Saturday 25 April 2020

வேண்டுகோள் 25.04.2020 ~~~~~~~ மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) 2021 ஜூலை வரை ரத்து செய்யப்பட்டதை மத்திய அரசு திரும்ப பெற தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள்




வேண்டுகோள்
25.04.2020
~~~~~~~
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) 2021 ஜூலை வரை ரத்து செய்யப்பட்டதை மத்திய அரசு திரும்ப பெற தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டுகோள்
~~~~~~~~~
மத்திய அரசு நிதிநிலையை காரணம் காட்டி 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 60 லட்சம் ஓய்வூதியர்களின் அகவிலைப்படி (DA) வை 18 மாதங்களுக்கு ரத்து , அதே போன்று ஒரு வருடத்திற்கு மாதம் தோறும் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்வது  போன்றவை வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாகும். பெரும்பாலான அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஏற்கனவே வீடுக்கட்ட முன் பணம் கடனாக பெற்றுள்ளனர் வாரிசுகளின் கல்யாணம் குடும்ப சூழ்நிலை காரணமாக வங்கிளிலும் தனியார் நிதி நிறுவன மூலமாக கடன் பெற்று இக்கட்டான சூழ்நிலையில் குடும்பத்தை நடத்திவருகின்றனர். அவர்களின் நிலை என்னவாகும் என்பதை அரசு கருத்தில்  கொள்ளவேண்டும்,  இத்தகைய நிதி இழப்பினால்,  இதுபோன்றோர்கள் உயிரையும் மாய்த்துக்கொள்ளும் சூழ்நிலை கூட ஏற்படும் நிலை உள்ளது என்பதையும்  அரசு யோசிக்க வேண்டும் , அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்  வருமான வரி மற்றும் தொழில்வரியை கட்டிய பிறகே ஊதியத்தை பெறமுடிகிறது, 
ஆடம்பர செலவை குறைத்தாலே நிதிநிலையை சரிசெய்யலாம் என்று பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்,  இந்தியாவில் உள்ள பெரிய பெரிய தனியார் அதிபர்கள் உலக அளவில், ஆசிய அளவில் , தேசிய அளவில் பெரும் செல்வந்தர்களாக உள்ள நிலையில் ஏன் அவர்களிடம் இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஒரு குறிப்பிட்ட விழுக்காடு தொகையை  பெற்று நிலைமையை சரி செய்ய கூடாது?
மாத ஊதியம்பெறும் அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெறுபவர்களின் நிலைமையை அறிந்து மத்திய அரசு அகவிலைப்படி (DA) ரத்து செய்யும் உத்தரவை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும்,

தமிழக அரசு ஆசிரியர்கள்,  கொரோனா பணியில் ஈடுபடும் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் ஊள்ளாட்சித்துறை ஊழியர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.  இப்பணியில் பெண் ஆசிரியர்கள், 50 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் மாற்று திறனாளிகளுக்கு இப்பணியில் இருந்து விலக்களிக்க வேண்டும் , கொரோனா பணியில் ஈடுபடும் அனைத்து ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும்  ஊடக பத்திரிகையாளர்கள் உட்பட அனைவருக்கும் கொரோனா தற்காப்பு ஆடைகள் வழங்கி உதவிட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை வேண்டிக்கேட்டுக் கொள்கிறேன் 
~~~~~~~~
சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு
9445454044

No comments:

Post a Comment