Thursday 31 October 2019

பணிபுரியும் இடத்தில் நாம் சந்தோஷமாக இருக்க, இந்த விதிகளைப் பின்பற்றுங்கள்...

பணிபுரியும் இடத்தில் நாம் சந்தோஷமாக இருக்க, இந்த விதிகளைப் பின்பற்றுங்கள்...


1.  *யாரையும் நம்பாதீர்கள் ஆனால் எல்லோரையும் மதியுங்கள்

2. *பள்ளியில் நடப்பதை அங்கேயே விட்டுவிடுங்கள். பள்ளி கிசுகிசுக்களை வீட்டிற்கோ அல்லது வீட்டின் கிசுகிசுக்களை பள்ளிக்கோ சுமந்து வர வேண்டாம்.

3. *சரியான நேரத்திற்கு பள்ளிக்கு வந்து அதே போல சரியான நேரத்திற்கு பள்ளியிலிருந்து செல்லுங்கள்.

4.  *நமது பணிக்கு தொடர்பில்லாத தேவையற்ற பேச்சுக்களை தவிருங்கள்.  அதனால் மோசமான பின்விளைவுகளையே சந்திக்க நேரிடும்.

5. *எதையுமே எதிர்பார்க்காதீர்கள்.  யாரும் உதவினால் நன்றியோடு இருங்கள்.   உதவாத பட்சத்தில் அக்காரியத்தை நீங்களே செய்து கொள்ளக் கற்பீர்கள்.

6. *பணியை மிகச் சிறப்பாக செய்யுங்கள் அதற்கு அங்கிகாரம் கிடைத்தால் வாழ்த்துக்கள்.  கிடைக்காவிட்டால் பரவாயில்லை.  உங்கள் அறிவாற்றலுக்கும் அடுத்தவர்களை நீங்கள் மதிக்கும் பாங்கிற்காகவுமே உங்களை அனைவரும் நினைவில் வைத்திருப்பார்கள்

7.*நான் எனும் அகங்காரத்தை அறவே ஒழியுங்கள்.  ஈகோ வேண்டவே வேண்டாம். சம்பளத்திற்காக அல்ல மனசாட்சிக்கு பயந்து வேலை செய்யுங்கள் நம்முடைய நற்குணங்களே நம் சொத்துக்கள். அவையே நம் சந்தோஷத்தின் ஊற்றுக்கண்.

8.  *அடுத்தவர் உங்களை எப்படி நடத்தினாலும் பணிவோடு இருங்கள்.  எல்லோரையும் எப்போதும் திருப்திப் படுத்திவிட முடியாது.

9. *இறுதியில் நம் குடும்பம், நண்பர்கள், வீடு, ஆழ் மன அமைதியை விட எதுவும் பெரிதில்லை.

இந்திய நாட்டின் புதுப்பிக்கப்பட்ட வரைபடம் 2019

இந்திய நாட்டின் புதுப்பிக்கப்பட்ட வரைபடம் 2019


இந்திய நாட்டில் இனி 28 மாநிலங்கள் 9 யூனியன் பிரதேசங்கள் ஆகும்.

நவம்பர் மாதம் பள்ளி நாட்காட்டி 2019r

நவம்பர் மாதம் பள்ளி நாட்காட்டி 2019

*அரசு வெளியீடு*

*பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்*





Wednesday 30 October 2019

ஸ்கூட்டர் இருக்குதா கொஞ்சம் கவனியுங்களேன்!!! காணொளி

ஸ்கூட்டர் இருக்குதா கொஞ்சம் கவனியுங்களேன்!!!
காணொளி





ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு!!

ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு!!


https://youtu.be/EKmsZlKUsUk

 இனி laptop தேவை இல்லை.laptop-இல் open ஆகும் அனைத்து பக்கங்களும் இனி நமது ஆண்ட்ராய்டு மொபைலிலும் open ஆகும்.                        அதற்கு தேவை *puffin web browser*  எனும் apps........          எப்படி install செய்வது & settings-இல் ஒரு மாற்றம் செய்வது?.............1.Google Play Store...➡ puffin web browser....➡ install.   2.Apps Open...➡click 3 dots...➡ click settings🔆...➡ click Webpage preference....➡ click  Request desktop site....               அவ்வளவு தான்.இனிமேல் EMIS open செய்து login கொடுத்து எதனை open செய்து update செய்ய வேண்டுமோ அதனை Long press click செய்து அதனை update செய்யலாம். academic record, weekly timetable assign, school profile,indent, distribution அனைத்தும் openஆகும் நமது மொபைலில்.
நாளை ( 31.10.2019) அனைத்துப் பள்ளிகளிலும் ஒருமைப்பாட்டுத் தினம் கடைபிடிக்க கல்வித்துறை உத்தரவு!


சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்தநாளான அக்.31-ல் அனைத்துப் பள்ளிகளிலும் ஒருமைப்பாட்டுத் தினம் கடைபிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் காலை 11 மணிக்கு ஒருமைப்பாட்டு தின உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று கல்வித்துறை துணை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்

நாளை எடுக்க வேண்டிய உறுதிமொழி


அடுத்த 24 மணி நேரதத்தில் உருவாகிறது மகா புயல் : 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

*அடுத்த 24 மணி நேரதத்தில் உருவாகிறது மகா புயல் : 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!*


ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரதத்தில் புயலாக மாறும் இதற்கு மகா ( MAHA ) என பெயரிடப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவனந்தபுரத்திற்கு தென்மேற்கே 220 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. குமரி, நெல்லை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களிலும் மிக பலத்த மழை பெய்யும் என எச்சரித்துள்ளது.

திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது

கீ.வ.குப்பம் ஒன்றியம் அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் கூட்டம் 30-10-2019 புதன்கிழமை பி.கே.புரம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது

3,362 பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறிக்கை தர வேலூர் மாவட்ட ஆட்சியர்
உத்திரவு.
இதன் அடிப்படையில்


கீ.வ.குப்பம் ஒன்றியம் அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் கூட்டம்
30-10-2019 புதன்கிழமை பி.கே.புரம் நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
கூட்டத்தில் வட்டாரக்கல்வி அலுவலர்கள் வ.கமலநாதான், என்.பி.கண்ணன்
டெங்கு விழிப்புணர்வு. ஆழ்துளை கிணறு விவரம் பற்றிய படிவம்,'குழந்தைகள் வன்கொடுமை- காரணிகள், விளைவுகள் மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த ஒருநாள் கருத்துப்பட்டறை" கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்கள்.
வட்டார வளமையம் மேற்பார்வையாளர்,
ஆசிரிய பயிற்றுனர்கள் கலந்து கொண்டு பல்வேறு கல்வி செய்திகளை கூறினார்கள்.











IFHRMS IMPLEMENTATION - REGARDING

IFHRMS IMPLEMENTATION - REGARDING





Tuesday 29 October 2019

3,362 பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறிக்கை தர வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

3,362 பள்ளி தலைமை ஆசிரியர்கள் அறிக்கை தர வேலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு


பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் அருகில் உள்ள பயனற்ற ஆழ்துளை கிணறுகள் பற்றி அறிக்கை தர வேண்டும். வேலூர் மாவட்டத்தில் 3,362 பள்ளி தலைமை ஆசிரியர்களும் அறிக்கை தர ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். பயனற்ற ஆழ்துளை கிணறுகள் இருந்தால் ஆணையர், விஏஓ உள்ளிட்டோரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க ஆணையிட்டுள்ளார்.

கீழ்கண்ட Link மூலமாக தோன்றும் படிவத்தை Online.மூலமாக பூர்த்தி செய்து  Submit தரவும்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeCnZ7oN4RZT95wTrMFiQo_dOYqfLOPoIoYmYGYNcY3ARKZ9Q/viewform

Flash News : கனமழை காரணமாக 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ( 30.10.2019) விடுமுறை அறிவிப்பு.

Flash News : கனமழை காரணமாக 8 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ( 30.10.2019) விடுமுறை அறிவிப்பு.



வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் தொடர் மழை காரணமாக இன்று 30-10-2019 விடுமுறை-- மாவட்ட ஆட்சியர் வேலூர்

தொடர் மழை காரணமாக  சிவகங்கை மாவட்ட  பள்ளி, கல்லூரிகளுக்கு ( 30.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.

தொடர் மழை காரணமாக  மதுரை மாவட்ட  பள்ளிகளுக்கு ( 30.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.

தொடர் மழை காரணமாக  ராமநாதபுரம் மாவட்ட  பள்ளிகளுக்கு ( 30.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.

தொடர் மழை காரணமாக  விருதுநகர் மாவட்ட  பள்ளிகளுக்கு ( 30.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.

தொடர் மழை காரணமாக  தூத்துகுடி மாவட்ட  பள்ளி, கல்லூரிகளுக்கு ( 30.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.

தொடர் மழை காரணமாக கொடைக்கானல்   வட்ட  பள்ளி , கல்லூரிகளுக்கு ( 29.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.

தொடர் மழை காரணமாக  தேனி மாவட்ட  பள்ளிகளுக்கு ( 30.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.










அனைத்துவகை (மெட்ரிக், சி.பி.எஸ்.இ பள்ளிகள் உட்பட) தொடக்க/ நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

அனைத்துவகை (மெட்ரிக், சி.பி.எஸ்.இ பள்ளிகள் உட்பட) தொடக்க/ நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

அனைத்துவகை தொடக்க/ நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களின் பாதுகாப்பு  சார்ந்து பயன்பாடில்லா ஆழ்துளை கிணறுகள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதை உறுதி செய்தல்  மற்றும்  மாணாக்கர்களின் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளல்  சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை (மெட்ரிக், சி.பி.எஸ்.இ பள்ளிகள் உட்பட) தொடக்க/ நடுநிலை/உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.




முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

RH LIST 2019 - மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள்.

RH LIST 2019 - மீதமுள்ள வரையறுக்கப்பட்ட விடுப்பு நாட்கள்.


 1. 14-01-2019; திங்கள்- போகிப் பண்டிகை
2. 21-01-2019; திங்கள்- தைப்பூசம்

3. 19-02-2019; செவ்வாய்- மாசி மகம்

4. 04-03-2019; திங்கள்- மகாசிவராத்திரி
5. 06-03-2019; புதன் -சாம்பல் புதன்

6. 03-04-2019; புதன் -ஷபே மேராஜ்
7.18-04-2019; வியாழன்- பெரிய வியாழன்

8. 07-05-2019; செவ்வாய்- ரம்ஜான் முதல் நாள்

9. 01-06-2019; சனி- ஷபே காதர்

10. 03-08-2019; சனி- ஆடிப்பெருக்கு
11. 09-08-2019; வெள்ளி- வரலெட்சுமி விரதம்.
12. 14-08-2019; புதன்- ரிக் உபகர்மா.
13. 16-08-2019; வெள்ளி- காயத்ரி ஜெபம்

14. 11-09-2019; புதன்- ஓணம் பண்டிகை.
15. 28-09-2019; சனி- மஹாளய அமாவாசை

16. 02-11-2019; சனி- கல்லறைத் திருநாள்
17. 12-11-2019; செவ்வாய்- குருநானக் ஜெயந்தி

18. 10-12-2019; செவ்வாய்- கார்த்திகை தீபம்
19. 24-12-2019; செவ்வாய்- கிருஸ்துமஸ் ஈவ்
20. 31-12-2019; செவ்வாய்- நியூ இயர்

EMIS ல் Mobile Phone ல் Create master time table பதிவது எப்படி?



*EMIS ல் Mobile Phone ல் Create master time table பதிவது எப்படி?*


       https://youtu.be/aoZsURJLGHw


*COPY LINK*:👇👇

https://emis.tnschools.gov.in/TimetableController/loadDefaultTimeTable

     *ஆசிரியர் TECH*
       *YOUTUBE*
*தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பயனற்ற நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும் -பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.*







காலைவழிபாட்டுச் செயல்பாடுகள் - 30-10-2019 - T.தென்னரசு

காலைவழிபாட்டுச் செயல்பாடுகள் - 30-10-2019 - T.தென்னரசு




காலைவழிபாட்டுச்  செயல்பாடுகள்
30-10-2019
இன்றையதிருக்குறள்

குறள் : 612

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு.

