Tuesday, 8 October 2019

10 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஆபத்தான வைரஸ்.!!!
    

ZDNet தளத்தின் அறிக்கையின்படி, கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த குறைபாடு ஆனது Android-ன் Kernel code-ல் காணப்பட்டுள்ளது. இந்த குறைபாட்டை அட்டாக்கர்கள் (ஹேக்கர்கள்) பயன்படுத்தும் பட்சத்தில், அவர்கள் இந்த ஸ்மார்ட்போன்களுக்கான ரூட் அணுகலைப் பெறலாம்.


எவ்வாறாயினும், இந்த பாதிப்பு எவ்வளவு ஆபத்தானது என்பதை கூகுள் தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது இது “user interaction-க்கு (பயனர் தொடர்பு) பிறகு மட்டுமே அதன் வேலையை தொடங்கும் என்று கூகுள் கூறியுள்ளது. இந்த குறைபாடு பற்றி அதன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் தயாரிப்பு கூட்டாளர்களுக்கு அறிவித்து உள்ளதாகவும் கூகுள் கூறியுள்ளது.


“நாங்கள் ஆண்ட்ராய்டு கூட்டாளர்களுக்கு அறிவித்துள்ளோம், இது சார்ந்த பேட்ச் ஆனது Android Common Kernel-ல் கிடைக்கிறது.” என்று கூகுள் கூறியுள்ளது.


ஆக, கீழ் தொகுக்கப்பட்டுள்ள 10 ஸ்மார்ட்போன்களை வைத்துள்ள பயனர்கள் October security patch-ஐ பதிவிறக்கி கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள். ஒருமுறை அப்டேட் ஆன பின்னர் இந்த ஸ்மார்ட்போன்கள் எந்த விதமான பாதிப்பையும் சந்திக்காது. அதுவரையிலாக ஆபத்தில் இருக்கும் அந்த 10 ஸ்மார்ட்போன்களின் பட்டியல் இதோ:


சாம்சங், சியோமி, ஒப்போ, மோட்டோ மற்றும் அதன் சொந்த பிக்சல் ஸ்மார்ட்போன் உட்பட மொத்தம் 10 ஸ்மார்ட்போன்களில் தீங்கு விளைவிக்கும் Vulnerability (சைபர்-பாதுகாப்பின் படி அமைப்பில் உள்ள குறைபாடு) ஒன்று இருப்பதை கண்டறிந்துள்ளதாக கூகுள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment