

விரல்களை கோர்த்து
இருகைகளையும் தேய்க்கவும்

கைகள் விரல் பின் பாகங்களை
இடுக்கியிட்டுத் தேய்க்கவும்

AM
கட்டைவிரலை கழற்றி
இருகைகளையும் தேய்க்கவும்

பின்பக்கம் முன் பக்கமாக
விரல்களை சுழற்றி
மாறி மாறி தேய்க்கவும்

தண்ணீரில் நன்கு
கைகளை / அலம்பவும்

24 மணி நேர உதவி எண் : 01123978046

TI4. தொலைபேசி: 04429510400 / 044-2951 050
கைபேசி: 9444340496 / 8754448477

Wednesday 29 January 2020

பள்ளிப் பார்வையின் போது வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் முதன்மை கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தொடக்கக் கல்வி அலுவலர் செயல்முறைகள்!!





தொடக்கக் கல்வி இயக்ககம்
DEOSஆய்வு - கூட்டம் பொருள் விவரம்

வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளிகளை முன்னறிவிப்பின்றி பார்வை
School Surprise Visit) eflemisir (Lapnuà -
முன்னறிவிப்பின்றி பார்வையிடப்படும் (BEOS -
வட்டாரக் கல்வி அலுவலர்கள் பள்ளிகள் ஆண்டாய்வு (Annual Inspection) செய்தது
சார்பான விவரம் (படிவம் - 2)

வட்டாரக் கல்வி அலுவலகங்களில் 0EOS முன்னறிவிப்பின்றி பார்வையிடப்படும் விவரம் மற்றும்
 (BEOS Office Surprise visit and Annual
Inspection) (np – 3)

 கல்வி அலுவலர்களால் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு மாதாந்திர ஆய்வு
கூட்டம் (Monthly Review Meeting) நடத்தப்பட்ட விவரம் (படிவம் - 4
5 முதன்மைக் கல்வி அலுவலர்களால் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு மாதாந்த ஆய்வு
கூட்டம் (Monthly Review Meeting) நடத்தப்பட்ட விவரம் (படிவம் - 5)
Spoken English - வாரம் ஒரு பாடவேளை நடைபெறுவதை ஆய்வு செய்த விவரம்

7. கணித உபகரணப் பெட்டிகள் பள்ளிகளில் பயன்படுத்தப்பட்டதையும் கணிதப் பாடத்தினை நடத்தியதையும்
வாய்ப்பாடு சொல்லிக் கொடுக்கப்படுவதையும் ஆய்வு செய்யப்பட்ட விவரம் (படிவம் -1
ஆங்கிலப் பாடத்தில் Dictation நடை முறையில் உள்ளதையும், Dictionary பயன்பாடு பற்றி
ஆய்வு செய்த விவரம் (படிவம் - 8)

 9. மாணவர்களின் கட்டுரை பயிற்சி ஏடு (Composition Note) திருத்தம் செய்யப்பட்டதை
செய்த விவரம் (படிவம் - 9)

10. மாணவர்களின் கையெழுத்துப் பயிற்சி எடுகளான இரண்டு வரி மற்றும் நான்கு வரி எடுக
(Two Lines, Four Lines Note book) திருத்தம் செய்யப்பட்டதை ஆய்வு செய்த விவரம் (படிவம்
10)

முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகளில் விளையாட்டுப் போட்டிசு
நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டதை ஆய்வு செய்த விவரம் (படிவம் - 1

12 மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் (Welfare Schemes) பள்ளிகளில் செயல்படுத்தப்படும்
ஆய்வு செய்த விவரம் (படிவம் - 12 முதல் 20 வரை)

13. ஊராட்சி ஒன்றிய "தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் பயன்பாட்டில் இல்லாத பாதுகாப்பற்ற
இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள் (To be demolished buildings) சார்பாக மேற்கொள்ளப்ப
நடவடிக்கைகள் விவரம் (படிவம் - 21)

14. ஊராட்சி ஒன்றிய தொடக்க! நடுநிலைப் பள்ளி கட்டடங்களில் சிறப்பு மராமத்து பணி
(Special Repair) மேற்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரம் (படிவம் - 22

15. ஊராட்சி ஒன்றிய தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளுக்கு மின்கட்டணம் (Electricity
தொடக்கக் கல்வி இயக்ககத்திலிருந்து பெறப்பட்டு செலவினங்கள் மேற்கொள்ளப்ப
பயன்பாட்டு சான்றிதழ் (Utility Certificate) அனுப்பிய விவரம் (படிவம் - 23)

பொது மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு தங்கள் பள்ளியில் பயின்று முடித்து மாற்றுச் சான்றிதழ் (T.C.) மற்றும் மதிப்பெண் பட்டியல் (Mark Sheet) பெற்றபின் தங்கள் பெயர் அல்லது பெற்றோர்களின் பெயர்கள் ஏதாவது திருத்தம் செய்ய விரும்பினால், மீண்டும் பள்ளிக்கு வருகை தரவேண்டிய அவசியமில்லை. கீழ்காணும் அரசு அலுவலகத்தில் சென்று தகுந்த சான்றுகளை சமர்பித்து பெயர்கள் திருத்தம் செய்து கொள்ளலாம். அணுக வேண்டிய முகவரி : இயக்குநர் அவர்கள், அரசு செய்தித்தாள் நிறுவனம், #110, அண்ணா சாலை, L.I.C. கட்டிடம் எதிரில், சென்னை 600 005. The Director, Gazette Office, Stationary & Printing Department,



பொது மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

தங்கள் பள்ளியில் பயின்று முடித்து மாற்றுச்
சான்றிதழ் (T.C.) மற்றும் மதிப்பெண் பட்டியல் (Mark
Sheet)
பெற்றபின்
தங்கள்
பெயர்
அல்லது
பெற்றோர்களின் பெயர்கள் ஏதாவது திருத்தம் செய்ய
விரும்பினால், மீண்டும் பள்ளிக்கு வருகை தரவேண்டிய
அவசியமில்லை. கீழ்காணும் அரசு அலுவலகத்தில்
சென்று தகுந்த சான்றுகளை சமர்பித்து பெயர்கள்
திருத்தம் செய்து கொள்ளலாம்.
அணுக வேண்டிய முகவரி :

இயக்குநர் அவர்கள்,
அரசு செய்தித்தாள் நிறுவனம்,
#110, அண்ணா சாலை,
L.I.C. கட்டிடம் எதிரில்,
சென்னை 600 005.

The Director,
Gazette Office,
Stationary & Printing Department,

தமிழகம் முழுவதும் இன்றும் 31-01-2020 EMIS attendance app சர்வர் பிரச்சினையால் செயல்படவில்லை வெகு விரைவில் சரியாகிவிடும் என்று தெரியவருகிறது.




தமிழகம் முழுவதும் இன்றும் 31-01-2020 EMIS attendance app சர்வர் பிரச்சினையால் செயல்படவில்லை வெகு விரைவில்  சரியாகிவிடும் என்று தெரியவருகிறது.

சுதந்திரப் போராட்ட* *வீரர்களுக்கு* *30.01.2020 அன்று* *காலை 11.00* *மணியளவில் இரண்டு நிமிடம்* *மௌனம் செலுத்துதல்* *மற்றும் உறுதி* *மொழி* *எடுக்கவும் தெரிவிக்கப்படுகிறது.* *இணைப்பு - கடித நகல்* *முதன்மைக் கல்வி* *அலுவலர்,* *வேலூர்.* *பெறுநர்* *மெட்ரிக் / அரசு அரசு* *நிதியுதவி பெறும் தொடக்க /* *நடு நிலை /* *உயர்நிலை* *மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்.* *நகல்* *1. அனைத்து* *வட்டாரக் கல்வி அலுவலர்கள்* *2. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்*





*அனைத்து வட்டாரக் கல்வி*
*அலுவலர்கள் மாவட்ட கல்rவி அலுவலர்கள்* *மெட்ரிக் / அரசு / அரசு நிதியுதவி* *பெறும் /*
*தொடக்க /* *நடுநிலை / உயர் /* *மேல்நிலை பள்ளி தலைமை* *ஆசிரியருக்கு*
*அனுப்பப்படுகிறது.*

*மேற்படி  நகலில் தெரிவித்துள்ளவாறு சுதந்திரப் போராட்ட* *வீரர்களுக்கு*
*30.01.2020 இன்று* *காலை 11.00* *மணியளவில் இரண்டு நிமிடம்* *மௌனம் செலுத்துதல்*
*மற்றும் உறுதி* *மொழி* *எடுக்கவும் தெரிவிக்கப்படுகிறது.*

*இணைப்பு - கடித நகல்*

*முதன்மைக் கல்வி* *அலுவலர்,*
*வேலூர்.*

*பெறுநர்*
*மெட்ரிக் / அரசு அரசு* *நிதியுதவி பெறும் தொடக்க /* *நடு நிலை /*
*உயர்நிலை* *மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்.*

