Saturday 29 February 2020

EMISல் U-DISE PLUS DCF பதிவு செய்கிற பொழுது ஏற்படும் இடர்பாடுகள் மற்றும் தீர்வுகள்!







EMISல் U-DISE PLUS DCF பதிவு செய்கிற பொழுது ஏற்படும் இடர்பாடுகள் மற்றும் தீர்வுகள்!



Friday 28 February 2020





EMIS
U-DISE PLUS DCF பூர்த்தி செய்கிற பொழுது ஏற்படும் இடர்பாடுகள் சரிசெய்யப்பட்டு தற்போது அனைத்து தலைப்புகளிலும் save ஆகிறது.

இடர்பாடு ஏற்பட்ட தலைப்புகள்:

1)Committee Details

2)Land Details

இரண்டு தலைப்புகளில் save கொடுக்கிற பொழுது எந்த boxல் field is required என்று சிவப்பு நிறத்தில் வருகிறதோ அதில் தேவையான தகவல்களை பதிவேற்றம் செய்து save கொடுக்கும் போது உடனடியாக சேமிக்கப்படுகிறது. ஆசிரியர்கள் சிறப்பான முறையில் இந்த காரியத்தை செய்து முடிக்கலாம்.

Wednesday 26 February 2020

EMIS U-DISE PLUS DCF பூர்த்தி செய்கிற பொழுது ஏற்படும் இடர்பாடுகள் மற்றும் தீர்வுகள்.










EMIS
U-DISE PLUS DCF பூர்த்தி செய்கிற பொழுது ஏற்படும் இடர்பாடுகள் மற்றும் தீர்வுகள்.

கீழ்க்கண்ட தலைப்புகளில் save கொடுக்கும் பொழுது எந்தக் கட்டத்தில் பூர்த்தி செய்யாமல் இருக்கிறதோ அந்த இடத்தில் field is required சிவப்பு நிறத்தில் நட்சத்திர குறியுடன் வரும் அதில் தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் நம் பள்ளியில் அதில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய தகவல் இல்லை என்றால் பூஜ்ஜியம் கொடுத்துவிட வேண்டும் அப்போதுதான் save ஆகும். ஒவ்வொரு தலைப்பிலும் இதுபோன்ற நடைமுறையை பின்பற்றினால் இடர்பாடு ஏற்படவில்லை.
(இரண்டு தலைப்புகளை தவிர)

*1) Download DCF:*

இந்தத் தலைப்பில் Form download இடர்பாடு இல்லை

*2) Basic Info :*

இந்தத் தலைப்பில் முழுவதுமாகவே பூர்த்தி செய்யப்பட்டு இருக்கிறது தேவையானவற்றை நாம் பூர்த்தி செய்து save கொடுத்துவிடலாம் இடர்பாடு இல்லை save ஆகிறது.


*3) School Details:*

இந்த தலைப்பிலும் தேவையான தகவல்களை பூர்த்தி செய்து save கொடுத்துவிடலாம் இதிலும் எந்தவித இடர்பாடும் இல்லை save ஆகிறது.


*4) Training Details:*

இந்த தலைப்பிலும் தேவையான தகவல்களை பூர்த்தி செய்து save  செய்யலாம் எந்தவித இடர்பாடும் இல்லை.
Save ஆகிறது.

*5) Committee Details:*

இந்தத் தலைப்பில்
1.49) school inspection during last and current academic year.
Inspections/visits done by*என்ற பகுதியில்
பூர்த்தி செய்து save செய்தாலும் field is required* என்று  வருகிறது இந்த தலைப்பில் தான் இடர்பாடு உள்ளது இது சரி செய்யப்பட வேண்டும் EMIS TEAMக்கு தகவல் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பக்கம் மட்டும் save ஆகவில்லை.

*6) Land Details:*

இந்தத் தலைப்பில் ground land 200sq மேல் பதிவு செய்திருந்தால் field is required என்று வருகிறது அதனால் 200sq மேல் கொடுத்து இருந்தால் அதுவும் save ஆகவில்லை இதிலும் இடர்பாடு உள்ளது தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*7) School Inventory:*

இந்தத் தலைப்பில் சரியான தகவல் பூர்த்தி செய்து இருந்தால் எந்தவித இடர்பாடு இல்லை save ஆகிறது.

*8) Funds:*

இந்தத் தலைப்பில் சரியான தகவல்கள் பூர்த்தி செய்திருந்தால் எந்தவித இடர்பாடும் இல்லை.save ஆகிறது.

ஆக 7 தலைப்புகளில் 2 தலைப்பில் மட்டும் இடர்பாடு ஏற்படுகிறது.
மற்ற தலைப்புகள் அனைத்தும் save ஆகிறது.           

என்றும்....

      ஆசிரியர் TECH
           YouTube

ASIRIYAR TECH NEWS

ஆதார் டவுன்லோடு செய்ய புதுமுறை: முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி





ஆதார் டவுன்லோடு செய்ய புதுமுறை: முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி



இந்தியாவில் அனைத்து பணிகளுக்கும் ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. பிறந்த குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரையில் அனைத்து வயதினருக்கும் ஆதார் கார்டு வழங்கப்படுகிறது.

இதற்காக நாடு முழுவதும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் தாலுகா அலுவலகங்களில் ஆதார் சேவை மையங்கள் செயல்படுகிறது.




தபால் அலுவலகங்களிலும் ஆதார் சேவை மையங்கள் இயங்கி வருகிறது. ரேஷன் கார்டு தொடங்கி, வங்கி கணக்கு புத்தகம், பான் கார்டு, அரசின் மானியங்கள் உட்பட அனைத்து வகையான அரசு சார்ந்த திட்டங்களில் பயன்பெறுவதற்கு ஆதார் எண் தேவைப்படுகிறது.

இந்த ஆதார் கார்டினை பெறுவதற்கு கண் கருவிழி, கைரேகை, கைவிரல் ரேகை உள்ளிட்டவை பதிவு செய்யப்படுகிறது. தனிமனிதனின் அனைத்து வகையான ஆவணங்களுடன் ஆதார் இணைக்கப்படுகிறது.




இதனால் ஆதார் மிகவும் பாதுகாக்கப்பட வேண்டியதாக உள்ளது. இருப்பினும் பலரது ஆதார் விவரங்கள் திருடப்படுவதாக குற்றச்சாட்டுகள் வெளியானது.
முன்பு ஆதார் கார்டு எண், செல்போன் எண் இருந்தால் யார் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆதார் டவுன்லோடு செய்து கொள்ளும் வசதி இருந்தது. ஆனால் தற்போது ஆதார் கார்டு மேலும் பாதுகாப்பானதாக மாற்றப்பட்டுள்ளது.




இனிவரும் காலங்களில் ஆன்லைனில் ஆதார் டவுன்லோடு செய்ய வேண்டுமானால் சம்மந்தப்பட்ட நபரின் பேஸ் ரெகக்னைஸ் (பேஸ் லாக்) பதிவு செய்யவேண்டும். பின்னர்தான் டவுன்லோடு செய்ய முடியும். இதுதவிர, ஆதார் குறித்த தகவல்கள் திருடப்படாமல் இருக்க பல பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஆதார் பிரிவு உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.


பிழை திருத்த புது யுக்தி
ஆதார் கார்டில் மிக முக்கிய பிழையாக தந்தை பெயர் என்பதற்கு பதிலாக கணவன் பெயர் என்றும் கணவன் பெயருக்கு பதிலாக தந்தை பெயர் என்றும் பாதுகாவலர் என்பதற்கு பதிலாக தந்தை பெயர் என்றும் மாற்றி அச்சிடப்படுகிறது. இந்த பிழையை தவிர்க்க இனி வழங்கப்படும் ஆதார் அனைத்துக்கும் காடியன் ஆப் என்று மட்டுமே சாப்ட்வேரில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

EMIS U-DISE PLUS DCF பணி 27.02.2020 க்குள் முடிக்க SPD உத்தரவு!!








EMIS U-DISE PLUS DCF பணி 27.02.2020 க்குள் முடிக்க SPD உத்தரவு!!

வேலூர் மாவட்டம் கீ.வ‌குப்பம் ஒன்றியம் கல்யாண பெருமாங் குப்பம்.ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய கட்டட திறப்பு விழாவிற்கு மதிப்பிற்குரிய கீழ் வைத்தணான் குப்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜீ. லோகநாதன் திறந்து வைத்தார் உடன் மாவட்ட கல்வி அலுவலர் மு.அங்கு லட்சுமி குத்து விளக்கு ஏற்றினார் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் என்.பி கண்ணன். வ. கமலநாதன் கலந்துகொண்டு சிறப்பித்தனர் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆறுமுகம் அவர்கள் மற்றும் உதவி ஆசிரியர்கள் வரவேற்றனர்













வேலூர் மாவட்டம்
கீ.வ‌குப்பம் ஒன்றியம்

கல்யாண பெருமாங்குப்பம்.ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய கட்டட திறப்பு விழாவிற்கு மதிப்பிற்குரிய கீழ் வைத்தணான் குப்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜீ. லோகநாதன் திறந்து வைத்தார் உடன் வேலூர் மாவட்ட கல்வி அலுவலர்    மு.அங்குலட்சுமி குத்து விளக்கு ஏற்றினார் மற்றும்  வட்டார கல்வி அலுவலர்கள்    என்.பி கண்ணன்.   வ. கமலநாதன்  கலந்துகொண்டு சிறப்பித்தனர். அனைவரையும் பள்ளி தலைமையாசிரியர் ஆறுமுகம் மற்றும் உதவி ஆசிரியர்கள் வரவேற்றனர்.

Tuesday 25 February 2020

மார்ச் 2ம் தேதி தொடங்கும் பத்தாம் வகுப்பு பதினோராம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு பணிகளில் உடநலம் பாதித்தவர்கள் மாற்றுத்திறனாளிகள் மகப்பேறு ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை தேர்வு பணியில் இருந்து விடுவிக்க பள்ளிக்கல்வி இயக்கநர் மற்றும் தேர்வுத்துறை இயக்குநர் அவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் சா.அருணன் நிறுவனத் தலைவர் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு









வேண்டுகோள்
26.02.2020
~~~~~~~~
மார்ச் 2ம் தேதி தொடங்கும் பத்தாம் வகுப்பு பதினோராம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு பணிகளில் உடநலம் பாதித்தவர்கள் மாற்றுத்திறனாளிகள் மகப்பேறு  ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை  தேர்வு பணியில் இருந்து விடுவிக்க  பள்ளிக்கல்வி இயக்கநர் மற்றும் தேர்வுத்துறை இயக்குநர் அவர்களை

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்
=============
தமிழகத்தில் வருகின்ற மார்ச் 2ம் தேதி முதல் பனிரெண்டாம் வகுப்பு பதினோராம் வகுப்பு பத்தாம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு தொடர்ந்து நடக்க உள்ளது,  பனிரெண்டாம் வகுப்பிற்கக்கும் பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வு பணியில் உயர்நிலைப் பள்ளி மேனிலைப்பள்ளிகளில் பணியாற்றும்  முதுகலை ஆசிரியர்கள் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசியர்களை தேர்வு அறை கண்காணிப்பாளராகவும், பறக்கும்படையிலும், துறை அலுவலர்களாகவும் தலைமையாசிரியர்களை தேர்வு நடத்தும் முதன்மை அலுவலர்களாகவும்  மற்றும் பள்ளி அலுவலக பணியாளர்களை அலுவலக பணிக்கு ஈடுப்படுத்துவார்கள்.

அதே போன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்விற்கு பட்டதாரி ஆசிரியர்கள் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசியர்களை தேர்வு பணிகளில் ஈடுப்படுத்துவார்கள்

இந்த ஆண்டு ஏமிஸ் ( EMIS )என்ற டேட்டா என்ட்ரி மூலம் அனைத்து வகை  ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் பெயர் பட்டியலை எடுத்து தேர்வு பணிக்கு பயன்படுத்த அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளிகளில் பணிபுரிபவர்கள் இன்று  விடுவிப்பு செய்து தேர்வுப்பணி கூட்டத்திற்கு அனுப்பிவைக்க முதன்மைக் கல்வி அலுவலர் சார்பில் அந்தந்த பள்ளி இணைய முகவரிக்கு சுற்றரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு எழுத  3 மணி 15 நிமிடம் அதாவது 3 மணி நேரம் தேர்வு எழுதவும் 15 நிமிடம் வினாத் தாளை படித்து பார்க்க நிர்ணயக்கப்பட்டுள்ளது

ஆசிரியர்கள் பணியாளர்கள் காலை 8.00 மணிக்கே தேர்வு மையத்திற்கு வரவேண்டிய சூழ்நிலை தொடர்ந்து 4 மணி முதல் 5 மணிவரை நின்று பணியாற்ற வேண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் உடல்நலம் சரியில்லாதவர்கள் அதாவது புற்றுநோய் இருதய பிரச்சனை காச நோயளிகள் பெருமளவில் அறுவைசிகிச்சை செய்துக் கொண்டவர்கள் கற்பமுற்றவர்கள் நீண்டநேரம் நின்று பணி செய்யமுடியாது ஆதலால் அவர்களை தேர்வுப் பணியில் இருந்து விடுவிக்க பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தேர்வுத்துறை இயக்குநரை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்
~~~~~~~~
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
~~~~~~~~
9445454044
~~~~~~~~





நோய் வருவதற்கு முன் உடலில் தோன்றும் அறிகுறிகள்!


 முகத்தில் அரிப்போ நமைச்சலோ எடுத்தால் ---
கூந்தலில் சுத்தமில்லை என அர்த்தம்.

 வயிற்றுவலியோ வயிற்றாலையோ இருந்தால் ---

கைவிரல் நகங்கள் சுத்தமில்லை என அர்த்தம்.

கண்களோ மூக்கோ தொடர்ந்து அரிக்குமானால் ---
ஜலதோசம் பிடிக்கப்போகிறது என அர்த்தம்.


காதில் அதீத குடைச்சலோ வலியோ வந்தால் ---
காய்ச்சல் வர நேரம் வந்துவிட்டது என அர்த்தம்.

கைமடிப்பு, கழுத்து மடிப்பு, கால் இடுக்கில் கருப்பான பட்டை விழுந்தால் ---
கணையத்தில் இன்சுலினின் சுரப்பு அதிகமாகிறது என அர்த்தம்.


உடலில் இன்சுலின் அதிகம் சுரந்து அதிக பசி எடுக்கிறதென்றால் ---
அது நீரிழிவின் ஆரம்பம் என அர்த்தம்.

கால் பாதங்களில் வெடிப்பு உண்டானால்--
உடலில் அதிக அழுத்தமும் சூடும் இருக்கிறது என அர்த்தம்.

முழுங்கால் மூட்டு அல்லது கால்களின் மணிக்கட்டு வலியெடுத்தால் ---
உடலில் அதிக எடை கூடிவிட்டது அதனைக் குறைக்கவேண்டும் என அர்த்தம்.

 தொடர்ந்து முதுகுத்தண்டு அல்லது இடுப்புப் பகுதி வலிக்குமானால் ---
அந்த இரு எலும்புகளும் மிருதுவாகி தேய்மானம் தொடங்குகிறது என அர்த்தம்.

உதட்டில் அல்லது மேல்தோலில் வெடிப்பு, பிளவு, தோல் உரிதல் உண்டாகுமானால் ---
உடலில் நீர்ச்சத்தும் எண்ணெய்ப்பசையும் குறைந்துவிட்டது என அர்த்தம்.

தோள்பட்டை, முதுகுத்தாரை, குதிங்கால் இவற்றில் இறுக்கமோ வலியோ வந்தால் ---
உடலில் காற்றின் அழுத்தம் கூடி வாயு தேங்கியுள்ளது என அர்த்தம்.

 கைவிரல் நகங்களுக்கு மேல் மெல்லிய கருப்புக்கோடு விழுமானால் ---
இருதயத்தில் பிரச்சினை தொடங்குகிறது என அர்த்தம்.

EMISல் U-DISE PLUS DCF mobile phoneல் (தமிழில் மாற்றி) பதிவு செய்வது எப்படி? காணொளி






EMISல் U-DISE PLUS DCF mobile phoneல் (தமிழில் மாற்றி) பதிவு செய்வது எப்படி? காணொளி



EMISல் U-DISE PLUS DCF பதிவு செய்கிற பொழுது ஏற்படும் இடர்பாடுகள் தீர்வுகள் காணொளி





*UDISE Plus Page link:*

*1) Download DCF:*

*2) Basic Info :*

https://emis.tnschools.gov.in/basic_school_form

*3) School Details:*

https://emis.tnschools.gov.in/school_details

*4) Training Details:*

https://emis.tnschools.gov.in/training-details

*5) Committee Details:*

https://emis.tnschools.gov.in/schoolcommittee

*6) Land Details:*

https://emis.tnschools.gov.in/school-land

*7) School Inventory:*

https://emis.tnschools.gov.in/school-inventory

*8) Funds:*

https://emis.tnschools.gov.in/funds






Sunday 23 February 2020

பிப்ரவரி 24 மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி






*பிப்ரவரி 24 மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தின உறுதிமொழி*

*இந்திய குடியனாகிய நான் சாதி, மதம், இனம், மொழி, சமூக, பொருளாதார பாகுபாடு இல்லாமல் அனைத்து குழந்தைகளையும் சமமாக நடத்துவேன்.*

*எனது செயல்பாடுகளால் எந்த ஒரு குழந்தையும் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்காத வகையில் கவனமுடன் நடந்து கொள்வேன்.*

*எனது கவனத்திற்கு வரும் குழந்தைகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் வன்முறைகள் மற்றும் எந்தவொரு பாதிப்பையும் தடுப்பதற்கான முழு முயற்சியில் ஈடுபடும்*

*மேலும், இதனை உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்.*

*- இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என உணர்ந்து அவர்களின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கு என்னால் இயன்ற பங்களிப்பை அளிப்பேன்.*

*குழந்தை திருமணம் பற்றி தெரிய வந்தால் அதை தடுத்து நிறுத்துவதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபடுவேன்.*

*நான், குழந்தை தொழிலாளர்கள் இல்லாத சமூகத்தை உருவாக்கிட உறுதுணையாக இருப்பேன்.*

*உரிமைகள்*

 *இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும்* *ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் உடன்படிக்கையில்*

*மீதான வழங்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான உரிமைகள் அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுவேன் என உளமார உறுதி கூறுகிறேன்.*

*சோ.மதுமதி அரசுச் செயலாளர்.*

UDISE Form updated EMIS இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது முதலில் அனைத்து தலைமை ஆசிரியர்களும் 1-5, தொடக்கப் பள்ளிகள் மற்றும் 1-8 நடுநிலைப் பள்ளிகள் படிவங்களை பதவிறக்கம் செய்து பூர்த்தி செய்த பிறகு இணையதளத்திற்கு சென்றால் எளிதாக பதிவேற்றம் செய்ய முடியும்.




UDISE Form updated
EMIS இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது முதலில் அனைத்து தலைமை ஆசிரியர்களும் 1-5, தொடக்கப் பள்ளிகள் மற்றும் 1-8 நடுநிலைப் பள்ளிகள் படிவங்களை பதவிறக்கம் செய்து பூர்த்தி செய்த பிறகு இணையதளத்திற்கு சென்றால் எளிதாக பதிவேற்றம் செய்ய முடியும்.

Friday 21 February 2020

நாளை(22.02.2020) சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் புதன்கிழமை கால அட்டவணையினை பின்பற்றி வகுப்புகள் நடத்த அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர் / முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.



அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/நிதியுதவி/சுயநிதி/மெட்ரிக் தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை மற்றம் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்களுக்கு- நாளை, (22.02.2020) சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை கால அட்டவணை பின்பற்றி செயல்பட தெரிவித்தல்

அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/நிதியுதவி/சுயநிதி / மெட்ரிக் தொடக்க/ நடுநிலை/ உயர்நிலை மற்றம் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்களுக்கு,

நாளை(22.02.2020) சனிக்கிழமை பள்ளி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதால் புதன்கிழமை கால அட்டவணையினை பின்பற்றி   வகுப்புகள் நடத்த அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர் / முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

Thursday 20 February 2020

IFHRMS – வேலூர் மாவட்டத்தில் 01.03.2020 முதல் நடைமுறைப்படுத்துதல் – அனைத்து பணம்பெற்று வழங்கும் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கைகள். அனைத்து வகை பள்ளிகள்/ அலுவலகங்களில் பணம் பெற்று வழங்கம் அலுவலர்கள் (DRAWING OFFICERS) கவனத்திற்கு,












IFHRMS – வேலூர் மாவட்டத்தில் 01.03.2020 முதல் நடைமுறைப்படுத்துதல் – அனைத்து பணம்பெற்று வழங்கும் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கைகள்.
அனைத்து வகை பள்ளிகள்/ அலுவலகங்களில் பணம் பெற்று வழங்கம் அலுவலர்கள் (DRAWING OFFICERS) கவனத்திற்கு,

IFHRMS – வேலூர் மாவட்டத்தில் 01.03.2020 முதல் நடைமுறைப்படுத்துதல் – அனைத்து பணம்பெற்று வழங்கும் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய தொடர் நடவடிக்கைகள் சார்பாக இணைப்பில் உள்ள  மாவட்ட ஆட்சியர் அவர்களின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி  நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து வகை பள்ளிகள்/ அலுவலகங்களில் பணம் பெற்று வழங்கம் அலுவலர்கள்  (DRAWING OFFICERS) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

Tuesday 18 February 2020

EMIS அடிப்படையில் ஆசிரியர் மாணவர் விகிதம் - பள்ளிகளில் ஆய்வு செய்ய இயக்குனர் உத்தரவு - DEE Proceedings





மேற்காண் பொருள் சார்ந்து பார்வை --- கானும் இயக்குநரின் செயல்முறைகள் சார்ந்த
முதன்மை கல்லி அலுவலர்களின் உடனடி கவனம் ஈர்க்கப்படுகிறது. அச் செயல்முறைகளில் அரசு/
நகராட்சி / மாநகராட்சி அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைர் சட்டம்
2009-ன்படியும், பார்வை 2-ல் காணும் அரசாணையின்படி 31.08.2019-ல் உள்ளவாறு
இவ்வியக்கத்தில் ஒப்படைக்குமாறு கோரப்பட்டது. ஆனால் இந்த
முதன்மைக் கல்வி அவர்களிடமிருந்து பெறப்படாமல் உள்ளது. -

| அரியலூர், 2.கோயம்புத்தூர், 3. காஞ்சிபுரம், 4.கரூர், 5.கிருஷ்ணகிரி,
மதுரை, 7.நாகப்பட்டினம், இ நாமக்கல், 9.பெரம்பலூர், 0 துக்கோட்டை

1.சேலம், 12 தஞ்சாவூர், 13.தேனி, 14.திருநெல்வேலி, 15.திருவள்ளூர்,
ம.திருவாரூர், 17.திருச்சி, 3.வேலுார், 19. விருதுநகர்.

3108.2019-ம் உள்ளவாறு ஆசிரியர் மாணவர்கள் பணியிட நிர்ணயம் செய்யப்பட்ட சார்ந்த
விவரங்கள் EMIS இணையதளத்தில் உள்ள விவரங்களின் அடிப்படையில் பணியாளர்
நிர்ணயத்துடன் ஒப்பிட்டு சரியாக உள்ளதா என்பதனை ஆய்வு செய்ய இவ்வியக்ககத்தில்
கீழ்க்காணும் கால அட்டவணைப்படி ஆய்வுக்கூட்டம் நடைபெற உள்ளது.

எனவே இப்பொருளில் தனிக்கவனம் செலுத்தி ஆசிரியர் பணியிட நிர்ணயம் இதுவரையில்
சமர்ப்பிக்காத மாவட்டங்கள் கீழ்க்காணும் கால அட்டவணைப்படி இவ்வியக்ககத்தில் நாடபெறும்
கூட்டத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டும்.

ஆய்வுக் கூட்டம் நடைபெறும் நான்

அரியலூர், சென்னை, கோயம்புத்தூர், கடலூர்
ஆ 22 தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர்,
செய்யாய் கிழமை கிருஷ்ணகிரி, துன, நாகப்பட்டினம்,
aw 10.00 u என்னியாகுமரி, தூமக்கல், நீலகிரி, பெரம்பலூர்

2
26.02.2020
புதுக்கோட்டை, இராமநாதபுரம், சோம், சிவகங்கை
தஞ்சாவூர், தேனி, திருநெல்வேலி, திருப்பூர்,
திருவாரூர், திருவண்ணாமலை, திருவாரூர்,
திருச்சி, தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம்,
விருதுநகர்

மேற்படி ஆய்வுக் கூட்டத்தில் ஆசிரியர் பணியிடம் நிர்ணயம் பிரிவு கண்காணிப்பாளர் மற்றும்
பணியிடம் நிர்ணயம் நன்கு தெரிந்த ஒரு வட்டாரக் கல்வி அதவன் ஆகியோர் 31:06.2019-ல் உள்ளவாறு
ஆசிரியர் மாணவர்கள் பணியிட நிர்ணயம் சார்ந்த விவரங்களுடன் குறிப்பிட்ட நாளில் காலை 10
பணிக்கு கலந்து கொள்ள அறிவுறுத்துமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்
கொள்ளப்படுகிறார்கள்,

பெறுநர்
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்

1 முதல் 8ம் வகுப்பு வரை - மாணவர் கற்றல் செயல்பாடுகளை கண்காணிக்க மொபைல் ஆப் தமிழகம் முழுவதும் செயல்படுத்த திட்டம்!!



1 முதல் 8ம் வகுப்பு வரை - மாணவர் கற்றல் செயல்பாடுகளை கண்காணிக்க மொபைல் ஆப் தமிழகம் முழுவதும் செயல்படுத்த திட்டம்!!

Monday 17 February 2020

டெல்லி அரசாங்கம் அரசுப் பள்ளிகளை மூன்றே ஆண்டுகளில் தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் மிக அற்புதமாக மாற்றியிருக்கிறார்கள் காணொளிகளின் தொகுப்பு.








டெல்லி அரசாங்கம் அரசுப் பள்ளிகளை மூன்றே ஆண்டுகளில்   தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் மிக அற்புதமாக மாற்றியிருக்கிறார்கள் காணொளிகளின் தொகுப்பு.

தொடக்கப்பள்ளிகளில் 50 விழுக்காடு தலைமை ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக அரசே நியமனம் செய்யலாம்!!




தொடக்கப்பள்ளிகளில் 50 விழுக்காடு தலைமை ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக அரசே நியமனம் செய்யலாம்!!

நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில், பணி மூப்பின் அடிப்படையில் தலைமை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். இதனால் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாத சூழல் நிலவுகிறது.

இதனை சரிசெய்யும் விதமாக 50 விழுக்காடு பள்ளிகளில் இனி தலைமை ஆசிரியர்களை நேரடியாக நியமனம் செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது நீண்ட காலமாக பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு எதிரானது என தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள தொடக்க மற்றும் இடைநிலை பள்ளிகளில் 20 லட்சம் பேர் படித்து வருகின்றனர். ஆனால் மொத்தம் 1.2 லட்சம் ஆசிரியர்களே உள்ளனர். இவர்கள் பெரும்பாலும் அதே ஊரைச் சேர்ந்தவர்களாக உள்ளதால் மாணவர்களின் மனநிலை, பெற்றோர் மற்றும் அந்த ஊரின் சூழல் குறித்த புரிதல் இருக்கும்.

அதனால் தேர்வு நடத்தி தலைமை ஆசிரியரை நியமிக்காமல் பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் நடைமுறையே தொடர வேண்டுமென கேரள அரசு வலியுறுத்தியுள்ளது. அதேசமயம் பஞ்சாப் மற்றும் பீகார் மாநிலங்கள் தேர்வு முறையில் தலைமை ஆசிரியர்களை நியமிக்கும் பணிகளை தொடங்கிவிட்டன.

கிழிந்த #ரூபாய் #நோட்டுக்களை #மாற்றுவது #எப்படி?*




*#அழுக்கடைந்த #மற்றும் #கிழிந்த #ரூபாய் #நோட்டுக்களை #மாற்றுவது #எப்படி?*

*எந்த வங்கியில் வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்*:

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வங்கியும், கிழிந்த, அழுக்கடைந்த மற்றும் பயன்படுத்த முடியாத ரூபாய் நோட்டுக்களை வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு அதற்கு ஈடாகப் புதிய நோட்டுக்களை வழங்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. எனவே அருகில் உள்ள வங்கிக்குச் சென்று உங்களுடைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம். இதற்காக எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. நீங்கள் வங்கியின் வாடிக்கையாளராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இந்தியாவில் உள்ள எந்த வங்கியிலும் கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம்.

