Sunday, 7 November 2021

இல்லம் தேடிக் கல்வி - மாவட்ட அளவில் மற்றும் ஒன்றிய அளவில் செயல்பட உள்ள ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் தேர்ந்தெடுத்தல் குறித்த வழிகாட்டுதல்கள் வழங்கி மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு!!!*


CLICK HERE TO DOWNLOAD PDF


ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை – 600 006 மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண். 449/C7/ S8/2021, நாள்3.10.2021


*ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - "இல்லம் தேடிக் கல்வி" மாவட்ட அளவில் மற்றும் ஒன்றிய அளவில் செயல்படவுள்ள ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் மற்றும் ஒய்வு பெற்ற ஆசிரியர்கள் - தேர்தெடுத்தல் மற்றும் வழிகாட்டுதல்கள் – சார்பு சட்டமன்ற கூட்டத் தொடரில் மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களின் நிதி நிலை அறிக்கை (2021-2022) அறிவிப்பு*


பார்வையில் காணும் மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்களின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பில், கொரோனா பெருந்தோற்றுப் பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்புகள் வரை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை ஈடுசெய்வதற்காசுத் தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி 1 முதல் ஒன்றரை மணிநேரம் (மாலை 5 மணி முதல் 7 மணிக்குள்) குறைதீர் கற்றல் செயல்பாடுகளை மேற்கொண்டு மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் "இல்லம் தேடிக் கல்வி" எனும் திட்டத்தை அறிவித்துள்ளார்.


இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் அனைத்து செயல்பாடுகளுக்காக மாவட்டங்களில் திறமை, அர்பணிப்பு, ஆர்வம், சமூக அமைப்புகளுடன் தொடர்பு மற்றும் அனுபவம், பள்ளி மேலாண்மைக் குழுவுடன் இணைந்து செயல்படுதல் ஆகிய பண்புகளைப் பெற்ற ஆசிரியர்களில் கல்வி மாவட்ட அளவில் ஒரு ஆசிரியரும், ஒன்றிய அளவில் 2 ஆசிரியர்களும் இத்திட்டத்தின் செயல்பாடுகளுக்காக முழுநேரமாக செயல்பட மாவட்ட அளவிலான குழுவின் ஒப்புதலோடு தேர்ந்தெடுக்க அறிவுறுத்தப்படுகிறது.


இப்பணியில் பிரத்யேகமாக ஈடுபடுத்தப்படும் ஆசிரியர்கள் பணிபுரியும் பள்ளியில் கற்றல் கற்பித்தல் பாதிக்காத வண்ணம் மாற்று ஏற்பாடு செய்யப்படுதல் வேண்டும். விரைவாக மாற்று ஏற்பாடு செய்து ஆசிரியர்களை மாற்றுப்பணியில் அமர்த்திய பின்பு இத்திட்ட செயல்பாடுகளில் ஈடுபடவுள்ள ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும். பள்ளிகளில் மாற்றுப்பணியில் அமர்த்திய ஆசிரியர்களின் விவரங்களை மாநிலத் திட்ட இயக்ககத்தின் sstnsmc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப அறிவுறுத்தப்படுகிறது.


இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் அனைத்து செயல்பாடுகளுக்காக திறமை, அர்பணிப்பு, ஆர்வம், அனுபவம், சமூக அமைப்புகளுடன் தொடர்பு, பள்ளி மேலாண்மைக் குழுவுடன் இணைந்து செயல்படுதல் மற்றும் சமூக நலனில் விருப்பமும் ஆர்வமும் உள்ள ஓய்வு பெற்ற

தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை குடியிருப்புகளுக்கு ஏற்றவாது தேவையான கருத்தாளர்களாக செயல்பட, மாவட்ட அளவிலான குழுவின் ஒப்புதலோடு தேர்ந்தெடுக்க

அறிவுறுத்தப்படுகிறது.


"இல்லம் தேடிக் கல்வி" திட்டத்திற்காக மாவட்ட அளவில் முழுநேரமாக ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் மற்றும் ஒய்வு பெற்ற ஆசிரியர்கள் கீழ்கண்ட வழிகாட்டுதல்களின்படி

செயல்படவுள்ள ஆசிரியர்கள், கருத்தாளர்களாக செயல்படவுள்ள

செயல்பட அறிவுத்தப்படுகிறது.