*நகல்*
*1. அனைத்து* *வட்டாரக் கல்வி அலுவலர்கள்*

*2. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்*

🌎🌎🌎🌎🌎🌎🌎🌎

*தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ளும்*

*உறுதிமொழி*

இந்திய
அரசியலமைப்பின் பால்
இடை விடாத
உளமார்ந்த பற்றுள்ள இந்தியக் குடிமகன்/குடிமகள்
ஆகிய நான், நமது அரசியலமைப்பின் படி தீண்டாமை
ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை
அடிப்படையாகக் கொண்டு, எவர்மீதும் தெரிந்தோ,
தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல்
என்ற எந்த வகையிலும் கடைப்பிடிக்கமாட்டேன் என்று
இதனால் உளமார உறுதியளிக்கிறேன். அரசியலமைப்பின்
அடிப்படைக் கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர
சமுதாயத்தை
உருவாக்குவதில்
நேர்மையுடனும்
உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும்
என்பதையும் உணர்வேன். இந்திய அரசியலமைப்பின் பால்
எனக்குள்ள முழுப்பற்றிற்கு இது என்றென்றும்
எடுத்துக்காட்டாக விளங்குமென்றும் இதனால் உளமார
உறுதியளிக்கிறேன்



🌎🙋‍♂🌎🙋‍♂🌎🙋‍♂🌎🙋‍♂🌎

Tuesday 28 January 2020

உங்களுக்கு கொரோனா வைரஸ் உள்ளதா? கண்டுபிடிப்பது எப்படி இந்தியர்கள் ஜாக்கிரதை!



உங்களுக்கு கொரோனா வைரஸ் உள்ளதா? கண்டுபிடிப்பது எப்படி இந்தியர்கள் ஜாக்கிரதை!

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படாது: தொடக்கக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது




எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படாது: தொடக்கக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது

தள்ளிப்போகிறது நகர்புற உள்ளாட்சி தேர்தல் : மே மாதம் நடக்க வாய்ப்பு




தள்ளிப்போகிறது நகர்புற உள்ளாட்சி தேர்தல் : மே மாதம் நடக்க வாய்ப்பு

தமிழகத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் உள்ள, ஒன்பது மாவட்டங்களில், வார்டு வரையறை செய்யும் பணியை, மார்ச், 5க்குள் முடிக்க, வார்டு மறுவரையறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வார்டு வரையறை பணி, மார்ச் வரை நடக்க உள்ளதால், ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல், மே மாதம் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.

தமிழகத்தில், புதிய மாவட்டங்கள் தவிர்த்து, 27 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல், இரண்டு கட்டமாக, கடந்த மாதம் நடத்தப்பட்டது. ஜன., 2ல் ஓட்டு எண்ணிக்கை முடிந்து, புதிய உள்ளாட்சி பிரதிநிதிகள், பணிகளை துவக்கி உள்ளனர்.

சென்னை தவிர்த்து, தேர்தல் நடத்தப்படாமல் உள்ள, ஒன்பது மாவட்டங்களில், மூன்று மாதங்களுக்குள், தேர்தல் நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், அனைத்து மாவட்டங்களிலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.இதற்கான ஆயத்தப் பணிகளை, மாநிலத் தேர்தல் ஆணையம் துவக்கி உள்ளது. புதிய மாவட்டங்களில், வார்டு வரையறை பணியை, அதற்கான ஆணையம் துவக்கி உள்ளது.

புதிய மாவட்டங்களில், வார்டு வரையறை தொடர்பான அறிவிப்பு, இன்று வெ ளியாக உள்ளது.புதிய வார்டு வரையறை வரைவு பட்டியல், நாளை வெ ளியிடப்படும். இது தொடர்பாக, பிப்., 8 வரை, கருத்து தெரிவிக்கலாம்; அதன் மீது, பிப்., 15க்குள் நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பின், வார்டு வரையறை வரைவு பட்டியல், துறை தலைமைக்கு அனுப்பப்படும்.

பிப்., 20ல், பொது மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்துவதற்கான அறிவிப்பை, ஆணையம் வெ ளியிடும். பிப்., 27 காலை, 10:00 மணிக்கு, காஞ்சிபுரம் மாவட்டத்திலும், மாலை, 3:00 மணிக்கு, செங்கல்பட்டு மாவட்டத்திலும், கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது.

இதேபோல், பிற மாவட்டங்களுக்கும், தேதிகள் அறிவிக்கப்படும். வார்டு வரையறை இறுதி பட்டியல், பிப்., 29ல் வெ ளியாகும். புதிய வார்டு வரையறை விபரம், மார்ச் 5ல், அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்.காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில், வார்டு வரையறை பணியை, முறையாக முடிக்கும்படி, வார்டு வரையறை ஆணையம், உறுப்பினர் செயலர் சுப்ரமணியன், ஊரக வளர்ச்சித் துறை இயக்குனர், நகராட்சி நிர்வாக ஆணையர், பேரூராட்சிகள் இயக்குனர், இரு மாவட்ட கலெக்டர்களுக்கு, கடிதம் அனுப்பி உள்ளார்.

இதேபோல், மற்ற மாவட்டங்களிலும், வார்டு வரையறை பணியை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி, மார்ச் வரை, வார்டு வரையறை பணி நடக்க உள்ளதால், அதன் பின்னரே, தேர்தல் நடத்த முடியும்.ஏப்ரலில் பள்ளித் தேர்வுகள் நடக்கும். எனவே, வார்டு வரையறை பணி முடிந்து, ஒன்பது மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல், மே மாதம் நடக்க வாய்ப்புள்ளது. அப்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலும் நடக்கும். அதற்கு முன், தேர்தல் நடக்க வாய்ப்பு குறைவு என, மாநில தேர்தல் ஆணைய வட்டாரம் தெரிவித்தது.

புதிய ஒன்றியங்கள்!

புதிய மாவட்டங்களில், ஊராட்சி ஒன்றியங்கள், ஏற்கனவே உள்ளபடி இருப்பதால், அதில் பெரிய அளவில் மாற்றங்கள் இல்லை. ஆனால், மாவட்ட ஊராட்சி வார்டுகளில், மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திற்கும், எத்தனை வார்டுகள், அவற்றுக்கான இட ஒதுக்கீட்டை, முடிவு செய்ய வேண்டி உள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும், பிரிக்கப்பட்டுள்ள ஒன்றியங்கள் விபரம், தமிழ்நாடு அரசிதழில் வெ ளியிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் ஒன்றியங்கள்; செங்கல்பட்டு மாவட்டத்தில், அச்சரப்பாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், காட்டாங்கொளத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், புனித தோமையார் மலை ஒன்றியங்கள் இடம்பெற்றுள்ளன.

நீங்கள் ஹேக்கர்களிடமிருந்து தப்பிக்க வேண்டுமா.? உடனடியாக இதை செய்யுங்கள்.! பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில் சில பாதுகாப்பு மற்றும் ப்ரைவஸி கோளாறுகள் இருக்கத்தான் செய்கின்றன.




நீங்கள் ஹேக்கர்களிடமிருந்து தப்பிக்க வேண்டுமா.? உடனடியாக இதை செய்யுங்கள்.!
பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில் சில பாதுகாப்பு மற்றும் ப்ரைவஸி கோளாறுகள் இருக்கத்தான் செய்கின்றன.

வாட்ஸ்அப் பயன்படுத்தும் சுமார் 1.6 பில்லியனுக்கு அதிகமானோர் இதுபோன்ற சிக்கலில் உள்ளனர். அதிலிருந்து காப்பாற்றிக்கொள்ள கீழே உள்ள விபரங்களை பின்பற்றவும்.