*உங்களுடைய கட்டணங்களைச் செலுத்தலாம்* :

இது போன்ற ரூபாய் நோட்டுக்களை வங்கியின் மூலமாக ஏதாவது கட்டணம் செலுத்த பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது பலருக்குத் தெரியாது.

*வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யலாம்*

இது போன்ற பயன்படுத்த முடியாத ரூபாய் நோட்டுக்களை உங்களுடைய வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யலாம். வங்கிகள் இந்த நோட்டுக்களைப் பெற்றுக் கொள்ளும். ஆனால் அதே நோட்டுக்களை மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

*பணமற்று மற்றும் சேமிப்பு வசதி இல்லாத வங்கிகளில் (non-chest banks) 30 நாட்களில் மாற்றிக் கொள்ளலாம்.*:

ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின் படி பணம் சேமிப்பு மற்றும் மாற்று வசதிகள் இல்லாத வங்கிகளில் (non-chest banks) கிழிந்த மற்றும் அழுக்கடைந்த நோட்டுக்களை மாற்ற வேண்டும் என்றால், அவற்றை அந்த வங்கியில் டெபாசிட் செய்து ஒரு ரசீதைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பிறகு 30 நாட்களுக்குள் ரசீதைக் காண்பித்துப் பணம் பெற்றுக் கொள்ளலாம்.

*மாற்றமுடியாத ரூபாய் நோட்டுக்கள்* :

சில சூழ்நிலைகளில் ரூபாய் நோட்டுக்களை வங்கியில் மாற்ற முடியாது. மடிந்து நொறுங்கிப் போன ரூபாய் நோட்டுக்கள், எரிந்து சிதைந்து போன ரூபாய் நோட்டுக்கள் போன்றவற்றை வங்கிகள் ஏற்றுக் கொள்ளாது. ஏதேனும் வாசகங்கள் எழுதப்பட்ட ரூபாய் நோட்டுக்கள், அரசியல் கட்சிகளின் கோரிக்கைகள் அல்லது கொள்கைகள் எழுதப்பட்ட ரூபாய் நோட்டுக்கள், சட்டப்படி பறிமுதல் செய்யக் கூடிய நோட்டுக்கள் ஆகியவற்றை வங்கிகளில் மாற்றவோ அல்லது டெபாசிட் செய்யவோ முடியாது.

*வேண்டுமென்றே கிழிக்கப்பட்ட அல்லது சிதைக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்கள்*:

வேண்டுமென்றே வெட்டப்பட்டதாகவோ அல்லது சிதைக்கப்பட்டதாகவோ கருதப்பட்டால் அத்தகையை ரூபாய் நோட்டுக்களை வங்கிகள் மாற்றித்தரவோ அல்லது டெபாசிட்டாக ஏற்கவோ மறுக்கலாம்.

மொபைலை சார்ஜ் செய்யும் பொழுது நீங்கள் செய்யும் தவறுகள்




மொபைலை சார்ஜ் செய்யும் பொழுது நீங்கள் செய்யும் தவறுகள்

இப்பொழுதும் நாம் மொபைலை சார்ஜ் செய்யும் பொழுது சில தவறுகளை செய்து வருகின்றோம். மொபைலை சார்ஜ் செய்யும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியவைகளை இந்த பதிவில் காண்போம்.

புதிய மொபைல் வாங்கும் பொழுது இரவு முழுவதும் சார்ஜ் செய்ய வேண்டும் என சிலர் கூற கேட்டு இருப்பீர்கள். இது முற்றிலும் தவறான ஒன்றாகும். பெரும்பாலும் இன்றைய மொபைல்கள் 40-80 சதவீதம் சார்ஜ் உடன் தான் வருகின்றன.

பெட்டிலயிலிருந்து எடுத்தவுடன் நீங்கள் பயன்படுத்த தொடங்கலாம். சார்ஜ் போட்டு கொண்டே சிலர் கால் பேசிக்கொண்டு மற்றும் விளையாடிக்கொண்டு இருப்பீர்கள். இது முற்றிலும் தவறான ஒன்றாகும்.

இதனால் மொபைல் சூடாகின்றது. சிலர் உங்கள் மொபைலை அதனுடன் சேர்த்து கொடுக்கப்பட்ட சார்ஜரில் சார்ஜ் செய்யவேண்டும் என்று சிலர் கூறி இருப்பார்கள். இது தவறு.

நீங்கள் வேறு எந்த சார்ஜரிலும் சார்ஜ் செய்யலாம். ஆனால் தரமற்ற சார்ஜர்களில் சார்ஜ் செய்யக்கூடாது. நீங்கள் உங்கள் மொபைலை இரண்டு மொன்று நாட்களுக்கு ஒரு முறை ஆஃப் செய்து திரும்ப ஆன் செய்வதால் உங்கள் மொபைல் சிறப்பாக செயல்படும்.

எப்பொழுதும் உங்கள் மொபைலை 0% சதவீதம் வரை உபயோகிக்க கூடாது. 20% சதவீதத்திற்கு குறையும் பொழுது சார்ஜ் செய்ய வேண்டும். அதே போல் உங்கள் மொபைலை 100% சதவீதம் வரை சார்ஜ் செய்ய கூடாது. 80-90% சதவீதம் வரை சார்ஜ் செய்வது நல்லது.

நாடு நாடு முழுவதும் ஆர்ஓ வாட்டருக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு எலும்பு தேய்மானம் உள்ளிட்ட நோய்கள் தாக்கும் அபாயம்



நாடு முழுவதும் ஆர்ஓ வாட்டருக்கு
தடை விதிக்க மத்திய அரசு முடிவு
எலும்பு தேய்மானம் உள்ளிட்ட நோய்கள் தாக்கும் அபாயம்

Friday 14 February 2020

2020-21 தமிழக பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்ற விவரம்.





2020-21 தமிழக பட்ஜெட்டில் எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்ற விவரம்.

தமிழக பட்ஜெட் கூட்டம் தொடங்கியது.  துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம்  பட்ஜெட் உரையை வாசித்தார்.

பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* திருந்திய நெல்சாகுபடி முறை 27.18 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு விரிவுபடுத்தப்படும்


* தொழிலாளர் நலன் துறைக்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* தொழில்துறைக்கு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு.

*  தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.153 கோடி ஒதுக்கீடு.

* நெடுஞ்சாலைத் துறையில் புதிதாக சாலைப் பாதுகாப்பு பிரிவு அமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு

* நெடுஞ்சாலை துறையில் சாலைப் பாதுகாப்பிற்காக தனியானதொரு பிரிவு உருவாக்கப்படும். சென்னை, மதுரை, கோவை மாநகராட்சியில் சாலை பாதுகாப்பு பிரிவு ஏற்படுத்தப்படும்

* 4,997 விசைப்படகுகளில் ரூ.18 கோடியில் தகவல் தொடர்பு டிரான்ஸ்பான்டர்கள் பொருத்தப்படும்

* பள்ளிகளில் மதிய சத்துணவுத் திட்டத்திற்கு ரூ.1,863 கோடி நிதி ஒதுக்கீடு

* 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்துக்கு  ரூ.966 கோடி ஒதுக்கீடு

* பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் கல்வி வசதிக்காக ரூ.302.98 கோடி நிதி ஒதுக்கீடு

* சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ், ஸ்மார்ட் கார்டு உள்ளவர்கள் விரைவில் தமிழகம் முழுவதும் எந்த ரேஷன் கடையில் வேண்டுமென்றாலும் பொருள்களை பெறும் திட்டம் தொடங்கும்.

* 2019-20ம் ஆண்டு வரவு செலவுத்திட்ட மதிப்பீட்டில் ரூ. 33,978.47 கோடியாக இருந்த மத்திய வரியின் மாநில அரசிற்கான பங்கு, 2019-20ம் ஆண்டு திருத்த மதிப்பீட்டில் ரூ. 26,392.40 கோடி ரூபாயாக முன்னெப்போதும் இல்லாத வகையில் குறைக்கப்பட்டிருப்பதால் தமிழகம் மாபெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

* அரசு பள்ளிகளில் உயர்தர பரிசோதனை கூடங்கள் அமைக்க ரூ.520 கோடி ஒதுக்கீடு.

* வரும் நிதியாண்டில் ரூ.59,209 கோடி கடன் வாங்க தமிழக அரசு திட்டம்.

*  கிராம உள்ளாட்சி வளர்ச்சிக்கு ரூ.6754 கோடி ஒதுக்கீடு.

* 2,298 கோடி மதிப்பிலான அணைக்கட்டு திட்டத்திற்கு 300 கோடி ஒதுக்கீடு.

* ராமேஸ்வரத்தில் சுற்றுலா வசதியை மேம்படுத்த ரூ.9.80 கோடி ஒதுக்கீடு.

* தீயணைப்புத்துறைக்கு ரூ.405 கோடி ஒதுக்கீடு.

* ரூ.77.94 கோடியில் நெல்லை கங்கை கொண்டானில் உணவு பூங்கா அமைக்க நிதி ஒதுக்கீடு.

* கிராமபுறங்களில் வாழ்வாதாரத்தை பெருக்க முதலமைச்சரின் 5 ஆண்டுகால கிராம தன்னிறைவு திட்டம் அறிமுகம்.

* குடிமராமத்து திட்டத்தின் கீழ் 1364 நீர்ப்பாசன பணிகள் 500 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படும்.

* ராமநாதபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு ரூ.3,041 கோடி ஒதுக்கீடு.

* கைத்தறித்துறைக்கு ரூ.1,224 கோடி ஒதுக்கீடு.

* பள்ளி சீருடை, பாடப்புத்தகங்கள், காலணி வழங்க ரூ.1,018 கோடி ஒதுக்கீடு.

* முதலைமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* வரும் நிதியாண்டில் 1,12,876 வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம்.

* சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.3,100 கோடி ஒதுக்கீடு.

* ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1,650 கோடி ஒதுக்கீடு.

* உணவு மானியத்திற்கு ரூ.6,500 கோடி ஒதுக்கீடு.

* இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு திட்டத்திற்கு  ரூ.218 கோடி ஒதுக்கீடு.

* நடப்பாண்டில் 10,276 சீருடைபபணியாளர்கள் பணியமர்த்தப்படுவர்.

* சென்னை - குமரி தொழில் மண்டல வழித்தட திட்டத்திற்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு.

* அம்மா விரிவான ஆயுள் காப்பீடு, விபத்து காப்பீடு திட்டத்திற்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு.

* மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையே 52 கிமீ தூர மெட்ரோ ரயில் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

* கரும்பு விவசாயிகள் நுண்ணீர் பாசனத்தை மேற்கொள்வதை ஊக்குவிக்க 75 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு.

*  சென்னை - பெங்களூரூ தொழில் வழித்தடத்திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் 21,996 ஏக்கர் பரப்பளவில் பொன்னேரி தொழில்முனைய மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.

* சுகாதாரத்துறைக்கு ரூ.15,863 கோடி ஒதுக்கீடு.

* சமூக நலன் மற்றும் மதிய உணவுத்திட்டத்திற்கு ரூ.5,935 கோடி ஒதுக்கீடு.

* வேளாண்மைத்துறைக்கு 11,894 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

*  கால்நடைத்துறைக்கு ரூ.199 கோடி ஒதுக்கீடு.

* பொதுப்பணித்துறை, நீர்பாசனத்திற்காக ரூ.6,991 கோடி ஒதுக்கீடு.

* நெடுஞ்சாலை துறைக்கு ரூ.5,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* போக்குவரத்து துறைக்கு ரூ.2,716 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* மின்சாரத்துறைக்கு ரூ.20,115 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறைக்கு ரூ.607 கோடி ஒதுக்கீடு.

* கைத்தறி துறைக்கு ரூ.1,224 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* இந்து சமய அறநிலையத்துறைக்கு 281 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* பொதுப்பணித்துறை - கட்டட பணிகளுக்காக 1,453 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

* சமூக நலன் துறைக்கு 2,535 கோடி ரூபாய் ஒதுக்கீடு.



*பள்ளிக்கல்வித்துறை 2019-2020 கல்வியாண்டு  நாட்குறிப்பின்படி  வேலை நாள்கள் விபரம்*

*2019 ஜூன் -19 நாட்கள்.

*ஜூலை         -23 நாட்கள்.

*ஆகஸ்ட்        -21 நாட்கள்.

*செப்டம்பர்   -16 நாட்கள்.

*அக்டோபர்   -22 நாட்கள்.

*நவம்பர்       -21 நாட்கள்.

*டிசம்பர்        -16 நாட்கள்.

*2020ஜனவரி-20 நாட்கள்

*✳ஜூன் 2019 முதல் ஜனவரி 2020 முடிய பள்ளிக்கல்வி நாட்குறிப்பின்படி மொத்த வேலைநாட்கள்-158 நாட்கள்  பணி செய்திருக்க வேண்டும்.


*20 பிப்ரவரி -22 நாட்கள்*
இதில் 15.02.2020 மற்றும் 29.02.2020 ஆகிய இரு சனிக்கிழமைகள் பணிநாட்களில் அடங்கும்.

*2020 மார்ச் -20நாட்கள் .
இம்மாதத்தில் பள்ளிக்கல்வி நாட்குறிப்பில் 25.03.2020 தெலுங்கு வருடப்பிறப்பு அரசு விடுமுறை குறிப்பிடவில்லை. இம்மாத வேலைநாட்களிலிருந்து 1 நாளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.மேலும் இம்மாதப்பட்டியலில் விடுமுறை நாட்கள் எதுவுமில்லாத நாட்களான  30.03.2020 திங்கள் மற்றும் 31.03.2020 செவ்வாய்  பணிநாட்கள் விடுபட்டுள்ளது.இவ்விரு நாட்களை பணிநாளாக சேர்த்தால் மொத்தம் 21 பணிநாட்கள் வரும்.இது இம்மாதத்தில் 1 நாள் கூடுதலான பணிநாளாக வரும்.

*2020 ஏப்ரல்-13 நாட்கள்.
இம்மாதத்தில் பட்டியலின்படி 10.04.2020 புனித வெள்ளி விடுமுறை நாளாகும்.
மேலும் இம்மாதத்தில் வரும் விடுமுறை நாட்களான 06.04.2020 (மஹாவீரர் ஜெயந்தி),மற்றும் 14.04.2020 (தமிழ்வருடப் பிறப்பு ஆகிய இரு அரசு விடுமுறை நாட்கள் பட்டியலில் விடுபட்டுள்ளன.

*மேலும் இம்மாதத்தில் பட்டியலின்படி 13 பணிநாட்களில் 2 அரசு விடுமுறை நாட்களைக் கழித்தோமானால் 11 நாட்கள் மட்டுமே பணிநாளாகக் கருத முடியும்.*

*2020 பிப்ரவரி முதல் 2020 ஏப்ரல் முடிய (பிப்ரவரி 22+மார்ச் 21+ஏப்ரல் 11) ஆக மொத்தம் 54 நாட்கள் மட்டும் பணிநாள்.

*✳2019 ஜூன் முதல் 2020 ஏப்ரல் முடிய பள்ளிக்கல்வித்துறை நாட்குறிப்பின்படி மொத்த வேலை நாட்கள்.-213 நாட்கள்.*

*✳உள்ளூர் விடுமுறை நாட்கள் -3 நாட்கள் விடப்பட்டதுபோக 210 நாட்கள் 2019-20 கல்வியாண்டில்  பணிசெய்ய வேண்டும்.

*✳2019 ஜூன் முதல் 2020  ஜனவரி வரை நாம் 152 நாட்கள் அல்லது 153 நாட்கள் பணிசெய்து உள்ளோம்.பள்ளிகளுக்கு ஏற்ப மாறுபடும்.

*✳2019 ஜூன் முதல் ஜனவரி 2020 முடிய 152 நாட்கள் பணிசெய்தவர்கள் 2020 பிப்ரவரி முதல் ஏப்ரல் 2020 முடிய பள்ளிக்கல்வி நாட்குறிப்பின்படி  54 நாட்கள் பணிசெய்தால் 152 +54=206 நாட்கள் பணிசெய்யவேண்டும். எனவே 2020 பிப்ரவரி முதல் ஏப்ரல் 2020 முடிய உள்ள 3 மாதங்களில் பட்டியலில் உள்ள 2 சனிக்கிழமை பணிநாள் போக மேலும் 4  சனிக்கிழமைகள் பணிசெய்தால் 210 பணிநாட்கள் நிறைவுபெறும்.

*✳2019. ஜூன் முதல் ஜனவரி 2020 முதல் 153 நாட்கள் பணிசெய்தவர்கள் 2020 பிப்ரவரி முதல் ஏப்ரல் 2020 முடிய பள்ளிக்கல்வி நாட்குறிப்பின்படி 54 நாட்கள் பணி செய்தால் 153+54=207 நாட்கள் பணி செய்யவேண்டும்.எனவே 2020 பிப்ரவரி முதல் ஏப்ரல் 2020 முடிய உள்ள 3 மாதங்களில்  2 சனிக்கிழமைகள் பணிநாள் போக மேலும் 3 சனிக்கிழமைகள் பணிசெய்தால்  210 பணி நாட்கள் நிறைவுபெறும்.

*✳2019-2020 கல்வியாண்டில் மாணவர்களின்  இறுதி வேலைநாள் 2020,ஏப்ரல் 20 ஆகும்.

*✳2019-2020 கல்வியாண்டில் ஆசிரியர்களின்  இறுதி வேலைநாள் ஏப்ரல் 30 ஆகும்.

*ஆசிரியர் மன்றம்,நாமக்கல் மாவட்டம்.

Thursday 13 February 2020

பகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! .




பகவத்கீதை கூறும் அற்புதமான வாழ்க்கை போதனை. 43 அறிவுரைகள்! .

1. வாழ்வென்பது உயிர் உள்ள வரை மட்டுமே!
2. தேவைக்கு செலவிடு.
3. அனுபவிக்க தகுந்தன அனுபவி.
4. இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய்.
5. மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.
6. இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.
7. உயிர் போகும் போது, எதுவும் கொண்டு செல்ல போவதுமில்லை. ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.
8. மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.
9. உயிர் பிரிய தான் வாழ்வு. ஒரு நாள் பிரியும். சுற்றம், நட்பு, செல்வம், எல்லாமே பிரிந்து விடும்.

10. உயிர் உள்ள வரை, ஆரோக்கியமாக இரு.
11. உடல் நலம் இழந்து பணம் சேர்க்காதே.
12. உன் குழந்தைகளை பேணு. அவர்களிடம் அன்பாய் இரு.
13. அவ்வப்போது பரிசுகள் அளி.
14. அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே.
15. பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட, பாசமாய் இருந்தாலும், பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ, உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்!
16. அதைப்போல, பெற்றோரை மதிக்காத குழந்தைகள், உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்.
17. உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டுமென, வேண்டிக்கொள்ளலாம். பொறுத்துக்கொள்.
18. அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்; கடமை மற்றும் அன்பை அறியார்.
19. “அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி” என அறிந்து கொள்.
20. இருக்கும் போதே குழந்தைகளுக்கு கொடு.
21. ஆனால், நிலைமையை அறிந்து, அளவோடு கொடு. எல்லாவற்றையும் தந்து விட்டு, பின் கை ஏந்தாதே.
22. “எல்லாமே நான் இறந்த பிறகு தான்” என, உயில் எழுதி வைத்திராதே. நீ எப்போது இறப்பாய் என எதிர் பார்த்து காத்திருப்பர்.
23. எனவே, கொடுப்பதை நினைப்பதை மட்டும் முதலில் கொடுத்து விடு; மேலும் தர வேண்டியதை, பிறகு கொடு.
24. மாற்ற முடியாததை, மாற்ற முனையாதே.
25. மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே!
26. அமைதியாக, மகிழ்ச்சியோடு இரு.
27. பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.
28. நண்பர்களிடம் அளவளாவு.
29. நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம் பேணி, இறை பக்தி கொண்டு, குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி, மன நிறைவோடு வாழ்.
30. இன்னும் இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள், சுலபமாக ஓடி விடும்!
31. வாழ்வை கண்டு களி!
32. ரசனையோடு வாழ்!
33. வாழ்க்கை வாழ்வதற்கே!

