Friday 18 June 2021

கலைவாணி அரசு நிதிஉதவி துவக்கப்பள்ளி 15. தங்கள்ள ராமசாமி தெரு, தரணம்பேட்டை, குடியாத்தம்.


 

*கலைவாணி அரசு நிதிஉதவி துவக்கப்பள்ளி 15. தங்கள்ள ராமசாமி தெரு, தரணம்பேட்டை, குடியாத்தம்.*


*அன்பான பெற்றோர்களுக்கு ' வணக்கம்*🙏


**எங்கள் பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.*


**2 அடுக்கு கொண்ட பாதுகாப்பான கான்கீரிட் கட்டமைப்பு வசதி உள்ளது.*


*காற்றோட்டமான வகுப்பு. தரமான குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது.*


**சுகாதாரமான 24-மணி நேரமும் தண்ணீர் வசதி செய்யப்பட்டுள்ளது.*


**சுகாதாரமான கழிப்பிட வசதி உள்ளது. *கராத்தே, யோகா பயிற்சி தனி ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படுகிறது.*


**அரசு சலுகைகள் அனைத்தும் பெற்று வழங்கப்படுகிறது.*


**1-ம் வகுப்பில் சேர்க்கும் மாணவர்களுக்கு மட்டும் இலவசமாக தனி*

*வாகனவசதி செய்யப்பட்டுள்ளது.*


**கல்வி உதவித்தொகை ஆண்டுதோறும் ரூ.1000/- பெற்று வழங்கப்படுகிறது.** 

**விரைவில் ஆங்கில வகுப்பு அரசு அனுமதியுடன் தொடங்கப்பட உள்ளது.*


**1-ம் வகுப்பு சேர்க்கும் மாணவர்களின் வீட்டிற்கே வந்து அழைத்துச்செல்லும்* *வசதி செய்யப்பட்டுள்ளது*.


*ஆரம்ப கல்விக்கு கலைவாணி !*


*குழந்தைகள் தடையில்லாமல் மகிழ்ச்சியுடன் கல்வி கற்க கலைவாணி!!*


*குழந்தைகள் அதிக தொலைவில் ஆனந்தமாய் கல்வி கற்க இலவச வாகனத்தில் அழைத்துச் செல்லும் கலைவாணி !!| எமது கலைவாணிப் பள்ளியில் சேர்த்து பயமில்லாமல் இருப்பீர் !!!!*


*கொரானா வைரஸ் ஒழிக்க தனித்திரு ! விழித்திரு ! முககவசம் அணிந்திரு !!*


*தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள்.*


🙏🙏🙏🙏🙏🙏🙏

Monday 14 June 2021

விலையில்லா பொருட்கள் வழங்குவதற்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் தனித்தனியாக விவரங்கள் கோரக்கூடாது.EMIS தளம் மூலமாகவே பெற்றுக்கொள்ள வேண்டும் பள்ளிக் கல்வி ஆணையர் அறிவுறுத்தல்- இனி அனைத்து தரவுகளும் EMIS தளம் மூலம்(மட்டுமே)பெற உள்ளதால் அதனை updated, ஆக வைத்துக்கொள்ளவும்



*🌎🙋‍♂️விலையில்லா பொருட்கள் வழங்குவதற்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் தனித்தனியாக விவரங்கள் கோரக்கூடாது.EMIS தளம் மூலமாகவே பெற்றுக்கொள்ள வேண்டும் பள்ளிக் கல்வி ஆணையர் அறிவுறுத்தல்- இனி அனைத்து தரவுகளும் EMIS தளம் மூலம்(மட்டுமே)பெற உள்ளதால் அதனை updated, ஆக வைத்துக்கொள்ளவும்*


*பள்ளிக் கல்வித் துறை*


*பெறுநர்*


*உறுப்பினர் செயலர்.*

*தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் டிபிஐ வளாகம், சென்னை-6*


*பணிகள் கழகம்,*


*ந.க.எண்.028302 /காப்2/2021, நாள்: 10.06.2021*


*அனுப்புநர்*


*ஆணையர், டிபிஐ வளாகம்.*


*பள்ளிக் கல்வி ஆணையரகம்.*

*சென்னை-6,*


*பொருள்: பள்ளிக் கல்வி - கல்வி மேலாண்மைத் தகவல் முறைமை (EMS) அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து பார்வை 1. பள்ளிக் கல்வி ஆணையரின் கடிதம் ந.க.எண்.000110/82/2021, நாள் 15.02.2021*.


*மேற்பொருள் சார்ந்து, பார்வையில் காணும் பள்ளிக் கல்வி ஆணையரின் கடிதத்தில் எந்த ஒரு நிலையிலும் தனிப்பட்ட முறையில் துறை சார்ந்த விவரங்களை முதன்மைக் கல்வி அலுவலகங்கள் வாயிலாகவோ அல்லது மாவட்டக் கல்வி அலுவலகங்கள் வாயிலாகவோ பெற்று தொகுக்கும் பணியினை (data collection and consolidation) மேற்கொள்ளக் கூடாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அளவிலான மற்றும் மாவட்ட அளவிலான விவரங்களைக் கல்வி மேலாண்மைத் தகவல் முறைமை (EMS) வாயிலாக மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.*

*அதற்கேற்ப அனைத்து நிலையிலும் (பள்ளிகள். வட்டாரக் கல்வி அலுவலகங்கள், மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் வருவாய் மாவட்டக் கல்வி அலுவலங்கள்) அவ்வப்போது ஏற்படும் விவரங்களை உடனுக்குடன் நிகழ்நிலையில் (current updation) வைத்திடும் பொருட்டு EMS இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கடிதத்தினை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. 16.02.2021 அன்று*

*கல்வி மேலாண்மைத் தகவல் முறைமையில் அனைத்து வகைப் பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அலுவவர்கள் சார்ந்த கஅளவில் உள்ள நேரிடைத் தகவல்கள் அனைத்தும் கிடைக்கப் பெறும் இயங்கு தளமாக உள்ளது. இவ்விணையதளத்தில் பள்ளிகளுடைய விவரங்கள், மாணவர்களின் தகவல்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்கள் பகுக்கப்பட்டுள்ளன. மூன்று முக்கிய பிரிவுகளாகப்*

*இதன் மூலம் தானியங்கி முறையில் எளிமையாக அறிக்கைகள் தயாரித்து*

*வழங்க முடிவதுடன், பள்ளி அளவில் பயன்பாட்டில் உள்ள 30-க்கும் மேற்பட்ட*

*பதிவேடுகள் எண் மயமாக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட*

*அடையாள எண் வழங்கப்பட்டுள்ளது.*

*பணியாளர்களின் பணி நிர்ணயம், பணி மாறுதல், பதவி உயர்வு மற்றும் கலந்தாய்வு போன்றவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு நடத்தப்படும் பொதுத் தேர்விற்கான மாணவர்களின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கும் பணியும் இதில் அடங்கும்.*


*இவ்வாறான இணையதளத்தில் பள்ளிகள். வட்டார அலுவலகங்கள், கல்வி மாவட்டங்கள் மற்றும் அருவாய் மாவட்டங்கள் அளவிலான விவரங்களை உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்பட்டு இணையதளத்தினை நிகழ்நிலையில் {current updation) யைக்கப்பட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.*


*எனவே, இனி வருங்காலங்களில் பள்ளிகள் ஆசிரியர்கள். மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் தொடர்பான அனைத்துப் புள்ளி விவரங்களையும் EMIS மூலம் பெற்று உரிய நடடிக்கை எடுத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. எக்காரணம் கொண்டும் முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் மேற்படி விவரங்களை நேரடியாகப் பெறுவதைத் தயிர்க்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.*


*பள்ளிக் கல்வி ஆணையருக்காக*


*அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், (வருவாய் மாவட்ட அளவில் அனைத்து விவரங்களையும்*

*நிகழ்நிலையில் (Current updation) வைக்கப்பட வேண்டும் என*

*அறிவுறுத்தப்படுகிறது. அனைத்து சார்நிலை அலுவலர்களும் துறைத் தலைவர்கள் கோரும் விவரங்களை தனிப்பட்ட முறையில் அனுப்புவதை முற்றிலுமாக தவிர்த்து EMIS இணையதளத்தின் வாயிலாகவே அனுப்பப்பட வேண்டும் எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்படுகிறது.)*


Sunday 13 June 2021

தனியார் பள்ளிகள் 75% கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் - மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி... காணொளி