பொதுமக்கள் ஆகிய நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு அப்ளிகேஷன் மூலமாகவும், இணையதளத்தில் பொருட்கள் வாங்கும் போதும், தங்களுடைய அனைத்து விபரங்களையும் ஹேக்க செய்யப்பட்டு வருகிறது. அதனால நாம் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அந்த வகையில், பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில் சில பாதுகாப்பு மற்றும் ப்ரைவஸி கோளாறுகள் இருக்கத்தான் செய்கின்றன.
முக்கியப் பிரபலங்கள் முதல் சாதாரண பொதுமக்கள் வரையில் ஹேக்கர்களின் கைவரிசைக்கு யாரும் விதிவிலக்கு அல்ல. இதில் பிரபலங்களின் தனிப்பட்ட தகவல்கள் உட்பட பொதுமக்களின் வங்கி, பண விவரங்கள் வரையில் அனைத்தையும் வாட்ஸ்அப் மூலம் ஹேக் செய்யப்படுகிறது.
இதனால் வாட்ஸ்அப் பயன்படுத்தும் சுமார் 1.6 பில்லியனுக்கு அதிகமானோர் சிக்கலில் உள்ளனர். ஆனால், வாட்ஸ்அப் பயன்படுத்தும் நீங்கள் உங்களுக்கான பாதுகாப்பை இந்த ஒரு சின்ன செயலால் உறுதி செய்ய முடியும். வாட்ஸ்அப் செயலியை ஓப்பன் செய்யுங்கள். Settings -> Account -> Two-Step Verification க்ளிக் செய்து Enable என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும். இதன் பின்னர் 6 இலக்க PIN நம்பர் உருவாக்கவும். பின்னர் தொடர்ந்து உங்களது மெயில் உடன் 2 ஸ்டெப் வெரிஃபிகேஷன் இணைத்தால் பயனுள்ளதாய் இருக்கும். காரணம், உங்களது வாட்ஸ்அப் கணக்கை ஹேக்கர் ஒருவர் ஹேக் செய்யும் போது நீங்கள் உருவாக்கிய 6 இலக்க PIN எண் ஹேக்கருக்கு ஒரு தடையாக இருக்கும். இதனை உடனடியாக உங்களது வாட்ஸ்அப்-யில் செய்துகொண்டு ஹேக்கர்களிடமிருந்து தப்பித்துக்கொள்ளவும்.

அனைத்துப் பள்ளிகளிலும் LKG,UKG வகுப்புகள் தொடங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்!



அனைத்துப் பள்ளிகளிலும் LKG,UKG வகுப்புகள் தொடங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்!

இந்த ஆண்டு 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தும் முடிவிலிருந்து தமிழக அரசு பின் வாங்காது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் அரங்கில், தமிழர் திலகம் பத்திரிகையின் 2ஆம் ஆண்டு துவக்க விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், அனைத்து அரசு பள்ளிகளிலும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றார்.

 1 ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்கள் வரை சரளமாக ஆங்கிலம் பேச, ஆயிரம் ஆங்கில வார்த்தைகள் என்ற பாடத்திட்டத்தின் கீழ் வாரம் 45 நிமிடங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்.

விடுமுறை நாட்களில், ஓய்வு பெற்ற தமிழாசிரியர்களை கொண்டு தமிழ் பயிற்சி, மற்றும் நீதிபோதனை வகுப்புகள் நடத்தவும் அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வை ரத்து செய்திட வேண்டும் என்று எழுந்துள்ள கோரிக்கைகள் பற்றி, அடுத்த ஆண்டு முதல் பரிசீலிக்கப்படும் என்று கூறினார். நடப்பாண்டு கட்டாயம் பொது தேர்வு நடத்தப்படும் எனவும் உறுதிபட தெரிவித்தார். இவ்விழாவில் முன்னாள் அமைச்சர் எச்.வி ஹன்டே மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

எச்சரிக்கை கொரொனா வைரஸின் அறிகுறிகள் மற்றும் பரவும் முறைகள்.!!!




எச்சரிக்கை கொரோனா வைரஸின் அறிகுறிகள் மற்றும் பரவும் முறைகள்.!!!

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.  இந்த வைரஸ், உலக நாடுகளின் பல்வேறு பகுதிகளிலும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

அறிகுறிகள்

‍‍தொண்டை வலி
தலை வலி
இருமல்
காய்ச்சல்
உடல் சோர்வு/ அலுப்புத்தன்மை
பரவும் முறைகள்

காற்றின் மூலம் பரவும் (இருமல், தும்மல்)
மனிதர்களை தொட்டு பேசுதல் (கை குலுக்குதல்)
கிருமி இருக்கும் பொருட்களை நுகர்தல் (மூக்கு,
வாய், கை மூலமாக)
மற்றும் கழிவுகள் மூலமாக பரவும்
எச்சரிக்கை முறைகள்

இருமலுக்குப் பின்
நோயாளிகளை கவனித்ததற்கு பின்
உணவு சமைக்க, பரிமாற‌ மற்றும் உண்ணும் முன்
கழிவரையின் பின்
கைகள் அழுக்காக இருப்பின்
மிருகங்களை மற்றும் மிருக கழிவுகளை சுத்தம் செய்த பின்
உங்கள் கைகளை நன்றாக சவர்காரமிட்டு வெந்நீரில் சுத்தம் செய்யுங்கள்
இந்த வைரஸை முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால் இதன் அறிகுறிகளை ஆரம்பத்தில் கண்டால் இதற்கு தடுப்பு மருந்துகள் உண்டு என்று மருத்துவத்துறை அறிவித்துள்ள்து.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாமதமாக வருகை புரிந்த 2000 ஆசிரியர்களுக்கு விளக்க கேட்டு மாவட்ட கல்வி அலுவலர் நோட்டீஸ்!!



கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாமதமாக வருகை புரிந்த 2000 ஆசிரியர்களுக்கு விளக்க கேட்டு மாவட்ட கல்வி அலுவலர் நோட்டீஸ்!!

*பள்ளிக்கு தாமதமாக வந்த  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2,000 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது*

தமிழகம் முழுவதும் நோட்டீஸ் வழங்கப்படுவதால் ஆசிரியர்கள் பீதியில் உள்ளனர்.

இது குறித்து விளக்கம் தராதவர்கள் மீது 17-ஏ பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்து சஸ்பெண்ட் செய்ய வாய்ப்பு உள்ளது.

.வட்டாரக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநரால் வேலூர், கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களுக்கு வேலூர் மண்டல அளவில் ஆய்வுக் கூட்டம் 31.01.2020 அன்று காலை 10.00 மணிக்கு வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் பெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டத்தில் பார்வையில் கண்ட செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்ட பொருண்மைகள் சார்ந்தும் இந்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் சார்ந்தும் ஆய்வு செய்யப்படவுள்ளது. எனவே கூட்டப் பொருள் சார்பான படிவங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களுடன் கூட்டத்தில் கலந்து கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி இணைப்பு கூட்டப்பொருள் சார்பான படிவங்கள் தொடக்கக் கல்வி இயக்குநர் பெறுநர் முதன்மைக் கல்வி அலுவலர்கள் வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டம்

பார்வையில் கண்ட தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகளில் வட்டாரக் கல்வி
அலுவலர்கள் ஒரு மாதத்திற்கு குறைந்தது 20 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள்
பார்வையிடவும் 5 பள்ளிகள் ஆண்டாய்வு போய் கொள்ளவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்
வட்டாரக் கல்வி அலுவலகங்கள் மாவட்டக் கல்வி அலுவலர்கள் முன்னறிவிப்பின்றி
பார்வையிடவும் ஆண்டாய்வு மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வட்டார கல்வி

அலுவலர்களுக்கும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் மாதாந்திர ஆய்வுக்கூட்டம்
முதன்மை
கல்வி
அலுவலர்களால் தளறாமல் நடத்தப்பட
வேண்டும்
அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2. வட்டாரக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தொடக்கக் கல்வி இயக்குநரால் வேலூர், கிருஷ்ணகிரி
மற்றும் தர்மபுரி ஆகிய மாவட்டங்களுக்கு வேலூர் மண்டல அளவில் ஆய்வுக் கூட்டம்
31.01.2020 அன்று காலை 10.00 மணிக்கு வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரி ஹோலிகிராஸ்
பெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கூட்டத்தில் பார்வையில் கண்ட
செயல்முறைகளில்
தெரிவிக்கப்பட்ட
பொருண்மைகள்
சார்ந்தும்
இந்துடன்
இணைக்கப்பட்டுள்ள படிவங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்கள் சார்ந்தும் ஆய்வு
செய்யப்படவுள்ளது. எனவே கூட்டப் பொருள் சார்பான படிவங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள
விவரங்களுடன் கூட்டத்தில் கலந்து கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக்
கல்வி
இணைப்பு கூட்டப்பொருள் சார்பான படிவங்கள்
தொடக்கக் கல்வி இயக்குநர்
பெறுநர்
முதன்மைக் கல்வி அலுவலர்கள்
வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டம்

நகல்

1 அரசு முதன்மை செயலர், பள்ளிக் கல்வித் துறை, சென்னை -9
2 ஆணையர், பள்ளிக் கல்வித் துறை, சென்னை -6

அவர்களுக்கு தகவலுக்காக
பணிந்து அனுப்பலாகிறது.

அரசு பள்ளிகளில் பயின்று 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்க ளுக்கும் மடிக்கணினி வழங்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் சா.அருணன் நிறுவனத் தலைவர்.




அறிக்கை 28-01-2020.

