சென்னை: கொரோனா காலத்தில் தமிழகத்தில் உள்ள அலுவலகங்கள் செயல்படுவதற்கான வழிபாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. 65 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், கர்பிணிகள், பல்வேறு நோய் பாதிப்பு உள்ளவர்கள் வீட்டில் இருக்க அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆலோகனை கூட்டங்களை காணொலி காட்சி மூலம் நடத்த தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. அலுவலகங்களில் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் எனவும். எச்சில் துப்புவது தடை செய்ய வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.
அதிக அளவில் கொரோனா தொற்று ஏற்பட்டால் அலுவலகத்தை 2 நாள் மூடி சுத்தப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. அனைத்து அலுவலகங்களிலும் தெர்மல் ஸ்கேனர், கிருமி நாசினி வைத்துறிப்பது அவசியம் என கூறப்பட்டள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருப்பவர்களை வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. பணியாளர்கள் அனைவரும் ஆரேர்ககிய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என அறிக்ககையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி :தினகரன்
No comments:
Post a Comment