Tuesday 28 January 2020

எச்சரிக்கை கொரொனா வைரஸின் அறிகுறிகள் மற்றும் பரவும் முறைகள்.!!!




எச்சரிக்கை கொரோனா வைரஸின் அறிகுறிகள் மற்றும் பரவும் முறைகள்.!!!

சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.  இந்த வைரஸ், உலக நாடுகளின் பல்வேறு பகுதிகளிலும் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

அறிகுறிகள்

‍‍தொண்டை வலி
தலை வலி
இருமல்
காய்ச்சல்
உடல் சோர்வு/ அலுப்புத்தன்மை
பரவும் முறைகள்

காற்றின் மூலம் பரவும் (இருமல், தும்மல்)
மனிதர்களை தொட்டு பேசுதல் (கை குலுக்குதல்)
கிருமி இருக்கும் பொருட்களை நுகர்தல் (மூக்கு,
வாய், கை மூலமாக)
மற்றும் கழிவுகள் மூலமாக பரவும்
எச்சரிக்கை முறைகள்

இருமலுக்குப் பின்
நோயாளிகளை கவனித்ததற்கு பின்
உணவு சமைக்க, பரிமாற‌ மற்றும் உண்ணும் முன்
கழிவரையின் பின்
கைகள் அழுக்காக இருப்பின்
மிருகங்களை மற்றும் மிருக கழிவுகளை சுத்தம் செய்த பின்
உங்கள் கைகளை நன்றாக சவர்காரமிட்டு வெந்நீரில் சுத்தம் செய்யுங்கள்
இந்த வைரஸை முழுமையாக குணப்படுத்த முடியாது. ஆனால் இதன் அறிகுறிகளை ஆரம்பத்தில் கண்டால் இதற்கு தடுப்பு மருந்துகள் உண்டு என்று மருத்துவத்துறை அறிவித்துள்ள்து.

No comments:

Post a Comment