அரசு பள்ளிகளில் பயின்று 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்க ளுக்கும் மடிக்கணினி வழங்க  தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்
சா.அருணன்
நிறுவனத் தலைவர் .9445454044
~~~~~~~~~~
அரசு பள்ளிகளில் 2017 -2018, மற்றும் 208 - 2019. ஆண்டுகளில் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்க்கல்வி படித்துவரும் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படுவாத மாண்புமிகு  தமிழக பள்ளிக்கவி அமைச்சர் அவர்கள் அறிவித்து படிக்கணினி வழங்கப்பட்டு வந்தாலும்

அரசு பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்று உயர்க்கல்வி படித்துவும் அனைவருக்கும் வழங்கப்பட வில்லை மூன்று ஆண்டுகள் பட்டப்படிப்பு மற்றும் பொறியல் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களுக்கு மட்டும் அந்தந்த கல்லூரியில் தொடர்ந்து படித்து வருங்கின்றோம் என்று கல்லூரிகளில் சான்று பெற்று தான் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்தால் மட்டுமே மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது ,

பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் தான் பயின்ற பள்ளியில் அதிக மதிப்பென் பெற்று  உயர்க்கல்வி படிக்க வசதி இல்லாத குடும்ப சூழ்நிலை ஏழ்மை காரணமாக  டிப்ளமோ பட்டயப் படிப்பு பாலிட்டெக்னிக் டிப்ளமோ நர்சிங் ஐடிஐ படிப்புகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் இதில் பெருமளவில் பாதிப்பு அடைகின்றனர்

தற்போது பயின்று வரும்  பதினோராம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்ட சூழ்நிலையில்

2017 - 2018 மற்றும் 2018 - 2019 பயின்று தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளின்  ஏழ்மைநிலையை கருத்தில் கொண்டு அனைவருக்கும் மடிக்கணினி வழங்கி உதவிட தமிழக அரசை

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக்கொள்கிறேன்
~~~~~~~~~~~
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
9445454044
~~~~~~~~~

ஆசிரியர்கள் ஆசிரியைகளின் நலனுக்கான முக்கிய குறிப்புகள்...



ஆசிரியர்கள் ஆசிரியைகளின் நலனுக்கான முக்கிய குறிப்புகள்...

1. வகுப்பில் நிற்கும் போது நேராக நிற்க வேண்டும். (Maintain a good posture).

2.ஆசிரியர்கள் /ஆசிரியைகள் பள்ளி க்கு வரும் அவசரத்தில் பொதுவாக காலை உணவை  சாப்பிடாமலேயே /தவிர்த்து வருவதினால் அவர்களின் உடல் எடை குறைந்து எளிதில் நோயுற முடியும். எனவே அவர்கள் தங்களது வயதுக்கு ஏற்ற உடலின் எடை தங்களுக்கு உள்ளதா என்று அடிக்கடி சோதனை செய்து கொள்ள வேண்டும்.( Keeping a check on your weight ).

3.தொடர்ந்து ஒரேயிடத்தில்  நிற்பதினாலோ  அல்லது உட்கார்ந்து யிருப்பதினாலோ ஏற்படும்  கழுத்து வலி, முதுகு வலி வருவதை தவிர்க்க தங்களால் செய்யக்கூடிய சில உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்வதன் மூலம் கழுத்து வலியையும் முதுகு வலியையும் ( neck and pack pain ) தவிர்க்க லாம்.

4.அரை மணி நேரத்துக்கு ஒரு தடவை நிற்கும் நிலையை அல்லது அமர்ந்திருக்கும் நிலையை மாற்றிக் கொள்ள வேண்டும். கைகால் களை நீட்டி உதைத்து சிறு பயிற்சியை மேற்கொள்ளுவது நலம். (Exercise regularly)

5. நாள் முழுவதும் தொடர்ந்து சத்தமாக பேசுவதினால் கற்றுக் கொடுப்பதினால் தொண்டை வறண்டு விடும். தொண்டை வலி தொண்டை புண் ஏற்படும். அதனால்
குரல் நாண்கள் (vocal chords)பாதிக்
கப்படும். இதை தவிர்க்க அடிக்கடி தண்ணீரை சிறிதளவு உறிஞ்சி குடிக்க வேண்டும்( take a sip of water frequently ).

6. தொடர்ந்து அதிக சத்தமாய் பேசாமல் , கொஞ்ச நேரம் வாய்க்கு ஓய்வு தரும் போது குரல் தொடர்பான பிரச்சினை
களை தவிர்க்கலாம்.(not talking loudly and give rest to your voice will  avoid voice related problems).

7. ஒவ்வொரு ஆசிரியரும்/ஆசிரியையும் குறைந்த பட்சமாக எட்டு மணிநேரம் நன்கு தூங்கியெழும்போது அடுத்த நாள் அவர்கள் தாங்கள்  புத்துணர்ச்சியுடன் யிருப்பதை அவர்கள் உணருவார்கள்.( Getting sleep for eight hours so as to fresh for next day).

8. ஆசிரியர்கள்/ஆசிரியைகள் தங்களது கால்களுக்கு  ஏற்ற பொருத்தமான வசதியான செருப்புகளை, ஷூக்களை (Comfortable chappals /shoes ) அணிவதன் மூலமாக கணுக்கால் சுளுக்கு ,கால் வலி (ankle sprain & foot pain ) ஆகியவைகளை தவிர்க்கலாம்.

- இந்த பதிவு ஒரு  ஆங்கில செய்தித்தாளில் வந்த " Appreciating Mentors : Teachers, it is important to take care of yourselves " என்ற கட்டுரையின் அடிப்படையில் எழுதப்பட்ட தாகும்.

*நன்றி*

SBI Fexi Deposit : இப்படியொரு திட்டம் எஸ்பிஐ-யில் இருக்கிறதா!! ஒரு பார்வை!





SBI Fexi Deposit : இப்படியொரு திட்டம் எஸ்பிஐ-யில் இருக்கிறதா!! ஒரு பார்வை!

SBI flexi deposit scheme interest rate: ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் சேமிப்புக் கணக்கில் பணம் இருந்தால், கூடுதலாக இருக்கும் தொகை தானாகவே டெபாசிட் திட்டத்துக்கு மாறிக்கொள்ளும். சேமிப்பு கணக்கில் தொகை குறையும்போது பிக்ஸட் டெபாசிட்டிலிருந்து சேமிப்புக் கணக்கிற்கு வந்துவிடும்.

இது சேவிங்ஸ் பிளஸ் கணக்கு. சேமிப்புக் கணக்கு மற்றும் பிளக்ஸி டெபாசிட் இரண்டிலும் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும். சேமிப்பு கணக்கில் இருப்பு குறையும்போது பிளக்ஸி டெபாசிட்டிலிருந்து சேமிப்புக் கணக்கிற்கு பணம் செல்லும். அதேபோல சேமிப்பில் உயர்ந்தாலும் டெபாசிட்டுக்கு பணம் மாறிவிடும்.

இது பிளக்ஸி டெபாசிட் சேமிப்புக் கணக்கு. பல்வேறு வங்கிகளும் பிளக்ஸி டெபாசிட் திட்டத்தை வழங்கி வருகின்றன. ஆனால் ஒவ்வொரு வங்கிகளும் சில தனிப்பட்ட விதிமுறைகளை வைத்துள்ளன. பிளக்ஸி டெபாசிட் கணக்கை எளிதாக தொடங்கிவிடலாம் என்பதும், தேவைப்படும் போது பணத்தை வெளியே எடுத்துவிடலாம் என்பதும் இந்த கணக்கில் உள்ள வசதி.

இதற்கான அதிக தொகையை முதலீடு செய்ய வேண்டும் என்கிற கட்டாயமில்லை. எஸ்பிஐ வழங்கும் பிளக்ஸி டெபாசிட் கணக்கு குறித்து இங்கே பார்ப்போம், எஸ்பிஐ வலைத்தளத்தின்படி, ஒரே தவணையில் டெபாசிட் செய்யத் தேவையான தொகை ரூ.500. ஒரு நிதியாண்டில், எஸ்பிஐ பிளக்ஸி வைப்புத் திட்டத்தில் தேவைப்படும் குறைந்தபட்ச வைப்புத் தொகை ரூ.5,000 ஆகும். எனினும். எஸ்பிஐ பிளக்ஸி திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வைப்பு ஒரு நிதியாண்டில் ₹ 50,000 ஆகும்.

 எஸ்பிஐ பிளக்ஸி வைப்புத் திட்டத்தில் குறைந்தபட்ச வைப்பு காலம் 5 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 7 ஆண்டுகள் ஆகும். எஸ்பிஐ தற்போது ஒரு ஆண்டு மற்றும் ஏழு ஆண்டுகளில் முதிர்ச்சியடைந்த நிலையான வைப்புகளுக்கு ஆண்டுக்கு 6.25% வட்டி விகிதத்தை செலுத்துகிறது.

எனவே, எஸ்பிஐ பிளக்ஸி வைப்புத் திட்டம் 6.25% வட்டி விகிதத்தைப் பெறும். கால வைப்புத்தொகையைப் போலவே, மூத்த குடிமக்களும் எஸ்பிஐ பிளக்ஸி வைப்புத் திட்டங்களில் அதிக வட்டி விகிதத்தைப் பெறுகிறார்கள். இந்த வைப்புத்தொகை அவர்களுக்கு 6.75% முதல் 6.90% வரை வட்டி கிடைக்கும். எஸ்பிஐ பிளக்ஸி வைப்புத் திட்டத்தில் முன்கூட்டியே திரும்பப் பெறும் வசதி உள்ளது. 5 லட்சம் வரை டெபாசிட் செய்ய, முன்கூட்டியே திரும்பப் பெறுவதற்கான அபராதம் 0.50% ஆக இருக்கும்.

5 லட்சத்திற்கு மேல் வைப்புத்தொகைக்கு, பொருந்தக்கூடிய அபராதம் 1% ஆகும். வருமான வரி விதிகளின்படி வரி விலக்கிலிருந்து விலக்கு பெற படிவம் 15 ஜி / எச் வைப்புத்தொகையாளரால் சமர்ப்பிக்கப்படலாம்.

10,11,12 பொதுத் தேர்வு.. புத்தகத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் கேள்வி கேட்கப்படும் :



10,11,12 பொதுத் தேர்வு.. புத்தகத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் கேள்வி கேட்கப்படும் :

அரசு தேர்வு இயக்ககம் அறிவிப்பு!
தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே பொதுத் தேர்வுகள் எழுதி வந்த நிலையில், 11 ஆம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன் படி, கடந்த 2 ஆண்டுகளாக 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து, கட்டாய தேர்ச்சி முறை சட்டத்திருத்தத்தின் படி, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

பொதுவாக மாணவர்கள் அந்தந்த பாடத்திற்குரிய ப்ளூ பிரிண்ட் வைத்துத் தான் தாயார் செய்வார்கள். ஆனால், இந்த ஆண்டு பொதுத்தேர்வுக்காக அட்டவணை மற்றும் மாதிரி வினாத்தாள் வெளியாகியும் ப்ளூ பிரிண்ட் வெளியாகாததால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். மாணவர்கள் மட்டுமில்லாமல், எந்த வகை கேள்விகள் கேட்கப்படும் என்று ஆசிரியர்களும் குழப்பமடைந்துள்ளனர்.

இந்நிலையில், இது குறித்து அரசு தேர்வு இயக்ககம் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், Blue Print தேவையில்லை என்பது அரசு எடுத்த முடிவு. அதனால் புத்தகத்தில் எங்கிருந்து வேண்டுமானாலும் கேள்விகள் கேட்கப்படும். மாதிரி வினாத்தாளில் உள்ளது போன்று தேர்வில் கேட்கப்படவில்லை என்ற எந்த குழப்பமும் ஏற்படாது என்று தெரிவித்துள்ளது. இது மாணவர்களைப் பீதி அடையச் செய்துள்ளது.

ஜூன் மாதம் மக்கள் தொகை கணக்கெடுப்பு - அரசு பள்ளி ஆசிரியர்களை வைத்தே நடத்தப்படும்!



ஜூன் மாதம் மக்கள் தொகை கணக்கெடுப்பு - அரசு பள்ளி ஆசிரியர்களை வைத்தே நடத்தப்படும்!

தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி வருகிற ஜூன் மாதம் தொடங்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. அதன்படி, கடைசியாக 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடந்தது. இதையடுத்து 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி நாடு முழுவதும் வருகிற ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடக்கிறது.
தமிழகத்தில் கோடை காலம் முடிந்த பின்னர் ஜூன் 1ம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 15ம் தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் வீட்டு பட்டியல் கணக்கெடுப்பு நடத்தப்படும்.

அதையடுத்து மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும். முதல்கட்டமாக நடக்கும் கணக்கெடுப்பின்போது 34 கேள்விகள் கேட்கப்படும்.

ஒரு வீட்டில் எத்தனை பேர், எவ்வளவு அறைகள் உள்ளது, கழிப்பிட வசதி, கழிவுநீர் வசதி, கார், மோட்டார் சைக்கிள் விவரம், குளுகுளு வசதி, இன்டர்நெட் வசதி உள்ளதா என பல்வேறு கேள்விகள் அதில் இடம்பெறும். 2வது கட்ட மக்கள் தொகை இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் நடத்தப்படும். அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி 9ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரை 21 நாட்கள் கணக்கெடுப்பு நடைபெறும். இதில் 28 கேள்விகள் கேட்கப்படும். அதன்படி குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் பெயர், படிப்பு, வேலை, திருமணம் ஆனவர்களா, குழந்தைகள் எத்தனை, இடம் பெயர்ந்தவரா, எஸ்.சி., எஸ்.டி. இனத்தவரா என்பது உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்படும். இதுவரையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி காகித முறையில் நடைபெற்று வந்தது.

இந்த முறை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் செல்போன் செயலி மூலம் கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் அனைவரும் இதற்கான செயலியை தங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து தகவல்களை பதிவு செய்வார்கள். செயலியை பயன்படுத்த விருப்பம் இல்லாதவர்கள் காகித முறையை பின்பற்றலாம். செல்போன் மூலம் பெறப்படும் புள்ளி விவரங்கள் நேரடியாக சர்வருக்கு சென்றுவிடும். தாமதம் ஏற்படாமல் விரைவாக கணக்கெடுப்பை முடிக்க இது உதவும். பொதுவாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுத்த பின்னர் அதனை வெளியிடுவதற்கு 2 அல்லது 3 ஆண்டுகள் ஆகிவிடும். ஆனால் இந்த முறை ஒரு வருடத்திற்குள் மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி குறித்தான அறிவிப்பாணையை வெளியிடுவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமை செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். வருகிற பிப்ரவரி மாதம் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் என்று தெரிகிறது. அதன்பின்னர் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் இந்த பணியில் ஈடுபடுவார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான முழு செலவையும் மத்திய அரசு ஏற்கிறது. தமிழகத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி அரசு பள்ளி ஆசிரியர்களை வைத்தே நடத்தப்படும். இதையொட்டி அனைத்து ஆசிரியர்களும் கண்டிப்பாக இந்த பணியில் ஈடுபட வேண்டும் என்று பள்ளி கல்வி துறை அதிகாரிகள் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

8 கோடியை தாண்டும்?
2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 88 ஆயிரத்து 958 ஆகும். 2001-11 காலகட்டத்தில் 10.60 சதவீதம் வளர்ச்சி கண்டிருந்தது. இதில் ஆண்கள் 3,61,58,871 பேர், பெண்கள் 3,59,80,087 பேர். 1000 ஆண்களுக்கு 995 பெண்கள் என்ற அடிப்படையில் பாலின விகிதம் இருந்தது. எழுத்தறிவு பெற்றவர்கள் சதவிகிதம் 73.45ல் இருந்து 80.33 ஆக உயர்ந்துள்ளது. தற்போது, தமிழக மக்கள் தொகை 8 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் அதிகபட்சமாக 43,43,645 பேர் மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருப்பதாக கூறப்பட்டிருந்தது. அதேநேரம் இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி என அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Monday 27 January 2020

SPD PROCEEDINGS-ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - TNVN - Observation app புதிய செயலி அறிமுகம் சார்ந்து ஆசிரியப் பயிற்றுநர்களுக்கு பயிற்சி அளித்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள்






தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி
“அனைவரும் கற்போம்"
“அனைவரும் உயர்வோம்"
அனுப்புநர்
பெறுநர்

மாநில திட்ட இயக்குநர்
முதன்மைக் கல்வி அலுவலர்,
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி,
அனைத்து மாவட்டங்கள்
சென்னை -06.
சென்னை மற்றும் திருவண்ணாமலை
நீங்கலாக,
ந.க.எண். 3149/B9/ஆபாபக/2020 - நாள்: 25.01.2020
ஐயா / அம்மையீர்,
பொருள்: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - தமிழ்நாடு வகுப்பறை நோக்கின்

செயலி (TN N Observation App) - ஓர் அறிமுகம் மற்றும் செயலி
உபயோகம் சார்ந்து அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும்
பயிற்சி அளித்தல் - சார்பு

வகுப்பறைக் கற்றல் விளைவு அடைவு நிலைகளைக் கண்காணித்தலின் ஒரு பகுதியாக

வகுப்பறைக் கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளை உற்றுநோக்கி கற்றலுக்கு உகந்த வகையில் கற்றல்

கற்பித்தல் நிகழ்வுகளை மேம்படுத்திடும் நோக்கிலும், அறிவியல் தொழில்நுட்ப சாதனங்களைப்
