Saturday 27 June 2020

10 மற்றும் 11ஆம் பொதுத்தேர்வு இரத்து செய்யப்பட்டது - மாணவர்கள் வருகை புரிந்த நாட்கள் விபரங்களை பதிவேற்றம் செய்தல் சார்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் செயல்முறைகள். நாள்: 27.06.2020.




10 மற்றும் 11ஆம் பொதுத்தேர்வு இரத்து செய்யப்பட்டது - மாணவர்கள் வருகை புரிந்த நாட்கள் விபரங்களை பதிவேற்றம் செய்தல் சார்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின்  செயல்முறைகள்.   நாள்: 27.06.2020.


இரண்டு தீட்சிதர்களுக்கு கொரோனா உறுதி : நடராஜர் தேர்த் திருவிழா ரத்து




இரண்டு தீட்சிதர்களுக்கு கொரோனா உறுதி : நடராஜர் தேர்த் திருவிழா ரத்து

தீட்சிதர்கள் இருவருக்கு கொரோனா உறுதியான நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேர்த் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

உலகப் புகழ் பெற்ற நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சனம் விழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அந்நிகழ்வில் கோயில் தீட்சிதர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதனையடுத்து இன்று தேர்த் திருவிழா நடைபெறுவதாக இருந்தது.

இதற்கிடையில் கோயில் தீட்சிதர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் இருவருக்குத் தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில், இன்று நடைபெற இருந்த தேர்த் திருவிழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கோயில் முன்னர் ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி :புதிய தலைமுறை

தமிழகத்தில் இன்று 3,713 பேருக்கு கொரோனா பாதிப்பு தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.




தமிழகத்தில் இன்று 3,713 பேருக்கு கொரோனா பாதிப்பு 


தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றும் ஒரே நாளில் 3,713 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 78,335  ஆக உயர்ந்துள்ளது. 

மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 2,737 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 44,094 ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையைப் பொறுத்தவரை இன்று ஒரே நாளில் மட்டும் 1,939 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் சென்னையில் மட்டும் நோயாளிகளின் எண்ணிக்கை 51,699 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 1,025 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:புதிய தலைமுறை

கொரோனா தொற்று நோய்க்கான தடுப்பூசி 12 - 18 மாதங்களில் தயாராகிவிடும் - உலக சுகாதார அமைப்பு விஞ்ஞானி...




கொரோனா தொற்று நோய்க்கான தடுப்பூசி 12-18 மாதங்களில் தயாராகி விடும் என உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி தெரிவித்து உள்ளார்.

புனே

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 98,98,220 ஆக உயர்ந்து உள்ளது; வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 53,52,383 ஆக உயர்ந்து உள்ளது; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,96,077ஆக உயர்ந்து உள்ளது.   

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 25 லட்சத்தை கடந்துள்ளது. அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்தை கடந்து விட்டது. கடந்த 24 மணி நேரத்தில் 43 ஆயிரம் பேர் நோய் தொற்றுக்கு ஆளாகி இருப்பது அந்நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக பிரேசில் ஒரே  நாளில் 41 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இதில் நான்காம் இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிப்பு 5 லட்சத்தை  கடந்து உள்ளது.

கொரோனா தொற்று நோய்க்கான  தடுப்பூசி 12-18 மாதங்களில் தயாராகி விடும் என உலக சுகாதார அமைப்பின்  மூத்த விஞ்ஞானி தெரிவித்து உள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி சவுமியா சுவாமி நாதன் கூறி இருப்பதாவது:-

கொரோனாவுக்கு எதிராக ஒரு தடுப்பூசியை உருவாக்குவது தற்போது உலகம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சவாலாக உள்ளது, இஅதை உருவாக்கும்  நிறுவனத்திற்கு 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இரண்டு பில்லியன் தேவைப்படலாம் 18.1 பில்லியன் டாலர் வரை நிதி வழங்கப்பட்டு உள்ளது.

200 க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களில் உள்ளன, 15 தடுப்பூசிகள்  மனித மருத்துவ பரிசோதனைகளில் ஈடுபட்டு உள்ளன, 12 -18 மாதங்களில் தடுப்பூசிகள் தயாராக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

கோவக்ஸ் வசதி மூலம் 950 மில்லியன் டோஸ் வாங்குவதற்கும், தடுப்பூசிகளை மிக அதிக வேகத்தில் வழங்குவதை உறுதி செய்வதற்கும் அதிக வருமானம் மற்றும் உயர் நடுத்தர வருமான நாடுகளின் உதவி தேவை மார்டனா அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி சோதனையில் முன்னணியில் உள்ளது.

அவர்கள் 2 ஆம் கட்ட சோதனைகளுக்கு முன்னேறியுள்ளனர் மற்றும் பல நாடுகளில் 3 ஆம் கட்டத்தை நடத்த திட்டமிட்டு உள்ளனர். ஜூலை நடுப்பகுதியில் மருத்துவ பரிசோதனைகளின் 3 ஆம் கட்டத்திற்கு செல்லவும் மாடர்னா திட்டமிட்டுள்ளது. இருப்பினும், மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகள் தெரியும் வரை, இந்த தடுப்பூசிகளின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு தெரியவில்லை. எனவே இது பல தடுப்பூசி போட்டியாளர்களின்  மருத்துவ வளர்ச்சியில் முதலீடு செய்ய வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது மற்றும் வெற்றிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது என கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது:-

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகாவின் சோதனை தடுப்பூசி ஆகியவை மருத்துவ பரிசோதனைகளின் இறுதி கட்டங்களில் நுழைந்து உள்ளனர். இந்த தடுப்பூசி தென்னாப்பிரிக்கா மற்றும் பிரேசிலிலும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா 100 மில்லியன் டாலர் முதலீடு செய்து இந்தியா மற்றும் பிற குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு ஒரு பில்லியன் அளவில் பெருமளவில் உற்பத்தி செய்ய திட்டமிட்டு உள்ளது என கூறினார்.

நன்றி :தினத்தந்தி


சென்னை உட்பட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...




வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதியில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், சென்னை உள்பட 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அடுத்த 24 மணி நேரத்திற்கு விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், காஞ்சிபுரம், புதுவை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும்.

நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் ,கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி,கோவை, நீலகிரி, நாமக்கல், விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம் காரைக்கால் தஞ்சாவூர் திருவாரூர் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி :தினத்தந்தி

கொரோனாவை தடுக்க ஓராண்டுக்கு ₹ 2.32 லட்சம் கோடி தேவை WHO (உலக சுகாதார மையம்)... காணொளி



கொரோனாவை தடுக்க ஓராண்டுக்கு ₹ 2.32 லட்சம் கோடி தேவை WHO (உலக சுகாதார மையம்)... காணொளி

கொரோனா பாதித்தவர்களுக்கு டெக்சா மெத்தாசோன் மருந்தை பயன்படுத்தலாம் - மத்திய அரசு... காணொளி



கொரோனா பாதித்தவர்களுக்கு டெக்சா மெத்தாசோன் மருந்தை பயன்படுத்தலாம் - மத்திய அரசு... காணொளி

தற்போதைய சூழலில் பள்ளிகளை திறப்பது சாத்தியமில்லை - மாண்புமிகு கல்வி அமைச்சர் செங்கோட்டையன்... காணொளி




தற்போதைய சூழலில் பள்ளிகளை திறப்பது சாத்தியமில்லை - மாண்புமிகு கல்வி அமைச்சர் செங்கோட்டையன்... காணொளி

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி "ஆரோக்யம்" - தமிழக அரசு சிறப்பு திட்டம் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் நோக்கம் : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்




இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி

"ஆரோக்யம்" - தமிழக அரசு சிறப்பு திட்டம் யோகா மற்றும் இயற்கை மருத்துவம் நோக்கம் : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்



தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2வது நாளாக 3 ஆயிரத்தை தாண்டியது; ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?.. மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி நாளை மறுநாள் முடிவு என முதல்வர் அறிவிப்பு...






சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நேற்று 2வது நாளாக 3 ஆயிரத்தை தாண்டியது. இதன் காரணமாக, ஜூலை 1ம் தேதி முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டு சகஜநிலை திரும்புமா அல்லது இன்னும் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து, மருத்துவ நிபுணர்களுடன் நாளை மறுநாள் ஆலோசனை நடத்திய பிறகு அறிவிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 5 கட்டங்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன்படி வருகிற 30ம் தேதியுடன் தமிழக அரசு அறிவித்த ஊரடங்கு முடிவுக்கு வருகிறது. கடந்த 95 நாட்கள் ஊரடங்கு நடைமுறையில் இருந்தாலும், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது.

கடைகள் திறக்கலாம், தொழிற்சாலைகள் இயங்கலாம், ஆட்டோ, டாக்சி ஓடலாம், அரசு, தனியார் அலுவலகங்கள் செயல்பட அனுமதி உள்ளிட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வந்தது. இதையடுத்து கடந்த 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை 12 நாட்கள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் தளர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, மக்கள் வீடுகளிலேயே மீண்டும் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

இதேபோன்று மதுரை மாவட்டத்திலும் கடந்த 24ம் தேதி முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தடை விதிக்கப்படுவதாக முதல்வர் எடப்பாடி கடந்த 24ம் தேதி அறிவித்தார். அப்படியே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டும் என்றால் இ-பாஸ் எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இப்படி, தமிழக அரசு தினசரி புதிய புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு, முழு ஊரடங்கு உள்ளிட்ட அனைத்து கட்டுப்பாடுகளும் வருகிற 30ம் தேதியுடன் முடிவடைகிறது.

அதற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளன. குறிப்பாக, தமிழகத்தில் ஜூலை 1ம் தேதிக்கு பிறகு  ஊரடங்கு முழுவதுமாக தளர்த்தப்பட்டு மீண்டும் சகஜநிலை திரும்புமா அல்லது மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, என்னென்ன தளர்வுகள் இருக்கும் என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் கொரோனா  தொற்று மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில்  3509 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்றும் 2வது நாளாக 3,645 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டது. இது, பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும்  அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

கடந்த 24ம் தேதி முதல்வர் எடப்பாடி, அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். அதில் பங்கேற்ற மாவட்ட கலெக்டர்கள் பல்வேறு கருத்துகளை அரசுக்கு தெரிவித்துள்ளனர். அதேபோன்று, மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற திங்கட்கிழமை (நாளை மறுதினம்) காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் வைத்து ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டத்தில், தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை கைவிடுவதா என்பது குறித்து முடிவு அறிவிக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திருச்சியில் தெரிவித்தார்.

தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்று அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். அதேபோன்று, ஆகஸ்ட் 12ம் தேதி வரை வழக்கமான ரயில் போக்குவரத்து அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், தமிழகத்தில் என்ன முடிவு எடுக்கப்பட உள்ளது என்பது குறித்து அறிய மக்கள் ஆவலோடு உள்ளனர். வணிகர்களும், ஜூலை 1ம் தேதியுடன் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனைத்து கடைகளையும் திறக்க தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் சென்னையில் பேட்டி அளித்த முதல்வர் எடப்பாடியும், தமிழகத்தில் இனி ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்பு இல்லை என்று கூறி இருந்தார். ஆனாலும் மருத்துவ நிபுணர்கள் கூறும் ஆலோசனையின்படியே தமிழக அரசு இதுவரை செயல்பட்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதி முதல் 5 கட்டங்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அது, வருகிற30ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.
* கடந்த 95 நாட்களாக ஊரடங்கு நடைமுறையில் இருந்தாலும், பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டும் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.
* கொரோனாவை தடுக்க மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தடை விதித்து, இ-பாஸ் எடுக்க வேண்டும் என்ற புதிய புதிய கட்டுப்பாடுகளால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

நன்றி :தினகரன்

கொரோனா காலத்தில் தமிழகத்தில் உள்ள அலுவலகங்கள் செயல்படுவதற்கான வழிபாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு





சென்னை: கொரோனா காலத்தில் தமிழகத்தில் உள்ள அலுவலகங்கள் செயல்படுவதற்கான வழிபாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. 65 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், கர்பிணிகள், பல்வேறு நோய் பாதிப்பு உள்ளவர்கள் வீட்டில் இருக்க அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆலோகனை கூட்டங்களை காணொலி காட்சி மூலம் நடத்த தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. அலுவலகங்களில் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் எனவும். எச்சில் துப்புவது தடை செய்ய வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.

அதிக அளவில் கொரோனா தொற்று ஏற்பட்டால் அலுவலகத்தை 2 நாள் மூடி சுத்தப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.  அனைத்து அலுவலகங்களிலும் தெர்மல் ஸ்கேனர், கிருமி நாசினி வைத்துறிப்பது அவசியம் என கூறப்பட்டள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருப்பவர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. பணியாளர்கள் அனைவரும் ஆரேர்ககிய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என அறிக்ககையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி :தினகரன்

ராஜஸ்தானை ஒட்டிய எல்லையை குறி வைக்கிறது சீனா: இந்தியாவை சுற்றி வளைக்க திட்டம்...





லடாக்கை தொடர்ந்து ராஜஸ்தானை ஒட்டிய பாகிஸ்தான் எல்லையை சீனா குறிவைத்துள்ளது. இதன்மூலம் இந்தியாவை சுற்றி வளைக்க திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் வடக்கு எல்லையான லடாக்கில் சீனா வாலாட்டியது. இதைத்தொடர்ந்து, மேற்கு எல்லையான பாகிஸ்தான் எல்லை பகுதியில் தனது முழு கவனத்தையும் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மீரை ஒட்டிய இந்த எல்லை பகுதிகளில், பாகிஸ்தான் சாலைகள் அமைக்க சீனா உதவி வருகிறது. அந்த பகுதியில் 30 எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டங்களை சீனா மேற்கொண்டு வருகிறது.

அதை சாக்காக வைத்து, அங்கு விமான நிலையம், ரெயில் பாதை, சாலை ஆகியவற்றை அமைக்க பாகிஸ்தானுக்கு உதவி வருகிறது. பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கொடுக்கும்போது, சீனாவும் தன்னை ராணுவரீதியாக அப்பகுதியில் பலப்படுத்தி வருகிறது. ஏற்கனவே, சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் அவ்வழியாக செல்கிறது. இதன்மூலம் இந்தியாவை சுற்றி வளைக்க சீனா திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தான் எல்லையில் சீனா ரூ.30 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. தனது நிறுவனங்களின் பாதுகாப்புக்காக, சொந்த பிராந்தியத்தையே சீனா உருவாக்கி உள்ளது. அங்கு பாகிஸ்தானியர் கூட அனுமதியின்றி நுழைய முடியாது.

எல்லை பகுதியில் கட்டுமான பணியில் 30 சீன நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அத்துடன், ராஜஸ்தான் எல்லையில் சீன நிறுவனங்கள் எண்ணெய் அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ளன. 2 ஆயிரத்து 500 சீன நிபுணர்கள், இப்பணியை செய்து வருகின்றனர். சீன அரசின் தேசிய என்ஜினீயரிங் நிறுவனம் உள்பட பெரிய நிறுவனங்கள், எல்லையை ஆக்கிரமித்துள்ளன.

கவனம் செலுத்துங்கள்

ராஜஸ்தான் எல்லைக்கு 8 கி.மீ. தூரத்திலேயே எண்ணெய், எரிவாயு எடுக்கும் பணியில் சீன நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. அங்கு 50 எண்ணெய் கிணறுகள், சீன நிபுணர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. அங்குள்ள பள்ளிகளில் சீனாவின் மண்டாரின் மொழி கற்பிக்கப்படுவதாக இந்திய ராணுவத்தில் கர்னலாக பணியாற்றி ஓய்வு பெற்ற சைலேஷ் ராய் கூறியுள்ளார்.

அங்கு பாதுகாப்பு பொறுப்பை சீன ராணுவமே கவனிக்கிறது. இதனால், எல்லை பாதுகாப்பு படை உஷாராக இருப்பதாக அதன் ஐ.ஜி. அமித் லோதா தெரிவித்தார். மத்திய அரசு, தனது முழு கவனத்தையும் ராஜஸ்தான் எல்லைப்பக்கம் திருப்ப வேண்டும் என்று ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள் யோசனை தெரிவித்துள்ளனர்.

நன்றி :தினத்தந்தி

லடாக் எல்லை விவகாரத்தில் : இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா எவ்வாறு திட்டமிட்டுள்ளது...?




சீனாவின் எதிர்ப்பதற்காக, ஐரோப்பாவில் அமெரிக்க படைகளை குறைத்து ஆசியாவில் அதன் படைகளை நிலைநிறுத்துவதை அமெரிக்கா மறுபரிசீலனை செய்து வருகிறது.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனா  இராணுவ மற்றும் பொருளாதார செல்வாக்கை விரிவுபடுத்தி வருகிறது, இது பிராந்தியத்தின் பல்வேறு நாடுகளுக்கும் அதற்கு அப்பாலும் கவலையைத் அளிக்கிறது. சீனா தற்போது தென் சீனக் கடல் மற்றும் கிழக்கு சீனக் கடல் இரண்டிலும் கடுமையாக பிராந்திய மோதல்களில் ஈடுபட்டுள்ளது. இது பிராந்தியத்தில் அதன் கட்டுப்பாட்டின் கீழ் பல தீவுகள் மற்றும் திட்டுகளை கட்டமைத்து இராணுவமயமாக்கியுள்ளது.

சீன-இந்தியா போர் ஏற்பட்டால், அமெரிக்கா இந்தியாவுக்கு ஆதரவாக வரக்கூடும், ஆனால் அது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும். பின்னர் பாகிஸ்தான், வட கொரியா போன்ற நாடுகள் சீனாவுக்கு பக்கபலமாக இருக்கலாம், அதே நேரத்தில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகியவற்றுடன் இந்தியாவும் சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்க்கும். எவ்வாறாயினும், ரஷ்யா போன்ற நாடுகள்  பழைய நண்பர் இந்தியாவையா அல்லது சீனாவையா தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற  குழப்பத்தை எதிர்கொள்ளக்கூடும்.

இத்தகைய நிலைமை ஏன் வர வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. மாறாக, சீனாவை அதன் விரிவாக்கக் கொள்கைகள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிராக கேள்வி கேட்க உலகம் ஒன்றுபட வேண்டும், சீனாவின் ஆக்கிரமிப்பு இப்போது நிறுத்தப்படாவிட்டால், சீனா உலகிற்கு ஒரு நெருக்கடியை உருவாக்கும்.

அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ வெளியிட்ட கருத்து  சீனாவை சுற்றி வளைப்பதற்கான அமெரிக்க மூலோபாய தந்திரத்தை சுட்டிக்காட்டுகிறது, ஆனால் சீனாவின் உண்மையான முற்றுகை தென்கிழக்கு ஆசியாவிலிருந்து வரும். தென் சீனக் கடலில் சீனாவின் இராணுவ கோபத்தை எதிர்கொள்ளும் வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் பெயர்களை அமெரிக்கா கூறி உள்ளது..

1988 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா பிலிப்பைன்ஸுடன் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டது, அதே நேரத்தில் வியட்நாமும் சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அமெரிக்காவுடன் நெருக்கமாக உள்ளது மற்றும் அதன் கடலோரப் பகுதியைப் பாதுகாப்பதில் அமெரிக்க கடற்படையின் ஆதரவைப் பெற்று உள்ளது. இந்தோனேசியா மற்றும் மலேசியாவுடனான அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு படிப்படியாக அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் சிங்கப்பூர், அமெரிக்காவின் விமான மற்றும் கடற்படை தளங்களை பயன்படுத்த அமெரிக்கா உடன்பட்டுள்ளது.

இந்த நாடுகளில் அமெரிக்காவின் இராணுவ இருப்பு பலம் அதிகரித்தால், ஏதேனும் பெரிய மோதல்கள் ஏற்பட்டால் சீனா எல்லா திசைகளிலிருந்தும் சுற்றி வர வாய்ப்புள்ளது. இந்த பிராந்தியத்திலும் கிழக்கு சீனக் கடலிலும் சீனா மிகவும் ஆக்கிரோஷமாக உள்ளது. தைவான் தனது போர் விமானங்களை அனுப்புவதன் மூலம் அது இராணுவ அச்சுறுத்தலை வெளிப்படையாக வெளியிட்டது, ஆனால் சீனா அந்த நடவடிக்கையை முறியடித்தது.

அமெரிக்க இராணுவத்திற்கு தைவானில் ஒரு நிரந்தர தளம் இல்லை, ஆனால் அது பெரும்பாலும் பயிற்சி மற்றும் ரோந்துக்காக இங்கு வருகிறது. தற்போது, மூன்று அமெரிக்க விமானம் தாங்கிகள் தைவானுக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ளன. ஆசியா-பசிபிக் பிராந்தியத்தில், சீனா மற்றும் அதன் நண்பர் வட கொரியாவை சமாளிக்க அமெரிக்க இராணுவ தளங்கள் தென் கொரியாவிலும் ஜப்பானிலும் உள்ளன.

தென் கொரியாவில், அமெரிக்க இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படையின் 28,000 க்கும் மேற்பட்ட துருப்புக்கள் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளன. இந்த பிராந்தியத்தில் சுமார் 15 சிறிய மற்றும் பெரிய அமெரிக்க இராணுவ தளங்கள் உள்ளன. ஜப்பானில், அமெரிக்காவில் சுமார் 23 சிறிய மற்றும் பெரிய இராணுவ தளங்கள் 54,000 வீரர்களை கொண்டுள்ளது. சுமார் 50 போர்க்கப்பல்கள் மற்றும் 20,000 கடற்படை வீரர்களைக் கொண்ட அமெரிக்க கடற்படையின் 7 வது பெரிய கடற்படை எப்போதும் ஜப்பானில் தயாராக உள்ளது.

தென் கொரியா மற்றும் ஜப்பானுடன் சேர்ந்து, சுமார் 5,000 அமெரிக்க துருப்புக்கள் குவாம் என்ற சிறிய தீவில் நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ளன, அங்கு அமெரிக்க விமானப்படை தளம் உள்ளது.

இதற்கிடையில், சீனாவின் உண்மையான விரிவாக்க முகத்தை அதன் அதிகாரத்தை நிலைநாட்டிய நாடுகளில் காணலாம். சீனாவுன் அதன் இரக்கமற்ற இராணுவம் செய்த அட்டூழியங்களுக்கு சாட்சியமளிக்கும் ஒரு நாடு திபெத். முந்தைய புத்த தேசத்திலிருந்து ஓடிவந்த மக்கள் அந்த கொடுமைகளை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள்.

1959 இல் திபெத்தை சீன ஆக்கிரமித்த பின்னர், 560 திபெத்திய குடிமக்கள் லடாக் சென்றடைந்தனர். தற்போது, லடாக் முழுவதும் 7500 திபெத்திய அகதிகள் உள்ளனர். அவர்கள் 1975 வரை கூடாரங்களிலும் முகாம்களிலும் வாழ்ந்தனர், ஆனால் பின்னர் லடாக்கின் ஆங்லிங், சோக்லாம்சர் மற்றும் ஜங்தாங் கிராமங்களில் குடியேறினர்.

 திபெத்திலிருந்து தப்பி ஓடிய அகதிகள் இப்போது பல ஆண்டுகளாக லடாக் அருகே ஒரு கிராமத்தில்  வாழ்கின்றனர். சீனா முதலில் திபெத்திய மக்களை ரேஷன் மற்றும் பணத்துடன் கவர்ந்திழுத்து, பின்னர் அவர்களின் நிலத்தை அபகரித்தது, அவர்களின் கலாச்சாரத்தையும் வழிபாட்டுத் தலங்களையும் எவ்வாறு அழித்தது என்பதை அவர்கள் நினைவு கூர்கிறார்கள்.

திபெத்திய அகதிகள் இந்தியாவுக்கு நன்றியுள்ளவர்களாக இருந்தாலும், அவர்கள் திபெத்தை சீனாவின் ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிக்க விரும்புகிறார்கள்.

நன்றி :தினத்தந்தி

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வரும் அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.




கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வரும் அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வருவதற்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. பின்னர் அது ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கபட்டது.

இந்த அவசர சட்டத்திற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வரும் அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். ஒ ஒழுங்குமுறை திருத்த சட்டம் 2020 என அழைக்கப்படும் என கூறப்படுகிறது. 

நன்றி: தினத்தந்தி

Friday 26 June 2020

EMIS 2020 NEW UPDATE "DATA CORRECTION" MOBILE PHONE ல் செய்வது எப்படி?




EMIS 2020 NEW UPDATE "DATA CORRECTION" MOBILE PHONE ல் செய்வது எப்படி?

நாடு முழுவதும் ரயில் சேவை ரத்து... சிறப்பு ரயில்கள் இயங்கும்! காணொளி.



நாடு முழுவதும் ரயில் சேவை ரத்து... சிறப்பு ரயில்கள் இயங்கும்! காணொளி.

10,12 ஆம் வகுப்புகளில் தேர்வு மதிப்பெண் கணக்கீடு எப்படி...? சிபிஎஸ்இ விளக்கம்... காணொளி



10,12 ஆம் வகுப்புகளில் தேர்வு மதிப்பெண் கணக்கீடு எப்படி...? சிபிஎஸ்இ விளக்கம்... காணொளி

பாதுகாப்பான ஆன்லைன் கல்வி தொடர்பான வழக்கு மத்திய அரசு பதில்... காணொளி



பாதுகாப்பான ஆன்லைன் கல்வி தொடர்பான வழக்கு மத்திய அரசு பதில்... காணொளி

அரசு பேருந்தில் ஏறி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... காணொளி



அரசு பேருந்தில் ஏறி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி... காணொளி

Wednesday 24 June 2020

காய்ச்சல், நோய் எதிர்ப்பு சக்திக்கே பாபா ராம்தேவின் கொரோனில் மருந்து உரிமம் பெற்றது கொரோனாவுக்கு இல்லை : உத்தரகாண்ட் அரசு திடுக்கிடும் விளக்கம்





டேராடூன் : சளி, காய்ச்சல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்து என்ற அடிப்படையில்தான் ராம்தேவின்  கொரோனில் மருந்துக்கு அனுமதி வழங்கப்பட்டது; கொரோனாவுக்கு அல்ல என்று உத்தரகாண்ட் அரசு திடுக்கிடும் விளக்கம் அளித்திருக்கிறது. யோகா குரு பாபா ராம்தேவ் கொரோனா வைரஸ் சிகிச்சைக்காக செவ்வாயன்று ‘கொரோனில் ஸ்வாசரி’ என்ற ஆயுர்வேத மருந்தை அறிமுகம் செய்த சில மணி நேரங்களில் இந்த மருந்தின் விளம்பரங்களை நிறுத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டதோடு , நிறுவனம் கோரிய ‘வெற்றிகரமான சோதனை மற்றும் சிகிச்சை’ என்பதற்கான விவரங்களையும் வெளியிட அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக உத்தரகாண்ட் அரசு ஒரு விளக்கம் அளித்துள்ளது. அதில், பாபா ராம்தேவின்   கொரோனில் மருந்து என்பது சளி, காய்ச்சல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது. இதனடிப்படையில் மட்டும் தான் அந்த மருந்துக்கு உத்தரகாண்ட் ஆயுஷ் துறை விற்பனைக்கான உரிமம் வழங்கியிருக்கிறது என விளக்கம் தந்துள்ளது. மேலும் ராம்தேவின் கொரோனில் மருந்து, கொரோனா வைரஸ் தாக்கத்தை குணப்படுத்தக் கூடிய மருந்து என்பதற்காக நாங்கள் லைசென்ஸே கொடுக்கவில்லை. அது தவறானது என்று உத்தரகாண்ட் அரசு கூறியுள்ளது. மேலும், கொரோனாவுக்கு மருந்து என விளம்பரம் செய்தது தொடர்பாக ராம்தேவ் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவோம் என்றும் உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது.

