Sunday, 15 March 2020

முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் திண்டுக்கல். அவசர சுற்றறிக்கை






முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் திண்டுக்கல்.
அவசர சுற்றறிக்கை

பி.சி.எண். 10/2020, நாள், 15.03.2020

கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கையின் பொருட்டு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்துமாறு திண்டுக்கல் வருவாய் மாவட்டத்திலுள்ள அனைத்துவகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

16.03.2020 முதல் 31.03.2020 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

1. திண்டுக்கல் பயிலும் Pre-KG (LKG, UKG) 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வருவாய் மாவட்டத்திலுள்ள அனைத்துவகைப் பள்ளிகளில்

2. ஆனால், ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருகை புரிந்து மாணவர்களுக்கு கல்வி பணிகள் மேற்கொள்ளுதல், கல்வி கட்டகங்கள் தயாரித்தல், மற்றும் அலுவலகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

3. ஏற்கனவே, அனுப்பப்பட்ட சுற்றறிக்கையின்படி, தினமும் பள்ளி வழிபாட்டுக் (PRAYER) கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கூட்டத்தில் விழிப்புணர்வு செய்திகளை தெரிவிக்க வேண்டும்.

4. தினமும், வகுப்புக்குள் மாணவர்கள் நுழைவதற்கு முன் கைகளை சோப்பினால் கழுவிவிட்டு அனுமதிக்கப்பட வேண்டும்.

5. மேற்கண்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கைகளை போட்டோவுடன் உடன் முதன்மைக் கல்வி அலுவலக மின்னஞ்சல் (ceodgl2017@gmail.com) முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஓம்/

முதன்மைக் கல்வி அலுவலர்,

திண்டுக்கல்.

பெறுநர்

1. அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள்,

2. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் - உரிய நடவடிக்கையின் பொருட்டு

அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் முதல்வர்கள் திண்டுக்கல் வருவாய் மாவட்டம்.

No comments:

Post a Comment