*பிச்சைக்காரரின் மனிதாபிமானம்: கொரோனா நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரம் வழங்கினார்...*
*கொரோனா நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரத்தை மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார் பிச்சைக்காரர் பூல்பாண்டியன். பொது மக்களை நெகிழ வைத்தது இவரின் மனிதாபிமானம்.*
*தூத்துக்குடி மாவட்டம், ஆலங்குளத்தை சேர்ந்த பூல்பாண்டியன் என்ற பிச்சைக்காரர் இன்று மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 10 ஆயிரத்தை நேரில் சென்று வழங்கினார்.*
*இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக மதுரை வந்து இருந்தேன். நடைபாதைகளில் சாலை ஓரங்களில் தங்கியிருந்த என்னை தன்னார்வலர்கள் மீட்டனர். மதுரை மாநகராட்சி சார்பாக தங்க வைத்து இருந்தார்கள் .இந் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களுக்காக என்னால் இயன்ற உதவியை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறி சந்தை, பழ சந்தை மற்றும் பூ மார்க்கெட்டுகளில் பிச்சை எடுத்து கடந்த 15 நாட்களில் ரூபாய் 10 ஆயிரத்தை சேகரித்தேன்.அந்தத் தொகையை இன்று 18-05-2020 மதுரை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி இருக்கிறேன்.*
*மேலும் 10 மாவட்டங்களில் இது போன்று பிச்சை எடுத்து தலா ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ரூ.10 ஆயிரத்தை வழங்க திட்டமிட்டுள்ளேன். இது முதல் கட்டமாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் இன்று வழங்கியிருக்கிறேன்' என்றார்.*
*மேலும் அவர் கூறுகையில், கடந்த நாற்பதாண்டுகளாக நான் பிச்சை எடுக்கும் பணத்தில் பெரும் பகுதியை ஏறக்குறைய 400 பள்ளிகளுக்கு மேல் நாற்காலி மேசைகள் குடிநீர் சுத்திகரிப்பான் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கி உள்ளேன். தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் பாதிக்கப்படுவதை அறிந்து என்னால் இயன்ற உதவியை வழங்கி வருகிறேன் என்றார்.*
*போர்முனை செய்திகளுக்காக மதுரை குணா*
*செய்தி பகிர்வு:-*
*பொன்.வள்ளுவன்,*
*செயலாளர்,*
*இந்திய செஞ்சிலுவைச் சங்கம்,*
*பேர்ணாம்பட்டு.*
No comments:
Post a Comment