கொரோனாவை கட்டுப்படுத்த வேறு வழியில்லை ; கடும் நடவடிக்கை எடுங்க
மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவு
கொரோனாவை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் அறிவுறுத்தியுள்ளார். கொரோனா தொற்று எந்த பகுதியையும் அதிகம் பாதிக்காத வகையில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும், பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிய குறிப்பிட்ட பகுதிகளில் முகாம் நடத்தி பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கொரோனாவின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக வரும் 30-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மாநிலத்தின் இதர மாவட்டங்களிலும் அதிகரித்து வரும் தொற்று எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் தலைமைச் செயலாளர் தலைமையில் டாஸ்க் ஃபோர்ஸ் அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட வாரியாக மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இயங்குகிறது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் சண்முகம் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியதாவது; கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கரோனா பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிய குறிப்பிட்ட பகுதிகளில் முகாம்களை நடத்தி பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் மற்றும் கரோனா எந்தப் பகுதியையும் பாதிக்காதவாறு மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நன்றி : தினகரன்
No comments:
Post a Comment