1 லட்சம் பி.சி.ஆர். கருவிகள் தென் கொரியாவில் இருந்து தமிழகம் வந்தடைந்தது - கொரோனா பரிசோதனையை அதிகரிக்க தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
வைரஸ் தொற்று, தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்டு உள்ளதால், கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எனவே, இதற்கு கூடுதலாக பிசிஆர் கருவிகள் தேவை என்பதால், தென்கொரியாவில் இருந்து வாரம் ஒரு லட்சம் என்ற அளவில் பிசிஆர் கருவிகள் வரவழைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இதுவரை, சுமார் 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்து சேர்ந்து விட்டதாகவும் , வரும் வாரங்களில் 1 லட்சம் பி.சி.ஆர். கிட்கள் வீதம் மேலும் 5 லட்சம் பி.சி.ஆர். கிட்கள் வர இருப்பதாக தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.
நன்றி: தினத்தந்தி
No comments:
Post a Comment