Monday, 8 June 2020

சென்னையில் தனியாருக்கு சொந்தமான நான்கு மருத்துவமனைகளை தற்காலிகமாக சுகாதாரத்துறை கையகப்படுத்துகிறது.





சென்னையில் தனியாருக்கு சொந்தமான நான்கு மருத்துவமனைகளை தற்காலிகமாக சுகாதாரத்துறை கையகப்படுத்துகிறது.

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில்தான் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது. 

சென்னையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிறப்பு வார்டுகளில் அனைத்து படுக்கைகளும் நிரம்பியுள்ளன. இந்த நிலையில், சுகாதாரத்துறை தனியார் வசமுள்ள மருத்துவமனைகளை தற்காலிகமாக கையகப்படுத்துகிறது.

கையகப்படுத்தப்படும் மருத்துவமனைகள் அரசின் தற்காலிக கொரோனா மருத்துவமனைகளாக மாற்ற புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பெசன்ட் நகரில் இயங்காமல் உள்ள தனியார் மருத்துவமனை, வளசரவாகத்தில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட தனியார் மருத்துவமனை, அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் சென்னை துறைமுகத்திற்கு சொந்தமான  மருத்துவமனையின் ஐந்தாவது, ஆறாவது மாடியையும் அரசு கொரோனா சிறப்பு வார்டாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

இந்த மருத்துவமனைகள் கையகப்படுததப்பட்டு முழுமையாக கொரோனா வார்டாக மாற்றப்படும், நிலையில் கூடுதலாக 2500 படுக்கை வசதிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இந்த சிறப்பு மருத்துவமனைகளில் பணியாற்ற 1500 மருத்துவர்களும், அட்சோர்சிங் முறையில் 600 செவிலியர்கள் மற்றும் 350 ஆய்வக பணியாளர்களையும் பணி நியமனம் செய்ய உள்ளது சுகாதாரத்துறை.

இதில் இரண்டு மருத்துவமனைகள் உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளதால் அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் நீதிமன்ற அனுமதியுடன் தற்காலிக அரசு மருத்துவமனைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி: தினத்தந்தி






No comments:

Post a Comment