8 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 20 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம் - தமிழக அரசு உத்தரவு... காணொளி

மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் காரில் வரும் பொழுது தனியாக மனுவுடன் நின்று கொண்டிருந்த பெண்ணிற்காக தன் காரை நிறுத்தி மனுவை பெற்றுக்கொண்டு உடனடியாக கையெழுத்திட்டு நடவடிக்கை... காணொளி

பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி காணொளி

மாவட்டக்கல்வி அலுவலர் கொரோனா தொற்றால் உயிரிழப்பு... காணொளி

பாடப்புத்தகம் வழங்கும் பணி நாளை துவக்கம் - முதன்மை கல்வி அலுவலர்கள்... காணொளி

Friday 11 June 2021

தமிழகத்தில் ஜூன் 21-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு - தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் என்னென்ன தளர்வுகள் விரிவான விளக்கம்... காணொளி

மாணவர்கள் பள்ளிக்கு நேரடியாக வந்து பாடப் புத்தகங்களை பெற்றுக் கொள்ள ஏற்பாடு - பள்ளிக்கல்வித்துறை காணொளி

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு தொற்றின் தீவிரம் குறைவு ஆய்வில் தகவல்... காணொளி

3.65 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று தமிழகம் வருகை... காணொளி

பிற மாநிலங்களுக்கு மருந்து வழங்க தயார் - நாட்டு வைத்தியர் ஆனந்தையா சிறப்புப் பேட்டி... காணொளி

தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களுக்கு தடுப்பூசி வேண்டாம் மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை... காணொளி

Wednesday 9 June 2021

குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் ? காணொளி

தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பில் சேர நுழைவுத் தேர்வு ரத்து - பள்ளிக்கல்வித்துறை... காணொளி


 

நேற்று மாலை 09/06/2021 வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் உடன் கோவை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள்... தலைமை ஆசிரியரின் இருக்கையின் மாண்பை நன்கு உணர்ந்த மாண்புமிகு அமைச்சர்... காணக்கிடைக்காத அதிசயம்...


 

நேற்று மாலை 09/06/2021 வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் உடன் கோவை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள்... தலைமை ஆசிரியரின் இருக்கையின் மாண்பை நன்கு உணர்ந்த மாண்புமிகு அமைச்சர்... காணக்கிடைக்காத அதிசயம்...

Tuesday 8 June 2021

*அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை) பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள்* *அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) பின்பற்றி 14.06.2021 முதல் பணிக்கு வருகை புரிய வேண்டும்* - *பள்ளிக்கல்வி ஆணையர்*


*பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை-6 ந.க.எண். 34462/பிடி1/இ1/2020, நாள்.08.06.2021*
*பொருள்: பள்ளிக் கல்வி - அரசு/அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில்*
*பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி -14.06.2021 முதல் பள்ளிக்கு வருகை புரிதல் - சார்ந்து. மற்றும் பேரிட*
*பார்வை: அரசாணை**எண்.613, வருவாய்**மேலாண்மைத் துறை நாள்:05.06.2021*.
*பார்வையில் கண்ட அரசாணையின் படி, நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று காரணமாக மாணவர் நலன் கருதி இந்த ஆண்டு பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடத்தப்படமாட்டாது மாண்புமிகு தமிழ்நாடு என முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மாணவர்களுக்கு எவ்வாறு மதிப்பெண் வழங்குவது, உயர்கல்வி பயிலுவதற்கான சான்றிதழ்கள் வழங்குவது சார்ந்த பணிகள் நடைபெற உள்ளதாலும் மாணவர்கள் சேர்க்கை ஆரம்பிக்கப்பட உள்ளதாலும் மற்றும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும் கற்றல் கற்பித்தலுக்கு தேவையான இதர நலத்திட்டங்கள் வழங்க வேண்டி உள்ளதாலும், பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்வது சார்ந்தும் மற்றும் மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி கற்றல் சார்ந்த நிகழ்ச்சிகளை பார்வையிட செய்வது சார்ந்தும், அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை) பணிபுரியும் தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள்* *அனைவரும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) பின்பற்றி 14.06.2021 முதல் பணிக்கு வருகை புரிய வேண்டுமென இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. இதனை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் உறுதிசெய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறது.*
*பள்ளிக் கல்வி ஆணையருக்காக*
*பெறுநர்:*
*1. அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்.*
*2. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள். நகல்: தொடக்கக்கல்வி இயக்குநருக்கு தக்க நடவடிக்கைக்காக**அனுப்பி வைக்கப்படுகிறது*.

