2020-21-ம் நிதியாண்டில் வருமான வரியில் மாற்றம் கொண்டு வர முடிவு Income Tax
!
அடுத்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகளை நிதி அமைச் சகம் தொடங்க உள்ளது. அதற்கு முன்பாக தனி நபர் வருமான வரி மற்றும் பிற மறைமுக வரி விதிப்பு களில் மாற்றங்கள் கொண்டு வரவும் முடிவு செய்துள்ளது. அதற் கேற்ப உரிய ஆலோசனைகளை வழங்குமாறு அனைத்து அமைச் சகங்களுக்கும் நிதி அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. பிற துறைகள் மட்டுமின்றி தொழில் துறை கூட்டமைப்புகள், சம்மேள னங்களுக்கும் ஆலோசனை வழங்குமாறு நிதி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
தற்போது நிலவி வரும் பொருளா தார தேக்க நிலையை முடுக்கி விட பல்வேறு சலுகை நட வடிக்கைகளை மத்திய நிதி அமைச் சர் நிர்மலா சீதாராமன் எடுத்து வரு கிறார். 2020-21-ம் நிதி ஆண்டுக் கான பட்ஜெட்டை பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். அதற்கான ஆயத்த பணிகளை அவர் தொடங்கியுள்ளதாக நிதி அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொதுவாக பட்ஜெட் தயாரிப்பு நடவடிக்கைகள் தொடங்கும் முன்பு அனைத்து தொழில்துறை கூட்டமைப்புகள், தொழில் துறை தலைவர்கள், தொழிலதிபர்களை துறைவாரியாக சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் சலுகைகள் குறித்து கருத்து கேட்பது வழக்கம். பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் பட்ஜெட் தயாரிக் கப்படும். ஆனால், முதல் முறை யாக வருவாய்த் துறை இதுதொடர் பாக சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி யுள்ளது.
அதில் தனி நபர் வரி விதிப்பு, கார்ப்பரேட் வரி, மறைமுக வரி, உற்பத்தி வரி மற்றும் சுங்க வரி தொடர்பாக ஆலோசனைகளை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. நவம்பர் 11-ம் தேதியிட்ட இந்த சுற்றறிக்கை தற்போது அனைத்து தொழில் கூட்டமைப்புகள், தொழில் துறை சம்மேளனங்கள் மற்றும் தொழில் துறையினருக்கு அனுப்பப் பட்டுள்ளது.
குறிப்பிட்ட துறையினர் தாங்கள் எதிர்நோக்கும் சலுகைகள் குறித்த விவரங்களை அளிப்பதோடு அத் துறையினர் பற்றிய புள்ளி விவரங் கள், உற்பத்தி விவரம், விலை விவரம், அரசுக்கு கிடைக்கும் வரி வருவாய் உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட்டு தாங்கள் எதிர்நோக்கும் சலுகைகள் குறித்த விவரங்களைத் தெரிவிக்குமாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்குப் பிறகு ஜூலை 5-ம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அதைத் தொடர்ந்து செப்டம்பர் 20-ம் தேதி தொழில்துறையினருக்கான சலுகைகளை அறிவித்தார். நிறுவன வரி விகிதம் 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. இதையடுத்து அக்டோபர் 1-ம் தேதி உற்பத்தித் துறையினருக்கான வரி விகிதம் 25 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.
இத்தகைய நடவடிக்கைகள் காரண மாக அரசுக்கு ரூ. 1.45 லட்சம் கோடி வரி வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே தனி நபருக்கான வருமான வரி விகிதத்தையும் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது. வரி குறையும்போது அதனால் கிடைக்கும் தொகையை மக்கள் செலவிடுவர், இது பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும், மக் களின் நுகர்வும் அதிகரிக்கும் என்று பரவலாகக் கூறப்படுகிறது.
இருப் பினும் கடந்த 6 ஆண்டுகளாக இல் லாத அளவுக்கு நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக சரிந்துள்ளது. இதனால் பொருளாதாரத்தை முடுக்கிவிடும் நடவடிக்கைகளில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. நேரடி வரி விதிப்பைப் பொருத்த மட்டில் கருத்துகளைத் தெரிவிப் போர், சமீபத்தில் அரசு எடுத்த நட வடிக்கைகள் அதாவது வரி குறைப்பு நடவடிக்கைகளையும் கணக்கில் கொள்ள வேண்டும் என் றும், இதனால் எந்த அளவுக்கு அவர்கள் சார்ந்த துறை பயனடைந் துள்ளது என்ற விவரத்தையும் தெரி விக்குமாறு அதில் கூறப்பட்டுள் ளது. நவம்பர் 21-ம் தேதிக்குள் கருத்துகளைத் தெரிவிக்குமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
.

No comments:
Post a Comment