விளக்கம் :

செயலைத் தொடங்கிக் குறையாக விட்டவரை இவ்வுலகம் கைவிடும். ஆகையால், செயலில் முயற்சி இல்லாது இருத்தலைத் தவிர்க்க வேண்டும்.

குறள் விளக்க கதை:

ஒரு விவசாயிக்கு வயது அதிகமானதால் இறக்கும் தருவாயில் இருந்தார். தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள், அவர் தம் பிள்ளைகளை அருகில் அழைத்தார். தன்னுடைய நிலங்களை அவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். அது மட்டுமல்லாமல், அந்த நிலங்களில் ஓரிடத்தில், ஓரடி ஆழத்தில் புதையல் இருப்பதாகச் சொன்னார். அதைத் தேடி எடுத்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு இறந்து போனார்.

பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேண்டிய இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள். அதன்பின், அவர் குறிப்பிட்டிருந்த புதையலை எடுப்பதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள்.

முதலில் மூத்த மகனின் நிலம் முழுவதையும் ஒரு அடி ஆழத்துக்கு தோண்டினார்கள். புதையல் எதுவும் கிடைக்கவில்லை. ஒருவேளை, அப்பா இரண்டடி என்று சொல்வதற்கு பதிலாக ஓரடி என்று சொல்லிவிட்டாரோ என்ற சந்தேகத்தில் பிள்ளைகள் மூவரும் சேர்ந்து, மூத்தவனின் நிலத்தை இன்னும் ஓரடி ஆழமாகத் தோண்டினார்கள். அப்போதும் அவர்களுக்குப் புதையல் கிடைக்கவில்லை.

எப்படியும் புதையலைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வெறியில், இரண்டாவது மகனின் நிலத்தையும் இரண்டடி வரை தோண்டினார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது. இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட முடியும் என்று கடைசி மகனின் நிலத்தையும் இரண்டடி தோண்டினார்கள். மறுபடியும் ஏமாற்றமே.

அப்பா மேல் வருத்தம் வந்தாலும், அவர்கள் சரி தோண்டியது வீணாக வேண்டாம் என்று எண்ணி, அந்த நிலங்களில் விதை விதைத்தார்கள். நீர் பாய்ச்சினார்கள். உரம் போட்டார்கள். உழைப்பு வீண் போகுமா? ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில் அமோக விளைச்சல். அறுவடை செய்து விற்றதில் அவர்களுக்குக் கொள்ளை லாபம்.

இப்படி உழைப்பால் வரும் பயனைத்தான் அப்பா புதையல் என்று குறிப்பிட்டார் என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள்.

நீதி :

எந்த செயல் எடுத்தாலும் அதை பாதியில் நிறுத்து விடாமல் விடாமுயற்சியுடன் செய்தால் கண்டிபாக பலன் கிடைக்கும்.

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
பொன்மொழி

கனவுகள் எல்லை எனில், புரட்சிகரமான சிந்தைனைகள் இல்லை. சிந்தனைகள் இல்லையேல் செயல்பாடுகள் இல்லை. தொழில் நுட்பம் மற்றும் மரபுவழி செயல்களைக் கொண்ட ஒட்டு மொத்த அணுகுமுறையே தேசத்தின் வளர்ச்சியில் வளமான நிறைவைத் தரும்.
 - அப்துல் கலாம்

✡✡✡✡✡✡✡✡
பழமொழி மற்றும் விளக்கம்
இஞ்சி தின்ற குரங்கு போல
விளக்கம் :
இஞ்சியைப் போன்ற தோற்றமுள்ள காட்டு மஞ்சள் கிழங்கின் மீது குரங்குக்கு மிகுந்த விருப்பம். இது மாங்காய் இஞ்சியைப் போன்றது. காரமில்லாதது சற்று இனிப்பும் அதில் இருக்கும். அதை ருசி கண்ட குரங்கு அதுபோலவே தோன்றும் சாதாரண இஞ்சியைக் கண்டு ஏமாந்து கடித்துச் சுவைத்து விடும். அப்போது ஏற்படும் அதன் முகபாவத்தையும் கோபத்தையும் குறிப்பது தான் இந்தப் பழமொழி.
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
Important  Words
1. Father - in - law - மாமனார்
2. Daughter -in-law - மருமகள்
3. Mother-in-law - மாமியார்
4. Foe - எதிரி

✍✍✍✍✍✍✍
பொதுஅறிவு

1. சேக்கிழாருக்கு எங்கு கோயில் உள்ளது ?

 குன்றத்தூர்

2. நவீன வானவியலின் தந்தை யார் ?

நிகோலஸ் கோபர்னிகஸ்

📫📫📫📫📫📫📫📫
விடுகதை

1.பொட்டுப் போல இலை இருக்கும், குச்சி போல காய் காய்க்கும். அது என்ன ?

முருங்கை

2. காகிதத்தைக் கண்டால் கண்ணீர் விடும். முக்காடு போட்டால் மூலையில் அமரும். அது என்ன?

பேனா

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
அறிவோம்! கூறுவோம் !விவசாயம்!

அவரைக்காய்

🍡 இந்தியா போன்ற தெற்காசிய பகுதிகளில், குறிப்பிட்ட காலநிலையில் வளரக்கூடிய கொடி வகை தாவரம் அவரை.

🍡 விவசாயம் பழகிய காலத்திலிருந்தே இந்த காய்களை உண்ணும் பழக்கம் இருந்திருக்கிறது. இலக்கியங்களிலும் அதற்கான சான்றுகள் உண்டு. அவரைக்காயில் ஏராளமான வகைகள் உண்டு.

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
தொகுப்பு:
T.தென்னரசு. ஊ.ஒ.ந.நி.பள்ளி, காட்டூர், திருவள்ளூர் மாவட்டம்.
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

செய்திச்சுருக்கம்.

🔮சுஜித் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சமும், அ.தி.மு.க. சார்பில் ரூ.10 லட்சமும் வழங்கப்படும் - முதல் அமைச்சர் பழனிசாமி.

🔮ராஜராஜ சோழனின் 1034வது சதய விழா; தஞ்சையில் நவம்பர் 6ந்தேதி கொண்டாடப்படுகிறது.

🔮இந்தியர்களின் மூளை சிறியது ஆய்வில் தகவல்.
    ஐதராபாத் ஆய்வாளர்கள் ஆராய்ச்சியாளர்கள் முதன்முதலில் இந்தியர்களின் மூளை அட்லஸை உருவாக்கியுள்ளனர்.

🔮3 நாட்களில் 1,100 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளன - திருவள்ளூர் ஆட்சியர் மகேஷ்வரி தகவல்.

🔮பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி: முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்விடோலினா, சிமோனா ஹாலெப் வெற்றி.

🔮இந்தியாவிலேயே முதல் முறையாக விவசாயிகளின் வருமானத்தை பெருக்க சட்டம் இயற்றியது தமிழக அரசு.

HEADLINES

🔮 No move to merge Yanam with Andhra Pradesh, says Kiran Bedi.

🔮Borewell death: TN to convert all dry wells into rainwater harvesting structures.

🔮India’s first ever day-night Test to be against Bangladesh in Kolkata.

🔮Questions grow over NGO’s invitation to European Union parliamentarians.

EMIS பதிவுகளை இனிமேல் எளிதாக Mobile phone லேயே பதியலாம் எப்படி!!!* *காணொளி

*🙋‍♂EMIS பதிவுகளை இனிமேல் எளிதாக Mobile phone லேயே பதியலாம் எப்படி!!!*
 *காணொளி👇📹*



    *NO COPY ,PASTE*

        *NO LINK*: 🙆‍♂🙆‍♂

      *ஆசிரியர் TECH*
            *YOUTUBE*

Monday 28 October 2019

தமிழகத்தில் 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்


தமிழகத்தில் 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்


சென்னை: தமிழகத்தில் 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், தென் தமிழகத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, மதுரை, புதுக்கோட்டையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.


தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடதமிழகத்தில் திருவள்ளூர், திருவண்ணாமலை விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sunday 27 October 2019

பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்தால் கிடைக்கும் பலன்கள்!

பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்தால் கிடைக்கும் பலன்கள்!



வீடு நருமணத்துடன் இருக்க இதை மட்டும் செய்யுங்க.இத்தனை நாள் தெரியாமல் போச்சே!

வீடு நருமணத்துடன் இருக்க இதை மட்டும் செய்யுங்க.இத்தனை நாள் தெரியாமல் போச்சே!


மங்கள வாத்தியம் தினமும் உங்கள் வீட்டில் ஒளிக்கட்டும் செல்வம் பெருகும்.

மங்கள வாத்தியம் தினமும் உங்கள் வீட்டில் ஒளிக்கட்டும் செல்வம் பெருகும்.


எட்டு லட்சுமிகளும் சக்திவாங்கும் அதிகசக்திகொண்ட நேரம்

எட்டு லட்சுமிகளும் சக்திவாங்கும் அதிகசக்திகொண்ட நேரம்




வீட்டையும் மனதையும் புனிதமாக்கும் கல் உப்பு

வீட்டையும் மனதையும் புனிதமாக்கும் கல் உப்பு




இன்றைய 28-10-19 இராசி பலன்


இன்றைய 28-10-19 இராசி பலன்




அரசு பள்ளியில் விரைவில் யோகா பயிற்சி

அரசு  பள்ளியில் விரைவில் யோகா பயிற்சி



*மக்கள் மனதை வென்ற அமைச்சர்*

*மக்கள் மனதை வென்ற அமைச்சர்*




..
படம் சொல்லும் ஆயிரம் விஷயத்தை .....

அமைச்சர் விஜய பாஸ்கர்..சுகாதாரத்துறை அமைச்சர் , சட்டையில் மண் ( மாற்றுதுணி கொண்டுவர சொல்ல நேரமாகிருக்காது) , இறங்கி வேலை செய்திருக்கிறார் , உட்கார சாதாரண ஸ்டூல் (நினைத்தால் நல்ல சேரில் நல்ல வசதியான இடத்தில் உட்கார்ந்திருக்கலாம் ), விஷயத்தை முதல்வருக்கு சொல்ல பவர்பேங்க் மாட்டிய செல்போன் ( பல நேரமாக அங்கிருப்பதால் செல்போனில் சார்ஜ் குறைந்திருக்கும் ) , இதற்கும் மேல் அனைத்து காப்பாற்றும் ஊழியர்களை விரைவில் காப்பாற்றும் படி கையெடுத்து கும்பிட்டு கேட்டுகொண்டார் ( அதிகாரம் செய்ய பவரும் உண்டு , அக்கறையின் வெளிபாடு )

நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன் அமைச்சர் விஜய பாஸ்கர்....

சமூக அக்கறையுள்ள மனிதனாக நீங்கள் எங்களின் மனங்களை வென்று விட்டீர்கள்.

வாழ்த்துக்கள் சகோ.விஜயபாஸ்கர் MLA
#Salute_MLA_VijayaBaskar

ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்துவிட்டான் என்ற சம்பவம் வெளியே தெரியவந்த பின், ஓரிரு மணி நேரத்தில் சம்பவ இடத்திற்குச் சென்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இன்னமும் கூட அந்த இடத்தைவிட்டு நகரவில்லை. விஜயபாஸ்கர் நடுக்காட்டுப்பட்டிக்கு சென்று கிட்டத்தட்ட 60 மணி நேரமாகி விட்டது. விஜயபாஸ்கருடன் அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் உடனிருந்தார்.

ஆனால், விஜயபாஸ்கர் சற்றும் ஓய்வில்லாமல் அதிகாரிகளுக்கு உத்தரவிடுவது, ஊடகங்களுக்கு சரியான தகவல்களை கொடுப்பது என பம்பரமாக சுழன்றுக் கொண்டு இருக்கிறார். நேற்று வந்த உடையை கூட மாற்றாமல் அவர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் செல்போனில் சார்ஜ் குறையாமல் இருக்க "பவர்பேங்க்" ஆகியவற்றுடன் அமர்ந்துள்ளார்.சிறுவனின் நிலை குறித்து பொது மக்களுக்கு ஊடகங்கள் வாயிலாக சரியான தகவல்களை குறைந்தபட்சம் 2 மணி நேரத்திற்கு ஒரு முறை தெரிவித்து வருகிறார். பல்வேறு மீட்பு படைகள் வந்தாலும் அதனை ஒருங்கிணைக்கும் பணிகளையும் பார்வையிட்டு வருகிறார்.

