ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி
வேலூர் மாவட்டம்.
நாள்: 29.01.2020
பார்வை :
வேலூர் மாவட்டக் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்
ந.க.எண்.307/தரம்/2020
பொருள்: வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்களின் திடீர் பள்ளிப் பார்வை
அறிக்கை - தொடர்பாக,
வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் சேர்க்காடு, அரசு மேநிலைப்
பள்ளி திடீர் பார்வை நாள்.28.01.2020.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் 28.01.2020 அன்று சேர்க்காடு, அரசு மேநிலைப்
பள்ளியில் திடீர் பார்வை மேற்கொண்டதன் அடிப்படையில் பார்வை அறிக்கை அனைத்து வகை
பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தகவலுக்காகவும் தக்க நடவடிக்கைகள்
மேற்கொள்வதற்காகவும் அனுப்பப்படுகிறது.
மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையின் போது முதலில் அனைத்து வகுப்பறைகள், பள்ளி
நூலகம், மாணவ, மாணவியர் கழிப்பிட வசதிகளை பார்வையிட்டார், மாணவிகளுக்கான Incinerator
கருவி பழுதடைந்துள்ளதை கண்டறிந்து உடனடியாக சரிசெய்யுமாறு அறிவுறுத்தி, கீழ்கண்ட
அறிவுரைகளையும் வழங்கினார்.
> +1, +2 வகுப்பறைகளுக்கு சென்று மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடினார்,
ஆசிரியர்கள் பற்றியும், ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் முறைகளைப் பற்றியும்
கேட்டறிந்தார்.
மாணவ, மாணவியர்கள் தங்களுடைய இயற்பியல் ஆசிரியர் சரிவர பள்ளிக்கு வருவதில்லை
எனவும், பள்ளிக்கு வந்தாலும் வகுப்பறைக்கு வருவதில்லை என்றும் கூறினார்கள். மாவட்ட
ஆட்சியர் அவர்கள் உடனே பள்ளித் தலைமையாசிரியர் அழைத்து ஏன் மாணவர்கள்
இவ்வாறு கூறுகின்றனர் என விசாரித்தார். அப்போது தலைமையாசிரியர் மாணவர்கள்
கூறியதை உறுதி செய்து, இவ்வாசிரியர் நான் சொல்வதையும் கேட்பதில்லை, அடிக்கடி
தகவல் இல்லாமலே விடுப்பெடுத்து கொள்கிறார், பின்னர் பள்ளிக்கு வந்து மருத்துவ விடுப்பு
விண்ணப்பம் கொடுக்கிறார், இன்றும் (28.01.2020) எந்தவிதமான தகவலும் இல்லை எனக்
கூறியதன் அடிப்படையில் உடனடியாக அவ்வாசிரியரை தற்காலிக பணிநீக்கம் செய்யுமாறு
உடன் இருந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களிடம் தெரிவித்தார்.
10 ம் வகுப்பு மாணவர்களை பாடங்களைப் பற்றியும், பள்ளிக்கு சரிவர வராத மாணவர்களைப்
பற்றியும் கேட்டறிந்து பின் ஆசிரியர்களிடம் டிசம்பர் 2019-ம் மாதத்தில் நடைபெற்ற
அரையாண்டுத் தேர்வு பாடவாரியன தேர்ச்சி விகிதம் குறித்து கேட்டறிந்தார்.
மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுடைய தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு
(Continued and Comprehensive Evaluation - CCE) பதிவேடுகள் மற்றும் Periodical
Assessment போன்றவற்றை பற்றியும் மாவட்ட ஆட்சியர் கேட்டறிந்தார்.
- 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு ஆசிரியர்களும் மாணவர்களும் தான் பள்ளிக்கு நற்பெயர் வாங்கித்
தருபவர்கள் என்று கூறி 6-ம் வகுப்பில் உள்ள 2 பிரிவு மாணவர்களை தனித்தனியாக
படத்தை வாசிக்கச் செய்து மாணவர்களின் தமிழ் வாசிப்புத் திறனை சோதித்தார். மெல்ல
கற்கும் மாணவர்கள் மீது தனிக் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார். பின்னர் அனைத்து
ஆசிரியர்களுக்கும் கூட்டம் நடத்தினார்.
முதுகலை ஆசிரியர்கள் பாடவாரியாக தேர்ச்சி விகிதத்தை உயர்த்தி உள்ள ஆசிரியர்களை
பாராட்டினார். தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ள வரலாறு மற்றும் பொருளியல்
ஆசிரியர்கள் குறைந்த மாணவர்கள் உள்ள இப்பள்ளியில் தனிக் கவனம் செலுத்தி
நடைபெறவுள்ள மார்ச் 2020-ல் பொதுத் தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும்
என்றும், இல்லை எனில் உங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்தார்.
பிறகு பட்டதாரி ஆசிரியர்களிடம் டிசம்பர் 2019-ம் மாதத்தில் நடைபெற்ற அரையாண்டுத்
தேர்வு பாடவாரியான தேர்ச்சி விகிதத்தை கேட்டறிந்து, கணிதம், அறிவியல் மற்றும்
ஆங்கிலம் ஆசிரியர்கள் தேர்ச்சி விகிதம் உயர்த்தி உள்ளதைப் பாராட்டினார். தமிழ் மற்றும்
சமூக அறிவியல் பாடங்களில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது இதற்கான
காரணங்களை ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். அப்போது தமிழ் ஆசிரியை மாணவர்கள்
சற்று ஒழுங்கீனமான செயல்களில் இருப்பதாகவும், தாங்கள் சொல்வதையும் கேட்பதில்லை,
வீட்டுப் பாடங்களையும் சரிவர செய்வதில்லை என்று தெரிவித்தார். அதற்கு மாவட்ட
ஆட்சியர் மாணவர்களை ஒழுகத்திற்கு கொண்டு வருவது ஆசிரியர்களின் கடமை என்றும்
அம் மாணவர்களின் பெற்றோர்களிடம் ஏன் பேசவில்லை என்றும், மாதாந்திர பெற்றோர்
ஆசிரியர் கூட்டத்தை கூட்டி மாணவர்களுடைய வளர்ச்சியை அக்கூட்டத்தில் தெரிவிக்க
வேண்டும் என்றும் தெரிவித்தார்.
35%பெற்று மாணவர்களை தேர்ச்சி அடைய செய்வது மிகவும் எளியது எனவும், ஆசிரியர்கள்
இதன் மீது தனிக் கவனம் செலுத்தி ஆரோக்கியமான போட்டியை மேற்கொண்டு
தங்களுடைய பாடத்தில் எந்தவொரு மாணவரும் தோல்வி அடையக்கூடாது
உறுதிமொழி எடுத்துக்கொள்ளுமாறு ஆசிரியர்களை அறிவுறுத்தி, 100% தேர்ச்சி விழுக்காடு
காண்பிக்கும் பாட ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்று கூறி என
ஊக்கமளித்தார்.
> 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடக்க இருப்பதால் அவர்கள்
மீது தனிக் கவனம் செலுத்தி முக்கியமான கேள்விகளை வீட்டுபாடமாக கொடுத்து அவர்கள்
சரிவர செய்து வருகிறார்களா என்பதை உறுதி செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.
8 ம் வகுப்பில் ஆங்கிலப் பாடத்தில் 33 மாணவர்களில் 4 மாணவர்கள் சரிவர படிப்பதில்லை
எனவும், தொடர்ச்சியாக பள்ளிக்கு வருவதில்லை எனவும், ஆசிரியர் தெரிவித்தார். அதற்கு
மாவட்ட ஆட்சியர் அவர்கள் அம்மாணவர்களுடைய பெற்றோர்களை அழைத்து பேசுமாறு
பள்ளி தலைமையாசிரியரிடம் தெரிவித்தார்.
ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற SLAS Test தேர்ச்சி விகிதத்தை
கேட்டறிந்து, இப்பள்ளி மாணவர்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளதை சுட்டிக்காட்டி
இந்நிலையை மாற்ற வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தினார்.
ம் வகுப்பு ஆசிரியர்கள் தான் பள்ளியின் தூண்கள், பள்ளியின் வளர்ச்சி 6-ம் வகுப்பு
ஆசிரியர்கள் கையில்தான் உள்ளது என்று வலியுறுத்தி 6-ம் வகுப்பு ஆசிரியர்கள் மிகவும்
கவனமாக பள்ளிக்கு தொடர்ந்து வராத மாணவர்களை கண்டறிந்து அவர்கள் மீது தனிக்
கவனம் செலுத்தி, பெற்றோர்களை அழைத்து பேசி அம்மாணர்வகளைத் தொடர்ந்து
பள்ளிக்கு வரச் செய்ய வேண்டும் மற்றும் அனைத்து 6-ம் வகுப்பு மாணவர்களுடைய வாசிப்பு
மற்றும் எழுதும் திறன் தினமும் சோதிக்க வேண்டும், Dictation நடத்தப்பட வேண்டும், பாடம்
நடத்திய பிறகு Flash Test நடத்தப்பட வேண்டும் அதனுடைய மதிப்பெண்களை
ஆசிரியர்கள் தங்களுடைய மதிப்பெண் பட்டியலில் குறிக்க வேண்டும் என்றும், தினமும்
இவ்வாறு மாணவர்களின் வளர்ச்சியை கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
8,10 மற்றும் 12-ம் வகுப்களில் பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட
வேண்டும் என அறிவுறுத்தினார்.
சத்துணவு கூடத்தை பார்வையிட்டு அவர்கள் சுகாதாரமான முறையில் சத்துணவு
தயாரிக்கிறார்களா என்பதை உறுதி செய்து, எரிவாயு பயன்படுத்தி சமையல் செய்யுமாறு
அறிவுறுத்தினார்.
- பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களை சந்தித்து
இப்பள்ளிக்கு Borewell குடிநீர் வசதி செய்துத்தர வேண்டும் எனவும், சுற்றுச் சுவர் வசதி
தேவைப் பற்றியும் தெரிவித்தனர். அதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் நடவடிக்கை
மேற்கொள்வதாக உறுதி அளித்து பள்ளி திடீர் பார்வையை நிறைவு செய்தார்.
மாவட்ட ஆட்சியர் அவர்களின் இன்றைய திடீர் பள்ளி பார்வையின்போது மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், பத்திரிக்கை நிருபர்கள் மற்றும் பெற்றோர்
ஆசிரியர் கழக உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
ஓம்.XXXXXX)
கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்,
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி,
வேலூர்-632006
பெறுநர் - அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்கள்.
நகல் - மாவட்ட கல்வி அலுவலர்கள்.
வேலூர், திருப்பத்தூர் / வாணியம்பாடி / ராணிப்பேட்டை அரக்கோணம்.
நகல்: வேலூர் மாவட்ட முதன்மைக கல்வி அலுவலர் அவர்களுக்கு கனிவுடன் அனுப்பலாகிறது.
No comments:
Post a Comment