Friday 31 January 2020

5, 8,ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள் தகவல்




5, 8,ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள் தகவல்

 தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தை பின்பற்றும் அனைத்துவகை பள்ளிகளில் பயிலும் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்த தீவிரமாக பணிகள் நடந்துவருகிறது பொதுத்தேர்வு நடத்துவதற்கான நெறிமுறைகளை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது மாநில பாடத் திட்டத்தை பின்பற்றி 5 மற்றும் 8ம் வகுப்புகள் நடத்தும் அனைத்து வகை பள்ளிகளும் தேர்வு மையமாக அமைத்தல் வேண்டும் தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து குறுவள மையங்கள் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் ஆக அமைக்கப்படுதல் வேண்டும் மையத்திலிருந்து தேர்வு மையங்களுக்கு அனுப்புதல் வேண்டும் 5 மற்றும் எட்டாம் வகுப்பு களுக்கு உரிய வினாத்தாள்கள் அரசு தேர்வுகள் இயக்ககம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அனுப்பி வைக்கவேண்டும் தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் தேர்வு நடைபெறும் ஒவ்வொரு நாளும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திற்கு குறித்த நேரத்தில் சென்று வினாத்தாள்களை பெற்று தேர்வு நடத்துதல் வேண்டும் தேர்வு முடிந்த உடன் விடைத்தாள்களை வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் அன்றைய தினமே ஒப்படைத்தல் வேண்டும் ஊராட்சி ஒன்றிய நகராட்சி மாநகராட்சி அரசு அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் ஆனால் தனியார் சுயநிதி பள்ளிகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் ஐந்தாம் வகுப்பு ₹100 8வகுப்புக்கு ₹200 தேர்வு கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் ஒவ்வொரு நாளும் பெறப்படும் பள்ளி வாரியான விடைத்தாள்களை அன்றைய தினமே அந்த வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திற்கு உட்பட்ட பிற பள்ளிகளுக்கு மதிப்பீட்டு பணிகள் மாற்றிக் கொடுத்து சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியரும் ஒப்புதல் பெறவேண்டும் நிறைவடைந்தவுடன் ஐந்தாம் வகுப்பிற்குரிய விடைத்தாள்களை ஏப்ரல் 28 ஆம் தேதியும் எட்டாம் வகுப்பிற்கு உரிய விடைத்தாள்களை ஏப்ரல் 25 ஆம் தேதியும் சார்ந்த வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் மதிப்பெண் பட்டியல் ஒப்படைக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் வேண்டும் வழிமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது உரிய வழிகாட்டுதல்களை வழங்கி ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு சிறப்பாக நடத்துவதற்கு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர்கள் கூறினர்

No comments:

Post a Comment