Sunday 28 November 2021

18 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை கனமழை நீடிப்பதால் தஞ்சாவூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களிலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை காணொளி

தென் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பியவருக்கு கொரோனா... காணொளி

வேலூர் அருகே நிலநடுக்கம்... காணொளி

#BREAKING : கனமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர்

உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் அச்சம்... பல்வேறு தொலைக்காட்சிகளின் காணொளி தொகுப்புகள்...



 








Monday 22 November 2021

"நம்பர் 1 தமிழ்நாடு என்பதே பெருமை" -மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின்... காணொளி

பாலாற்றில் அடித்துச் செல்லும் வீடுகள்... பரபரப்பு காட்சிகள்... காணொளி

BREAKING: தமிழகத்தில் 25 முதல் 27ஆம் தேதி வரை அதி கனமழைக்கு வாய்ப்பு... காணொளி


 

வேலூர் மாவட்டம் கீ.வ.குப்பம் ஒன்றியம். இல்லம் தேடி கல்வி கலைஞர்களுக்கான 3 நாள் பயிற்சி


 வேலூர் மாவட்டம், கீ.வ.குப்பம் ஒன்றியம் 19-11-2021 வெள்ளிக்கிழமை முதல் நாள் கலைப்பயணம் கலைஞர்களுக்கான பயிற்சி காணொளி 


20-11-2021 சனிக்கிழமை இரண்டாவது நாள் பயிற்சி காணொளி


21-11-2021 ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாள் பயிற்சி காணொளி



நாள். 22.11.2021

*இல்லம் தேடி கல்வி திட்டத்தின்* 

*கலை பயண கலைஞர்களுக்கான  பயிற்சி முகாம் நிறைவு* 

வேலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மாவட்ட அளவிலான கலை பயண கலைஞர்களுக்கான மூன்று நாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை துவங்கி மூன்று நாட்கள் நடைபெற்று நிறைவு பெற்றது.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநர் சுதன், உதவி திட்ட இயக்குநனர்கள் ராமேஸ்வரமுருகன், நாகராஜமுருகன் ஆகியோரின் ஆணையின்படி வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் க.முனுசாமி ஆகியோர் வழிகாட்டுதலின்படி வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறையின் சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மாவட்ட அளவிலான கலை பயண கலைஞர்களுக்கான மூன்று நாட்கள் பயிற்சி முகாம் கே.வி.குப்பம் ஒன்றியம் சென்னாங்குப்பம் வித்யாலட்சுமி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

மூன்று நாள் பயிற்சி முகாமினை வேலூர் கல்வி மாவட்ட அலுவலர் த.சம்பத்து அவர்கள் தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி துவக்கிவைத்தார்கள்.  மாவட்ட உதவிதிட்ட அலுவலர் கே.எம்.ஜோதீஸ்வரபிள்ளை திட்ட அறிமுக உரையாற்றினார்.  

இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மாநில ஆலோசனைக்குழு உறுப்பினர் செ.மாதவன், மாநில திட்ட ஆலாசகர் எஸ்.சுப்பிரமணி, கே.வி.குப்பம் வட்டார கல்வி அலுவலர்கள் என்.பி.கண்ணன், கமலநாதன், வித்யாலட்சுமி பள்ளியின் தாளாளர் அசோக்குமார் பள்ளியின் முதல்வர் எம்.பிரபாவதி, ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், வேலூர் வடக்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் எஸ்.எஸ்.சிவவடிவு, பள்ளித்துணை ஆய்வாளர் அ.மணிவாசகம், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் குமார், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் டி.முனிசாமி, ப.ராஜேந்திரன், சா.குமரன், வீரா.குமரன், ப.சேகர், ஆ.ஜோசப் அன்ணையா, எஸ்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினர்.

கலைப்பயணக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.கோபிநாத் மூன்று நாள் நிகழ்வுகளையும் தொகுத்து வழங்கினார்.

கே.வி.குப்பம் வட்டார வள மைய மேற்பாவையாளர் (பொ) சிவக்குமார் நன்றி கூறினார். 

இந்த பயிற்சி முகாமில் 11 குழுக்களை சேர்ந்த 99 கலைஞர்கள் பயிற்சி பெற்றனர்.  

வழங்கப்பட்ட பயிற்சிகள்

1.பாடல் பயிற்சி     2. யோகா  3.உடற் பயிற்சி  4.நாடக பயிற்சி  5.கரகாட்ட பயிற்சி

6.ஒயிலாட்டம் பயிற்சி   7.தப்பாட்ட பயிற்சி ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டன.

பங்கேற்ற கலைக்குழுக்கள்

விடியல், இசை, அங்காளபரமேஸ்வரி, மண்ணின் மைந்தர்கள், முருகன், நிலம், இணைந்த கைகள், மின்னல் ஜெயரத்தினம், தமிழ்தாய், தங்கபாண்டியன் மின்னல், முனியப்பன் பெரியமேளம் ஆகிய கலைக்குழுவினர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

தேர்தெடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குழுவிலும் ஒரு தவில் இசைக்கலைஞர், பறைஇசை கலைஞர், கரகம், ஒயில் ஆட்ட கலைஞர் உள்ளனர்.  ஒவ்வொரு குழுவினரும் வேலூர் மாவட்ட முழுவதும் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்த உள்ளனர்.  

மூன்று நாள் பயிற்சி முகாமிற்கான தங்குமிடம் அரங்கம் உள்ளிட்ட வசதிகளை வித்யாலட்சுமி பள்ளியின் தாளாளர் அசோக்குமார் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

(தொகுப்பு: செ.நா.ஜனார்த்தனன், Junior Red Cross Co-Ordinator)

Thursday 18 November 2021

COVID-19 மெகா தடுப்பூசி முகாம்களில் தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டி - பள்ளிக்கல்வி அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோருக்கு ஆசிரியர் கூட்டணி சார்பில் மனு அளிப்பு




 CLICK HERE TO DOWNLOAD PDF

*🌎💉COVID-19 மெகா தடுப்பூசி முகாம்களில் தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டி - பள்ளிக்கல்வி அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோருக்கு ஆசிரியர் கூட்டணி சார்பில் மனு அளிப்பு*


தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

அரசு அங்கீகார எண் : 337/06 நாள் : 04-00-1906 3/28, பிளாக்கர்ஸ் சாலை, செ.முத்துசாமி அரங்கம், : சென்னை - 600 002. website 'www.tntf.in

1977 197

பொதுச்செயலாளர்: செ.முத்துசாமி, Ex. ML.C

611, கல்லூரி விடுதிச்சாலை, காந்தி நகர், நாமக்கல் 637 001. 9444176288- vmuthusamynklilyahoo.com


பெறுநர்.


*மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்கள்*

*தலைமைச்செயலகம்.*

*செயிண்ட் ஜார்ஜ் கோட்டை*

*சென்னை.*


*மதிப்பிற்குரிய ஐயா*


*பொருள்- C0VD-19 மெகா தடுப்பூசி முகாம்களில்* *தொடக்க நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள்*

*பணியாற்ற ஆணையிடுவது விளக்களித்து விடுவிக்க கோரிக்கை.*


நவம்பர் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகள்

திறக்கப்பட்டு மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகின்ற நிலைமை தமிழக அரசால் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் மாணவர்கள் இன்றி  ஆசிரியர்களுடன் செயல்பட்ட பொழுது தமிழ்நாடு அரசின் COVID-19 தொற்று மெகா தடுப்பூசி காம்ப் நடைபெறும்போது தொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் பயன்படுத்தப்பட்டு வந்தனர். *தற்பொழுது பள்ளிகள் திறக்கபட்டுள்ள நிலையில் பள்ளி வேலை நாட்கனை ஈடு செய்யும் விதமாக சனிக்கிழமைகளிலும் வேலை நாட்களஅறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெறும் COVID 19 தடுப்பூசி முகாம்களில் ஆசிரியர்கள் பயன்படுத்தப்பட்டு வருவது வருத்தத்தை அளிக்கிறது 7 நாட்களும் பாணியாற்ற வேண்டிய சூழல் உருவாகி உள்ளதை தங்கள் கவணத்திற்கு கொண்டு வருகிறோம். ஓய்வு இல்லாமல் வரத்தின் 7 நாட்களும் ஆசிரியர்கள் பணி செய்வதன் காரணமாக எழும் மண உளைச்சல் மற்றும் உடல் சோர்வின் காரணமாக மாணவர்களுக்கு கற்பித்தலில் முழுமையாக ஈடுபடாது. சூழ்நிலை ஆசிரியர்களுக்கு உண்டாகும்.*


*ஆசிரியர்கள் திங்கள் முதல் சனி வரை பள்ளிகளில் வேலை செய்துவிட்டு ஞாயிற்றுக்கிழமையும் மீண்டும் COV1D-19 தடுப்பூசி முகாம்* *பணியாற்றிய செல்வதால் விடுமுறை இல்லாமல் தொடர்ந்து வாரத்தின் ஏழு*

*எனவே இனிவரும் காலங்களில் நடைபெற உள்ள* *covd-19 தடுப்பூசி முகாம்களுக்கு தொடக்க,நடுநிலை பள்ளி* *ஆசிரியர்களை பயன்படுத்தி கொள்வதில் இருந்து விலக்கு* *அளிக்குமாறு தமிழ்நாடு ஆசிரியர்*

*கூட்டணி தங்கனை கேட்டுக்* *கொள்கிறது. வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை ஆசிரியர்கள் வீட்டில்*

*இருந்தால்தான் தங்கள் குடும்ப* *வேலைகளையும் மற்றும் அடுத்த வாரத்திற்காண கற்பித்தல் முன்* *தயாரிப்பு*

*பணிகளையும் செய்ய இயலும்* *என்பதை கவனத்தில்* *கொண்டும் எப்பொழுதும் ஆசிரியர் நலன் காக்கும்* *மாண்புமிகு முதல்வர் மு.க ஸ்டாவின் அவர்களின்* *ஆட்சியில் ஆசிரியர் நலன் காக்க COVID-19 தடுப்பூசி முகாம் பணியிலிருந்து ஆசிரியரிகளை விடுவிக்க தக்க உத்திரவிடுமாறு தக்களை கேட்டுக்கொள்கின்றேன்*


*தங்கள் உண்மையுள்ள,*

*செ.முத்துசாமி Ex MLC* *பொதுசெயலாளர்.*

16 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை மழையின் தற்போதைய நிலவரம் என்ன? காணொளி

#BREAKING வெளுத்து வாங்கும் மழை ; வேலூர் உள்பட 4 மாவட்டங்களில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை காணொளி

#BREAKING தமிழ்நாட்டில் வரும் 22ம் தேதி வரை (சூறாவளி காற்றுடன்) கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்... காணொளி

வேலைவாய்ப்பில் சிலம்பம் வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீடு - தமிழ்நாடு அரசு அரசாணை... காணொளி

Wednesday 17 November 2021

அலர்ட் அறிவிப்பு... மழையா? புயலா? விரிவான விளக்கம்‌‌... காணொளி

தமிழகத்தில் கனமழை காரணமாக 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை... காணொளி

சென்னை திருவள்ளூர் ராணிப்பேட்டை வேலூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு இன்று 18-11-2021 விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது... காணொளி

“8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்“ - வானிலை ஆய்வு மையம். காணொளி

கனமழை - அடுத்த 24 மணி நேரத்தில் எப்படி இருக்கும்? காணொளி|

Thursday 11 November 2021

வேலூர் மாவட்டம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை -மாவட்ட ஆட்சியர் காணொளி

வெளியான அரிய வீடியோ...! வான்கூவர் விமான நிலையம் அருகே 24 நிமிடங்கள் சுழன்றடித்த சுழற் காற்று... காணொளி

"தமிழ்நாடு சகோதர சகோதரிகள் பாதுகாப்பு நடவடிக்கையை பின்பற்றுங்கள்" - ராகுல்காந்தி... காணொளி

#BREAKING வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக்கடந்தது -சென்னை வானிலை மையம்|காணொளி

காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 16 கி.மீ வேகத்தில் நகர்ந்து கரையை கடந்து வருகிறது..! காணொளி

Wednesday 10 November 2021

#BREAKING 5-வது நாளாக நேரில் சென்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க‌ ஸ்டாலின் ஆய்வு! காணொளி


 

மழை, புயல், பந்த் போன்ற காரணங்களுக்காக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் நாட்களில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை தர வேண்டுமா? அரசாணை சொல்வது என்ன முழு விளக்கம்.


 CLICK HERE TO DOWNLOAD PDF

*🌎🌧️தமிழ்நாடு அரசு சுருக்கம்*


*தொழில் நுட்பக் கல்வி - மழை, புயல், பந்த் போன்ற காரணங்களுக்காகக் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் நாட்களில் ஆசிரியர்கள் (மற்றும்) அமைச்சுப் பணியாளர்கள் பணிக்கு வருதல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.*


கல்வி(ஐ) துறை


அரசு ஆணை நிலை எண். 1144 


1) அரசுக் கடித எண். 84310 / ஜே / 91. நாள்: 20.01.92.


நாள்: 14 டிசம்பர் 1993 பார்வை:


2) கல்லூரிக் கல்வி இயக்குநர், கடித எண். 46042 / ஏ5 / 92, நாள்: 29.07.92.


*3) பள்ளிக் கல்வி இயக்குநர், கடித எண். 34317 / டி3 / 1992. நாள்: 20.03.93.*


*4) தொழில் நுட்பக் கல்வி இயக்குநர், கடித எண். 14357 / பி5 /91, நாள்: 18.03.93.*


*ஆணை;*


மழை, புயல், பந்த், கலவரங்கள் போன்றவை ஏற்படும் சமயங்களில் அன்றைய தினம் கல்லூரிகள்/ பள்ளிகள் மற்றும் இதர நிறுவனங்களுக்கு விடுமுறையென்று பொதுவாக அரசால் அறிவிக்கப்படுகிறது. அவ்வாறான நிகழ்வுகளில் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறையா என்றும், அந்நாட்களில் ஆசிரியர்கள், ஆசிரியரில்லாப் பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் பணிக்கு வர வேண்டுமா என்றும் ஐயம் எழுவதால், அது குறித்து அரசாணை ஏதும் இருப்பின் அதன் நகல் அனுப்புமாறு தொழில் நுட்பக் கல்வி இயக்குநர் அரசிடம் கேட்டதற்கு இப்பொருள் குறித்து பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரிக் கல்வி இயக்குநருடன் கலந்து, அங்கு பின்பற்றப்படும் நடைமுறை குறித்து அறிக்கை அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டது. அதன்படி பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரிக் கல்வி இயக்குநர்களிடமிருந்து மேற்படி இயக்ககங்களில் இது போன்ற நிகழ்வுகளில் பின்பற்றப்படும் முறை குறித்து பார்வை 2, 3-ல் காணும் கடிதங்களில் தகவல் பெற்று தொழில் நுட்பக் கல்வி இயக்குநர் அனுப்பி இப்பொருள் குறித்துத் தெளிவான அரசு ஆணை ஏதும் இருப்பின் அதன் நகலை அனுப்புமாறும் முகப்புப் பத்தியில் கண்ட சூழ்நிலைக் காலத்தில் பயிலகங்களில் பணியாளர்கள் (ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத அனைத்து பணியாளர்களும்) எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதற்கான தக்க தெளிவுரை வழங்குமாறும் தொழில் நுட்பக் கல்வி இயக்குநர் அரசை வேண்டியுள்ளார்.


2. மேற்படி தொழில் நுட்பக் கல்வி இயக்குநரின் ஐயப்பாட்டினை அரசு கவனமாகப் பரிசீலித்தது. இந்நிகழ்வில் பார்வை 2-ல் காணும் கடிதத்தில் தெரிவித்துள்ள பள்ளிக்கல்வி இயக்ககத்தில் பின்பற்றப்படும் முறையையே அனைத்து கல்வி நிறுவனங்களும் பின்பற்றுமாறு அறிவுறுத்தலாம் என அரசு முடிவெடுத்தும் அதன்படி *கடும் மழை, புயல், பந்த் கலவரங்கள் மற்றும் எதிர்பாராதசந்தர்ப்பங்கள் மற்றும் செலாவணி முறிச் சட்டப்படி அரசால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படும் போது, மாணவர்களைப் போல் ஆசிரியர்களும் ஆசிரியரல்லாப் பணியாளர்களும் கல்வி நிறுவனங்களுக்கு வருகை தர வேண்டியதில்லை என்றும், ஆனால் பள்ளி / கல்லூரி / முதல்வர் / மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர்களின் முடிவின்படி விடுமுறை அளிக்கும் போது மாணவர்களும் ஆசிரியர்களும் கல்வி நிறுவனங்களுக்கு வருகை தர வேண்டியதில்லை. ஆசிரியரல்லா அமைச்சுப் பணியாளர்கள் கல்வி நிறுவனங்களுக்கு வருகை தருதல் வேண்டும் என்றும்,* எப்படி இருப்பினும், கல்வி ஆண்டில், *நிர்ணயிக்கப்பட்ட வேலை நாட்களுக்குக் குறைவு ஏற்படுமாயின் அரசு விடுமுறை நாட்களில் கல்வி நிறுவனங்கள் நடைபெற்று குறைவுபடும் வேலை நாட்களை ஈடு செய்ய வேண்டும் என்றும் அரசு ஆணையிடுகிறது. (ஆளுநரின் ஆணைப்படி)*


ஓம்/ - ஜெயந்தி, அரசுச் செயலாளர்.


பெறுநர்


தொழில் நுட்பக் கல்வி இயக்குநர், சென்னை - 25.


/ உண்மை நகல் /


தொழில் நுட்பக் கல்வி இயக்ககம், கிண்டி, சென்னை - 600 025. மேற்குறிப்பாணை எண். மு. 14357 / பி5 / 91/ நாள்: 20.01.94.


நகல் தொழில் நுட்பக் கல்வித் துறையைச் சார்ந்த அனைத்து முதல்வர்களுக்கும் தகவலுக்காகவும் மேல் நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது. அதில் கூறியுள்ள . அறிவுரைகளை தவறாது கடைபிடிக்குமாறு அறிவிக்கப்படுகிறது.


ஒம்/-மு. இனாயத்துல்லா இயக்குநருக்காக.


பெறுநர்


அனைத்து பொறியியற் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் மற்றும் சிறப்புப் பயிலக முதல்வர்களுக்கும் (அரசு மற்றும் நிதியுதவி பெறுவோர்)


கண்காணிப்புப் பொறியாளர், செயற் பொறியாளர்கள். நகல் : இயக்கக அனைத்து அலகு அலுவலர்களுக்கும்


நகல்: அனைத்து கண்காணிப்பாளட்களுக்கும் நகல்: இயக்குநரின் நேர்முக உதவியாளர்


நகல்: இயக்குநரின் நேர்முக எழுத்தர் நகல்: உதவி இயக்குநர் நிர்வாகம்




நகல்: கண்காணிப்பாளர் 'ஏ' 'பி' 'சி' 'டி' பிரிவுகளுக்கும்


நகல்: தொகுப்புக் கோப்பு நகல் : உதிரி 


ஆணைப்படி அனுப்பப்படுகிறது /


/ உண்மை நகல் /


ஓம்/- XXXXXX கண்காணிப்பரளர்.


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - இல்லம் தேடிக் கல்வி -* *தன்னார்வலர்களை தேர்ந்தெடுத்தல் -* *வழிகாட்டுதல்கள்*

 


*ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை - 600 006 மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்*


ந.க.எண்.449/C7/SS/2021 நாள் 10.11.2021


*ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - இல்லம் தேடிக் கல்வி -*


*தன்னார்வலர்களை தேர்ந்தெடுத்தல் -* *வழிகாட்டுதல்கள்*

*- சார்பு.*


பொருள் :


*கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்புகள் வரை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளிமற்றும் இழப்புகளை ஈடுசெய்வதற்காகத் தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி 1 முதல் ஒன்றரை மணிநேரம் (மாலை 5.00 மணிமுதல் 7.00 மணிக்குள்) கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையிலும் இடைநிற்றலை முற்றிலும் களைவதற்கும் "இல்லம் தேடிக் கல்வி" செயல்படுத்தப்பட உள்ளது. பள்ளி நேரங்களைத் தவிர, மாணவர்கள் வசிப்பிடம் அருகே சிறிய குழுக்களில் தன்னார்வலர்கள் மூலம் மாணவர்களுக்கு கற்றல் வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.*


இத்திட்டம் முழுவதும் தன்னார்வத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்படும். விழிப்புணர்வு நடவடிக்கைகள் தன்னார்வலர்களுக்கு இந்த முயற்சியில் பங்கேற்க ஒரு திறந்த அழைப்பை வழங்கும். தன்னார்வலர் தேர்ச்சியானது, தன்னார்வர் கொடுத்த தரவுகளை சரிபார்த்தல், பின்புல ஆய்வு. கல்வியில் முன் அனுபவம், குழந்தைகளை கையாளும் திறன், தன்னார்வலர் நேரடி சந்திப்பு மற்றும் கற்றல் கற்பித்தல் பயிற்சிக்கு தயார் நிலை அறிதல் ஆகியவற்றின் மூலம் நடைபெறும்,


தன்னார்வலரைப் பயன்படுத்துவதற்கான அனைத்து எளிதாக்கும் பொருட்டு "இல்லம் தேடிக் கல்வி* இணையதளம் (http://illamthedikaivi.tnschools.gov.in/) மற்றும் இணையவழி வாயிலாக தன்னார்வலர்கள் விண்ணப்பம் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைப் பயன்படுத்தி பள்ளி-மாணவர் தன்னார்வலர்-கிராம தொடர்பு தடையின்றி நடைபெறும்.

நிலைகளையும்


இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் எந்த காலகட்டத்திலும் தன்னார்வலர் இந்த பணிக்கு சரியான நபர் இல்லை என அறியப்பட்டால் (மாநில, மாவட்ட பள்ளி அளவில்), உடனடியாக அவர் அப்பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்


தன்னார்வலர்களை தேர்ந்தெடுக்கும் முறை


மாநில அளவில் : மாநில அனாவில் தன்னார்வலர்களின் பதிவு நடைபெற்று வருகிறது. Web Portal

மூலம் தன்னார்வலர்கள் பதிவு செய்கின்றார்கள். இல்லம் தேடிக் கல்வி வலைத்தளத்தில் தன்னார்வலர்களின் தரவுகள், கிராம /


குடியிருப்புவாரியாக மாநில அளவில் பெறப்பட்டுள்ளது.


மாநில அளவில் தன்னார்வலர்களை தேர்ந்தெடுத்தல்: பதிவு செய்யப்பட்ட தன்னார்வலர்களின் தகவல்கள், சரிபார்க்கப்பட்டு (பெண்களுக்கு முன்னுரிமை, கல்வித்தகுதி, முகவரி, இதர தகவல்கள்) மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு, மாவட்ட குழு உறுப்பினர் செயலருக்கு (CEO) அனுப்பி வைக்கப்படும்.


மாவட்ட அளவில் தன்னார்வலர்களை தேர்ந்தெடுத்தல்: * மாநிலத்திலிருந்த பெறப்பட்ட தரவுகள் மாவட்ட குழுவின் மூலம், பள்ளிவாரியாக பிரிக்கப்பட்டு பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு பரிமாற்றம் செய்ய வேண்டும். இந்த தகவல் ஒன்றிய அளவிலான குழுக்களுக்கும் தெரிவிக்கப்படும்.


• ஒன்றிய அளவிலான குழுக்களுக்கு தன்னார்வலர்களை தேர்ந்தெடுத்தல்

பற்றிய வழிமுறைகளை விளக்குதல் மற்றும் தன்னார்வலர்களை


தேர்ந்தெடுத்தலை கண்காணிக்க வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழுக்களின் பொறுப்புகள் குறித்து ஒன்றிய குழுக்கள் மூலம் பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.


பள்ளி மேலாண்மைக் குழு பொறுப்புகள்


மாவட்ட குழுவின் வாயிலாக பெறப்பட்ட தரவுகளை பள்ளி மேலாண்மைக்

குழு உறுப்பினர்கள் கிராம குடியிருப்புக்கு நேரடியாக தன்னார்வலர்களின் தகவல்களை சரிபார்த்தல் வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளும் போது குடியிருப்புக்குட்பட்ட பிறபள்ளிகளுடன் இணைந்து செயல்படுதல் அவசியமாகும். (ஒரே பகுதியில் இருந்து நிறைய சென்று .


பள்ளிகளில் குழந்தைகள் பயில வாய்ப்புள்ளதால்)

தன்னார்வலர்களை தேர்தெடுத்தலில் கீழ்க்காணும் வரையறைகளை சரிபார்த்தல் அவசியமாகும். * இல்லம் தேடிக் கல்வி மையம் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியை

சார்ந்தவராக இருத்தல்.


* கல்வித் தகுதி


• 1 முதல் 5ம் வகுப்பு மாணவர் குழுவிற்கு - கல்வித் தகுதி - +2 * 6 முதல் 8ம் வகுப்பு மாணவர் குழுவிற்கு-கல்வித் தகுதி - பட்டப்படிப்பு


*கல்விச் சான்றிதழ்களை சரிபார்த்தல், கல்வி முன் அனுபவம். தன்னார்வலர்களை முன்னிலைப்படுத்தும் பிற சான்றிதழ்கள் (Co

curricular. experience) சரிபார்த்தல், புகைப்படம் எடுத்து செயலியில் பதிவேற்றல் செய்ய வேண்டும்.


* தன்னார்வலர்கள் தேர்தெடுக்கும் போது பெண்களுக்கு முன்னுரிமை அளித்தல் வேண்டும்.


* பின்புலங்களின் அடிப்படையில் ஆய்வு செய்தல், தன்னார்வலர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.


* மையத்திற்கு வரும் குழந்தைகளை சாதி, மதம், பாலினம் எனப் பாகுபடுத்தாமல், விருப்பு வெறுப்பின்றி வேண் சமமாக கருதுபவராக இருக்க


* TNEMIS – அளித்துள்ள செயலி வாயிலாக, தலைமை ஆசிரியர் Login ID மூலம்

செயலிக்குள் சென்று மேலே பெறப்பட்ட தகவல்களை உள்ளீடு செய்ய

வேண்டும். ஒவ்வொரு தன்னார்வலருக்கும் பள்ளி மேலாண்மைகுழு தங்கள்


பரிந்துரையை செயலியில் உள்ளீடு செய்ய வேண்டும்.


* மேற்கண்ட பணிகளை முடித்த பின்னர் ஒன்றிய குழுவிற்கு (BEO/BDO)

தெரியப்படுத்த வேண்டும். ஒன்றிய அளவில் தன்னார்வலர்கள் தேர்ந்தெடுத்தல்:


பள்ளி மேலாண்மைக்குழு தேர்ந்தெடுத்த தன்னார்வலர்கள் அடுத்த சுற்று

தேர்ச்சிக்கு ஒன்றிய அளவில் அழைக்கப்பட வேண்டும். இந்த தேர்ச்சி ஒன்றியத்தில்


Hi-Tech Lab வசதியுள்ள உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி ஒன்றில் நடைபெறும்.


எந்தப் பள்ளியில் நடைபெறும் என்பதை ஒன்றியக் குழு தீர்மானிக்கலாம்.


1. குழந்தைகளைக் கையாளும் திறன் அறியும் தேர்வு :


உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள Hi-Tech Labல் உள்ள கணினி மூலம் இணைய வழியாக தேர்வுகள் நடைபெறும்.


i தேர்வு நடைபெறும் பொழுது Hi-Tech Lab-க்குள் அலைபேசிகளை எடுத்துச் செல்ல அனுமதிக்க கூடாது.


குழு விவாதம்:


குழந்தைகளைக் கையாளும் திறன் அறியும் தேர்வு முடிந்தவுடன் தன்னார்வலர்கள் அனைவருக்கும் குறிப்பிட்ட தலைப்பின்கீழ், ஒன்றிய குழு முன்னிலையில் தன்னார்வலர்கள் மத்தியில் குழு விவாதம் நடத்தப்பட வேண்டும்.