மிக முக்கியமாக அமைச்சர் விஜயபாஸ்கர் ஊடங்களுக்கு பேட்டியளிக்கும் போது இப்போது வரை நம்பிக்கையை விடவில்லை அவரின் ஒவ்வொரு பேட்டியிலும் "குழந்தை பத்திரமாக மீட்கப்படுவான்" என சொல்லிக்கொண்டே இருக்கிறார். இது அனைவருக்கும் நம்பிக்கை கொடுப்பதாகவே இருக்கிறது. அதுதான் தொலைக்காட்சியில் மீட்பு காட்சிகளை பார்ப்பவர்களுக்கும் டானிக்காகவும் இருக்கிறது.

சாதாரண ஏழை பாமரனுக்கும் அமைச்சரவை ஓடி வந்து நிற்கும் என்பதற்கு வரலாற்று பதிவு தங்கள் உழைப்பு

4th std English Term 2 Save wisely (story)

4th std English Term 2
Save Wisely story


4th std English Term 2 What do humans save

4th std English Term 2 
What do humans save


4th std English Term 2 A Lesson to save (story)


4th std English Term 2
A Lesson to save (story)


4th std English Term 2 A True Friend (story)


4th std English Term 2 
A True Friend (story)


4th std English Term 2 The real wealth (musical poem


4th std English Term 2 
The real wealth (musical poem)



4th std English Term 2 
APPA (DAD) Story





5th std. Term 2 English. Unit 1 The Two Pigeons- 3



  

5th std. Term 2 English. Unit 1 The Two Pigeons 2




5th std term 2-English - unit 1- Let us read- The two pigeons


https://youtu.be/Az7DwXvjzyM



5th std term 2 English
HOSPITALITY - Mother Nature-3




5th std term 2 English
HOSPITALITY - Mother Nature 2






5th std term 2 English
HOSPITALITY - Mother Nature 1


https://youtu.be/HBl_bjvGvmM



5th std term 2 English
HOSPITALITY - Gift 2






5th std term 2 English
HOSPITALITY - Gift


https://youtu.be/TiwQHKgNlEU

கொசு முற்றிலும் வீட்டிற்கு வரமால் தடுப்பது எப்படி?




யாரிடம் கர்வமாக பேசக்கூடாது


12 இராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்- ஜோதிடர்களின் கணிப்பு 2019-2020


https://youtu.be/esXyY6fXoxQ

இன்றைய இராசி பலன் 27-10-2019


https://youtu.be/40r4xeViV3o

கோவிலுக்கு எப்படி செல்ல வேண்டும்?



Saturday 26 October 2019


டெங்கு காய்ச்சல் எதிரொலி.
பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம்
பள்ளிக்கல்வி இயக்குனர் அதிரடி உத்திரவு.






தீபாவளி பெஷல் சோமாஸ்


https://youtu.be/gmTOTEvFmMc

வேகமாக காய்ச்சல்,சளி, இருமல் குணமாக கசாயம் செய்வது எப்படி?


https://youtu.be/uJmjLzDyEXE

வீட்டிலும் வியாபாரத்திலும் ஏற்பட்ட கண் திருஷ்டி,தீய சக்தி நீங்க மற்றும் திரும்ப ஏற்படாமல் இருக்க...

தீபாவளி நாளில் இந்த பாடலை வீட்டில் ஒலிக்க செய்து பருங்களேன்


https://youtu.be/gmVdEO7K3X4

தீபாவளி நாளில்
நாதஸ்வரம் தவில் இசை


https://youtu.be/fnFpPc5PuUE



தீபாவளி நாளில் செய்யக்கூடாத 5 செயல்கள்.







தீபாவளி பாடல்கள் தொகுப்பு







தீபாவளி Color full கோலம்








*🙋‍♂🙏குரு பெயர்ச்சி 2019:*
*குருவிற்கு செய்ய வேண்டிய வழிமுறைகள்*


          https://youtu.be/kcXVxt0VTzQ



தீபாவளியன்று வழிபடும் நேரம் மற்றும் முறை,கேதாரி விரத முறை. காணொளி

                              https://youtu.be/lFVfUQMEGlc

EMIS ல் CCE மதிப்பெண்கள் தவறுதலாக பதிந்து FINAL SUBMIT கொடுத்துவிட்டாலும் திருத்திக்கொள்ள UPDATE வந்தாச்சி!!!

EMIS ல் CCE மதிப்பெண்கள் தவறுதலாக பதிந்து FINAL SUBMIT கொடுத்துவிட்டாலும்
திருத்திக்கொள்ள UPDATE வந்தாச்சி!!!





ஆசிரியர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்!

ஆசிரியர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்!! இனி வரும் காலங்களில் அனைத்து கல்வித் துறை சார்ந்த தகவல்களும் வலைதளத்தில் பதியவேண்டி உள்ளது. ஆசிரியர்கள் இன்னும் கணினி பழக தெரியவில்லை வலைதளம் செல்ல தெரியவில்லை என தங்களை மேம்படுத்திக் கொள்ளாமல் இன்னும் கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்று இவற்றையெல்லாம் அப்லோட் செய்து கொண்டிருப்பதை தவிர்க்க வேண்டுகிறோம். ஏனெனில் இனிவரும் காலம், எல்லா நிகழ்வுகளும் நிர்வாகங்களும் இ கவர்னன்ஸ் என்னும் இன்டர்நெட் வழி நிர்வாகமாகவே அமைய உள்ளது.. 

எனவே தங்களை இன்னும் கணினி இயக்க தெரியாமல் ஆசிரியர்கள் இருக்கவேண்டாம்... உடனடியாக தங்களுக்கு தெரிந்தவர்களிடம் அல்லது தங்கள் மகன் மகள் உறவினர் இடமோ அல்லது கணினி கற்பிக்கும் நிலையங்களுக்கு சென்றோ கணினியை கையாள எம்எஸ் ஆபீஸ் என்னும் படிப்பை படித்து தெரிந்து கொள்ளுங்கள் ...ஓய்வு நேரத்தில் மாலையில் ஒரு மணிநேரம் இதற்கென செலவு செய்யுங்கள்... 