34. நான்கு நபர்களை புறக்கணி!
🌎மடையன்
🌎சுயநலக்காரன்
🌎முட்டாள்
🌎ஓய்வாக இருப்பவன்

35. நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே!
🙋‍♂பொய்யன்
🙋‍♂துரோகி
🙋‍♂பொறாமைக்கைரன்
🙋‍♂மமதை பிடித்தவன்

36. நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே!
🙋‍♂அனாதை
🙋‍♂ஏழை
முதியவர்
🙋‍♂நோயாளி

37. நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே!
🌎மனைவி
🌎பிள்ளைகள்
🌎குடும்பம்
🌎 சேவகன்

38. நான்கு விசயங்களை ஆபரணமாக அணி!
🌎பொறுமை
🌎சாந்த குணம்
🌎அறிவு
🌎அன்பு

39. நான்கு நபர்களை வெறுக்காதே!
🙋‍♂தந்தை
🙋‍♂தாய்
🙋‍♂சகோதரன்
🙋‍♂சகோதரி

40. நான்கு விசயங்களை குறை!
🔉உணவு
🔉தூக்கம்
🔉சோம்பல்
🔉பேச்சு

41. நான்கு விசயங்களை தூக்கிப்போடு!
🙋‍♂துக்கம்
🙋‍♂கவலை
🌎இயலாமை
🙋‍♂கஞ்சத்தனம்

42. நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு!
🙋‍♂மனத்தூய்மை உள்ளவன்
🙋‍♂வாக்கை நிறைவேற்றுபவன்
🙋‍♂கண்ணியமானவன்
🙋‍♂உண்மையாளன்

43. நான்கு விசயங்கள் செய்!
🌎தியானம், யோகா
🙋‍♂நூல் வாசிப்பு 🙋‍♂உடற்பயிற்சி
🙋‍♂ சேவை செய்தல்

வாழ்க்கை வளம் பெற இத்தகைய செயல்களை கடை பிடியுங்கள்.

பிடிச்சிருந்தா, நல்ல விஷயத்த நாலு பேருக்கு ஷேர் பண்ணுங்க..

வேலூர்மாவட்டம கீ.வ. குப்பம் தாலுக்கா கீ.வ.குப்பம் ஒன்றியத்திலுள்ள கீழ்காணும் ஆசிரியர்கள் இன்று வியாழக்கிழமை 13-02-2020 ஆற்காடு அன்னை மீரா பொறியியல் கல்லூரியில் வேலூர் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட . ஆசிரியர்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.










வேலூர்மாவட்டம கீ.வ. குப்பம் தாலுக்கா
கீ.வ.குப்பம் ஒன்றியத்திலுள்ள கீழ்காணும் ஆசிரியர்கள் இன்று வியாழக்கிழமை 13-02-2020 ஆற்காடு   அன்னை மீரா பொறியியல் கல்லூரியில் வேலூர் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் தலைமையில்  நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட . ஆசிரியர்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.💐🌹

  *ஆசிரியர் TECH*
          *YouTube*

 திருமதி.உஷா ப.ஆ.,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
 பி.கே.புரம்,

திருமதி.ஸ்ரீமதி ப.ஆ.,
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மேல் காவனூர்

திருமதி. பானுரேகா இநிஆ
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி
மேல்காவனூர்.

திருமதி.ரேவதி இநிஆ
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
க.பெ.குப்பம்.

Wednesday 12 February 2020

2003-2006 தொகுப்பூதியத்திய காலத்தினை பணி வரன்முறை செய்ய வேண்டி துறை ரீதியாக விண்ணப்பிக்கும் படிவம் 2003-2006 தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் விண்ணப்பியுங்கள்.



2003-2006 தொகுப்பூதியத்திய காலத்தினை பணி வரன்முறை செய்ய வேண்டி துறை ரீதியாக விண்ணப்பிக்கும் படிவம்
2003-2006
தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் விண்ணப்பியுங்கள்.

Monday 10 February 2020

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் மற்று நிதி அமைச்சர் அவர்கள் எங்கள் நியாயமான எதிர்கால வாழ்வாதார கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்துவற்கான அறிவிப்பை 2020 - 2021 தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் இடம்பெற செய்து, அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்டநாள் எதிர்கால வாழ்வாதார கோரிக்கையை நிறைவேற்றவும் மற்றும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்தும் மற்றும் அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெற்று உதவிட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டி கேட்டுக்கொள்கிறேன் ~~~~~~~ சா.அருணன் நிறுவனத் தலைவர் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு





அறிக்கை
08.02.2020
~~~~~~~~
2020 - 2021ம் ஆண்டின் தமிழக அரசு  நிதிநிலை அறிக்கையில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் எதிர்கால வாழ்வாதார கோரிக்கையான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்துவதற்கான அறிவிப்பு இடம்பெற செய்து

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின்  நீண்டநாள் நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்
~~~~~~~~~~
2003ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு பணியில் நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவந்து நடைமுறை படுத்தியது மத்திய அரசு

தமிழக அரசும் அதனை ஏற்று தமிழகத்திலும் 2003ம் ஆண்டு ஏப்ரல் மாத்த்திற்கு பணியில் பணியில் நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவந்து நடைமுறை படுத்தியது, புதிய பங்களிப்பு ஓய்வூதியம் என்பது ஓய்விற்கு பிறகு அரசு ஊழியர்கள் மாத ஊதியத்தில் இருந்து 10% விழுக்காடு பிடித்தம் செய்து அதே தொகையை அரசு செலுத்தி அந்த தொகையை மட்டும் தான் ஓய்விற்கு பிறகு வழங்கிப்படுகிறது, பழைய ஓய்வூதிய திட்டத்தில் அப்படி இல்லை மாத ஊதியத்தில் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் பிடித்தம் செய்துக்கொள்ளலாம் அந்த தொகையில் நாம் அவ்வப்போது நமது தேவைக்கு முன் பணமாக பெற்றுக் கொள்ளலாம், ஓய்விற்கு பிறகு மாதாமாதம் குடும்ப ஓய்வூதியம், குறிப்பிட்ட விழுக்காடு ரொக்கமாகவும் வழங்கப்படுகிறது அதோடு  பணிக்கொடையும் வழங்கப்பட்டு வருகிறது

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் 10% விழுக்காடு பிடித்தம் அதே தொகையை அரசு செலுத்தினாலும் இத்திட்டத்தில் ஓய்வு பெற்றவர்கள் ரூ.10 லட்சத்தை இதுவரை தாண்டவில்லை,  தவிர  வேறு எந்த பயனும் இல்லாமல் தான் ஓய்வு பெறுகின்றனர், இந்த தொகை அவர்களின் எஞ்சியிருக்கும் வாழ்க்கையை கழிக்க உதவியாக இல்லை, காரணம் தன் பிள்ளைகளுக்கு பங்கிடவும் பெற்ற கடனை திருப்பி செலுத்த  மட்டுமே சரியாகிவிடுகிறது , ஓய்விற்கு பிறகு அவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியே

ஓய்விற்கு பிறகு  பிடித்தம் செய்யும் தொகையில் குறைந்தது மாதம் ரூ 10 ஆயிரமாவது ஓய்வூதியமாக வழங்கினால்  அவர்கள் மனைவியுடனும் கணவருடனும்  பட்டினியின்றி யார் தயவுயின்றி எஞ்சிய காலத்தை கழிக்க பேருதவியாக இருக்கும், எங்கள்  எதிர்கால வாழ்வாதார கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய  திட்டத்தை மீண்டும் நடைமுறை படுத்த 2003ம் ஆண்டு முதல் பல கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றோம், ஆனால் அரசு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவதற்கான சாத்திய கூறுகளை ஆராய குழுவை அமைத்தது தவிர வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, இதன் காரணமாக பலமுறை கோரிக்கை ஆர்பாட்டம் என பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் ஏற்காத  சூழ்நிலையில் தான் சென்ற ஆண்டு ஜனவரியில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தன் எதிர்கால வாழ்வாதார கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை நடத்தினார்கள்

போராட்டம் அரசை எதிர்த்து அல்ல, வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தினாலாவது அரசு பேச்சு வார்த்தைக்கு அழைத்து எங்கள் நியாமான கோரிக்கயை ஏற்று நிறைவேற்றாத  என்ற எண்ணத்தில் தான்  போராட்டம் நடத்தினோம், மாறாக அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து கைது செய்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பணியிடை நீக்கம் செய்தும் பணியிட மாற்றம் செய்தும் அரசு உத்தரவிட்டது,அரசு  பணியிடை நீக்கம் செயதவர்களை மீண்டும் பணியில் சேர்த்து கொண்டது, ஆனால் அவர்கள் மீதுள்ள வழக்குகள் மற்றும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளை இதுவரையில் திரும்ப பெற வில்லை

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் மற்று நிதி அமைச்சர் அவர்கள் எங்கள் நியாயமான எதிர்கால வாழ்வாதார  கோரிக்கையான புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்துவற்கான அறிவிப்பை 2020 - 2021 தமிழக அரசு நிதிநிலை அறிக்கையில் இடம்பெற செய்து, அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் நீண்டநாள்  எதிர்கால வாழ்வாதார கோரிக்கையை நிறைவேற்றவும்

மற்றும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்தும் மற்றும் அவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளை திரும்ப பெற்று உதவிட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்
~~~~~~~
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
9445454045
~~~~~~~~~

Sunday 9 February 2020

நேற்று 09-02-2020 சன் டிவிக்கு பேட்டி அளித்த மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் அவர்களுடைய கேள்வி-பதில். காணொளி





நேற்று 09-02-2020 சன் டிவிக்கு பேட்டி அளித்த மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன் அவர்களுடைய கேள்வி-பதில். காணொளி

G.O 202, DATE : 11.11.2019 மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் அரசு தொடக்க,நடுநிலைப்பள்ளிகளை பார்வையிடும்போது செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன ??





