Tuesday 4 February 2020

வேலூர் மாவட்டத்தில் உள்ள 22 ஒன்றியங்களில் ஊரக பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே சுகாதாரம் மற்றும் தன் சுத்தம் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் 2018-2019 மற்றும் 2019-2020 ம் ஆண்டுக்கு தனித்தனியாக நடத்தப் படவுள்ளது







வேலூர் மாவட்டத்தில் உள்ள
22 ஒன்றியங்களில் ஊரக பகுதியில் அமைந்துள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே
சுகாதாரம் மற்றும் தன் சுத்தம் குறித்த விழிப்புணர்வு போட்டிகள் 2018-2019 மற்றும் 2019-2020 ம்
ஆண்டுக்கு தனித்தனியாக நடத்தப் படவுள்ளது

மேற்படி போட்டிகள் நடத்தப்பட்டதில் ஒன்றியளவில் கீழ்க்கண்ட போட்டிகளில் முதல் இடம்
பிடித்த மாணவர்களை போட்டிக்கு தேவையான உபகரணங்களுடன் 11.02.2020 அன்று வேலூர்,
முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் காலை 10.00 மணி முதல் நடைப்பெறவுள்ள போட்டிகளில் கலந்து
கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

போட்டிகள் விவரம்

வ.எண்

பள்ளிகளின் விவரம்

தொடக்கப்பள்ளி

போட்டிகள்
ஓவிய வரைதல் / வண்ண ம் தீட்டுதல்

ஓவியம் வரைதல் / வண்ண ம் தீட்டுதல்/
கட்டுரைப்போட்டி
கட்டுரை எழுதல், பேச்சு போட்டி, வினாடி வினா

நடுநிலைப்பள்ளி

உயர்நிலை மற்றும் மேல்நிலை

மேற்படி போட்டிகளில் 2018-2019 மற்றும் 2019-2020 ம் ஆண்டுக்கு தனித்தனியாக ஒன்றிய
அளவில் முதல் இடம் பிடித்த மாணவர்களை கொண்டு மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தி, அதில்
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது. எனவே, அனைத்து மாவட்ட கல்வி
அலுவலர், வட்டாரக் கல்வி அலுவலர்கள் தனிக் கவனம் செலுத்தி போட்டிகள் செவ்வனே நடைபெற
ஆவண செய்யுமாறும், மாணவர்களை தகுந்த பாதுகாப்புடன் போட்டி நடைபெறும் இடத்திற்கு
அழைத்து வர ஏற்பாடு செய்யுமாறும் தெரிவிக்கப்படுகிறது.

இப்போட்டிகளை வேலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டக் கல்வி அலுவலர்கள் நடத்தி
முடித்து பொறுப்பு அலுவலர் களாக செயல்பட இதன் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்

பெறுநர்
அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்

நகல்

அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள்

நகல்
தலைமையாசிரியர்,
அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி,
வேலூர்.

(தகுந்த இடவசதி, தண்ணீர் வசதி, மின்சார வசதி ஏற்பாடு
செய்து தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.)

No comments:

Post a Comment