Saturday 28 January 2023

வேலூர் மண்டலத்தில் பிப்ரவரி 1, 2ல் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் திருவண்ணாமலை மாவட்டங்களில் அரசு திட்டங்களை கள ஆய்வு செய்கிறார்.




 



*செய்தி வெளியீடு எண்: 189*

*நாள்: 28.01.2023*

*செய்தி வெளியீடு*


*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்து, முதற்கட்டமாக பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய நாட்களில் வேலூர் மண்டலத்தில் சுற்றுப் பயணம்*


*"மக்களுக்காகத்தான் அரசு! மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான் நல்லரசு! அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகளை நாடி வரும் மக்கள் மனநிறைவுடன் திரும்பிச் செல்லும் வகையில் பணியாற்ற வேண்டியது அரசின் அங்கமாக இருக்கும் ஒவ்வொருவரின் கடமை. அதை உறுதிப்படுத்த நான் மேற்கொள்ளும் ஆய்வுகள் தொடரும்" என ஏற்கெனவே தெரிவித்திருந்தார்கள் மேலும், ஆய்வுகளின் முக்கியத்துவத்தை  பல்வேறு அரசுத் துறை சார்ந்த ஆய்வுக் கூட்டங்களிலும் வலியுறுத்தி வந்துள்ளார்கள்.*


*அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், "கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற புதிய திட்டத்தினை அறிமுகப்படுத்தி அதன்படி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முக்கிய அமைச்சர்கள், அரசுத் துறை செயலாளர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் ஆகியோருடன் மாவட்டங்களுக்குச் சென்று நிர்வாகப் பணிகளையும் வளர்ச்சி மற்றும் நலத்திட்டப் பணிகளையும், வரும் பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய இரண்டு நாட்களில் வேலூர். இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்கள்*


*இந்த ஆய்வின் போது குடிநீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வருவாய்த் துறை வழங்கக்கூடிய சேவைகள் ஊரக மேம்பாடு, நகர்ப்புற வளர்ச்சி சாலை மேம்பாடு வாழ்வாதாரத்தை உயர்த்துதல், இளைஞர் திறன் மேம்பாடு பொதுக் கட்டமைப்பு வசதிகள் கல்வி மருத்துவம் குழந்தைகள் ஊட்டச்சத்து போன்ற முக்கிய துறைசார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் பயன்கள் பொதுமக்களுக்கு முழுமையாகச் சென்றடைவது குறித்தும் ஆய்வு செய்யவுள்ளார்கள்.*


*ஆய்வின் முதல் நாளான பிப்ரவரி 1ஆம் தேதியன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். அப்பகுதிகளில் உள்ள விவசாய சங்க பிரதிநிதிகள், சுய உதவிக் குழுக்கள் மற்றும் தொழில் அமைப்புகளின் கருத்துக்களையும், கோரிக்கைகளையும் கேட்டறிகிறார்கள். அன்று மாலை, நான்கு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்கள், காவல்துறை சரக துணைத்தலைவர், காவல்துறைத் தலைவர் (வடக்கு) ஆகியோருடன் மேற்படி மாவட்டங்களின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆய்வு மேற்கொள்வார்கள்.*


*அன்றைய தினமே, இந்த ஆய்வின் மற்றொரு பகுதியாக மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள். வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்களைச் செயல்படுத்தும் முக்கியத் துறைகளைச் சார்ந்த அரசுச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் ஆகியோர் மேற்கண்ட நான்கு மாவட்டங்களிலும் மேற்கொள்வார்கள். கள ஆய்வு ஆய்வில் கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில், திட்டச் செயல்பாடுகள் குறித்து பிப்ரவரி 2ஆம் நாள் நடைபெறும் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பங்குபெறும் ஆய்வுக் கூட்டத்தின் போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் முன்னிலையில் இப்பொருண்மைகள் குறிந்து விவாதிக்கப்படும். இந்த ஆய்வுக்கூட்டத்தில் தலைமைச் செயலாளர், முக்கிய துறைகளின் செயலாளர்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறைத் தலைவர்கள் முன்னிலையில் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உள்ளிட்ட மாவட்ட உயர் அலுவலர்களுடன், மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விரிவான ஆய்வினை மேற்கொள்வார்கள்*


*வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9*



Thursday 19 January 2023

நான் முதல்வன் திட்டம் - குறும்படம் மற்றும் புகைப்பட போட்டி அறிமுகம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!!!


