சென்னையில் நாளை முதல் நடமாடும் வாகனங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் " சென்னையில் 173 நடமாடும் மருத்துவமனைகள் மூலம் நாளை முதல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது. சென்னையின் 15 மண்டலங்களிலும் தொற்று அறிகுறி உள்ளவர்களுக்கு ஆம்புலன்ஸ் போன்ற நடமாடும் மருத்துவமனை வாகனத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது."
மேலும் அவர் " சென்னையில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், நடமாடும் மருத்துவமனைகளைக் களமிறக்க முடிவு. இந்த முயற்சி மாநகராட்சியுடன் இணைந்து மேற்கொள்ளப்படும்" என்றார்.
இதனிடையே சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 40 நபர்கள் வெளியே சுற்றியதால் அவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. திருவொற்றியூரைச் சேர்ந்த 4 பேர், ராயபுரம் மற்றும் தண்டையார்பேட்டையைச் சேர்ந்த தலா 7 பேர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் மண்டலங்களைச் சேர்ந்த தலா 3 பேர் என மொத்தம் 40 பேர் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி: புதியதலைமுறை
No comments:
Post a Comment