பயன்படுத்தி பள்ளிக் கல்வித் துறையிலுள்ள அனைத்து ஆய்வு அலுவலர்கள் வகுப்பறை

நிகழ்வுகளை உற்றுநோக்கும் வகையிலும் Observation Mobile App தமிழ்நாடு வகுப்பறை

நோக்கின் செயலி ஒன்று உருவாக்கப்பட்டு, சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில்

பரிட்சார்த்த முறையில் (Pilot Study) செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு வகுப்பறை நோக்கின் செயலியின் மூலம் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள

ஒவ்வொரு மாணவர்களின் கற்றல் விளைவு அடைவு நிலைகளை முறையாக கண்காணித்து

முன்னேற்றம் அடைய செய்ய எளிமையாக உள்ளது என்றும், குறிப்பாக கற்றலில் பின்தங்கியுள்ள

மாணவர்களுக்கு தனி கவனம் செலுத்த முடிகிறதென்றும், சென்னை மற்றும் திருவண்ணாமலை

மாவட்டத்தில் பார்வை மேற்கொண்ட பெரும்பாலான அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டுள்ள தாலும்,
எனவே தங்களது மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டார வள மைய அளவிலிருந்தும் மேலே
தெரிவிக்கப்பட்டுள்ளதுபோல் அனுபவமுள்ள ஒரு ஆசிரியர் பயிற்றுநர், மாவட்ட Quality மற்றும்

EMIS ஒருங்கிணைப்பாளர்களை, குறிப்பாக (Operating system - Android version 5.5 and

above) ஆகிய வசதியுடன் கூடிய கைபேசியை உபயோகப்படுத்துகின்றனரா என்பதை உறுதி
செய்து, மேலே தெரிவிக்கப்பட்டுள்ள நாட்களில் மாநில திட்ட இயக்ககத்தில் நடைபெறும்
பயிற்சியில் கலந்துகொள்ள ஆவன செய்யுமாறு சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஓம்/
மாநில திட்ட இயக்குநர்




Saturday 25 January 2020

71வது குடியரசுதினம் :எந்தெந்த வகையில் சுதந்திர தினம் குடியரசு தினத்திலிருந்து மாறுபட்டது?!!



71வது குடியரசுதினம் :எந்தெந்த வகையில் சுதந்திர தினம் குடியரசு தினத்திலிருந்து மாறுபட்டது?!!

குடியரசு தினம் : இந்தியா தனது சுதந்திர தினத்தை கடந்த 1947 ஆகஸ்ட் 15-ம்தேதியில் இருந்தும் குடியரசு தினத்தை 1950 ஜனவரி 26-ம்தேதியில் இருந்தும் கொண்டாடி வருகிறது.

இந்தியா
குடியரசு தினத்தில் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கலந்து கொள்கிறார்.

குடியரசு தின விழாவான ஜனவரி 26-ம்தேதி நாளை கொண்டாடப்படுகிறது சுதந்திரம் பெற்று 3 ஆண்டுகளில் 1950-வது ஆண்டில் இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தது. சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளை கடந்த பின்னரும், நம்மில் சிலருக்கு குடியரசு தினத்திற்கும் சுதந்திர தினத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லை. குழப்பத்திற்கு அவர்கள் ஆளாகிறார்கள். கடந்த ஆண்டு டெல்லி போலீசார் ஆகஸ்ட் 15-யை குடியரசு தினமாக பதிவிட்டிருந்தனர். இதற்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டது.

இரண்டும் தேசிய விழாக்கள்தான். அவற்றில் ஒன்று மற்றொன்றிலிருந்து எப்படி மாறுபடுகிறது என்பதை பார்க்கலாம்.

இந்தியா தனது முதல் சுதந்திர தினத்தை கொண்டாடிய நாள்  - 1947 ஆகஸ்ட் 15
இந்தியா தனது முதல் குடியரசு தினத்தை கொண்டாடிய நாள் - 1950 ஜனவரி 26

காரணம்

பிரிட்டிஷ் காலனி ஆட்சியில் சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா அடிமைப்பட்டுக் கிடந்தது. தேசிய தலைவர்கள் போராடி இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தனர். இதன் நினைவாக சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.

சுதந்திர இந்திய குடியரசில் அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்த நாள் குடியரசு தின விழாவாக கொண்டாடப்படுகிறது.

கொண்டாட்ட முறை

சுதந்திர தின விழா நாட்டிற்காக உயிர் நீத்த சுதந்திர போராட்ட வீரர்கள், தியாகிகள், புரட்சியாளர்கள் உள்ளிட்டோரது நினைவாக கொண்டப்படுகிறது. இந்த நாளில் இந்திய பிரதமர் டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி, கோட்டை கொத்தளத்தில் உரையாற்றுவார்.  மாநில தலைநகரங்களிலும், மாவட்ட தலைநகரங்களிலும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சில இடங்களில் அணிவகுப்பு நடைபெறும். இந்நாளையொட்டி நாடு முழுவதும் தேசிய கொடி ஏற்றப்படும். பல இடங்களில் தேசிய கொடி வண்ணத்தில் அமைந்த பட்டங்கள் பறக்க விடப்படும். நாட்டுப்பற்று பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு இனிப்புகள் வழங்கப்படும். சுதந்திர தினத்தன்று தொலைக்காட்சி மூலமாக நாட்டு மக்களுடன் ஜனாதிபதி உரை நிகழ்த்துவார்.

குடியரசு தினமான ஜனவரி 26-ம்தேதியன்று டெல்லியில் குடியரசு தலைவர் தனது பாதுகாவலர்கள் 200 பேருடன் விழா மேடைக்கு வருவார். பாதுகாவலர்கள் சிவப்பு சட்டை, தங்க வண்ணம் கொண்ட தலைப்பாகைகளை அணிந்திருப்பார்கள். குடியரசு தலைவர் வந்ததும், தேசிய கீதத்தை ஒலிக்க உத்தரவிடுவார். இந்த நிகழ்ச்சியில் உலக தலைவர்கள் கலந்து கொள்வார்கள். இந்தியாவின் ராணுவ வலிமையை பறை சாற்றும் வகையில் அணிவகுப்பு நடைபெறும்.

சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய 2 நாட்களுமே தேசிய விடுமுறை நாட்களாகும்.*

இந்திய திருநாட்டின் 71 ஆவது குடியரசு தின விழா சீரும் சிறப்புமாக நாளை கொண்டாடப்படும் வேளையில் அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் நண்பர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் 71 வது குடியரசு தினவிழா வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. என்றும் உங்களுக்காக...




இந்திய திருநாட்டின் 71 ஆவது குடியரசு தின விழா சீரும் சிறப்புமாக நாளை கொண்டாடப்படும் வேளையில் அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் நண்பர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் 71 வது குடியரசு தினவிழா வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. 

என்றும் உங்களுக்காக...

ஆசிரியர் TECH
YouTube

நாளை 71 ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டம் தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு. சென்னை மெரினா கடற்கரையில் கொடியேற்றி வைக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்





நாளை 71 ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டம் தலைநகர் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு.
சென்னை மெரினா கடற்கரையில் கொடியேற்றி வைக்கிறார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

Friday 24 January 2020

சர்வரை வேகப்படுத்தாமலும் பயிற்சி சரியான முறையில் நடத்தாதநிலையில் திங்கள் கிழமைக்குள் (IFHRSM) ஒருங்கிணைந்த நிதித்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத் திட்டத்தில் பதிவேற்றம் செய்யாதவருக்கு இந்த மாதம் ஊதியம் கிடையாது என்ற உத்தரவால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஊதியம் பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதுமுறையான பயிற்சி சர்வரின் வேகத்தை இன்னும் பல மடஙலகு அதிகரிக்க வேண்டும் கட்டமைப்பு வசதியை மேம்படுத்திய பின்னரே இத்திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும் அதுவரையில் பழைய முறையிலயே ஊதியம் பெற்றுத்தர தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக்கொள்கிறேன் ~~~~~~~~ சா.அருணன் நிறுவனத் தலைவர் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு





அறிக்கை
25.01.2020
==========
சர்வரை வேகப்படுத்தாமலும் பயிற்சி சரியான முறையில் நடத்தாதநிலையில்  திங்கள் கிழமைக்குள் (IFHRSM) ஒருங்கிணைந்த நிதித்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத் திட்டத்தில் பதிவேற்றம் செய்யாதவருக்கு இந்த மாதம் ஊதியம் கிடையாது என்ற உத்தரவால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஊதியம் பெறுவதில் பெரும் சிக்கல்
ஏற்பட்டுள்ளது

சரியான பயிற்சி மற்றும் சர்வரை வேகப்படித்திய பின்னரே புதிய முறையை அமுல்படுத்த தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்
=============
ஒருங்கிணைந்த நிதித்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தமிழக அரசு ATBPS முறையை ஒழித்துவிட்டு தற்போது IFHRMS  அதாவது ஒருங்கிணைந்த நிதித்துறை மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஊதியத்தை இணையதள மூலம் நேரடியாக ரிசர்வ் வங்கிக்கு அனுப்பும் பணியினை விப்ரோ என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, இதில் ஏகப்பட்ட பிரச்சனைகள் அதனை இன்னும் சரி செய்யபடவில்லை, சர்வர் போதிய அளவு வேகப்படுத்த படுத்தபடவில்லை ஊதிய பட்டியலை தயார் செய்ய குறைந்தபட்சம் 12 மணிநேரம் வரை தேயவைப்படுகிறது

விப்ரோ நிறுவனத்திட்டம் ஒப்படைக்கப்பட்ட சூழ்நிலையில் சரியான ஆட்களை பயிற்சி கொடுக்க நியமிக்காமலும் பயிற்சி கொடுக்கும் விப்ரோ ஊழியக்கும் பல மாவட்டங்களில் பயிற்சி கொடுக்கும் அளவிற்கு திறன் இல்லை. இதனால் சம்பலம் பெற்று தரும் கருவூல மாவட்ட அலுவலரக்ள சார்பு கருவூல அலுவலர்கள் உதவியாளர்கள் .இளநிலை உதவியாளர்கள் மற்றும் அந்தந்த துறையில் ஊதிய பட்டியலை தயார்செய்யும் ஊழியர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்

அந்தந்த துறை அலுகத்தில் ஊதிய பட்டியை தயார் செய்து சார்பு கரூலம் எடுத்து சென்று சமர்ப்பிக்கும் போது புதிய  திட்டத்தில் பதிவேற்றம் செய்யது எடுத்து வந்தீர்களா என்று கேட்கின்றனர் அப்படி இல்லை என்றால் மாவட்ட கரூல அலுவலரிடம் முறைநிடுங்கள் சார்பு கரூல அலுவலர்கள் தெரிவிக்கின்ற்னர் மாவட்ட கருவூல அலுவரை சந்தித்து முறையிடும் போது அங்கு இணையதள சேவையில் சர்வர் வேலை செய்ய வில்லை என்று திருப்பி அனுப்புகிறார்கள்

இதற்கு காரணம்  தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் செலவில் விப்ரோ என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்த செய்து இணையத்தில் பதிவேற்றும் முறையை அரசு ஊழியர்கள் கரூவூல மாநில மாவட்ட சார்பு கருவூல அலுவலர்கள் உதவியாளர் இளநிலை உதவியாளர்கள் மற்றும் அந்தந்த சம்பளம் பெற்று தரும் அலுவலர்கள் உதவியாளர்களுக்கு பயிற்சி மேற்கொள்ளவும் மற்றும் மென்பொருள் பதிவேற்றம் செய்யவும் ஒப்பந்தம் செய்தது

ஆனால் விப்ரோ நிறுவனம் சரியான முறையில் சர்வர்களை ஏற்படுத்தி தரவில்லை அதே போன்று பயிற்சி அளிக்க சரியான வல்லுனர்களை பயிற்சி அளிக்க நியமிக்க வில்லை

இந்த சூழ்நிலையில் சென்ற வாரம் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தலைமையில் ஒருங்கிணைந்த நிதித்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டம் குறித்த கூட்டம் நடைபெற்றது அதில் கண்டிப்பாக இந்த மாதமே இத்திட்டத்தில் தான் ஊதியம் பெற்றுத்தர வேண்டும் என்று கூட்டத்தில் உத்தரவு பிரப்பித்துள்ளார்கள் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அந்தந்த துறை ஊதியம் பெற்றுத்தரும் அலுவலர்களுக்கு,

இந்த நிலையில் மாவட்ட சார்பு கரவூல அலுவலர்கள் திங்கள் கிழைமைக்குள் ஐ.எஃப்.ஹச்.ஆர்.எம்.எஸ் மூலமாக பதிவேற்றம் செய்யவில்லை என்றால் ஊதியம் பெற்றுதர இயலாது என்று திருப்பி அனுப்புகின்றனர்

முன்னோடி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்ட கரூர் , ஈரோடு மாவட்டங்கிலும் இன்னும் இத்திட்டம் முழுமை பெறவில்லை அங்கேயும் இதே பிரச்சனைகள் உள்ளன,  இந்த சூழ்நிலையில் மற்ற மாவட்டஙலகளின் நிலையை தமிழக அரசு அறியவேண்டும்,
சர்வர்களின் அதிக படுத்தாமல் பயிற்சியை முறையாக அளிக்காத பட்சத்தில் எப்படி எப்படி இத்திட்டத்தில் ஊதியம் பெற்றுத்தர முடியும்

முறையான பயிற்சி சர்வரின் வேகத்தை இன்னும் பல மடஙலகு அதிகரிக்க வேண்டும் கட்டமைப்பு வசதியை மேம்படுத்திய பின்னரே இத்திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும் அதுவரையில் பழைய முறையிலயே ஊதியம்  பெற்றுத்தர தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக்கொள்கிறேன்
~~~~~~~~
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
9445454044
~~~~~~~~~

All the Chief Educational Officers are informed to instruct the DEOs, ADPCs, APOs, BEOs, UDISE Co-ordinators, EMIS coordinator of CEO office and the programmers of Samagra Shiksha to monitor and check the schools that are updating all the details in EMIS.






All the Chief Educational Officers are informed to instruct the DEOs, ADPCs,
APOs, BEOs, UDISE Co-ordinators, EMIS coordinator of CEO office and the
programmers of Samagra Shiksha to monitor and check the schools that are updating
all the details in EMIS.

The following subjects are to be followed and strictly monitored:-

1. Marking of Staff Attendance

2. Marking of Student Attendance

3. Partially marked attendance in schools should be made as fully
marked (All sections attendance to be marked).

4. Aadhar of students and teachers to be validated and updated.

5. Phone Number of Teachers & Students to be validated and
updated.

6. Updation of Master Time Table to be completed

7. Tagging of students with special schemes for CWSN/RTE/OOSC,
etc., to be completed.

8. Enrollment of students for Noon-meal to be mapped.

9. Updation of Staff profile (teaching & non-teaching) to be taken up

10. Monitoring of Aadhar Enabled Biometric Attendance for teachers,
Staffs & Officials to be done.

for Addl. State Project Director

அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் டி.இ.ஓக்கள், ஏ.டி.பி.சி.க்கள்,
APO கள், BEO கள், UDISE ஒருங்கிணைப்பாளர்கள், தலைமை நிர்வாக அதிகாரி அலுவலகத்தின் EMIS ஒருங்கிணைப்பாளர் மற்றும்
புதுப்பிக்கும் பள்ளிகளை கண்காணிக்கவும் சரிபார்க்கவும் சமகிர சிக்ஷாவின் புரோகிராமர்கள்
EMIS இல் உள்ள அனைத்து விவரங்களும்.
பின்வரும் பாடங்கள் பின்பற்றப்பட வேண்டும் மற்றும் கண்டிப்பாக கண்காணிக்கப்பட வேண்டும்: -

1. பணியாளர்கள் வருகை குறித்தல்

2. மாணவர் வருகை குறித்தல்
3. பள்ளிகளில் ஓரளவு குறிக்கப்பட்ட வருகை முழுமையாக செய்யப்பட வேண்டும்
குறிக்கப்பட்டுள்ளது (அனைத்து பிரிவுகளின் வருகை குறிக்கப்பட வேண்டும்).

4. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆதார் சரிபார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட வேண்டும்.

5. சரிபார்க்கப்பட வேண்டிய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் தொலைபேசி எண் மற்றும்
மேம்படுத்தப்பட்டது.

6. முடிக்க வேண்டிய முதன்மை நேர அட்டவணையின் புதுப்பிப்பு

7. CWSN / RTE / OOSC க்கான சிறப்புத் திட்டங்களைக் கொண்ட மாணவர்களைக் குறிப்பது,
முதலியன.

8. மதிய உணவுக்கு மாணவர்களை சேர்ப்பது.

9. பணியாளர்கள் சுயவிவரத்தை புதுப்பித்தல் (கற்பித்தல் மற்றும் கற்பித்தல் அல்லாதவை)

10. ஆசிரியர்களுக்கான ஆதார் இயக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகையை கண்காணித்தல்,