நன்றி தி:

நாடு முழுவதும் 1,540 கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டுவர மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.





பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டுவர ஒப்புதல் அளிக்கப்பட்டது. 1,482 நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளும், 58 மாநில கூட்டுறவு வங்கிகளும் என மொத்தம் 1,540 கூட்டுறவு வங்கிகள், ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும். இதன்மூலம், இதர வர்த்தக வங்கிகள் போலவே அவ்வங்கிகள் செயல்படும்.


இதற்காக ஜனாதிபதி விரைவில் அவசர சட்டம் பிறப்பிப்பார் என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். இந்த முடிவால், மேற்கண்ட கூட்டுறவு வங்கிகளில் முதலீடு செய்துள்ள பொதுமக்களின் பணம் பாதுகாப்பாக இருக்கும் என்றும், ஊழல்கள் தடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்த வங்கிகளில் மொத்தம் 8 கோடியே 60 லட்சம் முதலீட்டாளர்கள் உள்ளனர். அவர்களது சேமிப்பு பணம் ரூ.4 லட்சத்து 85 ஆயிரம் கோடி, அந்த வங்கிகளில் உள்ளது. பிரதம மந்திரியின் முத்ரா திட்டத்தின் கீழ், சிறுதொழில் நிறுவனங்களுக்கு சிறிய அளவிலான சிசு கடன்கள் வழங்கப்படுகின்றன.கடந்த மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி, இப்பிரிவில் 9 கோடியே 37 லட்சம் கடன் கணக்குகள் உள்ளன. ரூ.1 லட்சத்து 62 ஆயிரம் கோடி கடன் தொகை நிலுவையில் உள்ளது.

இந்த கடன்தாரர்களில் தகுதியானவர்களுக்கு கடனுக்கான வட்டியில் 2 சதவீத தள்ளுபடி அளிக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. 12 மாதங்களுக்கு இச்சலுகை வழங்கப்படும். தவறாமல் கடன் தவணையை செலுத்திய மாதங்களுக்கு மட்டும் வட்டி தள்ளுபடி வழங்கப்படும். இந்த திட்டம் ரூ.1,542 கோடி செலவில் நிறைவேற்றப்படும்.

சிறுதொழில் நிறுவனங்களின் நிதிச்சுமையை குறைத்து, ஆட்குறைப்பு இன்றி அவை செயல்படுவதற்காக, இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ரூ.15 ஆயிரம் கோடியில் கால்நடை பராமரிப்பு உள்கட்டமைப்பு நிதியம் தொடங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. பால், இறைச்சி பதப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் கால்நடை தீவன தொழிற்சாலைகளை தொடங்கும் தனியாருக்கு 4 சதவீதம்வரை வட்டி தள்ளுபடி அளிப்பதற்காக இந்த நிதியம் அமைக்கப்படுகிறது.

இத்துறையில் 35 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக இத்திட்டம் வழிவகுக்கும் என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்புக்குள் உட்பிரிவுகளை வரையறுப்பது குறித்து ஆராய இதர பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் செயல்பட்டு வருகிறது. அதன் பதவிக்காலத்தை மேலும் 6 மாதங்களுக்கு, அதாவது அடுத்த ஆண்டு ஜனவரி 31-ந் தேதிவரை நீட்டிக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

நன்றி ‌:தினத்தந்தி

சென்னையில் போலி இ-பாஸ் தயாரித்து ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்ததாக அரசு அதிகாரிகள் 2 பேர் உள்பட 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.




சென்னையில் போலி இ-பாஸ் தயாரித்து ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்ததாக அரசு அதிகாரிகள் 2 பேர் உள்பட 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

கொரோனா தாக்குதலையொட்டி சென்னையில் இருந்து வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்கள் செல்வதற்கு அரசு இ-பாஸ் வழங்கி வருகிறது. ‘ஆன்லைன்’ மூலம் விண்ணப்பித்தால் மருத்துவம், திருமணம் மற்றும் இறப்பு காரியங்களுக்கு இ-பாஸ் வழங்கப்படுகிறது. இதனை அரசு அதிகாரிகள் துணையோடு போலியாக தயாரித்து ஒரு கும்பல் பொதுமக்களுக்கு விற்பனை செய்து வருவதாக ஏற்கனவே புகார்கள் வந்தன.

‘இ-பாஸ்’ தயாரித்து விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்தநிலையில் சென்னை அண்ணாசாலையை சேர்ந்த துரைராஜ் (வயது 29) என்பவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், போலி ஆவணங்கள் மூலம் சிலர் இ-பாஸ் தயாரித்து பொதுமக்களுக்கு ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மத்திய குற்றப்பிரிவின் ‘சைபர் க்ரைம்’ போலீசாருக்கு, கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதுதொடர்பாக ‘சைபர் க்ரைம்’ இன்ஸ்பெக்டர் துரை, ‘தொற்று நோய் தடுப்பு’ சட்டப்பிரிவு 269 மற்றும் ‘பேரிடர் மேலாண்மை’ சட்டப்பிரிவு உள்பட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

போலி இ-பாஸ் தயாரிப்பு வழக்கில் சென்னை பேசின்பிரிட்ஜ் வருவாய் ஆய்வாளர் குமரன், எம்.கே.பி.நகர், வியாசர்பாடி இளநிலை வருவாய் ஆய்வாளர் உதயகுமார் மற்றும் கோபி (35), மனோஜ்(30), வினோத்(37) ஆகிய 5 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். இவர்கள் 5 பேரும் எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். போலீஸ் விசாரணையில் இவர்கள் 100-க்கு மேற்பட்டவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் பெற்றுக்கொண்டு போலி இ-பாஸ் தயாரித்து வழங்கியதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நன்றி:தினத்தந்தி

இன்று முதல் மாவட்ட எல்லைகள் மூடல்... காணொளி



இன்று முதல் மாவட்ட எல்லைகள் மூடல்... காணொளி

பாடத்திட்டத்தில் சில பக்கங்களை குறைக்க குழு அமைப்பு - மாண்புமிகு கல்வி அமைச்சர் காணொளி



பாடத்திட்டத்தில் சில பக்கங்களை குறைக்க குழு அமைப்பு - மாண்புமிகு கல்வி அமைச்சர் காணொளி

அரசு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் முழு செலவையும் அரசே ஏற்கும்!!! தமிழக அரசு அறிவிப்பு... காணொளி




அரசு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் முழு செலவையும் அரசே ஏற்கும்!!! தமிழக அரசு அறிவிப்பு... காணொளி

Tuesday 23 June 2020

தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 2516 பேருக்கு கொரோனா உறுதி..!



தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 2516 பேருக்கு கொரோனா உறுதி..!

தமிழகத்தில் மூன்றாவது நாளாக 2500 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இன்னும் கொரோனா பாதிப்பு ஏறுமுகத்தில்தான் உள்ளது. கொரோனா பாதிப்பு குறித்த நிலவரத்தை நாள்தோறும் தமிழக சுகாதாரத்துறை செய்திக்குறிப்பில் வெளியிடுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் ஒரே நாளில் 2516 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதில் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், சென்னையில் மட்டும் 1,380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 64,603 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 44,205 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்த 39 பேர் குறித்த விவரங்கள் இன்றைய செய்தி குறிப்பில் இடம்பெற்றுள்ளது. இதில் 28 பேர் அரசு மருத்துவமனையிலும், 11 பேர் தனியார் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.

நன்றி: புதியதலைமுறை

கொரோனாவிற்கு கண்டுபிடித்துள்ள சித்த மருந்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.




கொரோனாவிற்கு கண்டுபிடித்துள்ள சித்த மருந்தை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மருந்து கண்டுபிடித்துள்ளதாகவும், அதனை ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் சித்த மருத்துவர் எஸ்.சுப்பிரமணியன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர், தான் 66 மூளிகைகளைக் கொண்டு கொரோனாவிற்கு மருந்து தயாரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த மருந்தை தினமும் கொதிக்க வைத்து 2 வேளை பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் பக்கவிளைவுகள் எதுவும் இதில் இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த மருந்தை மருத்துவ நிபுணர்கள் குழு ஆய்வு செய்ய உத்தரவிடுமாறு சித்த மருத்துவர் எஸ்.சுப்பிரமணியன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவித்துள்ளார்.

இந்த மனு தொடர்பான விசாரணை நேற்றும் இன்றும் நடைபெற்றது. இன்றைய விசாரணையின் முடிவில், சித்த மருத்துவர் எஸ்.சுப்பிரமணியன் கண்டுபிடித்துள்ள மருந்தை ஜூன் 26 ஆம் தேதி சென்னையில் உள்ள மருத்துவக் கழகத்தின் ஹோமியோபதி இயக்குனரிடம் அளித்து ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த மருந்தை நிபுணர் குழு ஆய்வு செய்து ஜூன் 30 தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 
 
மேலும் இந்த வழக்கின் நேற்றைய விசாரணையின் போது தமிழக அரசு எந்த ஆய்வின் அடிப்படையில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கி வருகிறார்கள் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதற்கு இன்று பதிலளித்த தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், இந்திய மருத்துவ கழகத்தின் ஆய்வு அடிப்படையில் தான் கபசுர குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் சென்னை அரும்பாக்கத்தில் 12 கோடி ரூபாய் செலவில் மருத்துவ ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நன்றி :தினத்தந்தி

தெலுங்கானாவில் ஊரடங்கு உத்தரவால் தனியார் பள்ளி முதல்வர் தள்ளுவண்டியில் சிற்றுண்டி கடை நடத்தும் அவலம் ஏற்பட்டு உள்ளது.



தெலுங்கானாவில் ஊரடங்கு உத்தரவால் தனியார் பள்ளி முதல்வர் தள்ளுவண்டியில் சிற்றுண்டி கடை நடத்தும் அவலம் ஏற்பட்டு உள்ளது.

தெலுங்கானாவின் கம்மம் பகுதியில் வசித்து வருபவர் ராம்பாபு மரகானி.  இவர் தனியார் பள்ளியொன்றின் முதல்வராக இருந்து வந்துள்ளார்.  நாடு முழுவதும் கொரோனா பாதிப்பினை எதிர்கொள்ள ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், மாணவர்கள் வருகையில்லை.  பள்ளிகளுக்கு கட்டணமும் செலுத்தப்படவில்லை.  இதனால் வேலையின்றி போன ராம்பாபு அடுத்து என்ன செய்வது என்று திகைத்து நின்றார்.  ஆனால் சோர்ந்து விடாமல், சிற்றுண்டி கடை ஒன்றை நடத்துவது என முடிவு செய்துள்ளார்.  இதற்கு இடம், அனுமதி உள்ளிட்ட போதிய வசதி இல்லாத சூழலில், சாலையோரம் தள்ளுவண்டி ஒன்றில் தனது கடையை திறந்துள்ளார்.  இவர் தனது மனைவியையும் உதவிக்கு வைத்துள்ளார்.

இதில், தோசை, இட்லி, வடை உள்ளிட்ட தென்னிந்திய டிபன் வகைகளை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறார்.  கொரோனா பாதிப்பு எதிரொலியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் தொழில் நிறுவனங்கள் முடங்கின.  தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் கூட குறைந்த ஊழியர்களை கொண்டு செயல்பட்டு வருகின்றன.

ஊரடங்கு உத்தரவால், பலரது வேலை பறிபோயுள்ளது.  பலருக்கு வருவாய் இல்லை.  ஒரு சிலர் குறைந்த ஊதியம் பெற்று வருகின்றனர்.  உலகம் முழுவதும் வேலைவாய்ப்பின்மையை பலர் சந்தித்து வருகின்றனர்.  இந்த சூழலில் இதுபற்றி கூறிய ராம்பாபு, யாரையும் நீங்கள் சார்ந்திருக்க வேண்டாம்.  உங்களது சொந்த காலில் நீங்கள் நில்லுங்கள் என நம்பிக்கையூட்டும் வகையில் கூறியுள்ளார்.  வேலை பறிபோன நிலையில், வருவாயை ஈட்டுவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

நன்றி: தினத்தந்தி

சீனா அப்ளிகேஷனுக்கு மாற்று அப்ளிகேஷன் பயன்படுத்துங்களேன்..‌. CLICK HERE TO DOWNLOAD PDF






..‌.



சீனா அப்ளிகேஷனுக்கு மாற்று அப்ளிகேஷன் பயன்படுத்துங்களேன்..‌.




கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு?; அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை அவசர ஆலோசனை...!



கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களுக்கு முழு ஊரடங்கு?; அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை அவசர ஆலோசனை...!

அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தவுள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25 முதல் வரும் 30ம் தேதி வரை ஊரடங்கு ஐந்து கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு நீடித்தாலும், கடந்த 1ம் தேதி முதல் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால், தமிழகத்தில் இயல்பு நிலை மீண்டும் திரும்பியது. காய்கறிக் கடைகள், மீன், இறைச்சிக்கடைகளில் சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் கூட்டம் அலைமோதியது.

இதனால், கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் துவங்கியது. குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்தது. தினமும் கொத்துக் கொத்தாக நோயாளிகள் குவிந்தனர். உயிரிழப்பும் அதிகரித்தது. இதையடுத்து, இந்த நான்கு மாவட்டங்களிலும் கடந்த 19ம் தேதி முதல் வரும் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்தியளவில் கொரோனா பாதிப்பில் நேற்று முன்தினம் வரை 2-வது இடத்தில் இருந்த தமிழகம் தற்போது 3-வது இடத்தில் உள்ளது.

இதற்கிடையே, மாவட்டங்களில் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவது குறித்து, தலைமை செயலாளர் சண்முகம் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா தொற்று நிலவரம், தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களுக்கு மீண்டும் முழு ஊரடங்கு அறிவிப்பது தொடர்பாக விவாதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள், பேருந்துகள் இயக்குவது உள்ளிட்டவைகளுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மாவட்ட கலெக்டர்களுடனான ஆலோசனைக்கு பின் மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நன்றி : தினகரன்

11 ஆம் வகுப்பு பாடப்பிரிவு தேர்வு 'விழிப்புணர்வு தேவை' - ஆசிரியர்கள், கல்வியாளர்கள் வேண்டுகோள்... காணொளி



11 ஆம் வகுப்பு பாடப்பிரிவு தேர்வு 'விழிப்புணர்வு தேவை' - ஆசிரியர்கள், கல்வியாளர்கள் வேண்டுகோள்... காணொளி

வேலூரில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் தடுத்து நிறுத்தம்... காணொளி




வேலூரில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் தடுத்து நிறுத்தம்... காணொளி

ஆபத்து கட்டத்தில் இருக்கும் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு வழங்க ரெம்டெசிவரை, சிப்ரெமி என்ற பெயரில் அறிமுகம்... காணொளி




ஆபத்து கட்டத்தில் இருக்கும் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு வழங்க
ரெம்டெசிவரை, சிப்ரெமி என்ற பெயரில் அறிமுகம்... காணொளி

கழிவுநீரில் கொரோனா மரபுக் கூறுகள்..‌. காணொளி




கழிவுநீரில் கொரோனா மரபுக் கூறுகள்..‌. காணொளி

மன உளைச்சலில் இருந்து மீள்வது எப்படி மனநல மருத்துவர் வந்தனா பதில்... காணொளி



மன உளைச்சலில் இருந்து மீள்வது எப்படி மனநல மருத்துவர் வந்தனா பதில்... காணொளி

இனி பாம்பு வந்தால் அடிக்க வேணாம் இதை மட்டும் செய்யுங்க... காணொளி



இனி பாம்பு வந்தால் அடிக்க வேணாம் இதை மட்டும் செய்யுங்க... காணொளி

10 ஆம் வகுப்பு மதிப்பெண் முறையில் மாற்றமா?.. அமைச்சர் செங்கோட்டையன் தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி... காணொளி



10 ஆம் வகுப்பு மதிப்பெண் முறையில் மாற்றமா?.. அமைச்சர் செங்கோட்டையன் தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி... காணொளி

Monday 22 June 2020

சீனாவுடன் மோத தயாராகும் இந்தியாவின் நட்பு நாடுகள்... காணொளி



சீனாவுடன் மோத தயாராகும் இந்தியாவின் நட்பு நாடுகள்... காணொளி

தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு..! இன்று 2,710 பேருக்கு தொற்று உறுதி



தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு..! இன்று 2,710 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,710 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றும் ஒரே நாளில் 2710 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 62,087 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 1,358 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,112 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை இன்று ஒரே நாளில் மட்டும் 1,487 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் சென்னையில் மட்டும் நோயாளிகளின் எண்ணிக்கை 42,752 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 794 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:புதிய தலைமுறை

கொரோனாவை கட்டுப்படுத்த வேறு வழியில்லை ; கடும் நடவடிக்கை எடுங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு





கொரோனாவை கட்டுப்படுத்த வேறு வழியில்லை ; கடும் நடவடிக்கை எடுங்க
மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு

கொரோனாவை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா தொற்று எந்த பகுதியையும் அதிகம் பாதிக்காத வகையில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும், பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிய குறிப்பிட்ட பகுதிகளில் முகாம் நடத்தி பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக வரும் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

 மாநிலத்தின் இதர மாவட்டங்களிலும் அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் தலைமைச் செயலாளர் தலைமையில் டாஸ்க் ஃபோர்ஸ் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட வாரியாக மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இயங்குகிறது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது; கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கரோனா பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிய குறிப்பிட்ட பகுதிகளில் முகாம்களை நடத்தி பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் மற்றும் கரோனா எந்தப் பகுதியையும் பாதிக்காதவாறு மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நன்றி : தினகரன்

Sunday 21 June 2020

சீனாவை வெல்லும் இந்தியாவின் படைபலம் ; சர்வதேச மையம் கணிப்பு அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு கென்னடி பள்ளியின் அறிவியல் மற்றும் சர்வதேச பெல்பர் மையம் இந்தியா-சீனாவின் படை பலத்தை ஆய்வு செய்து உள்ளது.



















.



சீனாவை வெல்லும் இந்தியாவின் படைபலம் ; சர்வதேச மையம் கணிப்பு

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு கென்னடி பள்ளியின் அறிவியல் மற்றும் சர்வதேச பெல்பர் மையம் இந்தியா-சீனாவின் படை பலத்தை ஆய்வு செய்து உள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு கென்னடி பள்ளியின் அறிவியல் மற்றும் சர்வதேச பெல்பர் மையம் இந்தியா-சீனாவின் படை பலத்தை ஆய்வு செய்து உள்ளது.

அதில் இரு நாடுகளிலும் உள்ள படை வீரர்களின் எண்ணிக்கை, விமானங்கள் மூலம் தாக்கும் திறன் போன்றவை விரிவாக அலசி ஆராயப்பட்டுள்ளது. அதில் இறுதியாக போர் வந்தால் இந்தியாவிற்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கூறியுள்ளது. அதற்கான காரணங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.

அதன்முக்கிய அம்சம் வருமாறு:-

கடந்த 2017-ம் ஆண்டு டோக்லாமில் ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து இந்தியாவும், சீனாவும் எல்லையில் வீரர்களை குவித்து வருகிறது. இரு நாடுகளும் சமரச பேச்சுவார்த்தை நடத்தினாலும் எல்லையில் பதற்றம் குறையவில்லை. சீனாவின் அச்சுறுத்தல்கள் எல்லாம் இந்தியாவிற்கு நன்மை பயக்கும். ஏனென்றால் உலக அரங்கில் இந்தியா வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது. சீன விவகாரத்தில் இந்தியா துணிவதற்கு தனது நாட்டின் ராணுவ நிலைப்பாட்டில் இந்தியா மிகுந்த நம்பிக்கை வைத்து உள்ளது தான் முக்கிய காரணம்.

பெரும் பிரச்சினை

சீன படை பலத்தின் முன் இந்தியா சாதாரணமானது என்று ஒரு மாயை உருவாக்கப்பட்டு உள்ளது. இது முற்றிலும் தவறு. ராணுவ கட்டமைப்பு, தளவாடங்கள், விமானங்கள், கப்பல்கள் என்ற ஒட்டு மொத்த கணக்கீட்டில் சீனா முன்னணியில் இருக்கிறது என்பதனை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இந்த கட்டமைப்புகள் அனைத்தும் பரந்து விரிந்த சீனாவின் எல்லையை பாதுகாக்க போதாது.

போரில் வெற்றி என்பது வீரர்கள், ஆயுதங்களின் எண்ணிக்கையில் மட்டும் கிடைத்து விடுவதில்லை. மாறாக களத்தில் செயல்படும் திறனின் அடிப்படையில் அமைந்து உள்ளது. அதன்படி சீனாவுடன் ஒப்பிடும் போது இந்தியாவின் திறன் மிக சிறப்பாக உள்ளது. இந்திய-சீன போர் ஏற்பட்டால் அதில் தரைப்படை மற்றும் விமானப்படை தான் முக்கிய பங்கு வகிக்கும். இரு நாடுகளிலும் கடல் வழி தாக்குதல்கள் சாத்தியமில்லை. 

தரைப்படை

தரைப்படை வீரர்களின் மொத்த எண்ணிக்கையை பொறுத்தவரை இரு நாடுகளும் சம எண்ணிக்கையில் தான் உள்ளன. ஆனால் இந்திய-சீன எல்லையில் இருக்கும் வீரர்களின் எண்ணிக்கையில் இந்தியா தான் முன்னணியில் இருக்கிறது. அதாவது சீனா தனது நாட்டை பாதுகாக்க 5 படைப்பிரிவுகளை ஏற்படுத்தி உள்ளது. அதில் இந்திய எல்லை அருகே நிலைகொண்டு இருக்கும் படை மேற்கு திடேட்டர் கமாண்டட் ஆகும்.

இந்த படைப்பிரிவில் இருக்கும் சீன வீரர்களின் எண்ணிக்கை வெறும் 2 லட்சத்து 30 ஆயிரம் தான் உள்ளது. இவர்கள் மட்டுமே மலை பாங்கான அந்த பகுதிகளில் போரிடும் திறன் பெற்று இருக்கிறார்கள். ஆனால் இந்தியாவை பொறுத்தவரை வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள ராணுவம் அனைத்தும் இந்திய-சீன எல்லையில் தான் உள்ளது. அதாவது மொத்தம் 20 லட்சம் இந்திய வீரர்கள் இங்கு நிலைநிறுத்தப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் இந்திய-சீன எல்லையில் இருக்கும் இடங்களை நன்கறிந்தவர்கள். மலை பகுதிகளில் போரிடும் திறன் பெற்றவர்கள். எனவே தரைப்படையில் இந்தியாவே பலம் பொருந்தி உள்ளது. 

விமானப்படை

சீனாவின் மேற்கு திடேட்டர் கமாண்ட் பகுதியில் மொத்தம் 157 போர் விமானங்கள் உள்ளன. ஆனால் இந்தியாவிடம் இந்த பகுதியில் மட்டும் 270 போர் விமானங்கள் மற்றும் நிலப்பரப்பை அழிக்கும் 68 சிறிய ரக விமானங்களும் உள்ளன. அதன்படி விமானப்படையின் எண்ணிக்கையில் இந்த பகுதியில் இந்தியாவின் ஆதிக்கமே அதிகம் உள்ளது. சீனாவின் ஜே-10 போர் விமானத்திற்கு இணையாக இந்தியாவில் மிராஜ் விமானங்கள் உள்ளன. போர் என்றால் இரு நாடுகளும் முதலில் விமான தளங்களை குறி வைத்தே தாக்குதல்களை தொடங்கும். 

அதன்படி இந்தியா தனது பகுதியில் உள்ள அனைத்து விமான நிலையங்களில் இருந்தும் சீனாவின் எல்லை பகுதிகளில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் மிக எளிதாக தாக்கி விடும். அந்த சூழ்நிலையில் சீனாவின் உட்பகுதியில் உள்ள விமான நிலையங்களில் இருந்து இந்திய பகுதிகளை தாக்குவது சீனாவிற்கு பெரும் பிரச்சினையாக இருக்கும். ஒரு வேளை தாக்குதலை தொடங்கினால் கூட இந்தியா அதனை எளிதாக முறியடிக்கும் வாய்ப்புகள் உள்ளது. 

ஏவுகணைகள்

சீனா இந்தியாவின் அனைத்து முக்கிய பகுதிகளையும் தாக்க 104 தாக்குதல்களை நடத்த வேண்டும். ஆனால் இந்தியாவின் 10 எண்ணிக்கையிலான அக்னி 3 ஏவுகணை மூலம் சீனாவின் அனைத்து முக்கிய பகுதிகளையும் இந்தியாவால் தாக்க முடியும். அதேபோல் அக்னி-2 ஏவுகணைகள் மூலம் இந்தியா மத்திய சீன பகுதி முழுவதையும் தாக்கும் திறன் கொண்டது. மிக முக்கியமாக 51 அணுகுண்டுகளை வீசும் திறன் கொண்ட ஜாக்குவார் விமானங்கள் மூலம் ஒட்டுமொத்த சீனாவின் திபெத் பகுதியை இந்தியா எளிதாக அழித்து விடும்.

இந்தியாவுடன் மோதல் ஏற்பட்டால் சீனா தனது நீளமான எல்லையில் உள்ள அனைத்து படைகளையும் ஒன்று திரட்ட வேண்டும். ஆனால் இந்தியாவிற்கு அப்படியல்ல, எளிதாக தனது படைகளை சீன எல்லையில் சேர்த்து விடும். ஏனென்றால் இந்தியாவின் படைகளில் அதிக சதவீதம் ஏற்கனவே சீன மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் தான் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய பலம். இந்தியா சீனாவை விட வலுவான நிலையில் உள்ளது.

இவ்வாறு அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

நன்றி : தினத்தந்தி

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,532 பேருக்கு கொரோனா பாதிப்பு. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,532 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.




தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,532 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,532 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றும் ஒரே நாளில் 2,532 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 59, 377 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், தமிழகத்தில் இன்று மட்டும் 1,438 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 32,754 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் விகிதம் 55.16% ஆக பதிவாகியுள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை இன்று ஒரே நாளில் மட்டும் 1,493 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் சென்னையில் மட்டும் நோயாளிகளின் எண்ணிக்கை 41,172 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 757 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: புதியதலைமுறை

இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு - தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.கே.ஏ ‌செங்கோட்டையன்.









இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு - தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு
 திரு.கே.ஏ ‌செங்கோட்டையன்.

உச்சம் தொட்ட சூரிய கிரகணத்தின் அற்புத காட்சிகள்... காணொளி




உச்சம் தொட்ட சூரிய கிரகணத்தின் அற்புத காட்சிகள்... காணொளி

உலக்கையை நிற்க வைத்து சூரிய கிரகணத்தை கணித்த கிராம மக்கள் காணொளி.




உலக்கையை நிற்க வைத்து சூரிய கிரகணத்தை கணித்த கிராம மக்கள் காணொளி.

அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ மருத்துவ கல்லூரி அரும்பாக்கம், சென்னை - 106 கோவிட்டிற்கான நோயெதிர்ப்பு மேம்பாடு - கோவிட்19 சூடான பானம் செய்முறை:



அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ மருத்துவ கல்லூரி அரும்பாக்கம், சென்னை - 106

 கோவிட்டிற்கான நோயெதிர்ப்பு மேம்பாடு - கோவிட்19

 சூடான பானம் செய்முறை:

 இஞ்சி - 1/4 துண்டு (உரிக்கப்படுகிற)

 துளசி - 10 இலைகள்

 மிளகு1/4 டீஸ்பூன்

 அதிமதுரம் - 1/2 டீஸ்பூன் 

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன் 

தண்ணீர்  - 250 மில்லி

மூல வாசனை மங்கும் வரை கொதிக்க வைத்து, நுகர வடிகட்டவும்.