குழு விவாதத்திற்காக தலைப்புகளும் வழிகாட்டுதலும் மாநில அளவில் இருந்து பகிரப்படும்.


தன்னார்வலர்கள் பேசும் திறன். விவாதிக்கும் திறன், அவர்களின் ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒன்றிய குழு தேர்ந்தெடுக்க

வேண்டும்.


 பரிந்துரைக்கப்பட்ட தன்னார்வலர்களின் பெயர் மற்றும் விபரங்களை


மாவட்ட அளவிலான குழுவிற்கு தெரிவிக்க வேண்டும். மாவட்ட அளளில் இதுவரையில் பெறப்பட்ட சரிபார்க்கப்பட்ட தகவல்கள். தேர்வு மதிப்பெண்கள். குழு விவாத பங்களிப்பு விவரங்கள், பள்ளி மேலாண்மைக் குழுவின் பரிந்துரை மற்றும் பின்புல தகவல்களின் அடிப்படையிலும் மையத்தின் தேவைக்கு ஏற்றவாறு தன்னார்வலர்களை தேர்ந்தெடுத்தலை உறுதி செய்ய வேண்டும்.


தன்னார்வலர்களை தேர்ந்தெடுத்த பிறகு மேற்கொள்ளப்பட வேண்டியவை கொடுக்கப்பட்ட அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி தன்னார்வலர்கள்

தேர்ந்தெடுத்தல் நடைபெற்றுள்ளதா என சரிபார்த்து தன்னார்வலர்களின் இறுதிப்

பட்டியலுக்கு மாவட்ட அளவிலான குழு ஒப்புதல் அளிக்க வேண்டும். . இறுதி பட்டியலை மாவட்ட அளவிலான குழு ஒன்றிய அளவிலான குழுவின்

மூலமாக பள்ளிகளுக்கு தெரிவிக்க வேண்டும். ஒன்றிய அமாவிலான குழுவாயிலாக பள்ளி மேலாண்மைக் குழுக்கள்

தேர்ந்தெடுத்த தன்னார்வலர்ககை கிராம / குடியிருப்பு இல்லம் தேடிக் கல்வி மையங்களுடன் இணைக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வலர்களுக்கு மாவட்ட அளவிலான குழு அடையாள அட்டை வழங்கப்படவேண்டும். (மாநிலத்திலிருந்து பெறப்பட்ட

படிவத்தின்படி)


மாவட்ட அளவிலான குழு தேர்வு செய்யப்பட்ட தன்னார்வலர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் பள்ளிமேலாண்மைக் குழு வாயிலாக பெறப்படுதல் வேண்டும்.


தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வலர்களை மையத்துடன் இணைத்துள்ள முழு விவரங்களை செயலி வழியாக பள்ளி மேலாண்மைக் குழு பதிவு செய்ய வேண்டும்.


• பள்ளி மேலாண்மைக் குழு பதிவு செய்த விவரங்களை ஒன்றிய குழுக்கள்


மற்றும் மாவட்ட குழு சரிபார்க்க வேண்டும். • மாவட்டக் குழு தலைவரின் ஒப்புதலுடன் மாநில குழுவிற்கு தெரியப்படுத்துதல் வேண்டும்.

 தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னார்வலர்களுக்கு அவர்கள் இணைக்கப்பட்ட

மையம், மையம் அமைந்துள்ள இடம் ஆகியவை பள்ளி மேலாண்மைக் குழு

வழியாக தெரிவிக்கப்பட வேண்டும். • தன்னார்வலர்கள் தேர்ந்தெடுத்தலின் போது பெறப்படும் அனைத்து மாநில தரவு மையத்திற்கு (EMI) தெரியப்படுத்துதல் வேண்டும். ளி மேலாண்மைக் குழுவின் ஆய்வு தேர்வு, குழுவிவாத குறிப்புகள், பயிற்சியாளரின் குறிப்புகள் உட்பட)


பயிற்சி


• தன்னார்வலர்கள் அனைவருக்கும் குழந்தைகளைக் கையாளும் விதம்

குறித்து ஒன்றிய அளவில் பயிற்சி அளிக்கப்படும். * பயிற்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட தன்னாரிவலர்கள் பங்குபெறும் விதமாக தன்னார்வலர்கள் அனைவருக்கும் பயிற்சிக்கான தேதி. இடம் ஆகியவைக் குறித்து பள்ளிகள் மூலம் தெரிவிக்கப்பட வேண்டும்.


* பயிற்சியின் பொழுது தன்னார்வலர் குழந்தைகளை சரிவர கையாளும் திறன்


உள்ளவரா என்பதை பயிற்சியாளர் உறுதிசெய்ய வேண்டும்.


* இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் எந்த காலகட்டத்திலும் தன்னார்வலர் இந்த பணிக்கு சரியான நபர் இல்லை என அறியப்பட்டால் (மாநில, மாவட்ட, ஒன்றிய, பள்ளி அளவில்), உடனடியாக அவர் அப்பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்.


குறிப்பு :


தன்னார்வலர்கள் தேர்வில் சிறப்பு கவனம் தேவையெனில் பகுதிக்கு ஏற்ப மாவட்ட குழு வழிகாட்டும்.


மாநிலம்:


1.தரவுகள் சேகரித்தல் இணையதளம் மூலம.


2. தன்னார்வலர் தேர்ந்தெடுத்தல் தொடர் கண்காணித்தல் 


தேர்வுத்தாள் தயாரித்தல்

குழு விவாத தலைப்புகள் மற்றும் வழிகாட்டுதல்கள்


மாவட்டம்


பள்ளி மேலாண்மைக் குழவிற்கு

தரவுகளை பிரித்துக்கொடுத்தல்


மாவட்டம்;


பரிந்துரைகளை மாவட்ட குழு  சரி பார்த்து இறுதி செய்தல்


அனைத்து தரவுகளையும் மாநிலத்திற்கு பகிர்தல் 

அடையாள அட்டை வழங்குதல்


வங்கி கணக்குகளை பெறுதல் 


ஒன்றியம்:

பள்ளி மேலாண்மை குழுவிற்கு தேர்ந்தெடுத்த லுக்கான பயிற்சி


குழந்தைகளை கையாளும் திறன் அறியும் தேர்வு


குழு விவாதம்


பரிந்துரைகளை மாவட்ட குழுவிற்கு வழங்குதல்


மேலாண்மைக்குழு பணிகள்


1. நேரிங் ஆய்வு


2. தரவுகள் சரிபார்த்தல்


தன்னார்வலருக் காண பரிந்துரைகள் 


4.உறுதி செய்ததை ஒன்றியத்திற்கு வழங்குதல்


மேற்காண் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இல்லம் தேடி கல்விக்கான தன்னார்வலர்களை தேர்ந்தெடுப்பதை உறுதி செய்ய அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


-/ஓம்/

மாநிலத் திட்ட இயக்குநர்


பெறுநர்

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்.