ஏறக்குறைய 60 நாட்களில் அத்தியாவசியமான கணினி பணிகளை நமக்கு நாமே செய்ய தயாராகிக் கொள்வோம். அடுத்தவரை நம்பி இனி இருக்கும் நிலையில் இனி பணியை செய்வது என்பது இயலாத காரியமாக அமையும் ....எனவே ஆசிரியர்கள் இன்னும் தாமதிக்காமல் வயது வித்தியாசம் பாராமல் இவ்வளவு வயதாகிவிட்டது இனியும் என்ன என சங்கோஜப்படாமல் உடனடியாக கணினி மையங்களுக்குச் சென்று எம்எஸ் ஆபீஸ் என்ற கோர்ஸை முடியுங்கள் ....உங்களை நீங்கள் மேம்படுத்திக் கொள்ளுங்கள் please update your self as a computer knowledged person.

Friday 25 October 2019


*🙋தீபாவளி: 5 நிமிடத்தில் பலகாரம் ரெடி. காணொளி*

         https://youtu.be/pAJ-Waejmxg
*🙆‍♂தீபாவளி: 5 விதமான ஈசி காரவகைகள். காணொளி*

https://youtu.be/AFSrebARMTs



*🙆‍♂தீபாவளி அதிரசம் செய்ய செய்ய முக்கியமான மூன்று விஷயம்!!! காணொளி*



*👩‍🦱தீபாவளி சிறப்பு எளிய ரங்கோலி கோலம் காணொளி*

https://youtu.be/pnAiXrZnPkU

*👩‍🦱🧨தீபாவளி கொண்டாடுவதன் வரலாறு பார்ப்போமா!!! காணொளி*

https://youtu.be/1R1JpOIFNTk





தமிழகமெங்கும் வியாபித்திற்கும் அனைத்து ஆசிரிய பெருமக்கள் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்துக்கள்!!! உங்களில் ஒருவன் இரா.இரவிச்சந்திரன்.



அனைத்து பார்வையாளர்களுக்கும்

sunmoonchannel.blogspot.com

மனமார்ந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.



பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆதார் முகாம் - Proceedings



அரசு பள்ளி மாணவர்களுக்கு யோகா மற்றும் மனவளர் கலைகள் கற்றுத்தர ஒப்பந்தத்தில் கையெழுத்து - அமைச்சர் செங்கோட்டையன்:


யோகா உள்ளிட்ட மனவளர் கலைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை மூலம் செயல்படுத்த புரிந்துணர்வு ஓப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மும்பையில் உள்ள கைவல்யதாமா நிறுவனத்தில் அமைச்சர் செங்கோட்டையன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு யோகா, மனவளர் கலைகள் கற்றுத்தரப்படும் என்று அமைசை்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார்.

ரூ.10 லட்சம் வரை உள்ள தனி நபருக்கு அடுத்த நிதியாண்டு முதல் வருமான வரிவிலக்கு !




பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில் வருமான வரி உச்சவரம்பை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. தனி நபர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்தை தாண்டினால் 5% வரி விதிக்கப்படுகிறது. ஏற்கனவே பெரும்பாலான பொருட்களுக்கும் ஜிஎஸ்டி உள்ள நிலையில், வருமான வரி செலுத்த வேண்டி இருப்பதால் வர்த்தகத்தில் பணப்புழக்கம் குறைந்து வருவது பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இதனால் ரியல் எஸ்டேட், மோட்டார் வாகன உற்பத்தி என அனைத்திலும் விற்பனை குறைந்து தேக்கம் காணப்படுகிறது.

இது குறித்து தீவிரமாக யோசித்து வரும் மத்திய நிதியமைச்சகம், வருமான வரி உச்சவரம்பை உயர்த்த திட்டமிட்டு வருகிறது.ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் வரை உள்ள தனி நபருக்கு அடுத்த நிதியாண்டு முதல் வருமான வரிவிலக்கு அளிக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. அதே போன்று ஆண்டு வருமானம் 5 கோடியே தாண்டினால் 42.74%வரி விதிக்கப்படுகிறது. இந்த அளவுகோல் ஆசிய நாடுகளில் 29.99% ஆக உள்ளது. இதே பிரச்சனைகளால் அண்மையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வரி விகிதம் குறைக்கப்பட்டது.

Thursday 24 October 2019


*CCE மதிப்பெண்கள் Mobile Phone ல் பதிவு செய்வது எப்படி? காணொளி*


https://youtu.be/HCegTM7G25E



காலை வழிப்பாட்டு 
செயல்பாடுகள் - 25.10.19n


திருக்குறள்


அதிகாரம்:வெகுளாமை

திருக்குறள்:304

நகையும் உவகையும் கொல்லும் சினத்திற்
பகையும் உளவோ பிற.

விளக்கம்:

முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?.

பழமொழி

Difficulties  give way to diligence.

 கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.

இரண்டொழுக்க பண்புகள்

1. பெருமையும் பொறாமையும் மனித குலம் அழிக்கும் தீமைகள்.

2. எனவே எப்போதும் தாழ்மையுடன் போதும் என்னும் மனதுடன் இருப்பேன்.

பொன்மொழி

மனிதன் உடல் மற்றும் உளரீதியாக நலமாக வாழ வேண்டும். நலமான வாழ்வின் மூலமே ஒருவனது வாழ்வு சிறப்பாக அமையும். நலமான வாழ்விற்கு வழிகாட்டி சுத்தமும் சுகாதாரமும் தான்.......

நபிகள்

பொது அறிவு

1. இந்திய நெப்போலியன் என்று அழைக்கப்படுபவர் யார்?

சமுத்திர குப்தர்

2. இந்தியாவில் முதன் முதலாக விலங்கியல் பூங்கா எங்கு துவங்கப்பட்டது ?

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, வண்டலூர். (1855)

English words & meanings

Pathology - study of cause and effects of disease. நோய் குறித்த படிப்பு.

Pathogens - microbes that cause diseases. நோய் உண்டாக காரணமான நுண்ணுயிர்கள்.

ஆரோக்ய வாழ்வு

எலுமிச்சை சாறு உமிழ்நீர் அதிகமாக சுரக்க வைப்பதால் வறண்டு வாய் பிரச்சினை சரியாகும். எலுமிச்சை தூண்டுவதன் மூலம் தலைசுற்றல் மற்றும் மயக்கத்தை சரி செய்யலாம்.

