Wednesday 25 December 2019

AEBAS -பயோ மெட்ரிக் - New software Updates சார்ந்த இயக்குநர் அவர்களின் செயல்முறை




அரசு/ அரசு உதவிபெறும் நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் சா்நிலை
அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு ஆதார்
எண் இணைந்த தொட்டுணர் கருவி மூலம் வருகைப் பதிவேடு முறைமை (AEBAS - Aadhaar
Enabled Biometric Attendance System ) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.





பார்வை 2 ல் காண் சென்னை 90, தேசிய தகவலியல் மையம் கடிதத்தில் UIDAI Certificate
used to encrypt PID block in Authentication request is going to expire by 30 December
2019 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
30.12.2019 அன்றுடன் மேற்கண்ட கருவிகளுக்கான UIDAI நிறுவனத்தாரால்
வழங்கப்பட்டுள்ள RD Service காலாவதியாவதால் 31.12.2019 முதல் தொட்டுணர் கருவிகள் மூலம்
வருகைப் பதிவு செய்ய இயலாத நிலை ஏற்படும் என்பதால், இன்று (25.12.2019) மின்னஞ்சல்கள்
மூலம் அனுப்பப்பட்டுள்ள விவரங்களை பின்பற்றி அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள்
தத்தமது ஆளுகைக்குட்பட்ட கல்வி அலுவலகங்கள் / அரசு / அரசு உதவிபெறும் நடுநிலை /
உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் தொட்டுணர் கருவியுடன் இணைக்கப்பட்டுள்ள கணினி
அல்லது மடி கணினியில் ஏற்கனவே உள்ள RD Service Driverஐ மட்டும் நீக்கம் செய்துவிட்டு
(Uninstall) New RD Service Driverஐ (install) உட்புகுத்தி தொடர்ந்து தொட்டுணர் கருவிகள்
மூலம் வருகை பதிவு மேற்கொள்ள உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அனைத்து
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment