Saturday 1 February 2020

மாணவர்களுக்கு டேப்: பிப்ரவரிக்குள் நிதி ஒதுக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள்.



மாணவர்களுக்கு டேப்: பிப்ரவரிக்குள் நிதி ஒதுக்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா டேப்களை (Tab) வழங்க பிப்ரவரி மாதத்துக்குள் நிதி ஒதுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டி பாளையம் பகுதிக்கு உட்பட்ட வெள்ளாங்கோயில், முருகன்புதூர், மொடச்சூர் ஆகிய பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

9 அரசுப் பள்ளிகளில் படிக்கும் 774 மாணவ, மாணவிகளுக்கு இந்த மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் அமைச்சர் செங்கோட்டையன். அவர் கூறும்போது, ''மாணவர்களுக்கு டேப்கள் விரைவில் வழங்கப்படும்.

அவற்றை அவர்கள் பள்ளியிலேயே வைத்துக் கொள்ளவும் அதிலேயே சார்ஜர்களை வைத்துக் கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்படும். அதேபோல அவற்றைப் பாதுகாக்க லாக்கர் வசதியும் தேவை.

அவற்றை எந்த முறையில் நடைமுறைப்படுத்த உள்ளீர்கள் என்று மத்திய அரசு கேட்டிருந்தது. நடைமுறைப்படுத்தும் முறையைக் கூறியவுடன் விரைவில் அனுமதி வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பிப்ரவரி மாதத்துக்குள் அதற்காக நிதி ஒதுக்கப்படும்'' என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment