Sunday 31 October 2021

1- 8 வகுப்புகளுக்கு இன்று 01-11-2021 திங்கட்கிழமை முதல் தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறப்பு - பல்வேறு தொலைக்காட்சிகளின் காணொளி காணத்தவறாதீர்கள் !



















ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு உற்சாகமாக பள்ளி செல்லும் மாணவர்கள்... ஆசிரியர்கள் இனிப்பு கொடுத்து வரவேற்பு! காணொளி

குழந்தைகள் சந்திக்க இருக்கும் சவால்கள் குழந்தைகளை கையாளுவது எப்படி? 20 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பள்ளி திறப்பு "உளவியல் ரீதியாக குழந்தைகளை அணுகுங்கள்" பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவனத்திற்கு...

Wednesday 27 October 2021

பள்ளிகளுக்கு மானியம் -வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு... காணொளி

இல்லம் தேடி கல்வித்திட்டம் பாடல்... காணொளி

"இல்லம் தேடிக் கல்வித்திட்டம்"உருவாவதற்கு விதை போட்ட முதலமைச்சர் -மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு... காணொளி

இல்லம் தேடி கல்வித்திட்டத்தின் சிறப்பு இதுதான். பாரதியார் சொன்னதை மீண்டும் உறுதி செய்வோம் - நடிகர் சூர்யா... காணொளி

இல்லம் தேடிக்கல்வி திட்டம் - விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடிகர் சூர்யா பேச்சு... காணொளி

அரசு பள்ளியில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு - என்ன வகுப்பு நடக்குது surprise visit காணொளி

Monday 25 October 2021

வருகிற 1ம் தேதி பள்ளிகள் திறப்பு கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் -வேலூர் மாவட்ட சிஇஓ உத்தரவு.


 

*வருகிற 1ம் தேதி பள்ளிகள் திறப்பு*

*கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் வேலூர் மாவட்ட சிஇஓ உத்தரவு.*

*கே.வி.குப்பம். அக்.26:* 

*கே.வி.குப்பம் அடுத்த சென்னங்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி திறப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. வட்டார கல்வி அலுவலர் கள் கண்ணன், கமலநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர் மாவட்ட கல்வி அலுவலர் சம்பத், பயிற்சி மாவட்ட கல்வி அலுவலர் மணிவாசகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.*


*சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி(சிஇஓ) முனிசாமி பங்கேற்று கூறி யதாவது: கே.வி.குப்பம் வட்டாரத்தில் அரசு நிதி யுதவி பள்ளிகள் 7. நர்சரி 14. தொடக்க பள்ளிகள் 65, நடுநிலைப்பள்ளிகள் 12, ஆதிதிராவிடர் தொடக்க பள்ளிகள் 11, ஆதிதிராவி டர் நடுநிலைப்பள்ளிகள் என மொத்தம் 10 பள்ளிகள் உள்ளது. ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை யிலான பள்ளி மாணவர் களுக்கு வருகிற 1ம் தேதி பள்ளி திறக்கப்பட உள்ளது. ஆகையால் பள்ளி வளாகத்தை தூய்மை படுத்தவேண்டும் வகுப்பறையை சுத்தம் செய்ய வேண்டும். இல்லம் தேடி கல்வி திட்டத்தில் ஆயத்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். கொரோனா விதிமுறைகளை ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண் டும். இவ்வாறு அவர் கூறினார்.*

கீ.வ.குப்பம் ஒன்றியம் வேலூர் மாவட்டம். இன்று 25-10-2021 அனைத்து வகை தலைமையாசிரியர் கூட்டம் வித்யாலக்ஷ்மி மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்றது. வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்,வட்டார கல்வி அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

 





















கீ.வ.குப்பம் ஒன்றியம் வேலூர் மாவட்டம்.

இன்று 25-10-2021 அனைத்து வகை தலைமையாசிரியர் கூட்டம் வித்யாலக்ஷ்மி மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் நடைபெற்றது.

வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்,வட்டார கல்வி அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அரசு நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி  01-11-2021 அன்று முதல் 1 - 8 வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது என்றும் இதற்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும், இல்லம் தேடி கல்வி நடைமுறைகள் பற்றியும் கூறப்பட்டது  அப்போது எடுக்கப்பட்ட படங்கள்


Sunday 24 October 2021

வாட்ஸ்அப் குழு மூலம் புது வீடு - ஒன்று திரண்டு வீடு கட்டி கொடுத்த மக்கள்..‌. காணொளி

நவம்பர் 1-ம் தேதி பள்ளிகள் திறப்பு - "அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்" - பள்ளிக்கல்வித் துறை ஆணையர்... காணொளி

மாணவர்களை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தவில்லை -மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி... காணொளி

"நவ.1 முதல் பள்ளிகள் திறந்து வைக்கப்பட்டிருக்கும்" - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி... காணொளி

அரசு பள்ளிகளில் 2.5 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர் -மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி... காணொளி

Monday 18 October 2021

தொடக்கக்கல்வி - வேலூர் மாவட்டம் - 1 முதல் 8-ம் வகுப்பு 01.11.2021 முதல் பள்ளிகள் தொடங்குதல் - பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக.





வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்.4229/ஆ2/2021, நாள் 08.10.2021


பொருள்:

தொடக்கக்கல்வி - வேலூர் மாவட்டம் - 1 முதல் 8-ம் வகுப்பு 01.11.2021 முதல் பள்ளிகள் தொடங்குதல் - பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் அறிவுரைகள் வழங்குதல்

தொடர்பாக.


வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை

முதன்மைச்செயலர் அவர்களின் கடித

எண்.28024/டிஎம்.4(2)/2021-1, நாள் 26.08.2021 2.அரசாணை (நிலை) எண்.631, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் (டி.எம்.IV)துறை நாள் 05.10.2021


3.சென்னை-6, தொடக்கக்கல்வி இயக்குநர்


அவர்களின் நே.மு.க.எண்.007351/ஜெ2/2021, நாள் 08.10.2021


01.09.2021 முதல் 09-12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்ட போது பள்ளிகளில் பின்பற்ற வேண்டிய நிலையான வழிகாட்டு செயல்முறைகள் (SOP) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலர் அவர்களின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்ட வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்பட்டது.


பார்வை 2-ல் காணும் அரசாணையின்படி ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவ மாணவியருக்கான நேரடி வகுப்புகள் கொரானா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பறி 01.11.2021 முதல் நடத்த அனுமதிக்கப்படும் எனவும் அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

எனவே, தொடக்கக்கல்வி இயக்க நிர்வாகத்தின் கீழ் செயல்படும்

அனைத்துவகை பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகளை பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி செயல்படுமாறு பார்வை (3)ல் கண்டுள்ள தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பள்ளித்தூய்மை

புதர்கள் மற்றும் குப்பைகள் இன்றி காண்பதற்கு அழகாகவும் தூய்மையாகவும் இருக்கும் வகையில் பள்ளிவளாகம் இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும்.


பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகள் தலைமை ஆசிரியர்,  சமையலறை மற்றும் கழிப்பறைகள் நன்கு தூய்மைப்படுச்சப்பட்டு இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும்.


 வகுப்பறை மற்றும் தலைமை ஆசிரியர் அறையில் உள்ள தளவாட பொருட்கள், கதவு மற்றும் ஜன்னல்கள் நன்கு தூய்மைப்படுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும். பள்ளியின் அனைத்து இடங்களும் கிருமி நாசினி மூலம் சுத்தம்

செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும். பள்ளிக் கட்டிடத்தின் மேற்பரப்பில் குப்பைகள் இல்லாதவாறும், மழை நீர் வடிந்து ஓடுவதற்கான பாதை சரியாக உள்ளதா என்பதையும், மழை நீர கட்டமைப்பு முறையாக இருப்பதையும் உறுதி செய்திடல் வேண்டும். 