Some important  abbreviations for students

Dec. - December.

d. - died

நீதிக்கதை

சாகாத வரம்

வையாபுரி பட்டினம் என்ற நகரத்தில் முத்து வியாபாரி மாணிக்கம் என்பவர் வாழ்ந்து வந்தார். மாணிக்கத்தின் வீடு அரண்மனையைப் போல் இருக்கும்.

மாணிக்கத்திற்கு முத்து, ரத்தினம், வைரம் என்று மூன்று மகன்கள். இவர்களில் பெரியவன் முத்து வெளிநாடுகளில் வியாபாரம் செய்து வந்தான். அவன் தம்பி ரத்தினமும், வைரமும் உள்ள்ளூர் வியாபாரத்தைக் கவனித்துக்கொண்டனர்.

மாணிக்கத்திற்கு ஒரு நாள் திடீரென்று உடல்நிலை சரியில்லாமல் போனது. தான் இறந்து விடுவோம் என்று நினைத்து, சொத்துக்கள் அனைத்தையும் உள்ளூரில் இருக்கும் தனது மகன்களிடம் ஒப்படைத்தார். பிறகு அவர் இறந்துவிட்டார்.

ரத்தினமும், வைரமும் அப்பாவின் சொத்துக்களை இரண்டாகப் பிரித்துக்கொண்டு அண்ணன் முத்துவை கொல்ல நினைத்தனர். ஒரு நாள் முத்து வெளிநாட்டிலிருந்து வந்தான். அவனிடம் சொத்துக்களை மூன்றாக பிரித்துக் கொள்ளலாம் என்று சொன்னார்கள்.

முத்து சரி என்றான். ஆனால் அன்று இரவே முத்துத் தூங்கும் போது தம்பிகள் அவனை அடித்து ஒரு குளத்தில் வீசி எறிந்தனர். அடுத்த நாள் அந்த குளக்கரையில் இருந்த கோவிலின் எதிரில் படுத்துகிடந்த முத்து தனக்கு முன்னால் கடவுள் தோன்றியிருப்பதைக் கண்டு வணங்கினான்.

என்ன நடந்தது? என்றார் கடவுள். நடந்ததைச் சொன்னான் முத்து. இனி உனக்கு எந்த ஆபத்தும் வராது. 400 ஆண்டுகள் வரை நீ வாழ்வாங்கு வாழ்வாய் என்று வரமளித்தார் கடவுள்.

முத்து வீட்டிற்கு வந்தான். ரத்தினமும் வைரமும் அதிர்ச்சியடைந்தனர். காலையில் உங்களைக் காணாமல் துடித்துப் போனோம். என்ன நடந்தது என்று கேட்டனர். எதையும் மறைத்துப் பேசத் தெரியாத முத்து 400 ஆண்டுகள் சாகாமல் வாழ பெற்ற வரத்தைப் பற்றி கூறினான்.

தாங்களும் இதே போல் அதிக ஆண்டு வாழவேண்டும் என்று திட்டமிட்டு ரத்தினமும், வைரமும் தங்கள் இருவரையும் அடித்து அந்த குளத்தில் வீசி எறியும்படி ஏற்பாடு செய்தனர்.


அடுத்த நாள் அவர்கள் இருவரும் கோவிலின் எதிரில் தூங்கியபடி கிடந்தனர். தூங்கி எழுந்தபோது, அவர்கள் எதிரில் கடவுள் தோன்றினார். உங்களுக்கு என்ன நடந்தது? என்றார் கடவுள். தங்களை விரோதிகள் அடித்துப்போட்டதாக கூறினர்.

கடவுளே நான் 1000 ஆண்டு சாகாமல் வாழவேண்டும் என்றான் ரத்தினம். நான் 2000 ஆண்டு சாகாமல் வாழ வேண்டும் என்றான் வைரம். ரத்தினம் 3000 ஆண்டு என்றான். வைரம் 4000 ஆண்டு என்றான். இப்படி ஆண்டுகளை ஏற்றிக்கொண்டே போனார்கள்.

கடவுள் பார்த்து நான் சொல்வது போல் செய்தால் உங்கள் திறமைக்குத் தகுந்தவாறு பத்தாயிரம் ஆண்டுகள் கூட சாகாமல் வாழலாம் என்றார் கடவுள். சொல்லுங்கள் என்ன செய்ய வேண்டும் என்றனர் இருவரும்.

கோயிலில் எதிரில் இருக்கு இந்த குளத்தில் நீங்கள் மூழ்கி இருக்கும் ஒவ்வொரு மணித்துளிக்கும் 100 ஆண்டுகள் சாகாமல் வாழும் வரம் கிடைக்கும் என்று கடவுள் சொல்லி முடிப்பதற்குள் இருவரும் குளத்தில் குதித்தனர்.

இருவரும் ஒருவரை ஒருவர் பல ஆண்டுகள் வாழ வேண்டும் என்று போட்டிப் போட்டுக்கொண்டு நீரில் மூழ்கி இருந்தனர். கடவுள் இவர்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அச்சமையம் ரத்தினமும், வைரமும் பிணமாக நீரில் மிதந்தனர்.

நீதி :
பேராசை உள்ளவர்கள் பெரும் நஷ்டத்தை அடைவார்கள்.

வெள்ளி
சமூகவியல் & விளையாட்டு

இந்தியப்பெருங்கடல்  உலகின்
மூன்றாவது பெரிய நீர்த்தொகுதியாகும். இது, உலகப்பரப்பின் 20% பகுதியை உள்ளடக்கிக்கொண்டுள்ளது. இதன் வட பகுதியில் ஆசியா, மேற்கில் ஆப்பிரிக்கா, கிழக்கில் ஆஸ்திரேலியா, தெற்கில் அண்டார்டிக்பெருங்கடல்,
ஆகியன இதன் எல்லைகள். இந்து சமுத்திரத்தின் முத்து என இலங்கைத் தீவு அழைக்கப்படுகின்றது.

பாரம்பரிய விளையாட்டு - 6

பூ பறிக்க வருகிறோம்

காணொலியை காண இங்கே கிளிக் செய்யவும்

இன்றைய செய்திகள்

25.10.19

* உள்ளாட்சித் தேர்தலை நடத்த 4 வார கால அவகாசம் கோரி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை.

