அறிக்கை
04.02.2020
~~~~~~~~~
5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து
~~~~~~~~~~~~~~~
மத்திய அரசின் புதியக் கல்வி கொள்கையை நடைமுறை படுத்தும் விதமாக இந்த ஆண்டு 5 ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை அறிவித்தது
இந்நிலையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு உட்பட பல ஆசிரியர்கள் சங்கங்கள் தமிழ் அமைப்புகள் கல்வியாளர்களும் பெற்றோர்களும் பொதுத்தேர்வை நடத்த கூடாது , அப்படி பொதுத் தேர்வை நடத்தினால் அரசுப்பள்ளி ஏழை மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் இதனால் அரசுப் பள்ளிகளில் இடைநிற்றல் பெறுமளவில் இருக்கும் என்று எதிர்ப்பும் கோரிக்கையும் வலியுறுத்தி வந்த்தன
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு மற்றும் கல்வியாளர்கள் தமிழ் அமைப்புகள் கோரிக்கை ஏற்றும் 5ம் வகுப்பு 8ம் வகுப்பு மாணவர்கள் நலன் கருதியும் அரசு பள்ளியில் மாணவர்கள் இடைநிற்றலை கருத்தில் கொண்டு தமிழக அரசு 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்து உத்தவரவு பிறப்பித்துள்ளது, வருங்காலங்களிலும் அரசுப் பள்ளி மாணவர்களின் நலன்கருதி 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்
5ம் வகுப்பு மற்றும் 8 ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்த்தை வரவேற்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் .
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
No comments:
Post a Comment