Sunday 6 June 2021

கொரோனா இரண்டாம் அலை பரவலுக்கு 5ஜி தொழில்நுட்பம் காரணமா? காணொளி

வீட்டுத் தனிமையில் இருப்போருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு... காணொளி

ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பிரம்ம கமலம் பூ - ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்ற மக்கள்... காணொளி

*நீட் தேர்வை நடத்த விடமாட்டோம்*- *மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிரத்யேக பேட்டி... காணொளி

பிளஸ்-2 மதிப்பெண் கணக்கிடுவது எப்படி மாண்புமிகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிரத்தியேக பேட்டி... காணொளி

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு. 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். வட தமிழ்நாட்டின் ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்... காணொளி.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆய்வு... காணொளி

ரூ 2000, மற்றும் மளிகைப் பொருட்களுக்கு 11ஆம் தேதி முதல் டோக்கன் வழங்கப்படும் - தமிழக அரசு

மாநில வளர்ச்சி கொள்கை குழுவிற்கு புதிய உறுப்பினர்களை நியமித்து மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு...

Saturday 5 June 2021

பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்தது ஏன்? - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்... காணொளி

ஜூன் 20-ஆம் தேதிக்குள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும்-பள்ளிக் கல்வித்துறை... காணொளி

EMIS BREAKING: Dear TEACHERS, Please do not carry out any student transfer or promotion activity for now. Kindly wait for inputs. We will update you this week. State EMIS Team

பெருந்தொற்று குறைவான மாவட்டங்களில் தளர்வுகள் என்னென்ன? காணொளி

நீட் தேர்வின் தாக்கம் - மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை அளிக்க உத்தரவு காணொளி

Venus planet இல் கடல் இருந்ததா? கோடிகளைக் கொட்டி ஆராயப் போகும் NASA full details... காணொளி

+ 2 தேர்வு - சட்டமன்ற கட்சி பிரதிநிதிகளுடன் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை... காணொளி

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்த புதிய சிகிச்சை முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கொடுத்த அதே மருந்து... விரிவான விளக்கம். காணொளி

Friday 4 June 2021

ஜூன் 14 வரை சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு விரிவான விளக்கம்... காணொளி

புதிய கல்விக்கொள்கை +2 பொதுத்தேர்வை பாதிக்குமா? - மாண்புமிகு கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்... காணொளி

பள்ளி மாணவர்களுக்கு முட்டையுடன் கூடிய உலர் பொருட்கள் - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு... காணொளி

தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம் - மீண்டும் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படும் சூழல்... காணொளி

இறந்து போன பாகன் உடலை பார்க்க வந்த பிரம்மதச்சன்... கேரளாவை கண்கலங்க வைத்த யானை... காணொளி

"முகக் கவசங்கள் தேர்வு செய்வது எப்படி?" - கண்ணன் மருத்துவர் விளக்கம்... காணொளி

தடுப்பூசி உற்பத்தி - செங்கல்பட்டில் பாரத் பயோடெக் அதிகாரிகள் ஆய்வு... காணொளி

ஜூன் 14 வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு? காணொளி

Tuesday 1 June 2021

CBSE தேர்வு ரத்து இதன் தாக்கம் அதிகமாக இருக்கும். காயத்ரி (கல்வியாளர்) கருத்து... காணொளி

4 இலட்சத்துக்கும் மேலான கொரோனா தடுப்பூசிகள் இன்று மாலை சென்னை வந்தடைகிறது காணொளி

வாட்ஸ் ஆப் பாதுகாப்பு செயல்படுவது எப்படி? சமூக வலைதளங்களுக்கான புதிய விதிகள் விவகாரத்தில் மத்திய அரசுக்கும், வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்கும் இடையே நடப்பது என்ன என்பதை விரிவாக அலசுகிறது, இந்த தொகுப்பு... காணொளி

கோவையில் கொரோனா வார்டுக்குள் சென்றது ஏன்? - மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம்... காணொளி