 

*செய்தி வெளியீடு எண்: 125*
*நாள் : 19,01.2023*

*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவங்கப்பட்ட திறன் மேம்பாட்டிற்கான முன்னெடுப்பே "நான் முதல்வன்" திட்டம், இத்திட்டம் நம் மாநிலத்தில் ஆண்டுக்கு 12 லட்சம் இளைஞர்களுக்கு முன்னேற்றத்திற்கான மாற்றத்தினை தரும் திறன்களை வழங்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றது.*

*திரைப்படம் மற்றும் புகைப்படம் எடுப்பதில் திறமை உள்ளவர்களுக்கு அவர்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக, அவரகளது திறமையை வெளிப்படுத்த "நான் முதல்வன்" திட்டத்தின் மூலமாக குறும்படத் திருவிழா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.*

*இந்த மாநில அளவிலான போட்டியில் 14 வயது முதல் 40 வயதுக்குள்*
*உள்ள அனைவரும் பங்குபெறலாம்.*

*1) குறும்படத்திற்கான தலைப்புகள்: 1. பள்ளிக் கல்வியில் சிறுவயதிலேயே திறன்மேம்பாடு கல்வி பயிற்சியின் முக்கியத்துவம். 2. பாரம்பரிய திறன்களை டிஜிட்டல் மயமாக்குவது எப்படி இன்றைய சமுதாயத்திற்கு உதவும்? 3. தேசிய இலக்குகளை அடைய இளைஞர்களின் சக்தியை தட்டி எழுப்பும் நோக்கில் பயன்படுத்துவதற்கு வேலைவாய்ப்பு திறன்களை வழங்குதல், 4. திறன் மேம்பாட்டு கல்வி வேலைகளின் எதிர்காலத்தை எவ்வாறு வடிவமைக்கிறது?* *5. டிஜிட்டல் சகாப்தத்தில் திறன்கள். 6. நடைமுறை திறன்பயிற்சிகளின் முக்கியத்துவம் (தொழில்கல்வி).*

*இந்த ஆறு தலைப்புகளின் கீழ் உள்ள குறும்படங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தலைப்பு மற்றும் வரவுகளை உள்ளடக்கிய 6 நிமிடங்களுக்கு மிகாமல் குறும்படங்கள் இருக்க வேண்டும். தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் உள்ள குறும்படங்களே ஏற்றுக்கொள்ளப்படும். அது புனைகதை, ஆவணப்படம், அனிமேஷன் போன்ற எந்தவகையிலும் இருக்கலாம்.*

*முதல் பரிசாக ரூபாய் 50,000, இரண்டாம் பரிசாக ரூபாய் 25,000, மூன்றாம் பரிசாக ரூபாய் 10,000 தேர்ந்தேடுக்கப்பட்ட குறும்படத்திற்கு மட்டும் வழங்கப்படும்.*

*2) புகைப்படப் போட்டிக்கான தலைப்பு: "தமிழகத்தில் அழிந்துவரும் பாரம்பரிய*
*திறன்கள்",*

*உங்கள் வீடியோ மற்றும் புகைப்படங்களை சமர்பிப்பதற்கான கடைசி நாள்:*

*01.02.2023. பங்கேற்பாளர்கள் சமூக ஊடகங்களில் இடுகையிடுவதன் மூலம்*
*பங்கேற்கலாம் மற்றும் socininodia@naanmudhavan.in என்ற மின்னஞ்சலில்*

*சமர்ப்பிக்கலாம். இதில் வெற்றிப்பெறும் குறும்படதாரர்களுக்கு "நான்முதல்வன்"*
*திட்டம் அல்லது புகழ்பெற்ற திரைப்படம் & தொலைக்காட்சி தயாரிப்பு*
*நிறுவனங்களுடன் 3 மாத இன்டெர்ன்ஷிப் மற்றும் வேலைவாய்ப்புகளும்*
*வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு www.naanmudhalvan.tn.gov.in இணையதள*
*முகவரியை பார்க்கவும்.*

*வெளியீடு: இயக்குநர். செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9*

வேலூர் மாவட்டம் கீ.வ.குப்பம் ஒன்றியம் இன்று 19-01-2023 முற்பகல் 10 மணியளவில் வருமான வரி பிடித்தம், வருமான வரி தாக்கல் மற்றும் வருமான வரி பற்றி சந்தேகங்கள் சம்பந்தமாக தலைமை ஆசிரியர்கள் கூட்டம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது














Wednesday 18 January 2023

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கீ.வ.குப்பம் ஒன்றியம்.வேலூர் மாவட்டம். இன்று 18-1-2023 வட்டாரத்தலைவர், செயலாளர், பொருளாளர், மற்றும் பொறுப்பாளர்கள், வட்டாரக்கல்வி அலுவலர் அவர்களை இந்த ஆண்டின் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து கூறினார்கள்.










 அது சமயம்

பணிப்பதிவேடு, NHIS CARD, தேர்வு நிலை, சிறப்பு நிலை,SSA ஆசிரியர்களுக்கு பண்டிகை முன்பணம் பற்றியும் உயர்கல்வி பயில அனுமதி வழங்கும் பற்றியும் வட்டாரக் கல்வி அலுவலரிடம் பேசி தீர்வு கண்டார்கள்