Monday 27 January 2020

SPD PROCEEDINGS-ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - TNVN - Observation app புதிய செயலி அறிமுகம் சார்ந்து ஆசிரியப் பயிற்றுநர்களுக்கு பயிற்சி அளித்தல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள்






தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி
“அனைவரும் கற்போம்"
“அனைவரும் உயர்வோம்"
அனுப்புநர்
பெறுநர்

மாநில திட்ட இயக்குநர்
முதன்மைக் கல்வி அலுவலர்,
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி,
அனைத்து மாவட்டங்கள்
சென்னை -06.
சென்னை மற்றும் திருவண்ணாமலை
நீங்கலாக,
ந.க.எண். 3149/B9/ஆபாபக/2020 - நாள்: 25.01.2020
ஐயா / அம்மையீர்,
பொருள்: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - தமிழ்நாடு வகுப்பறை நோக்கின்

செயலி (TN N Observation App) - ஓர் அறிமுகம் மற்றும் செயலி
உபயோகம் சார்ந்து அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும்
பயிற்சி அளித்தல் - சார்பு

வகுப்பறைக் கற்றல் விளைவு அடைவு நிலைகளைக் கண்காணித்தலின் ஒரு பகுதியாக

வகுப்பறைக் கற்றல் - கற்பித்தல் நிகழ்வுகளை உற்றுநோக்கி கற்றலுக்கு உகந்த வகையில் கற்றல்

கற்பித்தல் நிகழ்வுகளை மேம்படுத்திடும் நோக்கிலும், அறிவியல் தொழில்நுட்ப சாதனங்களைப்
பயன்படுத்தி பள்ளிக் கல்வித் துறையிலுள்ள அனைத்து ஆய்வு அலுவலர்கள் வகுப்பறை

நிகழ்வுகளை உற்றுநோக்கும் வகையிலும் Observation Mobile App தமிழ்நாடு வகுப்பறை

நோக்கின் செயலி ஒன்று உருவாக்கப்பட்டு, சென்னை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில்

பரிட்சார்த்த முறையில் (Pilot Study) செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு வகுப்பறை நோக்கின் செயலியின் மூலம் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள

ஒவ்வொரு மாணவர்களின் கற்றல் விளைவு அடைவு நிலைகளை முறையாக கண்காணித்து

முன்னேற்றம் அடைய செய்ய எளிமையாக உள்ளது என்றும், குறிப்பாக கற்றலில் பின்தங்கியுள்ள

மாணவர்களுக்கு தனி கவனம் செலுத்த முடிகிறதென்றும், சென்னை மற்றும் திருவண்ணாமலை

மாவட்டத்தில் பார்வை மேற்கொண்ட பெரும்பாலான அலுவலர்களால் தெரிவிக்கப்பட்டுள்ள தாலும்,
எனவே தங்களது மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டார வள மைய அளவிலிருந்தும் மேலே
தெரிவிக்கப்பட்டுள்ளதுபோல் அனுபவமுள்ள ஒரு ஆசிரியர் பயிற்றுநர், மாவட்ட Quality மற்றும்

EMIS ஒருங்கிணைப்பாளர்களை, குறிப்பாக (Operating system - Android version 5.5 and

above) ஆகிய வசதியுடன் கூடிய கைபேசியை உபயோகப்படுத்துகின்றனரா என்பதை உறுதி
செய்து, மேலே தெரிவிக்கப்பட்டுள்ள நாட்களில் மாநில திட்ட இயக்ககத்தில் நடைபெறும்
பயிற்சியில் கலந்துகொள்ள ஆவன செய்யுமாறு சார்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஓம்/
மாநில திட்ட இயக்குநர்




No comments:

Post a Comment