🌎

அங்கன்வாடி கைம்பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோருக்கு 25% ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் அரசாணை வெளியிட்ட மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்... காணொளி

தொலைபேசியில் மக்களின் குறைகளை கேட்டறிந்தார் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... காணொளி

வேகமாக செயல்படும் மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் - டைம்ஸ் ஆப் இந்தியா பாராட்டு... காணொளி

தேங்கிய மழைநீர் - கொட்டும் மழையிலும் ஆய்வு நடத்திய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்... காணொளி


 

Monday 8 November 2021

வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்*


 *🌎வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்*


ந.க.எண்.3290 / ஆ1/ 2021, நாள் 08.11.2021.


*பள்ளிக்கல்வி*

*அனைத்துவகைப் பள்ளிகளில் பயிலும்*

*மாணாக்கர்களின் பாதுகாப்பு - தொடர் மழை முன்னெச்சரிக்கை - மாணாக்கர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள்- அறிவுரைகள் வழங்குதல் -சார்பாக.*


*வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் பாதுகாப்பிற்கென, பள்ளித்தலைமை ஆசிரியர்கள் கூடுதல் கவனம் செலுத்திடும் பொருட்டு, கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.*


1. தொடர் மழையின் காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே, சுற்றுச்சுவரிலிருந்து 20 அடி தொலைவு வரை மாணவர்கள் யாரும் செல்லாவாறு தடுப்புகள் ஏற்படுத்துவதுடன் மாணவர்கள் அருகில் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.


2. மழையின் காரணமாக பள்ளியின் சில வகுப்பறைகள் பாதிக்கப்பட்டிருப்பின் அத்தகைய வகுப்பறைகளை பயன்படுத்தாமல் பாதுகாப்பாக பூட்டிவைப்பதுடன் அவற்றின் அருகே மாணவர்கள் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.


3. மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா என்றும், மின் கசிவு, மின்சுற்று கோளாறுகள் ஏதேனும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிபடுத்திடவும், தேவையெனில் மின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்துவைக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. இத்தகைய நேர்வுகளில் மின்வாரிய பொறியாளரை உடனடியாக தொடர்புகொண்டு இதனை

சரிசெய்திட அறிவுறுத்தப்படுகிறது. 4. பள்ளி வளாகத்தில் உள்ள நீர்தேக்கப் பள்ளங்கள். திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டி, மற்றும் நீர்தேக்கத் தொட்டிகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை மூடப்பட்ட நிலையில் உள்ளனவா என்று உறுதி செய்வதுடன் மாணர்வர்கள் அருகில் செல்லாவாறு கண்காணிக்க வேண்டும்.


5. விடுமுறை நாட்களில் ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் குளிப்பதை தவிர்த்திட வேண்டும். மழைக்காலங்களில் ஏரிகளில் உடைப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதால், விடுமுறை காலங்களில் வெளியே செல்வதை தவிர்க்கவும், குறிப்பாக நீர்நிலைகளுக்கு அருகே வேடிக்கை பார்க்க செல்லக்கூடாது என மாணவர்களுக்கு அறிவுரை வழங்குவதுடன்,

பெற்றோர்களுக்கும்

இதுகுறித்து

விழிப்புணர்வு

ஏற்படுத்த

தலைமையாசிரியர்கள் கோரப்படுகிறார்கள்


6). மழைக்காலங்களில் பள்ளிக்கு வரும் போதும் திரும்பிச் செல்லும் போதும் ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும் போது அவ்வழியினை தவிர்த்திட வேண்டும்.


7. பள்ளியை விட்டு செல்லும் போது பழுதடைந்த அல்லது அறுந்து கிடக்கும்

மின்கம்பிகளை மாணவர்கள் தொடுவதோ அல்லது அருகாமையில்

செல்வதோ கூடாது என்று அறிவுறுத்த வேண்டும்


8. மாணவர்கள் சாலையில் மழைநீர் கால்வாய்கள் இருக்கும் இடங்களில் கவனமாக செல்வதுடன் அதனை தவிர்க்கவும் அறிவுறுத்த வேண்டும்.


9. பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள் ஏதேனும் இருப்பின் அதனை

உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும். 10. பள்ளி வளாகத்தில் ஆபத்தானநிலையில் உள்ள உயர்மின்அழுத்தமுள்ள மின்கம்பங்கள், மற்றும் அறுந்து தொங்கக்கூடிய மின்கம்பிகள் இருப்பின்


அவைகளை உடனடியாக அகற்றப்படவேண்டும்.


11. சுவிட்சுகள் (switches) சரியாக உள்ளனவா, மழைநீர் படாதவண்ணம் உள்ளனவா என்பதையும் தலைமையாசிரியர்கள் ஆய்வு செய்யவேண்டும்.


12. மாணவர்களை கொண்டு மின்சாதனங்களை இயக்கக்கூடாது.


13.பள்ளியில் உள்ள அனைத்துக் கட்டிடங்களின் மேற்கூரைகள் உறுதியாக உள்ளனவா என்று அவ்வப்போது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேற்கூரையில் நீர் தேங்காவண்ணம் உடனடியாக தேங்கியுள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.


14. பள்ளி வளாகத்தில், கட்டிட பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு மாணாக்கர்கள் செல்ல தடைவிதிக்கவும், பள்ளங்களை சுற்றி பாதுகாப்பான தடுப்பு அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.


15. மழைக் காலங்களில் தங்களை மழையில் இருந்து காத்துக் கொள்ள மாணவர்கள் மரங்களின் கீழ் ஒதுங்குவது கூடாது என்றும் அதனால் மாணவர்களுக்கு மின்னல் போன்றவற்றிலிருந்து ஆபத்து நேரிடக் கூடும் என அறிவுறுத்த வேண்டும்.


16. பருவகால மாற்றங்களால் மாணாக்கர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களிலிருந்து (குறிப்பாக டெங்கு, சிக்குன்குனியா போன்ற காய்ச்சல்களிலிருந்து) பாதுகாத்துக் கொள்வதற்கான அறிவுரைகளை ஏற்கெனவே அறிவுறுத்தியபடி நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். மேலும், காய்ச்சல் இருப்பின் காலதாமதம் இல்லாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை/ ஆரம்ப சுதாரநிலையங்களுக்கு சென்று மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தவேண்டும்.


17.மாணவர்கள் பள்ளி வளாகத்திற்குள்ளும் அவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் பள்ளித் தலைமை ஆசிரியரால் மேற்கொள்ளப்பட வேண்டும்.


மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றி தலைமை ஆசிரியர்கள் செயல்படுவதை, மாவட்டக்கல்வி அலுவலர் பள்ளிப்பார்வை மற்றும் ஆய்வின்போது கண்காணிக்க வேண்டும் எனவும், தலைமை ஆசிரியர்கள் கூட்டத்திலும், மாணாக்கர்களின் பாதுகாப்பு குறித்து தக்க அறிவுரைகள் வழங்கிட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


ஓம்/-XXXXXXXX முதன்மைக்கல்வி அலுவலர்,

வேலூர்.


பெறுநர்


1.அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்


2.அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள், வேலூர் மாவட்டம்


நகல்


மாவட்டக்கல்வி அலுவலர், வேலூர்.