செய்ய வேண்டிய பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள்.

Addl . மாநில திட்ட இயக்குநர்

Thursday 23 January 2020

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள ஜனவரி மாத நாட்காட்டியின் படி வரும் சனிக்கிழமை (25.01.2020) அன்று அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும் வேலை நாள் ஆகும்.மேலும் அன்றைய தினம் தேசிய வாக்காளர் தினம் என்பது குறிப்பிடத்தக்கது.




பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள ஜனவரி மாத நாட்காட்டியின் படி வரும் சனிக்கிழமை (25.01.2020) அன்று அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும் வேலை நாள் ஆகும்.மேலும் அன்றைய தினம் தேசிய வாக்காளர் தினம் என்பது குறிப்பிடத்தக்கது..


தேசிய வாக்காளர் தினம் – உறுதி மொழி எடுத்தல் – சார்பாக.


அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள்

தேசிய வாக்காளர் தினம் சார்ந்து 24.01.2020 மற்றும் 25.01.2020 ஆகிய நாட்களில் காலை 11.00 மணியளவில் இணைப்பில் கண்டுள்ள உறுதிமொழி எடுக்குமாறு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்



தொழில் வரி எவ்வளவு கட்ட வேண்டும்- புதிய உத்தரவு... தொழில் வரி எவ்வளவு கட்ட வேண்டும்- புதிய உத்தரவு..

தொழில் வரி எவ்வளவு கட்ட வேண்டும்- புதிய உத்தரவு...
தொழில் வரி எவ்வளவு கட்ட வேண்டும்- புதிய உத்தரவு...








அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் தொழில் வரி செலுத்துபவர்கள் இரண்டு அரையாண்டு க்கு சேர்த்து ரூபாய் 2500/- க்கு மேல் கட்ட வேண்டாம்...அதற்கான உத்தரவு நகல்

Wednesday 22 January 2020

DEE - 26.01.2020 ஞாயிறு காலை 09 . 00 மணியளவில் தேசியக் கொடி ஏற்றி குடியரசு தினவிழாவைச் சிறப்பாகக் கொண்டாட இயக்குநர் உத்தரவு. DIRECTOR PROCEEDINGS,

DEE - 26.01.2020 ஞாயிறு காலை     09 . 00 மணியளவில் தேசியக் கொடி ஏற்றி குடியரசு தினவிழாவைச் சிறப்பாகக் கொண்டாட இயக்குநர் உத்தரவு.
 DIRECTOR PROCEEDINGS,







26.01.2020 ஞாயிறு அன்று குடியரசு தினவிழாவினை மகிழ்ச்சியும் , எழுச்சியும் மிக்க விழாவாகக் கொண்டாடுதல் வேண்டும் .

* பள்ளி வளாகத்தை வண்ணக் காகிதங்களாலும் , மலர்களாலும் நன்கு அலங்கரித்தல் வேண்டும் .

* தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 26.01.2020 ஞாயிறு காலை 09 . 00 மணியளவில் தேசியக் கொடி ஏற்றி குடியரசு தினவிழாவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் .

* கிராமக் கல்விக் குழு உறுப்பினர்கள் , பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் , பள்ளி புரவலர்கள் , சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஆகியோரை அழைத்து விழாவில் பங்கு பெறச் செய்தல் வேண்டும் என அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது.

* மேலும் தேசியக் கொடியினை காட்சிப்படுத்தும் போதும் , பயன்படுத்தும் போதும் நெகிழித் தாள்களில் ( Plastics ) உள்ள கொடிகளைப் பயன்படுத்தக் கூடாது எனவும் , தேசியக் கொடிகளை பயன்படுத்துவது குறித்து பிரிவு IX of Flag Code of India 2002 - ன்படி செயல்படுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

* மேற்கண்ட விவரங்களை வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலமாக அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி குடியரசு தினவிழாவினை அனைத்துப் பள்ளிகளிலும் தவறாமல் சிறப்பாகக் கொண்டாடிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

             - தொடக்கக் கல்வி இயக்குநர்

NHIS மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் மறுக்கப்பட்ட 100% Full claim தொகையை வட்டியும், முதலுமாக அபராதத்துடன் பெறுவது எப்படி...??

*NHIS மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் மறுக்கப்பட்ட 100% Full claim தொகையை வட்டியும், முதலுமாக அபராதத்துடன் பெறுவது எப்படி...???*




கரூர் மாவட்டம்-   ஒன்றியம், எருதிக்கோன்பட்டி தலைமை ஆசிரியர் திரு.மாணிக்கம் அவர்களுடைய துணைவியார் அவர்களின் இருதய அறுவை சிகிச்சைக்கான செலவு ரூ.2,41,000 .

*இதில் நமது TNNHIS ரூ.1,70,000 மட்டும் காப்பீட்டுத் தொகையாக அனுமதித்தது.*

அதற்குமேல் தர மறுத்து விட்டது.

மாணிக்கம் அவர்கள்,
கரூர் மாவட்ட நுகர்வோர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து, தொடர் முயற்சியினால் தீர்ப்பு பெறப்பட்டது.

*தீர்ப்பில் முழுமையாக மருத்துவ செலவினை ஏற்பதோடு,*

_அந்த தொகைக்கு 9% வட்டியுடன் வழங்கவும், மனஉளச்சலுக்காக நஷ்ட ஈடாக ரூ.50,000 மற்றும் வழக்கு செலவுக்காக ரூ.3000 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது._


_நமது மருத்துவ செலவுகள், அதாவது மருத்துவமனையால் வழங்கப்படும் அனைத்து செலவுகளையும் TNNHIS ஏற்கவேண்டும்._

(தங்கும் அறை, சிகிச்சை மேற்கொள்பவருக்கான உணவு ,மருந்து , மருத்துவ சிகிச்சைக்கான செலவு இவை அனைத்தும் இதில் அடங்கும்)

01.07.2016 முதல் 30.06.2020 வரை ரூ.4,00,000 காப்பீட்டுத் தொகை பெற அனைவருக்கும் உரிமை உண்டு.

அதற்கு மேல் ஆகும் செலவு நம்மை சார்ந்தது எனவே விழிப்புடன் இருக்கவும்.

*ஒரு சில அறுவை சிகிச்சைக்கு மட்டும் ரூ.7,50,000 வரை காப்பீடுத் தொகை வழங்கப்படும்.*

அரசாணையில் வரையறை செய்யப்பட்டுள்ள அறுவை சிகிச்சைக்கு மட்டும் கட்டணமில்லா சிகிச்சை பெறலாம்..

*NHIS திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் அவசர கால சிகிச்சை மேற் கொண்டால், ஆகும் மருத்துவ செலவினை விதிகளுக்கு உட்பட்டு பணமாகப் பெற்றுக் கொள்ளலாம் - GO 391 , Date : 10.12.2018*

GO தேவைப்படின் கீழே கிளிக் செய்யவும்

http://cms.tn.gov.in/sites/default/files/go/fin_e_391_2018.pdf

கண் புரை அறுவை சிகிச்சைக்கு ரூ.25,000.

கர்ப்பப்பை அறுவை சிகிச்சைக்கு ரூ.45,000.

இந்த இரண்டு சிகிச்சைக்கு மட்டுமே NHIS திட்டத்தில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது..

*அரசாணையில் உள்ள மற்ற அறுவை சிகிச்சைகளுக்கு கட்டணமில்லா சிகிச்சை பெற இயலும்..*

டிஸ்சார்ஜ் ஆகாமல் இருந்தால் full claim வாங்கிவிடலாம்..

(அட்மிசன் போட்ட பொழுது முன் பணமாக கட்டிய தொகையையும் திரும்ப வாங்க வேண்டியது நமது உரிமை)

*டிஸ்சார்ஜ் ஆன பிறகு full claim வாங்க நினைத்தால் வழக்கு பதிவு செய்து மட்டுமே வாங்க இயலும்..*

*அரசாணைகள் ஏதேனும் தேவைப்படின் கீழே சொடுக்கவும்- search-ல் அரசாணை எண்ணை பதிவு செய்து அரசாணையை பெறலாம்..*
http://www.tn.gov.in/go_view/dept/9

*New health insurance Guideline தேவைப்படின் கீழே சொடுக்கவும்*
http://www.tn.gov.in/karuvoolam/pdfs/fin_e_222_2018.pdf


*NHIS Project Officer&  District Coordinators cell number, office address, mail id-க்கு கீழே சொடுக்கவும்*
http://www.tnnhis2016.com/TNEMPLOYEE/TNContact.aspx


(NHIS Insurance Complaint number- 7373073730)

 *தோழமையுடன்,*
*தேவராஜன்,*
   *தஞ்சாவூர்..*

Tuesday 21 January 2020

5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - தேர்வு மையம் அமைத்தல் , தேர்வுக் கட்டணம் வசூல் , விடைத்தாள் மதிப்பீட்டு பணி , மதிப்பெண் பதிவேடு தொடர்பான தெளிவுரைகள் வெளியீடு.







5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு - தேர்வு மையம் அமைத்தல் , தேர்வுக் கட்டணம் வசூல் , விடைத்தாள் மதிப்பீட்டு பணி , மதிப்பெண் பதிவேடு தொடர்பான தெளிவுரைகள் வெளியீடு.