மாணவர் பயன்பாட்டிற்கான குடிநீர் தொட்டியின் உட்புறம் கிருமி நாசினி கொண்டு நன்கு சுத்தம் செய்யப்பட்டு தூய்மையாகவும் பாதுகாப்பான குடிநீர்' மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில் உள்ளதை உறுதி செய்திடல் வேண்டும்.


சமையலறை நன்கு சுத்தம் செய்யப்பட்டும் சமையல் பாத்திரங்கள்

முறையாக கழுவப்பட்டு பயன்படுத்துவதை உறுதி செய்திடல் வேண்டும்.


*பாதுகாப்பு முன்னேற்பாடுகள்*


ஒவ்வொரு பள்ளியிலும் தேவைக்கு ஏற்ப போதுமான அளவில் முகக் கவசம் இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும்.


ஒவ்வொரு பள்ளியிலும் போதுமான அளவில் Hand Santizer கொண்டு கைகளை சுத்தம் செய்வதற்கு ஏற்றவாறு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும்.


ஒவ்வொரு பள்ளியின் நுழைவாயியிலும் மாணவர்களுக்கு 

பரிசோதனை (தெர்மல் ஸ்கேனர் மூலம்) எடுக்க தேவையான வசதிகள்

செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும். ஒரு வகுப்பறையில் போதிய சமூக இடைவெளியுடன் பாணவர்கள் அமரும் வகையில் இடவசதி செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்திடல் வேண்டும்.


ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் எண்ணிக்கை மற்றும் வகுப்பறைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இடவாதி செய்யப்படுவதை உறுதி செய்திடல் உேண்டும்.


மாணவர் எண்ணிக்கை அதிகளவில் இருந்து வகுப்பறைகள் குறைவாக இருக்கும். நேர்வில் சுழற்சி முறையில் கற்றல் செயல்பாடுகள் நடைபெறுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுருப்பதை உறுதி செய்திடல் வேண்டும்.


*மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து போதுமான அளவில் அமர்ந்து படிப்பதற்கு ஏற்றவாறு வறப்பறையின் தளத்தில் குறியீடுகள் போடப்பட்டிருப்பதை உறுதி செய்திடல் வேண்டும்.*


பாடவேலையின் இடைவேளை மற்றும் மதிய உணவு இடைவேளையின் போது ஆசிரியர்கள் முழு கவனத்துடன் மாவைர்களை கண்காணித்து வழிநடத்திட தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.


மாணவர் மற்றும் ஆசிரியர்களின் பயன்பாட்டில் உள்ள கழிவறைகளின் உள்ளேயும் வெளியேயும் கைகளை சுத்தம் செய்வதற்கு ஏற்ற வகையில் போதுமான் அளவில் சோப்பு அல்லது சோப்புக் கலவை திரவம் வைக்கப்பட்டு பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும். பள்ளியில் உள்ள அனைத்து மின் சாதன மற்றும் மின் நன்முறையில் செயல்படுகின்றதா என்பதை  தலைமையாசிரியர் மற்றும் 

ஆசிரியர்கள் மூலம் உறுமி செய்திடல் வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு காலையில் வருகை புரியும் போதும், பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்பும் போதும். சமூக இடைவெளியை கடையிடிப்பதையும் முகக் கவசம் அணிவதையும் உறுதி செய்திடல் வேண்டும்.


நடமாடும் மருத்துவக் குழு. ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் செவிலியர் ஆகியோரின் தொலைபேசி எண்கள் பள்ளியின் அறிவிட்புப் பலகையிலும் தலைமை ஆசிரியர் அறையிலும் எழுதப்பட்டு இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும். அளைத்து ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதப் பணியாளர்கள்

கொரோளா தடுப்பூசி செலுத்திக் கொண்டதை உறுதி செய்திட வேண்டும்.


மழைக் காவங்களில் பள்ளி வளாகத்தினுள் மழை நீர் தேங்காமல்

இருப்பதையும் பள்ளங்கள் இல்லாமல் இருப்பதையும் உறுதி செய்திட

வேண்டும்.


