ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வேலூர் மாவட்டம்
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வேலூர் மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் செயல்முறைகள்
ந.க. எண். 307/மாஒANA/2020 நாள் : .03.2020 பொருள்: வேலூர் மாவட்டம் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி -5-ம் வகுப்பு மாணவர்களின் தமிழ், ஆங்கிலத்தில் வாசிப்பு மற்றும் எழுதுதல் திறன் கணிதத்தில் அடிப்படை திறனும் சோதித்தல் சார்பு.
பார்வை:
அவர்களின் மீளாய்வுக் கூட்டம் நாள்.28.02.2020.
வேலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்
பார்வையில் காணும் வேலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் மீளாய்வுக் கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைக்கிணங்க, வேலூர் மாவட்டத்தில் 2019-20-ம் கல்வியாண்டில் ஆசிரியர் பயிற்றுனர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குறுவள மையத்திற்குட்ட பள்ளிகளில் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலத்தில் வாசிப்பு மற்றும் எழுதுதல் திறன் கணிதத்தில் அடிப்படை திறனும் சோதித்து உரிய படிவத்தில் பூர்த்தி செய்து 23.03.2020 க்குள் மின்னஞ்சலிலும் மாணவர்கள் வாரியாக உள்ள
தலைமையாசிரியர்/ஆசிரியர்/ஆசிரியர் பயிற்றுநர் கையொப்பமிட்ட படிவம் மற்றும் Test Paper
27.03.2020 அன்று அனைத்து (22 ஒன்றியங்கள்) ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் நடைபெற உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலரின் மீளாய்வு கூட்டத்தில் சமர்பிக்க வேண்டுமென சார்ந்த ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு தெரிவித்துக்
கொள்ளப்படுகிறது.
இணைப்பு: MODEL TOOL
கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த கல்வி, வேலூர் மாவட்டம்.
நகல் -
பெறுநர் - 1 அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்(பொ), 2 அனைத்து குறு வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள், (குறுவளமைய தலைமையாசிரியர் மூலமாக)
1. முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர், இராணிப்பேட்டை,திருப்பத்தூர்- தகவலுக்காக கனிவுடன் அனுப்பப்படுகிறது.
மாவட்ட கல்வி அலுவலர்கள் வேலூர், அரக்கோணம், இராணிப்பேட்டை, வாணியம்பாடி, திருப்பூர் கல்வி மாவட்டங்கள்
3. அனைத்து குறுவளமைய தலைமை ஆசிரியர்கள்
4. அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள் (மேற்பார்வையாளர்கள் (பொ) மூலமாக)

No comments:
Post a Comment