G.O 202, DATE : 11.11.2019 மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் அரசு தொடக்க,நடுநிலைப்பள்ளிகளை பார்வையிடும்போது செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன ??

Friday 7 February 2020

Income Tax - Bank Payment Challan




Income Tax - Bank Payment Challan

என்னதான் ஆய்வு செய்கிறீர்கள் ஒரு பதிலும் தெரியவில்லை 4 மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் சரமாரி கேள்வி கேட்டு டோஸ் வேலூரில் நடந்த ஆய்வு கூட்டத்தில் தொடக்கக்கல்வி இயக்குனர் கடும் அதிருப்தி




என்னதான் ஆய்வு செய்கிறீர்கள் ஒரு பதிலும் தெரியவில்லை 4 மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் சரமாரி கேள்வி கேட்டு டோஸ் வேலூரில் நடந்த ஆய்வு கூட்டத்தில் தொடக்கக்கல்வி இயக்குனர் கடும் அதிருப்தி.

வேலூரில் நடந்த ஆய்வு கூட்டத்தில் 4 மாவட்டங்களை சேர்ந்த கல்வி அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி கேட்டு தொடக்கக்கல்வி இயக்குனர் அதிரடித்தார் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள தனியார் பள்ளியில் வேலூர் திருவண்ணாமலை கிருஷ்ணகிரி தர்மபுரி ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர் மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் களுக்கான ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது.

அனைவரையும் வேலூர் முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் வரவேற்றார் இணை இயக்குனர் பாஸ்கர் சேது (தொடக்கக்கல்வி) முன்னிலை வகித்தார் கூட்டத்துக்கு தலைமை தாங்கி தொடக்கக்கல்வி இயக்குனர் முத்து பழனிச்சாமி பேசியதாவது பள்ளி மாணவர்களுக்காக அரசு வழங்கும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் ஒவ்வொரு பள்ளிக்கும் முழுமையாக சென்றடைகிறதா? சென்றடையாத பள்ளிகளின் எண்ணிக்கை எத்தனை? அதற்கான காரணம் என்ன என்பதை தெரிவிக்க வேண்டும்.

வட்டார கல்வி அலுவலர்கள் ஒவ்வொரு பள்ளியிலும் ஆய்வு செய்ய செல்லும்போது அங்கு பணியிலிருக்கும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எவ்வாறு பாடங்களை கற்றுத் தருகின்றனர் அந்தப் பாடங்கள் மாணவர்களுக்கு புரிகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

குறிப்பிட்ட ஒரு பாடத்தை மட்டும் கேட்காமல் அனைத்து பிரிவு பாடத்தில் இருந்தும் கேள்விகள் கேட்கவேண்டும் இதன் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் புரிந்ததா இல்லையா என்பதை அறிய முடியும் ஆய்வுக்கு செல்லும் இடத்தில் எது போன்ற கேள்விகளை கேட்கலாம் என்பதை நீங்கள் (வட்டார கல்வி அலுவலர்கள் வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள்) முன்கூட்டியே தயார்படுத்திக்கொள்ள வேண்டும் ஒன்றுமே தெரியாமல் கேள்விகளை கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் புரியாமல் தலையாட்டிவிட்டு தான் வர நேரிடும் குறிப்பாக ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் சோதிக்கவேண்டும்.

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு ஸ்போக்கன் இங்கிலீஷ் புத்தகம் அளித்துள்ளோம்.

வாரந்தோறும் ஒரு பாட வேளையில் மாணவர்களுக்கு புரியும் வகையில் எளிய முறையில் இவற்றை கற்பிக்க வேண்டும் அங்கன்வாடிகளில் எல்கேஜி வகுப்புகளில் எவ்வளவு மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என்பதையும் கவனிக்க வேண்டும் இவ்வாறு பேசினார் பின்னர் ஒவ்வொரு மாவட்ட வாரியாக வட்டார கல்வி அலுவலர் மற்றும் வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் தனித்தனியாக அழைத்து உங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடத்திய ஆய்வுகளின் எண்ணிக்கை எத்தனை கேட்கப்பட்ட கேள்விகள் என்ன என சரமாரி கேட்டார் இதற்கு பதில் கூற முடியாமல் பலர் தடுமாறினார் அப்போது ஒரு வட்டார கல்வி அலுவலரிடம் சரமாரியாக ஒரு பள்ளியில் வாரத்தில் எத்தனை பாடவேளைகள் செயல்படுத்தப்படுகிறது அவற்றில் ஒவ்வொரு பாடத்துக்கும் எத்தனை வகுப்புகள் நடத்தப்படுகிறது எனக்கேட்டார் இதேபோல் மற்றொரு வட்டார வள மைய மேற்பார்வையாளர் அழைத்து உங்கள் பகுதியில் எத்தனை அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன என கேட்டார் மற்றொருவரிடம் உங்கள் பகுதியில் அதிக மற்றும் குறைந்த மாணவர்கள் உள்ள பள்ளிகளின் பட்டியலை கூறுங்கள் எனக்கேட்டார் இவற்றுக்கு பதில் தெரியாமல் பலர் திணறினார் இதேபோல் மற்றொரு வட்டார கல்வி அலுவலரிடம் இதுவரை எத்தனை பள்ளிகளுக்கு சென்று ஆய்வு செய்தீர்கள் என கேட்டார் அதற்கு அவர் ஒரு பதிலை கூறினார் உடனே நீங்கள் செல்லும் போது அங்கிருந்த வகுப்பறையில் என்ன பாடம் நடத்திக் கொண்டிருந்தார்கள் எத்தனை மாணவர்கள் அங்கு இருந்தார்கள் மாணவர்களிடம் ஆசிரியர் எடுத்த பாடங்கள் குறித்து ஏதேனும் கேட்டீர்களா என அடுக்கடுக்காக கேட்டார் இவற்றுக்கு பதில் அளிக்க முடியாமல் அந்த அலுவலர் திணறினார்.

இதனால் கடும் அதிருப்தியடைந்த தொடக்கக்கல்வி இயக்குனர் முத்து பழனிச்சாமி மீண்டும் பேசியதாவது நான் கேட்ட கேள்விகளுக்கு உங்களால் சரிவர பதில் கூற முடியவில்லை அப்படி என்றால் நீங்கள் ஆய்வுக்கு செல்லும் பள்ளியில் என்னதான் கேள்வி கேட்டிருப்பீர்கள் உங்கள் வருகையை முன்கூட்டியே தெரிவித்து விட்டு சென்றீர்களா எக்காரணம் கொண்டும் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் திடீரெனதான் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தினார் தொடக்கக்கல்வி இயக்குனரின் கேள்விகளுக்கு சரிவரப் பதில் கூற முடியாமல் தவித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

நன்றி: தினகரன் நாளிதழ் செய்தி

வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் 28.01.2020 அன்று சேர்க்காடு, அரசு மேநிலைப் பள்ளியில் திடீர் பார்வை மேற்கொண்டதன் அடிப்படையில் பார்வை அறிக்கை அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தகவலுக்காகவும் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காகவும் அனுப்பப்படுகிறது. கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, வேலூர்-632006







ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி
வேலூர் மாவட்டம்.

நாள்: 29.01.2020

பார்வை :

வேலூர் மாவட்டக் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்
ந.க.எண்.307/தரம்/2020
பொருள்: வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் திடீர் பள்ளிப் பார்வை
அறிக்கை - தொடர்பாக,
வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் சேர்க்காடு, அரசு மேநிலைப்
பள்ளி திடீர் பார்வை நாள்.28.01.2020.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் 28.01.2020 அன்று சேர்க்காடு, அரசு மேநிலைப்
பள்ளியில் திடீர் பார்வை மேற்கொண்டதன் அடிப்படையில் பார்வை அறிக்கை அனைத்து வகை
பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தகவலுக்காகவும் தக்க நடவடிக்கைகள்
மேற்கொள்வதற்காகவும் அனுப்பப்படுகிறது.

மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையின் போது முதலில் அனைத்து வகுப்பறைகள், பள்ளி
நூலகம், மாணவ, மாணவியர் கழிப்பிட வசதிகளை பார்வையிட்டார், மாணவிகளுக்கான Incinerator
கருவி பழுதடைந்துள்ளதை கண்டறிந்து உடனடியாக சரிசெய்யுமாறு அறிவுறுத்தி, கீழ்கண்ட
அறிவுரைகளையும் வழங்கினார்.

> +1, +2 வகுப்பறைகளுக்கு சென்று மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடினார்,

ஆசிரியர்கள் பற்றியும், ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் முறைகளைப் பற்றியும்
கேட்டறிந்தார்.

