Monday, 18 October 2021

கீ.வ.குப்பம் வட்டாரம் தலைமையாசிரியர் கூட்டம் தொடர்பாக...



*கீ.வ.குப்பம் வட்டாரக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 420 /அ1/2021 நாள்:13.10.2021*


*பொருள்: தொடக்கக் கல்வி-வேலூர் மாவட்டம் - கீ.வ.குப்பம் வட்டாரம்- 1 முதல் 8-ஆம் வகுப்பு-01.11.2021 முதல் பள்ளிகள் ஆரம்பித்தல்-பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள்- அறிவுரைகள் வழங்குதல் - 25.10.2021 தலைமை ஆசிரியர் கூட்டம் - தொடர்பாக.*


பார்வை: 1. அரசாணை (நிலை) எண் 63 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை நாள்

05.10.2021.


2.சென்னை-6 தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின்

007351/ஜெ2/2021 நாள் 08.10.2021.

நே. மு.க.எண்.


*பார்வை (1)ல் காணும் அரசாணையின்படி ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு மாணவியருக்கான நேரடி வகுப்புகள் கோவிட்-19 நிலையான வழிகாட்டு மாணவ நெறிமுறைகளைப் பின்பற்றி 01.11.2021 முதல் நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து பார்வை (2)ல் குறிப்பிட்டுள்ள தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் அறிவுரைகளின் படியும் பார்வை (3)ல் குறிப்பிட்டுள்ள வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகளின்படி பள்ளி தூய்மை மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் அனைத்தையும் பள்ளி தலைமை ஆசிரியாகள் பின்பற்றி செயல்பட அறிவுறுத்தப்படுகிறது.*


*வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களும் வேலூர் கல்வி மாவட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களும் கீ.வ.குப்பம் ஒன்றியம் சென்னங்குப்பம் ஸ்ரீ வித்யாலட்சுமி மெட்ரிக் பள்ளியில் 25.10.2021 திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெறவுள்ள கீ.வ.குப்பம் ஒன்றியம் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர் கூட்டத்தில் கலந்துக்கொண்டு அறிவுறைகளும் வழிகாட்டுதல்களும் வழங்க உள்ளதால் கீ.வ. குப் ஒன்றியத்திலுள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்க/நடுநிலை, நிதியுதவி, மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் 25.10.2021 அன்று முற்பகல் 10.30 மணிக்குள் தலைமை ஆசிரியர் கூட்டம் நடைபெற உள்ள கூட்ட அரங்கிற்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.*


*வட்டாரக் கல்வி அலுவலர்*

*கீ.வ.குப்பம்.*


*வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்/வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது.*

No comments:

Post a Comment