* கீழடி, ஆதிச்சநல்லூர், கொடுமணல், சிவகளை உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி.

*  இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் படைகள் பயன்படுத்திய பதுங்கு குழி ஒன்று தற்போது சொகுசு ஹோட்டலாக மாற்றப்படவுள்ளது.

* தீபாவளி காரணமாக சென்னையில் இருந்து வெளியூர்களுக்குச் செல்லும் வாகனங்களின் அதிகரிப்பால்  சென்னை -  வண்டலூர் இடையிலான சாலைகள் இன்றே கடுமையான போக்குவரத்து நெரிசலைச் சந்தித்துள்ளன.

* தமிழகம் முழுவதும் நாளை முதல் அரசு மருத்துவர்கள் ஸ்டிரைக்.

* சீனாவின் வுஹான் நகரில் நடைபெறும் உலக ராணுவ விளையாட்டு போட்டித் தொடரில் இந்திய மாற்றுத்திறனாளி வீரர் ஆனந்தன் குணசேகரன் ஆண்கள் 100 மீட்டர் ஐடி1 பிரிவிலும், ஆண்கள் 400 மீட்டர் ஐடி1 பிரிவிலும் தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.

Today's Headlines

🌸 Tamil Nadu State Election Commission requests Supreme Court for 4 weeks' time to hold local elections.

 🌸 Central Government gave permission to conduct excavations in Adichchanallur, Kodumunal and Sivagalai.

 🌸 A bunker used by Hitler's forces during World War II will be converted into a luxury hotel.

 🌸Roads between Chennai and Vandalur have been hit by heavy traffic on the outskirts of Chennai due to Diwali.

 🌸 Doctor strike starts from tomorrow in tamilnadu

 🌸Anandan Gunasekaran,  of India who was the differently abled persono won gold medals in the men's 100 meters  IT1 category and in men's 400 meters IT1 category held in world military games competition in Wuhaan.

Prepared by
Covai women ICT_போதிமரம்

Wednesday 23 October 2019



*🌧🙆‍♂24 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் தகவல்!*





வடகிழக்கு பருவமழை கடந்த 16ம் தேதி தொடங்கியது. சென்னையில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்தது. இன்றும் பல இடங்களில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதி மற்றும் அதையொட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகவும், இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்வது நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று அதிகாலையில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சில பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்தநிலையில் தற்போது தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள காரணத்தால், தமிழகத்தின் 24 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக மழை பெய்துவருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர், மாணவர்கள் மத்தியில்  ஊக்கப்படுத்தும் அர்புதமான பேச்சு வைரலாகிறது. காணொளி


       https://youtu.be/S6O7JiT1U2I

சளித் தொல்லை, இருமல்,மூக்கடைப்பு நீங்க பாட்டி வைத்தியம் !!
சளித் தொல்லை, இருமல்,மூக்கடைப்பு நீங்க பாட்டி வைத்தியம் !!



தொண்டை எரிச்சல்

எலுமிச்சம்பழச்சாறுடன் தேனும் சம அளவில் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர இருமல் நிற்கும்
துளசி சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு எடுத்து கலக்கி குடித்தால் சளி குறையும்.

பசும்பாலில் சிறிதளவு ஒமம் போட்டு காய்ச்சி தினமும் காலையில் குடிக்க சளி நீங்கும்.

இருமல்

1 கப் ஆப்பிள், 1 கப் எலுமிச்சைச் சாறு, 1 கப் இஞ்சி சாறு, 1 கப் வெள்ளபூடு இவற்றை எடுத்து ஒன்றாக கொதிக்க வைத்து பின்பு அது மாவு போல் ஆனவுடன் தனியாக எடுத்து அதனுடன் தேவையான அளவு தேன் கலந்து அதை காலை மற்றும் இரவு ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் சளி, இருமல், பசி, ஜீரணம் மற்றும் கொழுப்பையும் கட்டுப்படுத்தும்

சளித் தொல்லை

ஆடாதொடா இலை, வெற்றிலை, துளசி, தூதுவளை இவற்றில் சிறிதளவு எடுத்து லேசாக அரைத்து பின்பு அதை நன்றாக இட்லி அவிப்பது போல் அவித்து அதிலிருந்து சாறு எடுக்க வேண்டும் . 2 தேக்கரண்டி சாறு அதில் சம அளவு தேன் கலந்து தினமும் 1 பொழுது வீதம் மூன்று நாள் சாப்பிட்டு வந்தால் சளித்தொல்லை முற்றிலும் குணமாகும்.

ஜலதோஷம்

திப்பிலி, கடுகு, சீரகம், சுக்கு மற்றும் மிளகு இவற்றில் சிறிதளவு எடுத்து அதனுடன் வேப்பங் கொழுந்தையும் சேர்த்து அரைத்து நிழலில் காயவைத்து பி்ன்பு அதை மாத்திரையாக்கி தினமும் காலை மற்றும் மாலை சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் குணமாகும்.

சீரகத்தை நன்றாக வருத்து பொடியாக்கி அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து 2 வேளை சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் மற்றும் இருமல் குணமாகும்.

மார்புச் சளி

ஏலக்காயை நன்கு பொடித்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். தினமும் காலை மாலை சாப்பிடுவதற்கு முன் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி பொடியை நெய்யில் கலந்து சாப்பிடவும்.

தலை குளிர்ச்சி

காய்ந்த மஞ்சள் சாமந்தி பூவை எடுக்கவும்.
3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் எடுக்கவும்.
மஞ்சள் சாமந்தி பூவை தேங்காய் எண்ணெயுடன் சேர்க்கவும்.
பின்பு அதை வடிகட்டவும், வடிக்கட்டின சாரை.
3 நாட்களுக்கு பிறகு தலையில் தடவி வந்தால் மூளை மற்றும் தலை குளிர்ச்சி பெறும்.

மூக்கடைப்பு தீர‌

சிறிதளவு கடுக்காய் பொடி மற்றும் நெல்லிக்காய் பொடியை தினமும் காலை ஒரு வேளை தேனுடன் கலந்து சாப்பிடவும்.