Wednesday 25 March 2020

24.03.2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளை எழுத முடியாத மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்துதல் - சார்பு


CLICK HERE TO DOWNLOAD PDF


அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள், சென்னை -6

முன்னிலை : முனைவர்.சி.உஷாராணி ந.க.எண்.009823/எப்1/2020

நாள். 25.03.2020

பொருள் : அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை -6 - மாண்புமிகு முதலமைச்சரின் 25.03.2020 நாளிட்ட செய்தி அறிக்கையின் அடிப்படையில் -

24.03.2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளை எழுத முடியாத மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்துதல் - சார்பு

பார்வை : மாண்புமிகு முதலமைச்சரின் செய்தி அறிக்கை, நாள்.25.03.2020

பார்வையில் காணும் மாண்புமிகு முதலமைச்சரின் செய்தி அறிக்கையில்,

மாணவர்களின் நலன் கருதி கீழ்க்கண்டவாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

“24.03.2020 அன்று தமிழ்நாடு முழுவதும் +2 பொதுத்தேர்வு நடைபெற்றது.

அத்தேர்வில் சில மாணவர்கள் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள்

தங்களால் தேர்வெழுத செல்ல முடியவில்லை என்ற விவரத்தினை எனது கவனத்திற்கு

கொண்டு வந்ததை கனிவோடு பரிசீலித்து, 24.03.2020 அன்று +2 தேர்வு எழுத

முடியாதவர்களுக்கு மட்டும் வேறொரு நாளில் தனியாக தேர்வு நடத்தவும்,

இத்தேர்வுக்கான தேதியை பின்னர் அறிவிக்கவும் உத்தரவிட்டேன்”

மேற்குறிப்பிட்ட மாண்புமிகு முதலமைச்சரின் அறிவிப்பினைத் தொடர்ந்து, அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மாவட்டக் கல்வி

அலுவலர்களுக்கும் பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

1. 24.03.2020 அன்று தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் வேதியியல், கணக்குப்பதிவியல் மற்றும் புவியியல் பாடங்களுக்கு நடத்தப்பட்ட +2 தேர்வுகளை கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளால் எழுத முடியாத மாணவர்களுக்கு மட்டும் வேறொரு நாளில் தனியாக தேர்வு நடத்தப்படும்.

இத்தேர்வு நடைபெறும் நாள் குறித்த விவரம், அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் பின்னர் அறிவிக்கப்படும்.

2. அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும், தங்கள் மாவட்டத்தில் உள்ள
அனைத்து மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு, மேற்குறிப்பிட்ட

விவரத்தினை, தங்களது பள்ளிகளில் 24.03.2020 அன்று நடைபெற்ற +2

தேர்வுகளை எழுத முடியாத சம்பந்தப்பட்ட மாணவர்கள் அனைவருக்கும்

தெரிவிக்குமாறு அறிவுறுத்த வேண்டும்

ஓம்

அரசுத் தேர்வுகள் இயக்குநர்

பெறுநர்

1. அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்

இணை இயக்குநர் (கல்வி), பாண்டிச்சேரி, அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்

4. அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள்

நகல்

அரசு முதன்மைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறை, சென்னை -9

- தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது.

2. பள்ளிக் கல்வி ஆணையர், பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை -6

- தகவலுக்காக பணிந்தனுப்பப்படுகிறது.

3. இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை -6

4. இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்ககம், சென்னை -6

5. இயக்குநர், மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்ககம், சென்னை -6

Click here to download PDF

No comments:

Post a Comment