கொசுக்கள் உற்பத்தி ஆகாக வன்னணம் பள்ளிகளில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், பள்ளி வளாகத்தின் தேவையான பகுதிகளில் கொசு மருந்து தெளித்து பள்ளி வளாகம் சுகாதாரமான சூழலில் செயல்படுவதை உறுதி செய்திடல் வேண்டும்,


பள்ளி வளாகத்தில் பழுதடைந்த கட்டிடங்கள் ஏதேனும் இருப்பின்


மாணவர்கள் அங்கு செல்லாத வகையில் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை உறுதி செய்திடல் வேண்டும். மழைக் காலங்களில் நீர் கசிவினால் மின் கசிவு  ஏற்படாதவாறு வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதை உறுதி செய்திடல் வேண்டும்.


பள்ளி வளாகத்தில் மரங்கள் ஏதேனும் இருந்து அதனுடைய வேர்கள் வெளியில் தெரியும் வகையில் இருந்தால் அதனை மண் கொண்டு மூடுதல் வேண்டும். குழந்தைகள் விளையாடும் போது தடுக்கி விழாதவண்ணம் ஏற்பாடுகள் செய்தல் அவசியமாகும்,


கவ்விசார் செயல்பாடுகள்


நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மாணவர்கள் நேரடி வகுப்பிற்கு பங்கு பெற  வருகை புரிவதால் அவர்களை உளவியல் ரீதியாக தயார்படுத்தி எளிதில் அனுகுவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மேற்கொள்வதை உறுதி செய்திடல் வேண்டும்.


நேர் சிந்தனைகள் மற்றும் வாழ்வியல் அனுபவங்கனை பகிர்ந்து கொள்ள வய்ப்புகள் வழங்கப்பட்டு பள்ளிச் சூழல் இனிமையானதாகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் மாற்றப்படுவதை உறுதி செய்திடல் வேண்டும். அரசால் வழங்கப்படும் புத்தாக்கப் பயிற்சி கட்டகத்தின் (refresher-Course)

Module) துணை கொண்டு குறிப்பிட்ட காலம் வரையில் மாணவர்களை

ஆசிரியர்கள் ஆயத்தம் செய்வதை உறுதி செய்திடல் வேண்டும்.


வாய்மொழி பயிற்சி, எழுத்துப் பயிற்சி, கதைகள் கூறுதல் மற்றும் ஓவியம்

வரைதல் போன்ற செயல்பாடுகள் ஊக்குவிக்கப்படுவதை உறுதி செய்திடல்

வேண்டும். கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பு நிகழ்ச்சிகளை மாணவர்கள் காண்பதற்கு. உரிய ஆலோசனைகள் ஆசிரியர்களால் வழங்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்படுவதை உறுதி செய்திடல் வேண்டும்,


பள்ளிமேலாண்மைக் குழு கூட்டத்தினை தலைமை ஆசிரியர்கள்: நடத்திடவும் அக்கூட்டத்தில் பாதுகாப்பான கற்றல் செயப்பாடுகளை மாணவர்களுக்கு வழங்குவது என்பது குறித்து விவாதித்து தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்திடல் வேண்டும்.


பள்ளித் திறப்பு மற்றும் கற்றல் நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் பங்கு 


ஆசிரியர்கள்


ஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அனைத்து வகையிலும் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பிற்கு முழு பொறுப்பு வாய்ந்தவர்கள் ஆவர்.


மாணவர்களிடத்தில் தன் சுத்தம் மற்றும் கொரோனா நோய் தடுப்பு  பாதுகாப்பு அணுகுமுறைகள் குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் தேவையான விழிப்புணர்வினை வழங்கிட வேண்டும்.


ஒவ்வொரு ஆசிரியருக்கும் கொரோளா நோய் தடுப்பு மற்றும் பாதுகாப்பான கற்றல் குழலுக்கு உரிய வேலை ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.


இணைப்பு பாடப்பயிற்சி கட்டகம் (Bridge Course materal குறைக்கப்பட்ட

பாடங்கள் மற்றும் அடிப்படை பாடங்களுக்கு மாணவர்களை தயார் செய்தல்

வேண்டும்.


பள்ளிகளில் உள்ள கற்றல் - கற்பித்தல் உபகரணங்களை மாணவர்கள்

படன்படுத்தி கற்றிட, திட்டமிட்டு வாய்ப்பு வழங்குதலை உறுதி செய்திடல்

வேண்டும். கற்றல் - கற்பித்தல் பணியானது மகிழ்ச்சி நிறைந்ததாகவும் மாணாக்கர்கள் விரும்பத்தக்கதாகவும் செய்திடல் வேண்டும்.


1. ஆசிரியப் பயிற்றுநர்கள்


ஆசிரியப் பயிற்றுநர்கள் தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட பள்ளிகள் அனைத்திற்கும் நேரடியாக சென்று பள்ளிகளின் ஆயத்த நிலை  விவரங்களை தமது உயர் அலுவலர்களுக்கு தெரிவித்திடல் வேண்டும்,


மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் எளிமையான கற்றல் வாய்ப்பிற்கு ஆசிரியர்களுக்கு தேவையான உதவிகளை செய்திடல் வேண்டும்.


வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோாளைகள் தேவைப்படும் குழந்தைகளை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்திடல் வேண்டும்


1.வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள்


 வட்டாரக் கவ்வி அலுலவர்கள் மற்றும் வட்டார வள மேற்பார்வையாளர்கள் தனது எல்லைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளையும் தங்களுக்குள் ஒதுக்கீடு செய்து கொண்டு அதனடிப்படையில் பள்ளிகளை நிறப்பதற்கு முன்பாகவே பார்வையிட்டு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கு தேவையான அறிவுரைகளை நிலையான வழிகாட்டு செயல்முறைகளில் (SOP) தெரிவித்துள்ளபடி செய்திடல் வேண்டும்.


ஒரு வகுப்பறையில் போதிய சமூக இடைவெளியுடன் மாணவர்கள்-அமரும் வகையில் இடவசதி உள்ளதா என்பதையும் இடவசதி அதிகளவில் இருப்பின் கூடுதல் மாணவர்களை வகுப்பறைகளில் போதிய இடைவெளியில் அமர மைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்திடல் வேண்டும்.


ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் எண்ணிக்கை மற்றும் வகுப்பறைகளின் எண்ணிக்கைக்கு எற்ப இருக்கை வசதி செய்யப்படுவதை பள்ளிகள் தொடங்கும் முன்னரே  பள்ளி வாரியாக கணக்கிடுவதற்கு தலைமையாசிரியர் கூட்டங்களை நடத்திடல் வேண்டும்.


மாணவர் எண்ணிக்கை அதிக அளவில் இருந்து வகுப்பறைகள் குறைவாக இருக்கும்  எந்தெந்த பள்ளிகளில் சுழற்சி முறையில் எந்தெந்த வகுப்புகளுக்கு சுற்றல் செயல்பாடுகளை நடத்துவது என்பது குறித்து முன்கூட்டியே திட்டமிட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.


மாவட்ட கல்வி அலுவலர்


* கல்வி மாவட்டம் முழுமையும் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய் தடுப்பு முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் பள்ளி வளாகங்களில் தூய்மை முதலியவற்றை ஆய்வு செய்து உரிய ஆலோசவைகளை தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள். ஆசிரியப் பயிற்றுநர்கள் மற்றும் வட்டாாக்கல் அலுவவர்களுக்கு வழங்குதல். ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர் எண்ணிக்கை மற்றும் வகுப்பறைகளின்

எண்ணிக்கைக்கு ஏற்ப இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளதை ஆய்வு செய்து உரிய

ஆலோசனைகளை தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவவர்களுக்கு

வழங்குதல்


* நிலையான வழிகாட்டு செயல்முறைகளில் (SOP) தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்து

பொருண்மைகளையும் தவறாது தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்

கடைபிடித்திட ஆலோசனை வழங்குதல்.


இணைப்பில் கண்டுள்ள படிவங்கள் அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்கள், வட்டரக்கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலருக்கு தொடர் நடவடிக்கையின் பொருட்டு சார்பு செய்யப்படுகிறது.


அனைத்துப் பள்ளிகளையும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் பார்வையிட வேண்டும், தலைமையாசிரியர்களால் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை 20.10.2021ஆம் தேதிக்குள் வட்டக்கல்வி அலுவலர்கள் வழியாக பெற்று முதன்மைக்கல்வி அலுவலரிடம் மாவட்டக்கல்வி அவர் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.


இணைப்பு: படிவங்கள் 1 மற்றும் 2


முதன்மைக்கல்வி அலுவலர்

வேலூர்


குறிப்பு


 வட்டாரக்கல்வி அலுவலர்கள் 100 சதவீதம் பள்ளிகளை 27.10.2021க்குள் ஆய்வு செய்திருக்க வேண்டும்.


2) மாவட்டக்கல்வி அலுவலர் ஒவ்வொரு வட்டாரத்திலும்

10 சதவீதம் பள்ளிகளை மாதிரி ஆய்வு (Sample Check) செய்திட வேண்டும்.


பெறுநர்


3) மாவட்டக்கல்வி அலுவலர் வேலூர்


2) அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள்


3) அனைத்து தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் (சார்த்த அலுவ லர்கள் வழியாக)


1) சென்னை-6, தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுக்கு தகவல் பணிந்தணுப்பப்படுகிறது.





அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நவம்பரில் இடமாறுதல் கலந்தாய்வு புதிய விதிமுறைகளின்படி நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு



 

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நவம்பரில் இடமாறுதல் கலந்தாய்வு: புதிய விதிமுறைகளின்படி நடத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு


புதிய விதிகளின்படி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வை நவம்பரில் நடத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,431 அரசுப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 2.3 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். வழக்கமாக ஆசிரியர் பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடைபெறும். அதன்படி ஒரு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் விருப்பத்தின்பேரில் மாவட்டம் விட்டு மாவட்டம், ஒரே ஒன்றியம் / மாவட்டம், ஒன்றியம் விட்டு ஒன்றியம் என 3 பிரிவுகளாக இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். 

ஆனால், கரோனா பரவல், சட்டப்பேரவைத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஆண்டு கலந்தாய்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வுக்கு புதிய கொள்கைகள் வகுக்கப்பட்டு வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படும் என்று கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்தார். அதற்கேற்ப கலந்தாய்வு நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. 


 பூஜ்ஜிய கலந்தாய்வு அதன்படி, இதுவரை இல்லாத வகையில் முதல்முறையாக மாவட்டக்கல்வி அதிகாரிகள், ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு பூஜ்ஜிய கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதாவது அனைத்து பணியிடங்களும் காலிப் பணியிடமாக கருதப்பட்டு பணிமூப்பு அடிப்படையில் இடமாறுதல் வழங்கப்பட்டது. இதற்கு பரவலாக ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளன.


இதையடுத்து ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வை நவம்பரில் நடத்துவதற்கு திட்டமிட்டு அதற்கான பணிகளை கல்வித்துறை முடுக்கிவிட்டுள்ளது. இதுகுறித்துபள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: 


கடந்த காலங்களில் வரைமுறையற்ற பணியிட மாறுதல்களால் வட மாவட்டங்களில் அதிக அளவில்காலிப் பணியிடங்கள் உள்ளன.இதனுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு கலந்தாய்வு நடைமுறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 


இதற்கிடையே, பூஜ்ஜிய கலந்தாய்வு, கட்டாய பணியிட மாற்றம் உள்ளிட்டவை குறித்து பல்வேறு தவறான தகவல்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகின்றன. அதை நம்பி ஆசிரியர்கள் குழம்ப வேண்டாம். 


ஆசிரியர்களுக்கு பாதிப்பு இல்லாதவாறுதான் கலந்தாய்வுக்கான வரைவுகொள்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட காலம் வரை பணிபுரிதல், ஏற்கெனவே ஓரிடத்தில் நீண்டகாலமாக பணிபுரியும் ஆசிரியர்கள் பதவி உயர்வு ஏற்பது, ஒரு பள்ளியில் காலிப் பணியிடம் இருப்பின் மாறுதல் தரக்கூடாது, கலந்தாய்வில் பங்கேற்பதற்கான குறைந்தபட்ச பணிக்கால வரம்பு உட்பட அடிப்படையான விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளன. 


