Wednesday, 25 March 2020

பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் இக்கல்வியாண்டில் அனைத்து வகை பள்ளிகளில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசால் அறிவிக்கப்படுகிறது எனவும் இது சார்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளை இணையதளம் மற்றும் தொலைபேசி வாயிலாக தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்கள்.



Click here to download PDF


தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை 6

ந.க.எண். 004010 / ஜெ1/ 2020, நாள். 25.03.2020

பொருள் :

*தொடக்கக் கல்வி - கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு - ஒழுங்குமுறைகள்- அனைத்து வகைப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தல் - சார்ந்து,*

பார்வை: 1. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் செ.கு.எண்.213, நாள் 15.03.2020 மற்றும் செ.கு.எண்.031, நாள் 16.03.2020

2. அரசாணை நிலை (எண்) 152, சுகாதாரம் மற்றும் குடும்ப நலன்(பி) துறை, நாள். 23.03.2020.

3. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் செய்தி அறிக்கை நாள் 25.03.2020.

சென்னை - ந.க.எண். 014598 / பிசி / 2020, நாள். 25.03.2020 பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்,

பார்வை (4)6v காணும் பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் இக்கல்வியாண்டில் அனைத்து வகை பள்ளிகளில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசால் அறிவிக்கப்படுகிறது எனவும் இது சார்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகளை இணையதளம் மற்றும் தொலைபேசி வாயிலாக தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்கள்.

அதனடிப்படையில், தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மற்றும் Nursery and Primary School-களில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அனைவருக்கும் சார்ந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளித் தேர்வுப் பதிவேட்டில் உரியப் பதிவுகளை மேற்கொண்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்க உரிய அறிவுரைகளை மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

மேலும், இது சார்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கையின் விவரங்களை deesections@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அறிக்கையாக அனுப்பிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

(ஒப்பம்)

தொடக்கக் கல்வி இயக்குநர்

பெறுநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்

( வழியாக முதன்மைக் கல்வி அலுவலர்கள்

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள்

1. சென்னை - 9, பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மைச் செயலர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.

2. சென்னை - 6, பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது.

No comments:

Post a Comment