5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு:
5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு இந்த கல்வியாண்டு முதல் பொதுத் தேர்வு நடத்த தமிழக அரசு தீர்மானித்துள்ள நிலையில் இந்த முடிவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்து இந்த பொதுத்தேர்வுக்கு எந்தவித எதிர்ப்பும் கிளம்பாத நிலையில் அரசியல் கட்சிகள் மட்டுமே இதனை அரசியலாக்கி வருவதாக ஆளுங்கட்சி தரப்பில் இருந்து கூறப்பட்டு வருகிறது இந்த நிலையில் ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து பள்ளிக் கல்வி ஆணையர் அவர்கள் சற்றுமுன் கூறியதாவது: 5,8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள், பெற்றோர் பயப்படத்தேவையில்லை. மாநிலம் முழுவதும் மாணவர்களின் கற்றல் திறனை சோதிக்க மட்டுமே தேர்வு நடத்தப்படுகிறது என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment