Sunday 2 February 2020

எத்தனை பொதுத் தேர்வுகள் நடத்தினாலும் அரசுப் பள்ளி மாணவர்கள் தரத்தை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு முழு சுதந்திரம் செயல்படவும் மற்றும் கட்டமைப்பு வசதியை மேம்படுத்தாமல் அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வாய்ப்பில்லை




அறிக்கை
02.02.2020
===========
எத்தனை பொதுத் தேர்வுகள் நடத்தினாலும் அரசுப் பள்ளி மாணவர்கள் தரத்தை  மேம்படுத்த ஆசிரியர்களுக்கு  முழு சுதந்திரம்  செயல்படவும் மற்றும் கட்டமைப்பு வசதியை மேம்படுத்தாமல் அரசுப் பள்ளி மாணவர்கள்  தேர்ச்சி விகிதம் அதிகரிக்க வாய்ப்பில்லை

அரசுப் பள்ளி மாணவர்களின் தரம் உயர ஆசிரியர்களை  சுதந்தமாக பணியாற்ற கட்டமைப்பு வசதியை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்
~~~~~~~~~
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
9445454044
~~~~~~~~
தமிழக அரசு பள்ளி மாணவர்களின் தரம் மேம்பட வேண்டுமானால் ஆசிரியர்கள் முழு சுதந்திரத்தோடு செயல்ப்பட்டால் மட்டுமே சாத்தியம், அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 100% விழுக்காடு ஏழ்மைநிலையில் உள்ளனர்

அவர்களின் பெற்றோர்கள் தின  கூலி வேலைசெய்து தான் குடும்பத்தை நடத்துகின்றனர், ஒரு நாள் வேலைக்கு செல்லவில்லை என்றால் எடுத்த நாள் எப்படி என்ற கேள்விக் குறியோடு தான் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்கின்றனர்,

கூலிவேலை செய்துவிட்டு இரவு நேரத்தில் தான் வீடுத்திரும்புவர் இப்படி இருக்கும் சூழ்நிலையில் குழந்தைகளை அரசுப் பள்ளி சேர்த்த பிறகு அவர்கள் பள்ளிக்கு செல்கிறார்களா நன்றாக படிக்கின்றார்களா என்று கூட அறிய கூட அவர்களால் முடியாத நிலை, இரவு நேரத்தில் மட்டுமே மாணவர்கள் பெற்றோருடன் இருக்கின்றார்

பகல் முழுவதும் மாணவர்கள் ஆசிரியர்களின் மேற்பார்வையில் தான் இருக்கின்றனர், பெற்றோர்கள் கவனிக்க இயலாத நிலையில் , ஆசிரியர்கள் தான் அனைத்து நிலையிலும் கவனிக்க வேண்டும்,

ஆனால் மாணவர்களை தலைமுடியை  நல்லமுறையில் திருத்தம் செய்து பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்த  கூடாது , சீருடை அவரவர் விருப்பத்திற்கு அணிந்து வருபவர்களை  இப்படி அணிந்துவர கூடாது சீராக  அணிந்து வரவேண்டும் என்று கேட்க கூடாது,  படியுங்கள் என்று சொல்லக்கூடாது,வீட்டு பாடம் கொடுக்க கூடாது , கையெழுத்து நன்றாக எழுத  பழக பயிற்சி அளிக்க கூடாது. இதையெல்லாம் இப்படி வரும் மாணவர்களை கேட்கின்ற  பட்சத்தில் மாணவர்களை எச்சரித்து  பெற்றோர்களை  கடிதம் கைபேசி மூலமாக தொடர்பு கொண்டு   அழைத்தால்  பெற்றோர்கள் பலர் வருவதே இல்லை,

