தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை - 6
ந.க.எண். 6058 / ஜெ 1/ 2020
நாள். 03.06.2020
*பொருள்* *தொடக்கக்கல்வி ஆம் ஆண்டு 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு - தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் அலுவலர்கள்/தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்களை தேர்வுப்பணிக்கு ஈடுபடுத்துதல் - சார்பு*.
1.பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களின் அறிவுரை நாள்
30.05.2020
2.அரசாணை வாலாயம் எண்.246 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை நாள் 20.05.2020
பார்வை
- 19 தொற்று காரணமாக 10ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வானது கோவிட் மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளியில் பொதுத்தேர்வு எழுதலாம் என அரசால் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பொருட்டு மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட காரணங்களினால், 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுப்பணிக்கு ஆசிரியர்கள் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட வேண்டிய தேவை
உள்ளது.
*எனவே, தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் அலுவலர்கள் தலைமை ஆசிரியர்கள் ஆசிரியர்களை 10ம் வகுப்பு மற்றும் பிற அரசு பொதுத் தேர்வுப் பணிக்கு தேவை ஏற்படும்பட்சத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம் என அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் தேர்வுப் பணியில் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது*
தொடக்கக் கல்வி இயக்குநர்
தகவலுக்காக பணிந்து அனுப்பப்படுகிறது
பெறுநர் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் நகல் - அரசு முதன்மைச் செயலர், பள்ளிக்கல்வித்துறை சென்னை -9| நகல் - ஆணையர், பள்ளிக்கல்வித்துறை, சென்னை-6
நகல் - பள்ளிக்கல்வி இயக்குநர் நகல் - அரசு தேர்வுகள் இயக்குநர்
தகவலுக்காக கனிவுடன் அனுப்புகிறது
https://sunmoonchannel.blogspot.com/
No comments:
Post a Comment