Monday, 22 November 2021

வேலூர் மாவட்டம் கீ.வ.குப்பம் ஒன்றியம். இல்லம் தேடி கல்வி கலைஞர்களுக்கான 3 நாள் பயிற்சி


 வேலூர் மாவட்டம், கீ.வ.குப்பம் ஒன்றியம் 19-11-2021 வெள்ளிக்கிழமை முதல் நாள் கலைப்பயணம் கலைஞர்களுக்கான பயிற்சி காணொளி 


20-11-2021 சனிக்கிழமை இரண்டாவது நாள் பயிற்சி காணொளி


21-11-2021 ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாள் பயிற்சி காணொளி



நாள். 22.11.2021

*இல்லம் தேடி கல்வி திட்டத்தின்* 

*கலை பயண கலைஞர்களுக்கான  பயிற்சி முகாம் நிறைவு* 

வேலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மாவட்ட அளவிலான கலை பயண கலைஞர்களுக்கான மூன்று நாள் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை துவங்கி மூன்று நாட்கள் நடைபெற்று நிறைவு பெற்றது.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநர் சுதன், உதவி திட்ட இயக்குநனர்கள் ராமேஸ்வரமுருகன், நாகராஜமுருகன் ஆகியோரின் ஆணையின்படி வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பெ.குமாரவேல் பாண்டியன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் க.முனுசாமி ஆகியோர் வழிகாட்டுதலின்படி வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறையின் சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மாவட்ட அளவிலான கலை பயண கலைஞர்களுக்கான மூன்று நாட்கள் பயிற்சி முகாம் கே.வி.குப்பம் ஒன்றியம் சென்னாங்குப்பம் வித்யாலட்சுமி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

மூன்று நாள் பயிற்சி முகாமினை வேலூர் கல்வி மாவட்ட அலுவலர் த.சம்பத்து அவர்கள் தலைமை தாங்கி குத்து விளக்கு ஏற்றி துவக்கிவைத்தார்கள்.  மாவட்ட உதவிதிட்ட அலுவலர் கே.எம்.ஜோதீஸ்வரபிள்ளை திட்ட அறிமுக உரையாற்றினார்.  

இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மாநில ஆலோசனைக்குழு உறுப்பினர் செ.மாதவன், மாநில திட்ட ஆலாசகர் எஸ்.சுப்பிரமணி, கே.வி.குப்பம் வட்டார கல்வி அலுவலர்கள் என்.பி.கண்ணன், கமலநாதன், வித்யாலட்சுமி பள்ளியின் தாளாளர் அசோக்குமார் பள்ளியின் முதல்வர் எம்.பிரபாவதி, ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் செ.நா.ஜனார்த்தனன், வேலூர் வடக்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் எஸ்.எஸ்.சிவவடிவு, பள்ளித்துணை ஆய்வாளர் அ.மணிவாசகம், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர் குமார், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் டி.முனிசாமி, ப.ராஜேந்திரன், சா.குமரன், வீரா.குமரன், ப.சேகர், ஆ.ஜோசப் அன்ணையா, எஸ்.ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் வாழ்த்தி பேசினர்.

கலைப்பயணக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆர்.கோபிநாத் மூன்று நாள் நிகழ்வுகளையும் தொகுத்து வழங்கினார்.

கே.வி.குப்பம் வட்டார வள மைய மேற்பாவையாளர் (பொ) சிவக்குமார் நன்றி கூறினார். 

இந்த பயிற்சி முகாமில் 11 குழுக்களை சேர்ந்த 99 கலைஞர்கள் பயிற்சி பெற்றனர்.  

வழங்கப்பட்ட பயிற்சிகள்

1.பாடல் பயிற்சி     2. யோகா  3.உடற் பயிற்சி  4.நாடக பயிற்சி  5.கரகாட்ட பயிற்சி

6.ஒயிலாட்டம் பயிற்சி   7.தப்பாட்ட பயிற்சி ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டன.

பங்கேற்ற கலைக்குழுக்கள்

விடியல், இசை, அங்காளபரமேஸ்வரி, மண்ணின் மைந்தர்கள், முருகன், நிலம், இணைந்த கைகள், மின்னல் ஜெயரத்தினம், தமிழ்தாய், தங்கபாண்டியன் மின்னல், முனியப்பன் பெரியமேளம் ஆகிய கலைக்குழுவினர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

தேர்தெடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குழுவிலும் ஒரு தவில் இசைக்கலைஞர், பறைஇசை கலைஞர், கரகம், ஒயில் ஆட்ட கலைஞர் உள்ளனர்.  ஒவ்வொரு குழுவினரும் வேலூர் மாவட்ட முழுவதும் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்த உள்ளனர்.  

மூன்று நாள் பயிற்சி முகாமிற்கான தங்குமிடம் அரங்கம் உள்ளிட்ட வசதிகளை வித்யாலட்சுமி பள்ளியின் தாளாளர் அசோக்குமார் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

(தொகுப்பு: செ.நா.ஜனார்த்தனன், Junior Red Cross Co-Ordinator)

No comments:

Post a Comment