Tuesday, 8 October 2019

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கில் காற்றின் சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு‌ வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது


No comments:

Post a Comment