Tuesday 31 December 2019

அறிக்கை 31.12.2019 தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகளில் ஈடுப்பட்டு ரிசர்வில் வைக்கப்பட்ட பெரும்பாலான ஆசிரியர்கள் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை தேர்தல் பணி செய்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஊதியம் உடனே வழங்க அந்தந்த பி.டி.யோக்களுக்கு உத்தரவிட தமிழக தேர்தல் ஆணையருக்கு வேண்டுகோள் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சா. அருணன்

அறிக்கை
31.12.2019



தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் பணிகளில் ஈடுப்பட்டு ரிசர்வில் வைக்கப்பட்ட  பெரும்பாலான ஆசிரியர்கள் ஊழியர்களுக்கு  ஊதியம் வழங்கப்படவில்லை

தேர்தல் பணி செய்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஊதியம் உடனே வழங்க  அந்தந்த பி.டி.யோக்களுக்கு உத்தரவிட
தமிழக தேர்தல் ஆணையருக்கு வேண்டுகோள்

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சா. அருணன்
===========
தமிழக ஊரக உள்ளாட்சித் தேர்தல் 27.12.2019 மற்றும் 30.12.2019 ஆகிய தேதிகளில் 27 மாவட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர், ஊராட்சி மன்றத் தலைவர் மற்று ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் நடைப்பெற்றது

தேர்தல் பணியில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஈடுப்பட்டு தேர்தல் முடிவைந்து உள்ளது

தேர்தல் பணியில் ஈடுப்பட் ஆசிரியர்கள் பணியளர்கள் 27 ம் தேதி என்றால் 26ம் தேதி காலையே பயிறசி வகுப்பு முடித்தெ நேடரடியாக் தேர்தல் நடக்கும் மையத்துற்கு செல்ல வேண்டும்

ஒரு சில மையத்திற்கு வாக்கு பெட்டி எடுக்க அதிகாலை 3 மணிக்கூட ஆகிவிடும் ஒரு சில மைத்தில் தங்குவதற்கு குளிப்பதற்கு கூட வசதி இல்லாமல் இருக்கும் , இப்படி சிம்ப்பட்டு தான் தேர்தல் பணி செய்கிறார்கள்.

அனைத்து மாவட்டங்களில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவர்கள் மேர்பார்வையில் தான் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்

வாக்கு மையத்தில் ஈடுப்படுத்தப்படுபவரை தவிர்த்து மீதமுள்ளவர்களை அவசரத்திற்காக காத்திருப்பவர்காளக வைத்திருப்பது வழக்கம் ஏன் என்றால் ஒரு சிலர் பயிற்சி முடித்து கடைசி நேரத்தில் வர இயலாத ஒரு சூழ்நிலை ஏற்படும், அதன் காரணமாக ஒவ்வொரு வட்டார வளர்ச்சி அலுகத்தில் அல்லது தனியார் திருமண மண்டபங்களில் 100 க்கும் மேற்பட்டோரை காத்திருப்போராக தங்கவைப்பார்கள்

ஆனால் இந்த முறை எந்த ஏற்பாடும் செய்யாமல் அலைக்கழிக்க செய்தால் இங்கும் அங்குமாக பல மாவட்டங்களில் எந்த வசதியும் ஏற்படுத்தி தராமல் அடிமைத்தனமாக நடத்தினார்கள்

ஒவ்வொருத்தரும் 50 - 60 கிலோமீட்டர் தொலைவில் இருந்து தான் தேர்தல் பணியில் ஈடுப்பட்டார்கள் .தொடர்ந்து இரண்டு நாட்களும் இங்கும் அங்குமாக அலைவிட்டு  காத்திருப்பில் வைக்கப்படவர்களுக்கு ஊதியம் இல்லை என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம் என்றே தெரியவில்லை

தமிழக தேர்தல் ஆணையர் அவர்கள் அந்தந்த மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டு தேர்தல் பணியில் காத்துருப்போராக இருந்த ஊழியர்களுக்கு உடனே ஊதியம் வழங்க நடவடிக்கை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்

இதே  போன்று வாக்கு எண்ணிக்கையில் ஈடுப்பட்டு காத்திருப்போராக  இருப்பவர்களுக்கும் சிரம்ம் இன்றி ஊதியம் வழங்கவும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்

சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
9445454044

No comments:

Post a Comment