தமிழ்நாட்டிற்கு நவம்பர்.10 ஆம் தேதி ரெட் அலர்ட் தமிழ்நாட்டின் வடகடலோர மாவட்டங்களில் நவ.10,11 ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு தமிழ்நாட்டிற்கு 10 ஆம் தேதி மட்டும் சிகப்பு நிற எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்... காணொளி

Sunday 7 November 2021

21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை... காணொளி

வேலூர், இராணிப்பேட்டை உட்பட 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்... காணொளி

19 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை... காணொளி

"வெளியூரில் இருந்து சென்னையை நோக்கி வருபவர்கள் 2 நாட்கள் கழித்து பயணம் மேற்கொள்ளவும்" - மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்... காணொளி

சென்னையில் நேரடியான கள ஆய்வில் - மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு... காணொளி

கனமழையால் பாதிக்கப்பட்ட மக்கள் - களத்தில் நேரடியாக மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் - வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள்... காணொளி

சென்னையில் 6 ஆண்டுகளில் இல்லாத மழை... காணொளி

'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' - இல்லம் தேடி கல்வி... மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்/மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி... காணொளி

சென்னையில் கொட்டித்தீர்த்த கனமழை -ஆய்வு நடத்திய முதலமைச்சர்! அவரே களத்தில் இறங்கிவிட்டார்... காணொளி

இல்லம் தேடிக் கல்வி - மாவட்ட அளவில் மற்றும் ஒன்றிய அளவில் செயல்பட உள்ள ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்தல் குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!!!*


CLICK HERE TO DOWNLOAD PDF


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை – 600 006 மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 449/C7/ S8/2021, நாள்3.10.2021


*ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - "இல்லம் தேடிக் கல்வி" மாவட்ட அளவில் மற்றும் ஒன்றிய அளவில் செயல்படவுள்ள ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் மற்றும் ஒய்வு பெற்ற ஆசிரியர்கள் - தேர்தெடுத்தல் மற்றும் வழிகாட்டுதல்கள் – சார்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களின் நிதி நிலை அறிக்கை (2021-2022) அறிவிப்பு*


பார்வையில் காணும் மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பில், கொரோனா பெருந்தோற்றுப் பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்புகள் வரை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை ஈடுசெய்வதற்காசுத் தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி 1 முதல் ஒன்றரை மணிநேரம் (மாலை 5 மணி முதல் 7 மணிக்குள்) குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் "இல்லம் தேடிக் கல்வி" எனும் திட்டத்தை அறிவித்துள்ளார்.


இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் அனைத்து செயல்பாடுகளுக்காக மாவட்டங்களில் திறமை, அர்பணிப்பு, ஆர்வம், சமூக அமைப்புகளுடன் தொடர்பு மற்றும் அனுபவம், பள்ளி மேலாண்மைக் குழுவுடன் இணைந்து செயல்படுதல் ஆகிய பண்புகளைப் பெற்ற ஆசிரியர்களில் கல்வி மாவட்ட அளவில் ஒரு ஆசிரியரும், ஒன்றிய அளவில் 2 ஆசிரியர்களும் இத்திட்டத்தின் செயல்பாடுகளுக்காக முழுநேரமாக செயல்பட மாவட்ட அளவிலான குழுவின் ஒப்புதலோடு தேர்ந்தெடுக்க அறிவுறுத்தப்படுகிறது.


இப்பணியில் பிரத்யேகமாக ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளியில் கற்றல் கற்பித்தல் பாதிக்காத வண்ணம் மாற்று ஏற்பாடு செய்யப்படுதல் வேண்டும். விரைவாக மாற்று ஏற்பாடு செய்து ஆசிரியர்களை மாற்றுப்பணியில் அமர்த்திய பின்பு இத்திட்ட செயல்பாடுகளில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும். பள்ளிகளில் மாற்றுப்பணியில் அமர்த்திய ஆசிரியர்களின் விவரங்களை மாநிலத் திட்ட இயக்ககத்தின் sstnsmc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப அறிவுறுத்தப்படுகிறது.


இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் அனைத்து செயல்பாடுகளுக்காக திறமை, அர்பணிப்பு, ஆர்வம், அனுபவம், சமூக அமைப்புகளுடன் தொடர்பு, பள்ளி மேலாண்மைக் குழுவுடன் இணைந்து செயல்படுதல் மற்றும் சமூக நலனில் விருப்பமும் ஆர்வமும் உள்ள ஓய்வு பெற்ற

தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை குடியிருப்புகளுக்கு ஏற்றவாது தேவையான கருத்தாளர்களாக செயல்பட, மாவட்ட அளவிலான குழுவின் ஒப்புதலோடு தேர்ந்தெடுக்க

அறிவுறுத்தப்படுகிறது.


"இல்லம் தேடிக் கல்வி" திட்டத்திற்காக மாவட்ட அளவில் முழுநேரமாக ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் மற்றும் ஒய்வு பெற்ற ஆசிரியர்கள் கீழ்கண்ட வழிகாட்டுதல்களின்படி

செயல்படவுள்ள ஆசிரியர்கள், கருத்தாளர்களாக செயல்படவுள்ள

செயல்பட அறிவுத்தப்படுகிறது.


இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில், அனைத்து விதமான

திட்டமிடும் பணிகளில் பங்கெடுக்க வேண்டும். இல்லம் தேடிக் கல்வி மாவட்ட கலைப்பயணக் குழுவுடன் பயணித்து, கலை நிகழ்ச்சியின் போது இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களைப் பதிவிடும் செயல்பாடுகளில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். * மாவட்ட அளவில் நடைபெறும் கலைக்குழு நிகழ்ச்சிகளுக்கு திட்டமிட்டு, வழித்தட (Route

Chart) மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து செயல்படுதல் வேண்டும். * பள்ளிகளில் கலை நிகழ்ச்சி நடைபெறும் போது, தலைமை ஆசிரியர்கள் / பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் ஆகியோரிடம் உரையாடி இல்லம் தேடிக் கல்வி மையங்கள் கிராமங்களில்/குடியிருப்புகளில் சீரிய முறையில் செயல்பட இணைந்து

செயல்படுதல் வேண்டும்.


பதிவு செய்த தன்னார்வலர்களிடம், அவர்கள் ஏற்றுள்ள பணி எந்த அளவிற்கு சமூக முக்கியத்துவம் நிறைந்தது என்பதை உணர்த்தும் வகையில் செயல்பட வேண்டும். ஒவ்வொரு நாளும் இல்லம் தேடிக் கல்விச் சார்ந்த நிகழ்வுகள் பற்றிய விவரங்களை குறிப்பெடுத்தல், அதனை ஆவணப்படுத்துதல் ஆகிய செயல்பாடுகளுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.


மாவட்ட அளவில் ஒன்றிய ஒருங்கிணைப்புக் குழுவினர் மற்றும் ஒன்றிய கருத்தாளர்கள்

ஆகியோருக்கான பயிற்சியின் போது பங்கேற்க வேண்டும்.


ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் உதவியுடன், ஒன்றிய அளவில் தன்னார்வலர்களுக்கான

பயிற்சி அளிக்கப்படும் போது உடனிருந்து செயல்படுதல் வேண்டும்.


