Monday, 11 May 2020

மாணவர்கள் நலன் கருதி பத்தாம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்து ஏற்கனவே பள்ளிகளில் நடந்த காலாண்டு அரையாண்டு திருப்புதல் தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ச்சியை அறிவிக்க தமிழக அரசை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக்கொண்டது. காணொளி



மாணவர்கள் நலன் கருதி பத்தாம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்து ஏற்கனவே பள்ளிகளில் நடந்த காலாண்டு அரையாண்டு திருப்புதல் தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்கள் தேர்ச்சியை அறிவிக்க தமிழக அரசை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில்  கேட்டுக்கொண்டது. காணொளி




தமிழக அரசு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை  மாணவர்கள் நலன் கருதி உடனடியாக ரத்து செய்ய வேண்டும்
பஞ்சாப் மாநில அரசு மாணவர்கள் நலன் கருதி ஏற்கனவே பள்ளிகளில் நடந்த காலாண்டு அரையாண்டு மற்றும் திருப்புதல் தேர்வுகளில் அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சியை அறிவிக்க முடிவு செய்ய பட்டுள்ளது அதனையே பின்பற்றி தமிழக அரசும் ஏற்கனவே பள்ளியில் நடந்த காலாண்டு அரையாண்டு மற்றும் திருப்புதல் தேர்வுகளின் அடிப்படையில் தே்ச்சியை அறிவிக்க அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் ,

இப்போதுள்ள சூழலில் குறைந்தது 15 நாட்களுக்காவது மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் அப்படி வரும்பட்சத்தில் தான் ஓரளவுக்கு ஆவது சிரமம் இன்றி தேர்வு எழுத முடியும் அப்படி  மாணவர்கள்  பள்ளிக்கு வரும் சூழ்நிலையில் யாருக்காவது ஒருவருக்கு தொற்று ஏற்படும் நிலையில் இது பலருக்கு பரவ வாய்ப்புள்ளது இப்படி இருக்கும் பட்சத்தில் தேர்வு எழுத முடியாத சூழ்நிலை ஏற்படும் இதனை அறிந்து தமிழக அரசு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்

மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு விடைத்தால் திருத்தும் பணியை வீட்டிலிருந்தே மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார், அதனையே பின்பற்றி பனிரெண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியை ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே மேற்கொள்ளலாம் என்ற உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்

சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
9445454044

No comments:

Post a Comment