இல்லம் தேடிக் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில், அனைத்து விதமான

திட்டமிடும் பணிகளில் பங்கெடுக்க வேண்டும். இல்லம் தேடிக் கல்வி மாவட்ட கலைப்பயணக் குழுவுடன் பயணித்து, கலை நிகழ்ச்சியின் போது இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களைப் பதிவிடும் செயல்பாடுகளில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். * மாவட்ட அளவில் நடைபெறும் கலைக்குழு நிகழ்ச்சிகளுக்கு திட்டமிட்டு, வழித்தட (Route

Chart) மேலாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து செயல்படுதல் வேண்டும். * பள்ளிகளில் கலை நிகழ்ச்சி நடைபெறும் போது, தலைமை ஆசிரியர்கள் / பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் ஆகியோரிடம் உரையாடி இல்லம் தேடிக் கல்வி மையங்கள் கிராமங்களில்/குடியிருப்புகளில் சீரிய முறையில் செயல்பட இணைந்து

செயல்படுதல் வேண்டும்.


பதிவு செய்த தன்னார்வலர்களிடம், அவர்கள் ஏற்றுள்ள பணி எந்த அளவிற்கு சமூக முக்கியத்துவம் நிறைந்தது என்பதை உணர்த்தும் வகையில் செயல்பட வேண்டும். ஒவ்வொரு நாளும் இல்லம் தேடிக் கல்விச் சார்ந்த நிகழ்வுகள் பற்றிய விவரங்களை குறிப்பெடுத்தல், அதனை ஆவணப்படுத்துதல் ஆகிய செயல்பாடுகளுக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்.


மாவட்ட அளவில் ஒன்றிய ஒருங்கிணைப்புக் குழுவினர் மற்றும் ஒன்றிய கருத்தாளர்கள்

ஆகியோருக்கான பயிற்சியின் போது பங்கேற்க வேண்டும்.


ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் உதவியுடன், ஒன்றிய அளவில் தன்னார்வலர்களுக்கான

பயிற்சி அளிக்கப்படும் போது உடனிருந்து செயல்படுதல் வேண்டும்.


இல்லம் தேடிக் கல்வி மையங்கள் முறையாக அமைப்பதற்கும், இத்திட்டத்திற்கான பயிற்சிகளை அளிப்பதற்கும் அந்தந்த சார்ந்த பள்ளியின் தலைமையாசிரியர் / பள்ளி

மேலாண்மைக் குழு மூலம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர்களுக்கு வழிக்காட்டுதலை

மேற்கொள்ள வேண்டும்.


* இல்லம் தேடிக் கல்வி மையங்கள் செயல்படத் தொடங்கிய பின், அன்றாடம் சுழற்சி முறையில் மையங்களுக்கு சென்று பார்வையிட்டு, கற்கும் குழந்தைகளையும் தன்னார்வலர்களையும் மையங்களில் நடைபெறும் செயல்பாடுகள் குறிப்பிட்டு பாராட்டி உற்சாகப்படுத்த வேண்டும். மேலும் அச்செயல்பாடுகளை மேம்படுத்த தன்னார்வலர்களுக்கு வேண்டிய ஆலோசனைகள் வழங்குதல் வேண்டும். மேலும், மாவட்டங்களில் நிகழும் அனைத்து நிகழ்வுகள் அடங்கிய புகைப்படங்கள்

மற்றும் காணொளிகளை மாவட்ட தகவல் மற்றும் ஆவணக்காப்பு (MDO)

ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்புதலில் ஒருங்கிணைக்க வேண்டும். * மாவட்ட அளவில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் கிராமங்கள்/குடியிருப்புகளில் - ஒன்றியங்கள் - மாவட்டம் ஆகியவற்றை வலுவாக இணைக்கும் மக்கள் பாலமாக செயல்படுதல் வேண்டும்.


மாவட்ட மற்றும் ஒன்றிய அளவில் இத்திட்டத்தில் செயல்படவிருக்கும் ஒய்வு பெற்ற தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாவட்டத்தில் நடைபெறும் திட்டம் சார்ந்த சிறப்பு நிகழ்வுகளையும் திட்டத்தினை மேலும் மேம்படுத்த ஆலோசனைகளையும் மாவட்ட திட்ட அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும். மேற்காண் வழிமுறைகளை மாவட்டங்களில் தவறாது பின்பற்றுமாறு சார்ந்த மாவட்ட


முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.


*மாநில திட்ட இயக்குநருக்காக*


பெறுநர்


சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள். நகல்


1) ஆணையர், பள்ளிக்கல்வி ஆணையரகம் தகவலுக்காக அனுப்பப்படுகிறது. 2) இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைகாகவும் அனுப்பப்படுகிறது.


No comments:

Post a Comment