5 , 8 - ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றுதல் - தலைமை ஆசிரியர்களுக்கு புதிய உத்தரவுகள் - இயக்குனர் செயல்முறைகள்
கடிதங்களில் தெரிவித்தவாறு, ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள தங்களின்
மாவட்டத்திலுள்ள Cluster Resource Centre (CRC) ஆக செயல்படும் பள்ளிகள்
அப்பள்ளிகளுடன் இணைக்கப்பட்ட (பள்ளி எண் DISE CODE) பள்ளிகளில்
ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதவுள்ள மாணவர்களின்
எண்ணிக்கை விவரம் ஆகியவற்றை , 17.01.2020 முதல் 25.01.2020 வரையிலான
நாட்களில் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்திற்குச் சென்று
தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID மற்றும் Password ஐ பயன்படுத்தி
பதிவேற்றம் செய்யவும். மேலும் இணைக்கப்படாத அரசு உதவி பெறும் மற்றும்
தனியார் பள்ளிகளை சம்பந்தப்பட்ட CRC மையத்தில் இணைத்திடுமாறும்
கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்படி பதிவேற்றம் செய்யப்பட்ட தேர்வர்களின் எண்ணிக்கையின்
அடிப்படையிலேயே வினாத்தாட்கள் அச்சிட்டு வழங்கப்படுமாதலால், தமிழ்நாடு
பாடத்திட்டத்தின்கீழ் இயங்கும் எந்த ஒரு பள்ளியும் விடுபடாமல் பதிவேற்றம் செய்ய
நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இத்துடன்
இணைப்பில் கண்டுள்ள சான்றிதழினை கையொப்பமிட்டு, ஸ்கேன் செய்து
அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகள்
இவ்வலுவலக இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துக்
கொள்ளப்படுகிறது. பதிவேற்றம் செய்வது குறித்து சந்தேகங்கள் எழும் பட்சத்தில்
கீழ்க்குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்
கொள்ளப்படுகிறது.
1. 9385494105
2. 9498383073
ஓம்/
இயக்குநர்
சான்றிதழ்
நடைபெறவுள்ள மார்ச் ஏப்ரல் 2020 எட்டாம் வகுப்பு / ஐந்தாம் வகுப்பு
பொதுத் தேர்வுகள் தொடர்பாக தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும்
அனைத்து பள்ளிகளில் (Except CBSE, ICSE & KV) பயிலும் ஐந்தாம் வகுப்பு /
எட்டாம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை விவரம் சம்பந்தப்பட்ட Cluster
Resource Centre (CRC) உடன் இணைத்து செய்யப்பட்டுள்ளது என
சான்றளிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர்
கையொப்பம்
(அலுவலக முத்திரையுடன்)
No comments:
Post a Comment