 கடிதம் கைபசி மூலம் தொடர்புக்கொள்ள முடியாத பெற்றோர்களை மாணவர்களிடம் அழைத்து வர அறிவுறுத்தினால் அவர்களுக்கு தகவல் கொடுக்காமல் பல மாணவர்கள் அந்த கிராமத்தில் இருக்கும் இளைஞர்களை அழைத்து வந்து  உங்களுக்கு யார் கொடுத்தது இதையெல்லாம் கேட்கின்ற உரிமையை உங்கள் பணி என்னவோ அதை மட்டும் பாருங்கள் என்று  ஆசிரியர்களை மிரட்டுவது வாடிக்கையாக இருக்கிறது

ஒரு சில பெற்றோரும் அப்படி தான் இருக்கின்றனர் மாணவன் செய்யும் தவறை உணராமல் ஆசிரியர்களை தான் அச்சுறுத்துவார்

 மாணவர்களை ஒழுங்கு படுத்து பயிலவைக்க  ஏகப்பட்ட சிரமங்கள்,

 ஒழுங்குப்படுத்தும் ஆசிரியர்கள் மீது புகார்கள் வந்தால் அதிகாரிகளும் அந்த நேரத்தில் பிரச்சனை முடிவிற்கு வந்தால் போதும்  என்று ஆசிரியர்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கின்றனர்,

 இதனால் ஆசிரியர்களுக்கு மன உளைச்சல் ஏற்டுகிறது , நமக்கு ஏன் இந்த வேண்டாத வேலை பாடத்தை மட்டும் எடுக்கும்  எண்ணத்தில் தான்  ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள் 

மாணவர்கள் ஏழ்மை நிலை கருதி பல ஆசிரியர்கள் அவர்களை தத்து எடுத்து படிக்கவைக்கின்றனர் அவர்கள் உயர்க்கல்வி படித்து முடிக்கும் வரை அத்தனை செலவையும் தானே ஏற்கிறார்கள்.

தனியார் பள்ளிகள் அப்படி அல்ல எல்.கே.ஜி முதலே மாணவர்களின் தரத்தை அறிய நுழைவுத் தேர்வு நடத்தி தான் சேர்கின்றனர் பல தனியார் பள்ளிகளில் பெற்றோர்களுக்கே தேர்வு நடத்தி அவர்களும் அந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் அந்த குழந்தைக்கு பள்ளியில் இடம், அது மட்டும் இல்லாமல் சேர்ப்பது முன்னரே பெற்றோரிடத்தில் மாணவர்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்று உறுதிமொழி பத்தித்தில் கையெழுத்து பெற்று கொள்கிறார்கள், கட்டுப்பாட்டை மீறும்  மாணவர்கள் மீது உடனே ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பெற்றோரை அழைத்து பள்ளியில் இருந்து நீக்கம் செய்கிறார்கள் , காலாண்டு அரையாண்டு தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களின் நிலையும் அப்படி தான்

அந்த மாணவர்களையும் அரசு பள்ளிகளில் தான் சேர்த்து கொள்கிறார்கள் 

சிறு தவறு செய்யும் மாணவர்களை கூட கண்டிக்கும் விதமாக பெற்றோரை அழைத்து ஒரு நாள் முழுவதும் காத்திருக்க வைத்து பின்பு தான் பெற்றோரை  எச்சரித்து அனுப்புகின்றார்கள்,  இது பல தனியார் பள்ளிகளில் நடந்துவரும் உண்மை

அரசு பள்ளிகளில் அப்படி இல்லை பெரும்பாலான  பெற்றோர்கள் அழைத்தாலும் வருவது இல்லை அதிலும் ஒரு சில பெற்றோர்கள் மாணவர்கள் செய்யும் தவறை அறியாமல் ஆசிரியர்களை தான் கேள்வி கேட்டு அச்சுறுத்துவார்கள் ,இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் தேர்ச்சி விகிதம் அதிகரிக்காத் தலைமையாசிரியர்கள் மற்றும் அந்தந்த பாட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறது அரசு

அரசு பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் விண்ணப்பித்த உடனே நேரடி நியமனத்தில் நியமனம் செய்பவர்கள் அல்ல

முன்பு இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிந்து பதிவு மூப்பு அடிப்படையில் பணியில் சேர்ந்து பணியாற்றுகின்றனர் அப்போது ஆசிரியர்கள் தகுதி தேர்வு இல்லை, ஆனால் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெறவேண்டும்  , ஆசிரியர் பயிற்சி பள்ளியில் இடம் கிடைக்க வேண்டுமானால்  பனிரெண்டாம் வகுப்பில் 1200 மதிப்பெண்ணிற்கு 1100 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தால் மட்டுமே இடம் கிடைக்கும்

 பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள் தமிழக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தான் தேர்வெழுதி தேர்ச்சி பெற்று பணி நியமனம் செய்து பணியாற்றி வருகிறார்கள்

2010ம் ஆண்டிற்கு பிறகு கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த வேண்டும்,  அதில் சேர்ச்சி பெற்ற பின்னர் தான் ஆசிரியாக பணியில் சேர்கின்றனர் . ஆசிரியர் தகுதி தேர்வை 5 லட்சம் பேர்களுக்கு மேல் எழுதுகிறார்கள் அதில் 2000 பேர் 3000 பேர்தான்  தேர்வில் தேர்ச்சி பெற்று  அரசு பள்ளிகளில்  ஆசிரியர்களாகிறார்கள்

முதுகலை ஆசிரியர்களும் பல லட்சம் பேர் எழுதும் தேர்வில் தேர்ச்சி பெற்று தான் அரசு பள்ளிகளில் பணியாற்றுகிறார்கள் ,

தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இருந்தும் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைய காரணம்  என்னவென்று  ஆராயுங்கள் தங்களுக்கு தெளிவான விளக்கம் கிடைக்கும்

மாணவர்களை ஒழுங்கு படுத்தி தேர்ச்சி விகிதம் அதிகரிக்க  தனியார் பள்ளி நிர்வாகங்களை போன்று முழு சுதந்திரம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அளிக்க வேண்டும்

அதேபோன்று கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் கல்வி கற்க 25% விழுக்காடு  இட ஒதுக்கீடு செய்து அந்த கட்டணத்தை அரசே செலுத்துகிறது,   இதனால் தான் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை 75% விழுக்காடு குறைந்துள்ளதற்கு காரணம்,

 கல்வி உரிமை சட்டம் தனியார் பள்ளிகளை மேம்படதான் அரசு முயற்சிக்கிறதோ என்ற அயம் ஏற்படுகிறது, 25% விழுக்காடு ஏழை மாணவர்களுக்கு அரசு செலுத்தும் நிதியை ரத்து செய்து அரசுப் பள்ளிகள் கட்டமைப்பு மேம்படுத்த பயன்படுத்தினாலே  தனியார் பள்ளிகளை மிஞ்சுகின்ற அளவிற்கு கட்டமைப்பு தரம் மேம்படும்

கட்டமைப்பு வசதி மற்றும் ஆசிரியர்களுக்கு மாணவர்களை ஒழுங்கு கல்வி கற்றுத்தர  முழு சுதந்திரம் கொடுத்தால் ஏழை பெற்றோர் மட்டும் அல்லாமல் அனைத்து தரப்பட்ட பெற்றோர்களும் கண்டிப்பாக அரசுப் பள்ளிகளில் தான் குழந்தைகளை சேர்ப்பார்கள்

ஆசிரியர்களுக்கு அச்சிறுத்தல் இல்லாமல் பயம் மன உளைச்சல் இல்லாமல் ஆர்வத்துடன் செயல் பட தமிழக அரசு முழு சுதந்திரம் அளிக்க் வேண்டும்
அப்படி அளிக்காத பட்சத்தில் எத்தனை பொது தேர்வு நடத்தினாலும் அரசு பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் மாறாது

அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க  ஆசிரியர்கள் முழு சுதந்திரத்துடன் பணியாற்ற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்
~~~~~~~~~~~~~
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
9445454044
~~~~~~~~~

No comments:

Post a Comment