 மருத்துவம், குடும்பச் சூழல் உட்பட சில அத்தியாவசிய காரணங்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும். புதிய விதிமுறைக்கான வரைவு அறிக்கை விரைவில் அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்படும். ஒப்புதல் கிடைத்த பிறகு நவம்பரில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும்.

மேலும், ஒரு பள்ளியில் காலிப் பணியிடங்கள் இருப்பின் நிர்வாக மாறுதலை தவிர்க்கவும் பரிசீலித்து வருகிறோம். எனவே, ஆசிரியர்கள் வீணாக பதற்றம் அடைய வேண்டாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.




கீ.வ.குப்பம் வட்டாரம் தலைமையாசிரியர் கூட்டம் தொடர்பாக...



*கீ.வ.குப்பம் வட்டாரக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 420 /அ1/2021 நாள்:13.10.2021*


*பொருள்: தொடக்கக் கல்வி-வேலூர் மாவட்டம் - கீ.வ.குப்பம் வட்டாரம்- 1 முதல் 8-ஆம் வகுப்பு-01.11.2021 முதல் பள்ளிகள் ஆரம்பித்தல்-பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்- அறிவுரைகள் வழங்குதல் - 25.10.2021 தலைமை ஆசிரியர் கூட்டம் - தொடர்பாக.*


பார்வை: 1. அரசாணை (நிலை) எண் 63 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை நாள்

05.10.2021.


2.சென்னை-6 தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின்

007351/ஜெ2/2021 நாள் 08.10.2021.

நே. மு.க.எண்.


*பார்வை (1)ல் காணும் அரசாணையின்படி ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவியருக்கான நேரடி வகுப்புகள் கோவிட்-19 நிலையான வழிகாட்டு மாணவ நெறிமுறைகளைப் பின்பற்றி 01.11.2021 முதல் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து பார்வை (2)ல் குறிப்பிட்டுள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் அறிவுரைகளின் படியும் பார்வை (3)ல் குறிப்பிட்டுள்ள வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகளின்படி பள்ளி தூய்மை மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் அனைத்தையும் பள்ளி தலைமை ஆசிரியாகள் பின்பற்றி செயல்பட அறிவுறுத்தப்படுகிறது.*


*வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களும் வேலூர் கல்வி மாவட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களும் கீ.வ.குப்பம் ஒன்றியம் சென்னங்குப்பம் ஸ்ரீ வித்யாலட்சுமி மெட்ரிக் பள்ளியில் 25.10.2021 திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெறவுள்ள கீ.வ.குப்பம் ஒன்றியம் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர் கூட்டத்தில் கலந்துக்கொண்டு அறிவுறைகளும் வழிகாட்டுதல்களும் வழங்க உள்ளதால் கீ.வ. குப் ஒன்றியத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்க/நடுநிலை, நிதியுதவி, மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் 25.10.2021 அன்று முற்பகல் 10.30 மணிக்குள் தலைமை ஆசிரியர் கூட்டம் நடைபெற உள்ள கூட்ட அரங்கிற்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.*


*வட்டாரக் கல்வி அலுவலர்*

*கீ.வ.குப்பம்.*


*வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்/வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது.*

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சீதாராமன் பேட்டை தூய்மை பாரதம் திட்டம் மாணவர்கள்








 

இல்லம் தேடி கல்வி திட்டம்: தன்னார்வலராக, கிராமத்தில் படித்த 12 ஆம் வகுப்பு மற்றும் கல்லூரி பட்டம் பெற்றவர்கள் கொண்டு மாலை நேரத்தில் அடிப்படை கல்வி. - மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை... காணொளி

அரசு பள்ளியில் படிக்கும் 1 - 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தன்னார்வலர்களை கொண்டு வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தும் திட்டம் - மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை... காணொளி