இல்லம் தேடிக் கல்வி மையங்கள் முறையாக அமைப்பதற்கும், இத்திட்டத்திற்கான பயிற்சிகளை அளிப்பதற்கும் அந்தந்த சார்ந்த பள்ளியின் தலைமையாசிரியர் / பள்ளி

மேலாண்மைக் குழு மூலம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்களுக்கு வழிக்காட்டுதலை

மேற்கொள்ள வேண்டும்.


* இல்லம் தேடிக் கல்வி மையங்கள் செயல்படத் தொடங்கிய பின், அன்றாடம் சுழற்சி முறையில் மையங்களுக்கு சென்று பார்வையிட்டு, கற்கும் குழந்தைகளையும் தன்னார்வலர்களையும் மையங்களில் நடைபெறும் செயல்பாடுகள் குறிப்பிட்டு பாராட்டி உற்சாகப்படுத்த வேண்டும். மேலும் அச்செயல்பாடுகளை மேம்படுத்த தன்னார்வலர்களுக்கு வேண்டிய ஆலோசனைகள் வழங்குதல் வேண்டும். மேலும், மாவட்டங்களில் நிகழும் அனைத்து நிகழ்வுகள் அடங்கிய புகைப்படங்கள்

மற்றும் காணொளிகளை மாவட்ட தகவல் மற்றும் ஆவணக்காப்பு (MDO)

ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்புதலில் ஒருங்கிணைக்க வேண்டும். * மாவட்ட அளவில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் கிராமங்கள்/குடியிருப்புகளில் - ஒன்றியங்கள் - மாவட்டம் ஆகியவற்றை வலுவாக இணைக்கும் மக்கள் பாலமாக செயல்படுதல் வேண்டும்.


மாவட்ட மற்றும் ஒன்றிய அளவில் இத்திட்டத்தில் செயல்படவிருக்கும் ஒய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாவட்டத்தில் நடைபெறும் திட்டம் சார்ந்த சிறப்பு நிகழ்வுகளையும் திட்டத்தினை மேலும் மேம்படுத்த ஆலோசனைகளையும் மாவட்ட திட்ட அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். மேற்காண் வழிமுறைகளை மாவட்டங்களில் தவறாது பின்பற்றுமாறு சார்ந்த மாவட்ட


முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.


*மாநில திட்ட இயக்குநருக்காக*


பெறுநர்


சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள். நகல்


1) ஆணையர், பள்ளிக்கல்வி ஆணையரகம் தகவலுக்காக அனுப்பப்படுகிறது. 2) இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைகாகவும் அனுப்பப்படுகிறது.


Friday 5 November 2021

புவியை அச்சுறுத்திக்கொண்டிருக்கிற பருவநிலை மாற்றத்தை எதிர்க்கும் போரில் துணையாக இருக்க கூடியவை காடுகளே. அவையே பெரிய அளவில் கார்பனை உறிஞ்சி சுற்றுச்சூழலை காக்க உதவி செய்ய முடியும். ஆனால், காடுகள் கார்பனை உறிஞ்சுவதற்குப் பதிலாக கார்பனை உமிழ்பவையாக மாறியுள்ளன. காணொளி


 

“இந்த ஜென்மத்தில் நடக்குமா?" - கேரள ஊடகங்கள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு! காணொளி


 

பணிபுரியும் இடத்தில் நாம் சந்தோஷமாக இருக்க இந்த விதிகளைப் பின்பற்றச் சொல்லுகிறது (WHO)

 


*🌎பணிபுரியும் இடத்தில் நாம் சந்தோஷமாக இருக்க இந்த பின்பற்றச் சொல்லுகிறது (WHO)*


1.யாரையும் நம்பாதீர்கள் ஆனால் எல்லோரையும் மதியுங்கள் . 2.பணியிடத்தில் நடப்பதை அங்கேயே விட்டுவிடுங்கள். பணியிடம் கிசுகிசுக்களை வீட்டிற்கோ அல்லது வீட்டின் விசயங்களை பணியிடத்திற்கோ

சுமந்து வர வேண்டாம். 3. சரியான நேரத்திற்கு பணிக்கு வந்து அதே போல சரியான நேரத்திற்கு பணியிலிருந்து செல்லுங்கள். 4. நமது பணிக்கு தொடர்பில்லாத தேவையற்ற பேச்சுக்களை தவிருங்கள்.

அதனால் மோசமான ட பின்விளைவுகளையே சந்திக்க நேரிடும்.


5.எதையுமே ச எதிர்பார்க்காதீர்கள். யாரும் உதவினால் நன்றியோடு இருங்கள். ( உதவாத பட்சத்தில்  அக்காரியத்தை நீங்களே செய்து கொள்ளக் கற்பீர்கள், 


6.பணியை மிகச் சிறப்பாக செய்யுங்கள் க அதற்கு அங்கீகாரம் கிடைத்தால் வாழ்த்துக்கள். -

கிடைக்காவிட்டால் பரவாயில்லை. 

உங்கள் அறிவாற்றலுக்கும் – அடுத்தவர்களை நீங்கள்  மதிக்கும் பாங்கிற்காகவுமே உங்களை அனைவரும்  நினைவில் வைத்திருப்பார்கள்.


7 பணியிடத்தை கட்டிக்கொண்டு அழாதீர்கள். வாழ்க்கையில் செய்வதற்கு அதை விடவும் சிறந்த காரியங்கள் ஏராளம் உண்டு.


8.நான் எனும் அகங்காரத்தை அறவே ஒழியுங்கள். ஈகோ வேண்டவே வேண்டாம். சம்பளத்திற்காக அல்ல.

மனசாட்சிக்கு பயந்து வேலை செய்யுங்கள். நம்முடைய நற்குணங்களே நம் சொத்துக்கள். அவையே நம் சந்தோஷத்தின் ஊற்றுக்கண்.


9. அடுத்தவர் உங்களை எப்படி நடத்தினாலும் பணிவோடு இருங்கள். எல்லோரையும் எப்போதும் திருப்திப் படுத்திவிட முடியாது.


10. இறுதியில் நம் குடும்பம்,

நண்பர்கள், வீடு, ஆழ் 

அமைதியை எதுவும்

பெரிதில்லை.

கொரோனா சிகிச்சைக்கான மாத்திரைக்கு பிரிட்டன் அனுமதி... காணொளி

Thursday 4 November 2021

நெபுலாவுக்கு நடுவே மர்மமான குமிழ் கண்டுபிடிப்பு..! 1,70,000 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் குமிழ்! - நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு காணொளி

நரிக்குறவர் - இருளர் இன மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் நலத்திட்ட உதவிகள் வழங்கியதைத் தொடர்ந்து, குடியிருப்புகளில் ஆய்வு நரிக்குறவர் இனப் பெண் அஸ்வினியின் வீட்டுக்குச் சென்ற முதலமைச்சர் பழங்குடியின மக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்ற முதலமைச்சர்... காணொளி

3 கற்போர் மையங்களுக்கு மாநில எழுத்தறிவு விருதுகளை மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்... காணொளி

கோவாக்சின் தடுப்பூசிக்கு -உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது... காணொளி