அறிக்கை 28-01-2020.
அரசு பள்ளிகளில் பயின்று 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்க ளுக்கும் மடிக்கணினி வழங்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்
சா.அருணன்
நிறுவனத் தலைவர் .9445454044
~~~~~~~~~~
அரசு பள்ளிகளில் 2017 -2018, மற்றும் 208 - 2019. ஆண்டுகளில் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர்க்கல்வி படித்துவரும் மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படுவாத மாண்புமிகு தமிழக பள்ளிக்கவி அமைச்சர் அவர்கள் அறிவித்து படிக்கணினி வழங்கப்பட்டு வந்தாலும்
அரசு பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெற்று உயர்க்கல்வி படித்துவும் அனைவருக்கும் வழங்கப்பட வில்லை மூன்று ஆண்டுகள் பட்டப்படிப்பு மற்றும் பொறியல் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களுக்கு மட்டும் அந்தந்த கல்லூரியில் தொடர்ந்து படித்து வருங்கின்றோம் என்று கல்லூரிகளில் சான்று பெற்று தான் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்தால் மட்டுமே மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது ,
பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் தான் பயின்ற பள்ளியில் அதிக மதிப்பென் பெற்று உயர்க்கல்வி படிக்க வசதி இல்லாத குடும்ப சூழ்நிலை ஏழ்மை காரணமாக டிப்ளமோ பட்டயப் படிப்பு பாலிட்டெக்னிக் டிப்ளமோ நர்சிங் ஐடிஐ படிப்புகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் இதில் பெருமளவில் பாதிப்பு அடைகின்றனர்
தற்போது பயின்று வரும் பதினோராம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்ட சூழ்நிலையில்
2017 - 2018 மற்றும் 2018 - 2019 பயின்று தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளின் ஏழ்மைநிலையை கருத்தில் கொண்டு அனைவருக்கும் மடிக்கணினி வழங்கி உதவிட தமிழக அரசை
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக்கொள்கிறேன்
~~~~~~~~~~~
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
9445454044
~~~~~~~~~
No comments:
Post a Comment