 வயது வந்தோர் - 50 மிலி / குழந்தைகள் - 20 மிலி 
ஒரு நாளைக்கு இரண்டு முறை

 கோவிட்டுக்கு எதிராக போராட ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க இயற்கை மருத்துவம் மற்றும் யோகா நிபுணர்களால் திட்டமிடப்பட்ட மற்றும் வழங்கப்பட்ட செய்முறை: நன்றி

Saturday 20 June 2020

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.





10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, 10-ம் வகுப்பு தேர்வை ரத்து செய்து அனைத்து மாணவ-மாணவிகளும் தேர்ச்சி என அறிவித்துள்ளார். காலாண்டு, அரையாண்டு மற்றும் மாணவ-மாணவிகளின் வருகை பதிவேட்டின் அடிப்படையில், மதிப்பெண்கள் வழங்கும் பணி சரியான முறையில் செல்கிறது. இதுவரை, அரசு மற்றும் தனியார் பள்ளிகள் காலாண்டு, அரையாண்டு தேர்வு மதிப்பெண்கள் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவேடுகளை மாவட்ட கல்வி அலுவலர்களிடம் 75 சதவீதம் ஒப்படைத்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் உள்ள தனியார் பள்ளிக்கு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுத வரவில்லை. மதிப்பெண் பட்டியலில் கையெழுத்து போடுவதற்காகவே தான் வந்தனர். தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகள் குறித்த கருத்துக்களை பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றுபவர்கள் வெளியிடுவது தவறு. வரும் காலங்களில் இது போன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து நடத்துவது சம்பந்தமாக குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு அளிக்கும் அறிக்கையை பொறுத்து முதல்-அமைச்சர் முடிவு செய்வார். 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும்.

பள்ளிகள் மீது நடவடிக்கை

12-ம் வகுப்பு தேர்வை 34 ஆயிரத்து 864 மாணவர்கள் எழுதவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் 671 மாணவர்கள் 3 பாடங்களில் தேர்வு எழுதாதவர்கள் என தெரிய வந்துள்ளது. தேர்வு எழுதுவதற்கு விருப்பமா? என்று இவர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து வரும் 25, 26-ந் தேதிகளில் முடிவு செய்யப்படும். 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறுவது குறித்து புகார் வந்தால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

நன்றி: தினத்தந்தி

”பள்ளிக்கு நான் தேவையில்லை என்று கூறிவிட்டார்கள்” - இட்லி கடை நடத்தி வரும் தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்


செங்கல் மீது அமர்ந்தவாறு 6 வயது சிறுமி யோகாசனம்... காணொளி




செங்கல் மீது அமர்ந்தவாறு 6 வயது சிறுமி யோகாசனம்... காணொளி

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியதை திரிப்பதா? பிரதமர் அலுவலகம் கண்டனம்... காணொளி



பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கூறியதை திரிப்பதா? பிரதமர் அலுவலகம் கண்டனம்... காணொளி

நாட்டு மக்களுக்கு பாரதப் பிரதமர் மேதகு நரேந்திர மோடி இன்று உரையாற்றுகிறார்... காணொளி


சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்!!!- விஞ்ஞானிகள் அறிவுறுத்தல்... காணொளி



சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பதை தவிர்க்க வேண்டும்!!!- விஞ்ஞானிகள் அறிவுறுத்தல்... காணொளி

சர்வதேச யோகா தினம் இன்று!!- யோகா பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பு... காணொளி



சர்வதேச யோகா தினம் இன்று!!- யோகா பற்றிய ஒரு சிறப்பு தொகுப்பு... காணொளி

ஒரே நிமிடத்தில் கொரோனா தொற்றை கண்டறியும் கருவி... காணொளி



ஒரே நிமிடத்தில் கொரோனா தொற்றை கண்டறியும் கருவி... காணொளி

100 ஆண்டுகளுக்கு முன்னர் இப்போது இருக்கின்ற இந்த நிலைமை போன்றே அப்பொழுது ஏற்பட்டிருக்கிறது அரிய புகைப்படங்கள்.👇👇👇







100 ஆண்டுகளுக்கு முன்னர் இப்போது இருக்கின்ற இந்த நிலைமை போன்றே அப்பொழுது ஏற்பட்டிருக்கிறது அரிய புகைப்படங்கள்.

நவம்பர் 7, 1918 வியாழன்

 கெலோவ்னா நகரத்தின் கூட்டுத்தாபனம்

 பொது அறிவிப்பு

 ஸ்பானிஷ் இன்ஃப்ளூயன்சா பரவுவதைத் தடுப்பதற்காக, அனைத்து பள்ளிகள், பொது மற்றும் தனியார், தேவாலயங்கள், தியேட்டர்கள், திரைப்படங்கள் பட அரங்குகள், பூல் அறைகள் மற்றும் பிற பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் லாட்ஜ் கூட்டங்கள் ஆகியவை மேலும் மூடப்படும் என்று அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.  அறிவிப்பு.

 பத்து அல்லது அதற்கு மேற்பட்டவர்களைக் கொண்ட அனைத்து பொதுக் கூட்டங்களும் தடைசெய்யப்பட்டுள்ளன.
 கெலோவ்னா, பி.சி.
 19 அக்டோபர், 1918.

 டி. டபிள்யூ. சதர்லேண்ட்,
 மேயர்.




திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பணிபுரியும் அர்ச்சகருக்கு கொரோனா... காணொளி



திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பணிபுரியும் அர்ச்சகருக்கு கொரோனா... காணொளி

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை நடைபெறுகிறது... காணொளி



இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை நடைபெறுகிறது... காணொளி

தேநீர் குடித்தவுடன் கப்பை சாப்பிடலாம்...! மதுரையில் அமோக வரவேற்பைப் பெற்ற 'பிஸ்கட் டீ கப்'... காணொளி



தேநீர் குடித்தவுடன் கப்பை சாப்பிடலாம்...! மதுரையில் அமோக வரவேற்பைப் பெற்ற 'பிஸ்கட் டீ கப்'... காணொளி

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்... காணொளி



தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்... காணொளி

காலாண்டு அரையாண்டு தேர்வை, தனியார் பள்ளிகள் மீண்டும் நடத்த முயற்சித்தால் கடும் நடவடிக்கை... மாண்புமிகு கல்வி அமைச்சர். காணொளி.



காலாண்டு அரையாண்டு தேர்வை, தனியார் பள்ளிகள் மீண்டும் நடத்த முயற்சித்தால் கடும் நடவடிக்கை... மாண்புமிகு கல்வி அமைச்சர். காணொளி.

Friday 19 June 2020

கொரோனா தொற்றுநோயின் புதிய மற்றும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம் - உலக சுகதார அமைப்பு



கொரோனா தொற்றுநோயின் புதிய மற்றும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம் - உலக சுகதார அமைப்பு

ஜெனீவா
உலக சுகாதார அமைப்பின்  தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியதாவது:-

அமெரிக்கா, தெற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில்தான் அதிக கொரோனா பாதிப்பு இருந்து வருகிறது.

நாம் தற்போது புதிய மற்றும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம். கொரோனா இப்போதும் அதிவேகமாகவே பரவிக் கொண்டிருக்கிறது.ஆகையால் முக கவசம் அணிவது, சமூக விலகலை கடைபிடிப்பது, கை கழுவுதல் ஆகியவை தற்போதும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

கொரோனா வைரஸ் தாக்குதல் தொடர்பாக உலக நாடுகள் அனைத்தும் மிக மிக கவனமானவும் விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும்.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பது என்பது கடினமான பயணமாக இருக்கிறது இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி:தினத்தந்தி

மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க தயார் - மத்திய அரசு காணொளி



மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க தயார் - மத்திய அரசு காணொளி

வேலூரில் மூன்று நாட்கள் மட்டுமே கடைகள் செயல்படும் மாவட்ட நிர்வாகம் அதிரடி..‌. காணொளி



வேலூரில் மூன்று நாட்கள் மட்டுமே கடைகள் செயல்படும் மாவட்ட நிர்வாகம் அதிரடி..‌. காணொளி

10,11 ஆம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு அரையாண்டு தேர்வில் எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி-பள்ளிக்கல்வித்துறை இயக்குனர். காணொளி


Thursday 18 June 2020

முதல்வர் அலுவலகத்தில் 4 பேருக்கு கொரோனா உறுதி... காணொளி



செப்டம்பர் 20 முதல் ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு அமல். காணொளி



செப்டம்பர் 20 முதல் ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு அமல். காணொளி

ஊர் பெயர்கள் மாற்றம் - அரசாணை வாபஸ் அமைச்சர் பாண்டியராஜன் தகவல் காணொளி



ஊர் பெயர்கள் மாற்றம் - அரசாணை வாபஸ்  அமைச்சர் பாண்டியராஜன் தகவல் காணொளி

20 இந்திய வீரர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டது இப்படித்தானா? காணொளி



20 இந்திய வீரர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டது இப்படித்தானா? காணொளி

சென்னைக்கு குட்பை போடும் மக்கள்- காணொளி



சென்னைக்கு குட்பை போடும் மக்கள்- காணொளி

தமிழகத்தில் எப்படி வழங்கப்படுகிறது இ- பாஸ் காணொளி




தமிழகத்தில் எப்படி வழங்கப்படுகிறது இ- பாஸ் காணொளி

உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அவருக்கு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.



உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து அவருக்கு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

அரசு பல்வேறு தீவிர நடவடிக்கைகளை எடுத்த போதிலும் நோய்த் தொற்று பரவலின் வேகம் குறைவில்லை.

தமிழத்தில் நேற்று புதிதாக 2,141 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 1,373 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதைத்தொடர்ந்து மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 334 ஆகவும், சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 70 ஆகவும் அதிகரித்து உள்ளது.

இதேபோல் நேற்று கொரோனாவுக்கு 49 பேர் பலியானார்கள். இவர்களில் 40 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் சாவு எண்ணிக்கை 625 ஆகவும், சென்னையில் சாவு எண்ணிக்கை 501 ஆகவும் உயர்ந்து இருக்கிறது.

சென்னை மாநகராட்சி பகுதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த 3 மண்டலங்களுக்கு ஒரு அமைச்சரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நியமித்தார். அதன்படி அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 3 மண்டலங்களுக்கும் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நியமிக்கப்பட்டார். இவர் பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களில் ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார்.

இந்த நிலையில் அமைச்சர் கே.பி.அன்பழகன், கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதைத்தொடர்ந்து சிகிச்சைக்காக நேற்று முன்தினம் இரவு அவரை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கு கொரோனா தொற்று ஆரம்ப நிலையில் இருப்பதால், வீட்டுக்கு சென்று தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சையை தொடரலாம் என கேட்டுக் கொண்ட போதும், அவர் ஆஸ்பத்திரியிலேயே தங்கி சிசிச்சை பெற விருப்பம் தெரிவித்ததாக ஆஸ்பத்திரி அதிகாரி தெரிவித்தார்.

அமைச்சர் கே.பி.அன்பழகனின் உடல் நிலை சீராக உள்ளது. ஆஸ்பத்திரியில் அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதே ஆஸ்பத்திரியில்தான் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழனி, அவருடைய மனைவி, மகள் மற்றும் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. கலைராஜன் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: தினத்தந்தி

நள்ளிரவில் குடும்பம் குடும்பமாக சென்னையை காலி செய்யும் மக்கள்... காணொளி



நள்ளிரவில் குடும்பம் குடும்பமாக சென்னையை காலி செய்யும் மக்கள்... காணொளி

சீனாவின் 52 செயலிகளை முடக்க வேண்டும் - மத்திய அரசுக்கு புலனாய்வு அமைப்பு பரிந்துரை... காணொளி




.சீனாவின் 52 செயலிகளை முடக்க வேண்டும் -  மத்திய அரசுக்கு புலனாய்வு அமைப்பு பரிந்துரை... காணொளி

உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி‌. அன்பழகன் தனியார் மருத்துவமனையில் அனுமதி. காணொளி




உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி‌. அன்பழகன் தனியார் மருத்துவமனையில் அனுமதி. காணொளி

ஜூலை முதல் வாரத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும். காணொளி




ஜூலை முதல் வாரத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும். காணொளி

10,11 ஆம் வகுப்புக்கு மதிப்பெண் வழங்க விடைத்தாள்களை ஒப்படைப்பது கட்டாயம் இல்லை. காணொளி


அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் புதுவித முகக் கவசங்கள். வாடிக்கையாளர்கள் வரவேற்பு... காணொளி



அனைத்து பாதுகாப்பு அம்சங்களுடன் புதுவித முகக் கவசங்கள். வாடிக்கையாளர்கள் வரவேற்பு... காணொளி

Tuesday 16 June 2020

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – COVID19/ கொரோனா வைரஸ் பரவுதல் தடுப்பு நடவடிக்கை – வேலூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் அனைத்து துறை அரசு அலுவலர்களும் அலுவலகத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்க மற்றும் வேலூர் மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு / பிற மாநிலங்களுக்கு செல்ல முன் அனுமதி பெற்று செல்ல அறிவுறுத்தல் தொடர்பாக





ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் – COVID19/ கொரோனா வைரஸ் பரவுதல் தடுப்பு நடவடிக்கை – வேலூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் அனைத்து துறை அரசு அலுவலர்களும் அலுவலகத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்க மற்றும் வேலூர் மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு / பிற மாநிலங்களுக்கு செல்ல முன் அனுமதி பெற்று செல்ல அறிவுறுத்தல் தொடர்பாக

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

COVID19/ கொரோனா வைரஸ் பரவுதல் தடுப்பு நடவடிக்கை – வேலூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் அனைத்து துறை அரசு அலுவலர்களும் அலுவலகத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்க மற்றும் வேலூர் மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு / பிற மாநிலங்களுக்கு செல்ல முன் அனுமதி பெற்று செல்ல அறிவுறுத்தல் தொடர்பாக இணைப்பில் உள்ள  வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் சுற்றறிக்கையினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


முதன்மைக்கல்வி அலுவலர்கள், வேலூர்.

*Free online CA Foundation Coaching Class at SIRC of ICAI* தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறையும் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் தென்மண்டல அலுவலகமும் இணைந்து தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கும் தமிழ்நாடு அரசின் உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கும் சிஏ பவுண்டேசன் தேர்வுக்கான இலவச *ONLINE* வகுப்புகளை நடத்தி வருகின்றனர்




*Free online CA Foundation Coaching Class at SIRC of ICAI*

தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறையும் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் தென்மண்டல அலுவலகமும் இணைந்து தமிழ்நாடு அரசு பள்ளி மாணவர்களுக்கும்  தமிழ்நாடு அரசின் உதவிப்பெறும் பள்ளி மாணவர்களுக்கும் சிஏ பவுண்டேசன் தேர்வுக்கான இலவச *ONLINE* வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.

ONLINE மூலம் நடைபெறும் இவ்வகுப்புகள் 2020 நவம்பரில் CA  Foundation தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயணளிக்கும் வகையில் திட்டமிட்டு சுமார் மூன்று மாதங்கள் அதாவது ஜூன் 10ஆம் தேதி முதல் செப்டம்பர் 20ஆம் தேதிவரை நடைபெற இருக்கின்றன. திங்கள் முதல் சனிவரை வாரத்தின் ஆறு நாள்கள் காலை 08.00மணியிலிருந்து 11.15 மணி வரையிலும் மாலை 05.00மணியிலிருந்து இரவு 08.15மணி வரையிலும் இவ்வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

சிஏ பவுண்டேசன் பாடதிட்டத்துக்கு www.icai.org/  www.sircoficai.org/aspire இனையத்தில் பதிவு செய்து, வரும் நவம்பரில் தேர்வு எழுத விரும்புகிற மாணவர்கள் இவ்வகுப்புகளில் இலவசமாக கலந்து கொள்ளலாம். 

இந்த வசதியை பெற்று கொள்ள விரும்பும் மாணவர்கள் 

தங்களது பெயர்:
தந்தை பெயர்:
வசிக்கும் ஊர்:
பிறந்த தேதி:
அலைபேசி எண்:
மின்னஞ்சல் முகவரி:

போன்ற விவரங்களுடன் பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து அரசு பள்ளியில் பயின்றதற்கான  சான்றிதழ் (அல்லது) 12ஆம் வகுப்பு தேர்வின் ஹால் டிக்கட் (ஸ்கேன் செய்து ) sircclasses@icai.in என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி தங்களை பதிவு செய்து கொள்ளவேண்டும். 
இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி மாணவர்கள் சிஏ பவுண்டேசன் தேர்வினை சிறந்த முறையில் எதிர்கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு 8220522669 / 9176826789 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

பட்டயக் கணக்காளர் ஆகவேண்டும் என்ற விருப்பமும் ஆர்வமும் கொண்டவர்கள் https://sircoficai.org/aspire என்ற எங்களது இணைய தளத்தினை அணுகி பயன்பெறலாம்.

இந்த முயற்சி மாண்புமிகு *திரு. K.A. செங்கோட்டையன்* அவர்களின் தலைமையில் இயங்கும் தமிழக பள்ளி கல்வி துறையின் தொடர் முயற்சியால் இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தில் தான் இந்த இலவச online Coaching Class  நடத்தப்படுகின்றன.

 மேலும் ICAI யின் தென்மண்டல (SIRC ) அலுவலகமும் தமிழக பள்ளி கல்வித் துறையும் 2018ஆம் ஆண்டில் எட்டப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசு பள்ளி மாணவர்களுக்கும் அரசின் உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் சிஏ குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, சிஏ பயில விரும்பும் மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளையும் ஊக்கத்தையும் அளித்து வருகிறது   இதன்மூலம் இதுவரை சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட  மாணவர்கள் பயணடைந்திருக்கிறார்கள்.

*தனியார் பள்ளி மாணவர்கள்* இந்த https://bit.ly/3dZLX80  
link மூலம் Rs. 9,500 செலுத்தி Online Coaching Class ல் சேர்ந்து கொள்ளலாம்
 

சிஏ பவுண்டேசன் தேர்வுக்கான இந்த ONLINE வகுப்புகளில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு பயனடைய அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

With Regards
*CA.K.JALAPATHI*
Chairman - Career Counselling Committee- SIRC of ICAI
9842896673