Sunday, 15 March 2020

கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் தேதி 15-3-2020.











கொரோனா வைரஸ் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் தேதி 15-3-2020.

பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள், சென்னை -600 006

ந.க.எண்.004010/ஜெ1/2020 நாள் 15.03.2020

பொருள்: பள்ளிக்கல்வி
அனைத்து மாவட்டங்கள் அனைத்து வகைப்பள்ளிகள் - அனைத்து KG வகுப்புகள் மற்றும் 1 முதல் 5 வகுப்புவரை பயிலும் மாணாக்கர்களுக்கு கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு
15.03.2020 முதல் 31.03.2020 வரை விடுமுறை அளித்தல் - சார்ந்து

பார்வை:
செய்தி அறிவிப்பு மற்றும் அறிவுரைகள் நாள் 15.03.2020 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பத்திரிக்கை

பார்வையில் கண்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளிலும் அனைத்து KG வகுப்புகள் மற்றும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு கொரானா வைரஸ் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு 16.03.2020 முதல் 31.03.2020 வரை விடுமுறை அளிக்க அறிவித்துள்ளார்கள். மேலும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கீழ்கண்ட அறிவுரைகளையும் பின்பற்ற வேண்டுகோள் விடுத்தார்கள்.
பொதுமக்கள் மற்ற மாநிலங்களுக்கு பயணிப்பதும் பொது இடங்களில் கூடுவதையும் தவிர்க்க அறிவுறுத்தியுள்ளார்கள்.
கூட்டம் நிறைந்த பொது இடங்களுக்கு குழந்தைகள் செல்வதை தவிர்க்கவும், தனிநபர் சுகாதாரத்தை பேணவும், வீட்டிற்குள் நுழையும் போதும், அவ்வப்போதும் கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்யவும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் விடுமுறை நாட்களின் போது குழுவாக விளையாடாதவாறு கண்காணிக்கவும், வீட்டிற்குள் கைகளை சுத்தம் செய்யாமல் முகத்தை தொட வேண்டாம் எனவும்,
நுழைந்தவுடன் அவர் போது கைகளை சோப்பு போட்டு சுத்தமாக கழுவுவதை உறுதி செய்யவும் அறிவுமித்தியுள்ளார்கள்.

எனவே, தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகைப்பள்ளிகளிலும் அனைத்து KG வகுப்புகள் மற்றும் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு 10.03.2020 முதல் 31.03.2020 வரை விடுமுறை அளிக்க அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் அறிவுரைகளை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இப்பொருள் சார்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரத்தினை அறிக்கையாக அனுப்புமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. சார்ந்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தவறாது பின்பற்ற அனைத்து பள்ளிகளுக்கும்
இப்பொருள்
இணைப்பு:

மான்புமிகு முதலமைச்சர் அவர்களின் பத்திரிகை செய்தி
503/2020 பள்ளிக்கல்வி ஆணையர்

பெறுநர்:
அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் நகல்:

1.அரசு முதன்மைச்செயலர், பள்ளிக்கல்வித்துறை, சென்னை -9 தகவலுக்காக அனுப்பப்படுகிறது

இயக்குநர், பள்ளிக்கல்வி இயக்ககம்,

இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்ககம்,

4.இயக்குனர், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம்.
5.மண்டல அலுவலர், சிபிஎஸ்இ, அண்ணாநகர் மேற்கு, சென்னை-40

அனுப்பப்படுகிறது தக்க நடவடிக்கைக்காக

No comments:

Post a Comment