Tuesday 21 April 2020

*தொடக்கப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு மளிகைப் பொருட்கள் நிவாரணமாக வழங்கல்:* *திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் வெங்களாபுரம் சமத்துவபுரம் ஊ.ஒ. தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக திருமதி த உமாலட்சுமி மற்றும் இடைநிலை ஆசிரியராக திருமதி செல்வி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் சுமார் 22 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இம் மாணவர்களின் பெற்றோர்களில் ஒரு சிலர் கணவனை இழந்தவர்கள். ஒரு சிலர் கணவனால் கைவிடப்பட்டவர்கள். மற்றவர்களும் தினமும் கூலி வேலை செய்து வந்தனர். தற்போது கோவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் வேலைக்கு செல்லாத நிலையில் வறுமையில் வாடும் நிலையில் உள்ளனர். அரசுப் பள்ளிகளை காக்க வேண்டும் என்றும் தங்கள் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களில் ஏழ்மை நிலைமையில் இருப்பவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குமாறு திருப்பத்தூர் மாவட்ட CEO திரு குணசேகரன், திருப்பத்தூர் DEO திருமதி மணிமேகலை கந்திலி BEO திரு வெங்கடாசலம் ஆகியோர் அறிவுரைகளின்படி இன்று 22-04-2020 புதன்கிழமை முற்பகல் 8மணிக்கு வெங்களாபுரம் சமத்துவபுரம் தொடக்கப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களுக்கும் சுமார் 12000ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருட்கள் தொகுப்பினை தலைமை ஆசிரியர் த.உமாலட்சுமி அவர்கள் வழங்கினார். மேலும் அனைத்து பெற்றோர்களுக்கும் கோரோனா வைரஸ் தொற்று பற்றி விழிப்புணர்வு கருத்துக்கள் எடுத்து கூறப்பட்டது இவருடைய சேவையை மனமாரப் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவிக்கும் ஆசிரியர் TECH YOUTUBE, ASIRIYAR TECH NEWS





*தொடக்கப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு மளிகைப் பொருட்கள் நிவாரணமாக வழங்கல்:*
*திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் வெங்களாபுரம் சமத்துவபுரம் ஊ.ஒ. தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக திருமதி த உமாலட்சுமி மற்றும் இடைநிலை ஆசிரியராக திருமதி செல்வி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இப்பள்ளியில் சுமார் 22 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இம் மாணவர்களின் பெற்றோர்களில் ஒரு சிலர் கணவனை இழந்தவர்கள். ஒரு சிலர் கணவனால் கைவிடப்பட்டவர்கள். மற்றவர்களும் தினமும் கூலி வேலை செய்து வந்தனர். தற்போது கோவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் வேலைக்கு செல்லாத நிலையில் வறுமையில் வாடும் நிலையில் உள்ளனர்.   அரசுப் பள்ளிகளை காக்க வேண்டும் என்றும் தங்கள் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களில் ஏழ்மை நிலைமையில் இருப்பவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குமாறு திருப்பத்தூர் மாவட்ட CEO திரு குணசேகரன், திருப்பத்தூர் DEO திருமதி மணிமேகலை கந்திலி BEO திரு வெங்கடாசலம் ஆகியோர் அறிவுரைகளின்படி இன்று 22-04-2020 புதன்கிழமை  முற்பகல் 8மணிக்கு வெங்களாபுரம் சமத்துவபுரம் தொடக்கப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களின் பெற்றோர்களுக்கும் சுமார் 12000ரூபாய் மதிப்பிலான மளிகைப் பொருட்கள் தொகுப்பினை தலைமை ஆசிரியர் த.உமாலட்சுமி அவர்கள் வழங்கினார். மேலும் அனைத்து பெற்றோர்களுக்கும் கோரோனா வைரஸ் தொற்று பற்றி விழிப்புணர்வு கருத்துக்கள்  எடுத்து  கூறப்பட்டது.*
இவருடைய சேவையை மனமாரப் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவிக்கும் ஆசிரியர் TECH YOUTUBE, ASIRIYAR TECH NEWS

No comments:

Post a Comment