பள்ளிக் கல்வி - ஒன்றியங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட குறுவள மையமாக செயல்படும்
உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின் கீழ் உள்ள அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை /
மேல்நிலைப் பள்ளிகளில் கண்காணிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட குறுவள மைய உயர்நிலை /
மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் சார்ந்து வழிகாட்டுதல்
நெறிமுறைகள் (Guidelines) வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
பள்ளிக் கல்வித் அகஇ2) துறை
அரசாணை (நிலை) எண். 202
நாள் 11.11.2019
திருவள்ளுவர் ஆண்டு 2050
விகாரி வருடம், ஐப்பசி 25
படிக்கப்பட்டவை:
1. மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அவர்களின்
செயல்முறைகள், ந க எண் 2448/B7/SS/ BRC/2019, நாள் 07.08.2019.
2 அரசாணை (நிலை) எண்:145, பள்ளிக் கல்வி (தொக.3(2)த் துறை, நாள் 20.08.2019.
3. பள்ளிக் கல்வி இயக்குநரின் கடித ந க எண். 25248/ சி4/இ1/2019, நாள் 14.10.2019.
4. தொடக்கக் கல்வி இயக்குநர் கடித எண். 014315/கே4/2019, நாள் 22.10.2019
ஆணை
மேலே ஒன்றாவதாக பிடிக்கப்பட்ட செயல்முறைகளில் மாநில திட்ட இயக்குநர்,
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி அவர்களால் ஆசிரியர் பயிற்றுநர்கள் ஒன்றிய அளவில்
குறிப்பிட்ட பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியினை குறுவளமையமாகக் கொண்டு
கல்வி மேம்பாட்டுப் பணியை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
2. மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் ஒரே வளாகத்தில் செயல்படும்
அரசு / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளின்
மாணவர்களின் நலன் மற்றும் நிர்வாக மேம்பாடு கருதி, இப்பள்ளிகளின் கல்விச்
செயல்பாடுகளை ஆய்வு செய்யும் அதிகாரத்தை அதே வளாகத்தில் செயல்படும் அரசு
உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கி ஆணைகள்
வெளியிடப்பட்டுள்ளன.
- 3. மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட கடிதத்தில் பள்ளிக் கல்வி இயக்குநர், பள்ளிக்
கல்வியில் நிர்வாக சீர்திருத்தம் மேற்கொள்ளும் வகையில் மேல்நிலைப் பள்ளியை குறுவள
மையத் தலைமையிடமாக தெரிவு செய்து, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்
வழிகாட்டுதலின் கீழ் தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரையான பள்ளிகளை
கண்காணித்திடும் வகையில் உரிய அரசாணை வழங்கிடுமாறு அரசைக் கோரியுள்ளார்.
4 மேலே நான்காவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில், தொடக்கக் கல்வி இயக்குநர்,
நிர்வாக மேம்பாடு கருதி குறுவள மையப் பகுதியாக செயல்படும் ஒவ்வொரு உயர்நிலை /
மேல்நிலைப் பள்ளிகளுக்கும் அந்த பகுதியில் குறிப்பிட்ட தொலைவிற்குள் ஊட்டுப்
பள்ளிகளாக (Feeder Schools) அமைந்துள்ள அரசு / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி
ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் கல்விச் செயல்பாடுகளை ஆய்வு செய்தல் மற்றும்
கண்காணிக்கும் அதிகாரம் குறுவள மையப் பகுதியினை தலைமையிடமாகக் கொண்டு
செயல்படும் சார்ந்த உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கிட லாம்
என்று தெரிவித்துள்ளார்.
5 மேற்கூறிய சூழ்நிலையில், பள்ளிக் கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக் கல்வி
இயக்குநர் ஆகியோரின் கருத்துருவை அரசு கவனமுடன் ஆய்வு செய்து, குறுவள மைய
பகுதிக்குள் அமைந்துள்ள ஒவ்வொரு தொடக்கப் பள்ளியில் பயில்கின்ற மாணவர்கள்
அதற்கடுத்தடுத்த நிலையில் அருகில் உள்ள நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலை
பள்ளி என்ற வரிசையில் கல்வியை தொடரும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதால்,
இ மாணவர்களுக்கு, தொடக்கப் பள்ளி ஆசிரியர் வாயிலாக கற்பிக்க படுவதோடு,
உயர்நிலைப் பள்ளி / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் கண்காணிப்பு மற்றும்
வழிக்காட்டுதல்கள் இருப்பின் தொடக்கப் பள்ளி முதற்கொண்டே, நல்ல தரமான கல்வியை
வழங்குவதன் மூலம் மாணவர்களின் கல்வியில் சிறந்த முன்னேற்றத்தை ஏற்படுத்த வழி
ஏற்படும் என்பதாலும், அதனைத் தொடர்ந்து, உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி நிலையில் மாநில
அளவில் நடைபெறுகின்ற இறுதித் தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மற்றும்
கற்றல் அடைவுகளை மிகச் சிறப்பாக ஏற்படுத்தவும் வழிவகை ஏற்படும் என்பதையும் கருத்தில்
கொண்டு, ஒன்றியங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட குறுவள மையமாக செயல்படும்
உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளின் ஊட்டுப் பகுதியில் (Feeder area) உள்ள அரசு
தொடக்க / நடுநிலை உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளை கண்காணிக்க
தேர்ந்தெடுக்கப்பட்ட குறுவள மைய உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்
மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தக்க வழிகாட்டுதல் நெறிமுறைகள் (Guidelines)
வழங்கலாம் என அரசு முடிவு செய்து அவ்வாறே கீழ்க்கண்டவாறு ஆணை விடுகிறது.
(அ) ஒன்றியங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட குறுவள மையமாக செயல்படும்
உயர்நிலை / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் அக்குறுவள மையத்தின்
எல்லைக்குள் செயல்படும்;
(9 அரசு தொடக்க / நடுநிலை உயர்நிலை பள்ளிகளில் பணிபுரியும் தலைமை
ஆசிரியர்கள் மற்றும் அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப்
பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வருகை, கற்பிக்கும் திறன்
போன்றவற்றை கண்காணித்திட வேண்டும்.
(2) அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை பள்ளிகளில் பணிபுரியும் தலைமை

பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் யாரேனும் விடுப்பு எடுத்தாலோ
அல்லது அவசர பணிநிமித்தமாக வட்டாரக் கல்வி அலுவலகம் / வட்டார
வள மையம் சென்றாலோ அல்லது பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள
சென்றாலோ பதிலி ஆசிரியர்களை மாற்று ஏற்பாடு செய்திட வேண்டும்.
(3) அரசு தொடக்க / நடுநிலை / உயர்நிலை பள்ளிகளில் பணிபுரியும் தலைமை

பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் தற்செயல் விடுப்பு மற்றும்
வரையறுக்கப்பட்ட விடுப்பு குறித்த தகவல் குறுவள மையமாக செயல்படும்
பள்ளியின் தலைமையாசிரியருக்கு அனுப்ப வேண்டும். இதர விடுப்பு
குறித்த விண்ணப்பம் இத் தலைமை ஆசிரியர் வழியாக உரிய அலுவலருக்கு
அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
(4) பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்ட
உதவிகள் உரிய வகையில் சென்றடைகின்றதா என்பதை கண்காணித்திட
வேண்டும்.
(5) பள்ளிகளில் ஏதேனும் குறைகள் கண்டறியப்பட்டால், அவற்றை வட்டாரக்
கல்வி அலுவலர்கள்/மாவட்டக் கல்வி அலுவலர்கள்! முதன்மைக் கல்வி
அலுவலர்கள் ஆகியோருக்கு புகாராக தெரியப்படுத்த வேண்டும். அவ்வாறு
அளிக்கப்பட்ட புகாரின் மீதான இறுதி நடவடிக்கை தீர்வு கிடைக்கும் வரை
தொடர்ந்து அப்புகார் குறித்து கண்காணித்திட வேண்டும்.
பள்ளிகளில் -
உட்கட்டமைப்பு
வசதிகள்
ஏதேனும்
செய்யப்பட
வேண்டியதிருப்பின் உரிய அலுவலர்களுக்கு பரிந்துரை செய்து அப்பணி
முடியும் வரை தொடர் நடவடிக்கைகளைக் கண்காணித்திட வேண்டும்.
(7) பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அறிவாற்றலை மேம்படுத்திட
உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில்
உள்ள
அறிவியல்
ஆய்வக
உபகரணங்களைப் பயன்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(8) பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்கும் திறனை ஊக்குவிக்கும்
பொருட்டு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படுத்தப்படும் smart
class வகுப்புகளை பயன்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
(9) பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஆர்வத்தினையும் உடல் நலனையும்
மேம்படுத்திட உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள உடற்கல்வி
ஆசிரியர்கள் மூலம் விளையாட்டு வகுப்புகள் எடுக்க உரிய நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
(10) பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் பாதுகாப்பினையும் (safety of
students) கண்காணித்து உறுதிப்படுத்திட வேண்டும்.
(11) பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கற்றல் மற்றும் கற்பித்தல் திறனை
மேம்படுத்தி கல்வி தரத்தினை உயர்த்த உரிய அனைத்து
நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
(12) உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் Hi-Tech உயர் தொழில் நுட்ப
ஆய்வு கூடங்கள் துவங்கி கணினி வசதிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளதால்,
தேர்ந்தெடுக்கப்பட்ட குறுவள மையமாக செயல்படும் உயர்நிலை /
மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் அக்குறுவள மையத்தின்
எல்லைக்குள் செயல்படும் அனைத்து வகையான அரசு தொடக்க /
நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இவற்றை பயன்படுத்தி
கணினி சார்ந்த திறன்களை பெற வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்.
மேலும், அரசு தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள்
மற்றும் ஆசிரியர்களின் பணி மற்றும் ஊதியம் சார்ந்த நடைமுறைகளில் தற்போதுள்ள
முறையே தொடரும் எனவும், அரசு ஆணையிடுகிறது
(ஆளுநரின் ஆணைப்படி)
பிரதீப் யாதவ்,
அரசு முதன்மைச் செயலாளர்.

No comments:
Post a Comment