உலகின் கடைசி நாள் ஜூன் 21-ம் தேதியா? சமூக ஊடகங்களில் பரபரப்பை கிளப்பும் மாயன் காலண்டர் கணிப்புகள்
எதிர்வரும் 21ம் தேதியுடன் உலகம் அழிந்துவிடும் என்று மாயன் காலண்டர் கணித்திருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மாயன் இனத்தவர்கள் வாழ்ந்த காலத்தில் உருவாக்கிய நாட்காட்டி வரும் ஜூன் 21-ம் தேதியுடன் நிறைவடைவதால், அன்றைய தினம் உலகம் அழிந்துவிடும் என்ற தகவல் சமூக ஊடகங்களில் மீண்டும் பரபரப்பை எட்டியுள்ளது.
உலகம் முழுவதும் தற்போது கிரிகோரியன் காலண்டர் முறையைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள். 1582-ம் ஆண்டுக்கு முன் இந்த காலண்டர் பரவலாகப் பயன்பாட்டுக்கு வரும் முன் உலகில் பல்வேறு வகையான காலண்டர்கள் காலத்தைக் குறிக்க மக்கள் பயன்படுத்தியுள்ளனர். அதில் முக்கியமானது மாயன் காலண்டர், ஜூலியன் காலண்டர்.
சூரியனை பூமி சுற்றிவரும் காலத்தை அடிப்படை வைத்து கிரிகோரியன் காலண்டர் வடிவமைக்கப்பட்டது. இதைத்தான் அறிவியல் வல்லுநர்களும் அறிவியல்பூர்வமானது என ஏற்றுக்கொண்டுள்ளனர்.
\மாயன் காலண்டர் குறிப்பிட்டுள்ளபடி 2012, டிசம்பர் 21-ம் தேதி கடைசி நாளாகும். ஜூலியன் காலண்டர் கோட்பாட்டின்படி கணக்கில் வரும் 21-ம் தேதிதான் மாயன் காலண்டர் குறிப்பிட்ட 2012, டிசம்பர் 21-ம் தேதியாகும். இதனால் மாயன் காலண்டர் குறிப்பிட்டுள்ளபடி உலகின் கடைசி நாள் ஜூன் 21-ம் தேதியா என சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
2012ம் ஆண்டில் மாயன் காலண்டரின் படி உலகம் அழிந்துவிடும் என்று கூறினர். ஆனால் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.ஏனெனில் இவை அனைத்திற்கும் அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் ஏதுமில்லை. தற்போது 2020ம் ஆண்டு உலகம் அழிந்துவிடும் என்று மீண்டும் தகவல்களை பரப்பிக் கொண்டிருக்கின்றனர். இதற்கும் ஆதாரங்கள் இல்லை. ஆகையால் மக்கள் பீதியடைய தேவையில்லை என நாசா விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர்.
No comments:
Post a Comment