Friday 24 January 2020

சர்வரை வேகப்படுத்தாமலும் பயிற்சி சரியான முறையில் நடத்தாதநிலையில் திங்கள் கிழமைக்குள் (IFHRSM) ஒருங்கிணைந்த நிதித்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத் திட்டத்தில் பதிவேற்றம் செய்யாதவருக்கு இந்த மாதம் ஊதியம் கிடையாது என்ற உத்தரவால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஊதியம் பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதுமுறையான பயிற்சி சர்வரின் வேகத்தை இன்னும் பல மடஙலகு அதிகரிக்க வேண்டும் கட்டமைப்பு வசதியை மேம்படுத்திய பின்னரே இத்திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும் அதுவரையில் பழைய முறையிலயே ஊதியம் பெற்றுத்தர தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக்கொள்கிறேன் ~~~~~~~~ சா.அருணன் நிறுவனத் தலைவர் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு





அறிக்கை
25.01.2020
==========
சர்வரை வேகப்படுத்தாமலும் பயிற்சி சரியான முறையில் நடத்தாதநிலையில்  திங்கள் கிழமைக்குள் (IFHRSM) ஒருங்கிணைந்த நிதித்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத் திட்டத்தில் பதிவேற்றம் செய்யாதவருக்கு இந்த மாதம் ஊதியம் கிடையாது என்ற உத்தரவால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஊதியம் பெறுவதில் பெரும் சிக்கல்
ஏற்பட்டுள்ளது

சரியான பயிற்சி மற்றும் சர்வரை வேகப்படித்திய பின்னரே புதிய முறையை அமுல்படுத்த தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்
=============
ஒருங்கிணைந்த நிதித்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தமிழக அரசு ATBPS முறையை ஒழித்துவிட்டு தற்போது IFHRMS  அதாவது ஒருங்கிணைந்த நிதித்துறை மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஊதியத்தை இணையதள மூலம் நேரடியாக ரிசர்வ் வங்கிக்கு அனுப்பும் பணியினை விப்ரோ என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, இதில் ஏகப்பட்ட பிரச்சனைகள் அதனை இன்னும் சரி செய்யபடவில்லை, சர்வர் போதிய அளவு வேகப்படுத்த படுத்தபடவில்லை ஊதிய பட்டியலை தயார் செய்ய குறைந்தபட்சம் 12 மணிநேரம் வரை தேயவைப்படுகிறது

விப்ரோ நிறுவனத்திட்டம் ஒப்படைக்கப்பட்ட சூழ்நிலையில் சரியான ஆட்களை பயிற்சி கொடுக்க நியமிக்காமலும் பயிற்சி கொடுக்கும் விப்ரோ ஊழியக்கும் பல மாவட்டங்களில் பயிற்சி கொடுக்கும் அளவிற்கு திறன் இல்லை. இதனால் சம்பலம் பெற்று தரும் கருவூல மாவட்ட அலுவலரக்ள சார்பு கருவூல அலுவலர்கள் உதவியாளர்கள் .இளநிலை உதவியாளர்கள் மற்றும் அந்தந்த துறையில் ஊதிய பட்டியலை தயார்செய்யும் ஊழியர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்

அந்தந்த துறை அலுகத்தில் ஊதிய பட்டியை தயார் செய்து சார்பு கரூலம் எடுத்து சென்று சமர்ப்பிக்கும் போது புதிய  திட்டத்தில் பதிவேற்றம் செய்யது எடுத்து வந்தீர்களா என்று கேட்கின்றனர் அப்படி இல்லை என்றால் மாவட்ட கரூல அலுவலரிடம் முறைநிடுங்கள் சார்பு கரூல அலுவலர்கள் தெரிவிக்கின்ற்னர் மாவட்ட கருவூல அலுவரை சந்தித்து முறையிடும் போது அங்கு இணையதள சேவையில் சர்வர் வேலை செய்ய வில்லை என்று திருப்பி அனுப்புகிறார்கள்

இதற்கு காரணம்  தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் செலவில் விப்ரோ என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்த செய்து இணையத்தில் பதிவேற்றும் முறையை அரசு ஊழியர்கள் கரூவூல மாநில மாவட்ட சார்பு கருவூல அலுவலர்கள் உதவியாளர் இளநிலை உதவியாளர்கள் மற்றும் அந்தந்த சம்பளம் பெற்று தரும் அலுவலர்கள் உதவியாளர்களுக்கு பயிற்சி மேற்கொள்ளவும் மற்றும் மென்பொருள் பதிவேற்றம் செய்யவும் ஒப்பந்தம் செய்தது

ஆனால் விப்ரோ நிறுவனம் சரியான முறையில் சர்வர்களை ஏற்படுத்தி தரவில்லை அதே போன்று பயிற்சி அளிக்க சரியான வல்லுனர்களை பயிற்சி அளிக்க நியமிக்க வில்லை

இந்த சூழ்நிலையில் சென்ற வாரம் அந்தந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தலைமையில் ஒருங்கிணைந்த நிதித்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டு திட்டம் குறித்த கூட்டம் நடைபெற்றது அதில் கண்டிப்பாக இந்த மாதமே இத்திட்டத்தில் தான் ஊதியம் பெற்றுத்தர வேண்டும் என்று கூட்டத்தில் உத்தரவு பிரப்பித்துள்ளார்கள் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அந்தந்த துறை ஊதியம் பெற்றுத்தரும் அலுவலர்களுக்கு,

இந்த நிலையில் மாவட்ட சார்பு கரவூல அலுவலர்கள் திங்கள் கிழைமைக்குள் ஐ.எஃப்.ஹச்.ஆர்.எம்.எஸ் மூலமாக பதிவேற்றம் செய்யவில்லை என்றால் ஊதியம் பெற்றுதர இயலாது என்று திருப்பி அனுப்புகின்றனர்

முன்னோடி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்ட கரூர் , ஈரோடு மாவட்டங்கிலும் இன்னும் இத்திட்டம் முழுமை பெறவில்லை அங்கேயும் இதே பிரச்சனைகள் உள்ளன,  இந்த சூழ்நிலையில் மற்ற மாவட்டஙலகளின் நிலையை தமிழக அரசு அறியவேண்டும்,
சர்வர்களின் அதிக படுத்தாமல் பயிற்சியை முறையாக அளிக்காத பட்சத்தில் எப்படி எப்படி இத்திட்டத்தில் ஊதியம் பெற்றுத்தர முடியும்

முறையான பயிற்சி சர்வரின் வேகத்தை இன்னும் பல மடஙலகு அதிகரிக்க வேண்டும் கட்டமைப்பு வசதியை மேம்படுத்திய பின்னரே இத்திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும் அதுவரையில் பழைய முறையிலயே ஊதியம்  பெற்றுத்தர தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக்கொள்கிறேன்
~~~~~~~~
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
9445454044
~~~~~~~~~

No comments:

Post a Comment