CLICK HERE TO DOWNLOAD PDF
கூட்டுறவுத்துறை
பெறுநர்
மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி, சென்னை
கூடுதல் பதிவாளர், சென்னை மண்டலம்.
அனைத்து மண்டல இணைப் பதிவாளர்கள்
மேலாண்மை இயக்குநர்கள், அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்.
அனுப்புநர்
திரு கு.கோவிந்தராஜ், இ.ஆ.ப கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர், ஈ.வெ.ரா பெரியார் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 10.
ந.க எண் 3069/ 2020 / மவகொ1 நாள் 31.03.2020
அய்யா / அம்மையீர்,
பொருள்: கோவிட் 19 - கூட்டுறவு இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு கடன்களுக்கான மாதத் தவணையை செலுத்துவதற்கு மூன்று மாதங்களுக்கு கால அவகாசம் வழங்குவது - தொடர்பாக பார்வை இந்திய ரிசர்வ் வங்கிக் கடிதம் எண் 2019-20 / 186 DOR.No.BP.BC 47/21.04.048 | 2019-20 rair
27.03.2020 மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கி, மத்திய கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவு வங்கிகளுக்கு முகவரியிட்ட
பார்வையில் காணும் இந்திய ரிசர்வ வங்கியின் கடிதத்தில் கூட்டுறவு வங்கிகள் தாங்கள் வழங்கிய கடன்களுக்கான தவணைகளை வசூலிப்பது தொடர்பாக அறிவுரைகள் வழங்கியுள்ளன. அதன் நகல் தக்க நடவடிக்கைக்காக இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
மேற்காணும் இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுரைகளை உரிய முறையில் பின்பற்றிட தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
3. மேற்காணும் இந்திய ரிசர்வ் வங்கியின் அறிவுரைகளை நகரக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவு கடன் சங்கங்கள், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு தொடர்புறுத்தி உரிய முறையில் பின்பற்றி அறிவுரைகள் வழங்க இணைப் பதிவாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
4. இக்கடிதத்தினை பெற்றுக் கொண்டமைக்கான ஒப்புகையினை உடன் அளிக்க முகவரியில் உள்ள அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஆணைப்படி/
ஓம்/-கு.கோவிந்தராஜ் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர்
இணைப்பு - மேற்கண்டவாறு
கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருக்காக
No comments:
Post a Comment