தமிழ்நாட்டில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை தொடர் மற்றும் முழுமையான
மதிப்பீட்டு முறை (Continuous and comprehensive Evaluation) 20122013 b
கல்வியாண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இம்முறையில் வளரறி (Formative
Assessment) மதிப்பீட்டிற்கு 40 மதிப்பெண்களும் தொகுத்தறி மதிப்பீட்டிற்கு (Summative
Assessment) 60 மதிப்பெண்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வளரறி மதிப்பீடு
FA(a) FA(b) என இரண்டு வகைகளில் மதிப்பீடு செய்யப்படுகின்றன. இதில் FA(a)-ல்
ப்ராஜெக்ட், மாதிரி வடிவமைத்தல் மற்றும் செயல்பாடுகள் ஆகியவை சம்பந்தப்பட்ட பள்ளிப் பாட
ஆசிரியர்களால் மதிப்பீடு செய்யப்பட்டு 20 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. இதேபோல்
FA(b)-ல் ஒவ்வொரு பாட அலகிலும் சிறு சிறு தேர்வுகள் நடத்தி மதிப்பீடு செய்து அவைகளுக்கு 20
மதிப்பெண்கள் சம்பந்தப்பட்ட பள்ளிப் பாட ஆசிரியர்களால் வழங்கப்படுகின்றன. மேலும்
தொகுத்தறி மதிப்பீட்டு (Summative Assessment) பாடப்பகுதியில் உள்ள பாடக்கருத்துக்களில்
மாணவர்களின் கற்றல் விளைவுகள் (Learning outcome) மதிப்பீடு செய்ய வினாத்தாள் பள்ளி
அளவிலோ, வட்டார அளவிலோ மற்றும் மாவட்ட அளவிலோ தயாரித்து 60 மதிப்பெண்களுக்கு
தேர்வுகள் நடத்தி மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 5 மற்றும் 8 வகுப்பு ஆண்டு இறுதித் தேர்விற்கு வளரறி
மதிப்பீட்டின் FA(a) மற்றும் FA(b) 40 மதிப்பெண்களுக்கு ஏற்கனவே 22102019 ல் தொடக்கல்வி
இயக்குநரின் செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி சம்பந்தப்பட்ட பள்ளி பாட ஆசிரியர்களால்
மதிப்பீடு செய்து வழங்கப்பட்டுள்ள மதிப்பெண்கள் கணக்கில் எடுத்து கொள்ளப்படும். மேலும்
தொகுத்தறி மதிப்பீட்டு சீரான முறையில் வினாத்தாள் அமைக்க வேண்டி உள்ளதாலும்
வினாத்தாள்கள் தரத்தை மேம்படுத்த வேண்டியுள்ளதாலும் மாணவர்களை மதிப்பீடு செய்வதில்
சீரான முறை மற்றும் நியாயமான மதிப்பீடு முறை (Fair Assessment) நடைமுறைப்படுத்தப்பட
வேண்டியுள்ளதாலும் தொகுத்தறி மதிப்பீட்டு 60 மதிப்பெண்களுக்குரிய பகுதிகளுக்கு
வினாத்தாட்கள் அரசுத் தேர்வுத் துறையால் தயாரிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர் மூலம் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் வாயிலாக மந்தன முறையில் பள்ளிகளுக்கு
வழங்கி தேர்வுகள் நடத்தப்படும். விடைத்தாள்கள் அந்த அந்த CRC மைய அளவில் உள்ள பிற
பள்ளிகளுக்கு மாற்றி கொடுத்து திருத்தம் செய்து மதிப்பெண் பட்டியல்கள் சம்பந்தப்பட்ட
பள்ளிகளுக்கு வழங்கப்படும். இந்நடைமுறையால் மாணவர்கள் மாநிலம் முழுவதும்
பாடக்கருத்து மற்றும் கற்றல் விளைவுகள் பெற்றுள்ள கற்றல் அடைவுகளை ஒரே
மாதிரியாக சோதித்தறியவும், நியாயமான மதிப்பீடு (Fair Assessment செய்யலாம்,
மாணவர்களின் திறமையை மேம்படுத்த ஆசிரியர்களுக்கு தேவையான கூடுதல் பயிற்சி
அளிக்க ஏதுவாக அமையும். மேலும், 5 மற்றும் 8 ஆம் வகுப்பிற்கான தேர்வில் அரசாணை
(நிலை) எண். 164 நாள் 13.9.2019-ன்படி ஆண்டு இறுதித் தேர்வு அடிப்படையில் முதல் மூன்று
ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் எனவும் அரசு
ஆணையிட்டுள்ளது. எனவே, 5 மற்றும் 8 வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வு குறித்து மாணவர்கள்
மற்றும் பெற்றோர்கள் அச்சப்படத் தேவையில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
பள்ளி கல்வி ஆணையர்
No comments:
Post a Comment