மாணவ, மாணவியர்கள் தங்களுடைய இயற்பியல் ஆசிரியர் சரிவர பள்ளிக்கு வருவதில்லை
எனவும், பள்ளிக்கு வந்தாலும் வகுப்பறைக்கு வருவதில்லை என்றும் கூறினார்கள். மாவட்ட
ஆட்சியர் அவர்கள் உடனே பள்ளித் தலைமையாசிரியர் அழைத்து ஏன் மாணவர்கள்
இவ்வாறு கூறுகின்றனர் என விசாரித்தார். அப்போது தலைமையாசிரியர் மாணவர்கள்
கூறியதை உறுதி செய்து, இவ்வாசிரியர் நான் சொல்வதையும் கேட்பதில்லை, அடிக்கடி
தகவல் இல்லாமலே விடுப்பெடுத்து கொள்கிறார், பின்னர் பள்ளிக்கு வந்து மருத்துவ விடுப்பு
விண்ணப்பம் கொடுக்கிறார், இன்றும் (28.01.2020) எந்தவிதமான தகவலும் இல்லை எனக்
கூறியதன் அடிப்படையில் உடனடியாக அவ்வாசிரியரை தற்காலிக பணிநீக்கம் செய்யுமாறு
உடன் இருந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களிடம் தெரிவித்தார்.

10 ம் வகுப்பு மாணவர்களை பாடங்களைப் பற்றியும், பள்ளிக்கு சரிவர வராத மாணவர்களைப்
பற்றியும் கேட்டறிந்து பின் ஆசிரியர்களிடம் டிசம்பர் 2019-ம் மாதத்தில் நடைபெற்ற

அரையாண்டுத் தேர்வு பாடவாரியன தேர்ச்சி விகிதம் குறித்து கேட்டறிந்தார்.

மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுடைய தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு

(Continued and Comprehensive Evaluation - CCE) பதிவேடுகள் மற்றும் Periodical
Assessment போன்றவற்றை பற்றியும் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.

- 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு ஆசிரியர்களும் மாணவர்களும் தான் பள்ளிக்கு நற்பெயர் வாங்கித்
தருபவர்கள் என்று கூறி 6-ம் வகுப்பில் உள்ள 2 பிரிவு மாணவர்களை தனித்தனியாக

படத்தை வாசிக்கச் செய்து மாணவர்களின் தமிழ் வாசிப்புத் திறனை சோதித்தார். மெல்ல
கற்கும் மாணவர்கள் மீது தனிக் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார். பின்னர் அனைத்து
ஆசிரியர்களுக்கும் கூட்டம் நடத்தினார்.

முதுகலை ஆசிரியர்கள் பாடவாரியாக தேர்ச்சி விகிதத்தை உயர்த்தி உள்ள ஆசிரியர்களை

பாராட்டினார். தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ள வரலாறு மற்றும் பொருளியல்
ஆசிரியர்கள் குறைந்த மாணவர்கள் உள்ள இப்பள்ளியில் தனிக் கவனம் செலுத்தி
நடைபெறவுள்ள மார்ச் 2020-ல் பொதுத் தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும்
என்றும், இல்லை எனில் உங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்தார்.

பிறகு பட்டதாரி ஆசிரியர்களிடம் டிசம்பர் 2019-ம் மாதத்தில் நடைபெற்ற அரையாண்டுத்
தேர்வு பாடவாரியான தேர்ச்சி விகிதத்தை கேட்டறிந்து, கணிதம், அறிவியல் மற்றும்
ஆங்கிலம் ஆசிரியர்கள் தேர்ச்சி விகிதம் உயர்த்தி உள்ளதைப் பாராட்டினார். தமிழ் மற்றும்
சமூக அறிவியல் பாடங்களில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது இதற்கான
காரணங்களை ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். அப்போது தமிழ் ஆசிரியை மாணவர்கள்
சற்று ஒழுங்கீனமான செயல்களில் இருப்பதாகவும், தாங்கள் சொல்வதையும் கேட்பதில்லை,
வீட்டுப் பாடங்களையும் சரிவர செய்வதில்லை என்று தெரிவித்தார். அதற்கு மாவட்ட
ஆட்சியர் மாணவர்களை ஒழுகத்திற்கு கொண்டு வருவது ஆசிரியர்களின் கடமை என்றும்
அம் மாணவர்களின் பெற்றோர்களிடம் ஏன் பேசவில்லை என்றும், மாதாந்திர பெற்றோர்
ஆசிரியர் கூட்டத்தை கூட்டி மாணவர்களுடைய வளர்ச்சியை அக்கூட்டத்தில் தெரிவிக்க
வேண்டும் என்றும் தெரிவித்தார்.

35%பெற்று மாணவர்களை தேர்ச்சி அடைய செய்வது மிகவும் எளியது எனவும், ஆசிரியர்கள்
இதன் மீது தனிக் கவனம் செலுத்தி ஆரோக்கியமான போட்டியை மேற்கொண்டு
தங்களுடைய பாடத்தில் எந்தவொரு மாணவரும் தோல்வி அடையக்கூடாது
உறுதிமொழி எடுத்துக்கொள்ளுமாறு ஆசிரியர்களை அறிவுறுத்தி, 100% தேர்ச்சி விழுக்காடு
காண்பிக்கும் பாட ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்று கூறி என
ஊக்கமளித்தார்.

> 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடக்க இருப்பதால் அவர்கள்
மீது தனிக் கவனம் செலுத்தி முக்கியமான கேள்விகளை வீட்டுபாடமாக கொடுத்து அவர்கள்
சரிவர செய்து வருகிறார்களா என்பதை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.

8 ம் வகுப்பில் ஆங்கிலப் பாடத்தில் 33 மாணவர்களில் 4 மாணவர்கள் சரிவர படிப்பதில்லை
எனவும், தொடர்ச்சியாக பள்ளிக்கு வருவதில்லை எனவும், ஆசிரியர் தெரிவித்தார். அதற்கு
மாவட்ட ஆட்சியர் அவர்கள் அம்மாணவர்களுடைய பெற்றோர்களை அழைத்து பேசுமாறு

பள்ளி தலைமையாசிரியரிடம் தெரிவித்தார்.

ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற SLAS Test தேர்ச்சி விகிதத்தை
கேட்டறிந்து, இப்பள்ளி மாணவர்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதை சுட்டிக்காட்டி

இந்நிலையை மாற்ற வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தினார்.

ம் வகுப்பு ஆசிரியர்கள் தான் பள்ளியின் தூண்கள், பள்ளியின் வளர்ச்சி 6-ம் வகுப்பு
ஆசிரியர்கள் கையில்தான் உள்ளது என்று வலியுறுத்தி 6-ம் வகுப்பு ஆசிரியர்கள் மிகவும்
கவனமாக பள்ளிக்கு தொடர்ந்து வராத மாணவர்களை கண்டறிந்து அவர்கள் மீது தனிக்
கவனம் செலுத்தி, பெற்றோர்களை அழைத்து பேசி அம்மாணர்வகளைத் தொடர்ந்து
பள்ளிக்கு வரச் செய்ய வேண்டும் மற்றும் அனைத்து 6-ம் வகுப்பு மாணவர்களுடைய வாசிப்பு

மற்றும் எழுதும் திறன் தினமும் சோதிக்க வேண்டும், Dictation நடத்தப்பட வேண்டும், பாடம்

நடத்திய பிறகு Flash Test நடத்தப்பட வேண்டும் அதனுடைய மதிப்பெண்களை
ஆசிரியர்கள் தங்களுடைய மதிப்பெண் பட்டியலில் குறிக்க வேண்டும் என்றும், தினமும்
இவ்வாறு மாணவர்களின் வளர்ச்சியை கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

8,10 மற்றும் 12-ம் வகுப்களில் பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட
வேண்டும் என அறிவுறுத்தினார்.

சத்துணவு கூடத்தை பார்வையிட்டு அவர்கள் சுகாதாரமான முறையில் சத்துணவு
தயாரிக்கிறார்களா என்பதை உறுதி செய்து, எரிவாயு பயன்படுத்தி சமையல் செய்யுமாறு
அறிவுறுத்தினார்.

- பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து
இப்பள்ளிக்கு Borewell குடிநீர் வசதி செய்துத்தர வேண்டும் எனவும், சுற்றுச் சுவர் வசதி
தேவைப் பற்றியும் தெரிவித்தனர். அதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் நடவடிக்கை
மேற்கொள்வதாக உறுதி அளித்து பள்ளி திடீர் பார்வையை நிறைவு செய்தார்.

மாவட்ட ஆட்சியர் அவர்களின் இன்றைய திடீர் பள்ளி பார்வையின்போது மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், பத்திரிக்கை நிருபர்கள் மற்றும் பெற்றோர்
ஆசிரியர் கழக உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

ஓம்.XXXXXX)

கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்,
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி,
வேலூர்-632006

பெறுநர் - அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள்.

நகல் - மாவட்ட கல்வி அலுவலர்கள்.

வேலூர், திருப்பத்தூர் / வாணியம்பாடி / ராணிப்பேட்டை அரக்கோணம்.

நகல்: வேலூர் மாவட்ட முதன்மைக கல்வி அலுவலர் அவர்களுக்கு கனிவுடன் அனுப்பலாகிறது.

Thursday 6 February 2020

கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் பொருட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சில விவரங்கள் தெரிவிக்க கோருதல் முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.








கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் பொருட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சில விவரங்கள் தெரிவிக்க கோருதல்

அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,

பள்ளி இறை வணக்க கூட்டத்தின்போது கொரானா வைரஸ் காய்ச்சல், நோயின் அறிகுறிகள், கொரானா வைரஸ் பரவும் விதம், நோய்தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளி மாணவ/ மாணவிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.