Monday 25 October 2021

வருகிற 1ம் தேதி பள்ளிகள் திறப்பு கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் -வேலூர் மாவட்ட சிஇஓ உத்தரவு.


 

*வருகிற 1ம் தேதி பள்ளிகள் திறப்பு*

*கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் வேலூர் மாவட்ட சிஇஓ உத்தரவு.*

*கே.வி.குப்பம். அக்.26:* 

*கே.வி.குப்பம் அடுத்த சென்னங்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி திறப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. வட்டார கல்வி அலுவலர் கள் கண்ணன், கமலநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர் மாவட்ட கல்வி அலுவலர் சம்பத், பயிற்சி மாவட்ட கல்வி அலுவலர் மணிவாசகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.*


*சிறப்பு அழைப்பாளராக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி(சிஇஓ) முனிசாமி பங்கேற்று கூறி யதாவது: கே.வி.குப்பம் வட்டாரத்தில் அரசு நிதி யுதவி பள்ளிகள் 7. நர்சரி 14. தொடக்க பள்ளிகள் 65, நடுநிலைப்பள்ளிகள் 12, ஆதிதிராவிடர் தொடக்க பள்ளிகள் 11, ஆதிதிராவி டர் நடுநிலைப்பள்ளிகள் என மொத்தம் 10 பள்ளிகள் உள்ளது. ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை யிலான பள்ளி மாணவர் களுக்கு வருகிற 1ம் தேதி பள்ளி திறக்கப்பட உள்ளது. ஆகையால் பள்ளி வளாகத்தை தூய்மை படுத்தவேண்டும் வகுப்பறையை சுத்தம் செய்ய வேண்டும். இல்லம் தேடி கல்வி திட்டத்தில் ஆயத்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். கொரோனா விதிமுறைகளை ஆசிரியர்கள் கடைபிடிக்க வேண் டும். இவ்வாறு அவர் கூறினார்.*

No comments:

Post a Comment