03.04.2020
~~~~~~
12ம் வகுப்பு 11ம் வகுப்பு 10ம் வகுப்பு தேர்ச்சி காலாண்டு அரையாண்டு தேர்ச்சி பெற்றதன் அடிப்படையில் அந்தந்த பள்ளிகளே முடிவு செய்ய தமிழக அரசு அறிவிக்க வேண்டுகோள்
~~~~~~~~~~
உலகத்தையே அச்சுறுத்தி வருங்கின்ற கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21 நாட்கள் ஊரடங்க உத்தரவை கடைப்பிடித்தி வருகின்ற சூழ்நிலையில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் சி.பி.எஸ்.சி பள்ளிகள் 1ம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி அடைய செய்யவேண்டும் என்றும் அதே போன்று 9 ம் வகுப்பு மற்றும் 11 ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சியை அந்தந்த பள்ளிகளில் வகுப்புகளில் நடத்திய தேர்ச்சியை வைத்து மாணவர்களை தேர்ச்சியடைய செய்ய வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார் அதனை பின்பற்றி தமிழக அரசும் 11ம் வகுப்பு 11ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியையும் வகுப்புகளில் நடந்த தேர்வுகளில் தேர்ச்சிகளில் அடிப்படையில் அதாவது காலாண்டு அரையாண்டு மற்றும் பயிற்சி தேர்வுகளில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சியை அந்தந்த பள்ளிகளே அறிவிக்கலாம் என்ற உத்தரவை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவிக்க வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன்
ஏனெனில் 12ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் பாதி தேர்வுகளை கொரோனா வைரஸ் அச்சத்திலேயே தேர்வு எழுத்தினர் என்பதை நினைவு படுத்தியும் நீட் தேர்வில் பங்குக்கொள்ளும் மாணவர்கள் ஏற்கனவே விண்ணப்பித்துள்ளதால் அதில் எந்த பாதிப்பும் வரவாய்ப்பில்லை எதே போன்று 10 ம் வகுப்பு பொதுத் தேர்வையும் வகுப்புகளில் நடந்த தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களின் தேர்ச்சியை அந்தந்த பள்ளிகளே முடிவு செய்யலாம் என்ற உத்தரவை கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்கள் நலன் கருதி மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் உத்தரவிட தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பின் சார்பில் வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன்
~~~~~~~~~
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
9445454044






No comments:
Post a Comment