Wednesday 27 November 2019

பள்ளி கல்வி துறைக்கு புதிய கட்டடம்!

பள்ளி கல்வி துறைக்கு புதிய கட்டடம்!


பள்ளி கல்வி இயக்குநரகத்துக்கு, 1.23 லட்சம் சதுர அடியில், புதிய கட்டடம் கட்டும் பணி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டு மாதங்களில் கட்டடத்தை திறக்க, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

தமிழக பள்ளி கல்வி இயக்குனரகம், சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, டி.பி.ஐ., வளாகத்தில் செயல்படுகிறது. இந்த வளாகத்தில், ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழ்நாடு பாடநுால் கழகம், அரசு தேர்வு துறை இயக்குனரகம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உள்ளிட்ட அலுவலகங்கள் உள்ளன. இந்நிலையில், பள்ளி கல்வி இயக்குனரக கட்டடம், 100 ஆண்டுகள் பழமையானது என்பதால், புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதற்காக, டி.பி.ஐ., வளாகத்தில் காலியாக இருந்த, 1.23 லட்சம் சதுரடி இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில், 40 கோடி ரூபாயில், ஆறு மாடிகள் உடைய புதிய கட்டடம் கட்டும் பணி, 2018 மார்ச்சில் துவங்கியது. இந்த கட்டட பணி, இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஜனவரியில் கட்டடத்தை திறக்க, பள்ளி கல்வி இயக்குனரகம் திட்டமிட்டுள்ளது. டி.பி.ஐ.,வளாகத்தில் உள்ள பாரம்பரிய கட்டடத்தை போல, புதிய கட்டடத்துக்கு சிவப்பு வண்ணம் பூசப்பட்டு, இறுதி கட்ட பணி நடந்து வருகிறது. இந்த கட்டடத்தில், பள்ளி கல்வி இயக்குனரகம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், ஆசிரியர் தேர்வு வாரியம் போன்றவை செயல்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்

No comments:

Post a Comment